தமிழகத்திற்கு மிகவும் முக்கியமான வழக்கு
பக்கத்து மாநிலம் – பங்களூரில் நடந்து வருகிறது. தினமும்
4-5 மணி நேரங்கள் விவாதங்கள் நடக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் எந்த செய்தித்தாள்களிலும் வழக்கு
விவரங்கள் முழுவதுமாக வெளிவருவதில்லை.
— கடந்த பிப்ரவரி -9 இடுகையில் நான் எழுதியிருந்தவை
இந்த வார்த்தைகள்.
மிக முக்கியமான, சட்ட நுணுக்கங்கள் விவாதிக்கப்படும்
இறுதிக் கட்டத்தில் வழக்கு இப்போது நிற்கிறது.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த எந்த செய்தித்தாளும்
இப்போதும் இந்த விவரங்களை சரியாகத் தருவதில்லை.
இன்றைய தினம் வெளிவந்த “ஜூனியர் விகடன்”
இதழில், சென்ற வாரம் கோர்ட்டில் நிகழ்ந்தவற்றை ஓரளவு
சுருக்கித் தந்திருக்கிறார்கள். நம் “விமரிசனம்” தள
நண்பர்களுக்காக அந்த விவரங்கள் கீழே –









இந்த வழக்கு குறித்து பத்திரிக்கையில் வருவது அனைத்துமே சும்மா கிசுகிசு பாணியிலான செய்திகள். உண்மை நிலவரங்கள், செலவளிக்கும் தொகைகள், விலைக்கு வாங்கப்பட்ட விசயங்கள், விலைக்கு வாங்க முயற்சிக்கும் நபர்கள், இதற்கு பின்புலமாக இருந்து செயல்படும் பெரிய மனிதர்கள், நீதியரசர்களின் உண்மையான நிலவரங்கள், இதற்கென பெங்களூரில் இருக்கும் பெரிய கூட்டம், அதற்கு செலவளிக்கப்படும் பட்டுவாடா சம்பளங்கள் போன்ற அனைத்தும் ஓரளவிற்கு நண்பர்கள் மூலம் அறிந்தவன் முறையில் இது போன்ற விசயங்களை முக்கியத்துவம் கொடுத்து படிப்பது என்பது நீண்ட நாளாகிவிட்டது.
ஜோதிஜி
அனைத்தும் அறிந்த அறிவாளியே,
கோர்ட்டில் நடந்த விசாரணை விவரங்களை பத்திரிகைகள் போடாததால், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக காவிரிமைந்தன் இங்கு போட்டிருக்கிறார். முன்னாலும்
இதே போல் போட்டிருக்கிறார்.
நீர் அதிபுத்திசாலி முந்திரிக்கொட்டையாட்டும் நான் அனைத்தும் அறிந்தவனாக்கும். நான் இதை யெல்லாம் படிப்பதே இல்லை
எங்கிறீர்.
////நான்
“உண்மை நிலவரங்கள், செலவளிக்கும் தொகைகள்,
விலைக்கு வாங்கப்பட்ட விசயங்கள், விலைக்கு வாங்க
முயற்சிக்கும் நபர்கள், இதற்கு பின்புலமாக இருந்து செயல்படும்
பெரிய மனிதர்கள், நீதியரசர்களின் உண்மையான நிலவரங்கள்,
இதற்கென பெங்களூரில் இருக்கும் பெரிய கூட்டம், அதற்கு செலவளிக்கப்படும் பட்டுவாடா சம்பளங்கள் போன்ற அனைத்தும் ஓரளவிற்கு நண்பர்கள் மூலம் அறிந்தவன்” ////
என்றெல்லாம் பினாத்துறீர். எல்லாம் தெரிந்திருக்க
நீர் என்ன
சிபிஐ டைரெக்டரா?
இது விஷயத்தில் உண்மையிலேயே எதாவது கொடுக்கப்பட்டது,
எதாவது வாங்கப்பட்டது என்றால் அது கொடுத்தவருக்கும்,
வாங்கியவருக்கும், இடையில் மீடியமாக செயல்பட்டவருக்கும்
மட்டுமே தெரிந்திருக்கும். இதில் நீர் கொடுத்தவரும் இல்லை
வாங்கியவரும் இல்லை.
அப்புறம் உமக்கும் உம்ம தோழர்களுக்கும் மட்டும்
எப்படி தெரிந்தது ? கலைஞ்சர் கருணாநிதி சொல்லிக் கொடுத்தாரா ?
அப்படியென்றால் நீர் தான் மீடியமா ?
ஏதோ நீர் தான் வாங்க்கிக் கொடுத்தது போல் பேசுகிறீரே.
அப்படி உண்மையிலேயே எதாவது கொடுக்கல், வாங்கல்
நடந்திருந்தால் நீர் சொல்வது போல்,
டீக்கடை பெஞ்ச் போல் உம் நண்பர்கள் கிசு கிசு பேசுகிற அளவுக்கு உமக்கெல்லாம் தெரியும்படியா நடந்திருக்கும் ?
உமக்கு அம்மாவை பிடிக்கவில்லை என்பதற்காக
எந்த அபாண்டமும் பேசுவீரோ ?
இது உம்ம பின்னூட்டம் போலோ இருக்கிறது ? கருணாநிதி உம் வாயிலிருந்து பேசுவது போலல்லோ இருக்கிறது ?
நிறுத்துமய்யா உம்ம உளரலை.
திருப்பூர் ஜோதிஜி,
நீங்கள் எழுதியிருப்பது ஜெ. அவர்கள் மீது உங்களுக்கு
இருக்கும் அளவுக்கு மீறிய வெறுப்பைத்தான் காட்டுகிறதே தவிர,
உண்மை வாதமாகத் தெரியவில்லை.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தால் அது இப்படி
ஊர் உலகத்துக்கு எல்லாம் தெரியும்படியாகவா நடக்கும் ?
அத்தனையும் உங்கள் யூகம். அவ்வளவு தான். யூகத்துக்கும்
செய்திக்கும் எத்தனை வித்தியாசங்கள் இருக்கின்றன ?
உண்மையில் நீங்கள் எழுதியிருப்பது தான் “கிசு கிசு” போல
இருக்கிறது.
இப்படி எல்லாம் நடந்தது. அத்தனையும் எனக்குத் தெரியும்
என்றெல்லாம் நீங்கள் கூட இருந்து பார்த்தது போல் எழுதுகிறீர்களே. பொறுப்பானவர் பேசும் பேச்சாக தெரியவில்லை. இப்படியொரு
முதிர்ச்சியின்மையை பறைசாற்றுகிறீர்களே.
இப்போது நடந்தது என்று நீங்கள் சொல்வது தான் கீழ் கோர்ட்டில்
கலைஞர் கும்பலால் நிகழ்த்தப்பட்டதோ ?
பொது விவாத தளத்தில் வரும்போது பொறுப்புடன் எழுதக்கற்றுக்
கொள்ளுங்கள் என்று அனுபவப்பட்ட உங்களைப் பார்த்து என்னை சொல்லும்படி வைக்கிறீர்களே. வருந்துகிறேன்.
இதில் வருத்தப்பட என்ன இருக்கின்றது. பொது இடத்தில் ஒரு விவாதத்தை வைக்கும் போது எதிர்ப்பும் ஆதரவும் வருவது இயல்பு தானே? இதில் எவ்வித வருத்தமும் எனக்கில்லை. அப்புறம் நாம் கேட்ட அத்தனை விசயங்களையும் பொதுவில் வைக்க முடியாது. அரசியல் செய்திகள் எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களை கேட்டுப் பாருங்கள். சம்பவ இடத்தில் பார்க்கும் கேட்கும் தகவல்களை அப்படியே எழுதுகின்றார்களா? என்று. அவர்கள் எழுதினாலும் அத்தனையும் பத்திரிக்கையில் வந்து விடுமா?
ஆனால் உங்கள் பதிலில் அவர் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்கிற அளவுக்குத்தானே உங்கள் ஆதங்க பதில் தெரிகின்றது. இதில் எங்கே கலைஞர் வந்தார்? ஏனிந்த எதிர்ப்பு அரசியல்?
திருப்பூர் ஜோதிஜி,
சமாளிக்கிறீர்களே. ” கோர்ட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளக்கூட மாட்டேன்; அது அநாவசியம்;
என் நண்பர்கள் விடும் “கதைகளே” எனக்கு போதுமானவை ” என்று நீங்கள் கூறுவது, மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிற
ஆசிரியர் நிலையில் இருக்கும் உங்களுக்கு சரியாகப் படுகிறதா ?
//இதில் எங்கே கலைஞர் வந்தார்? ஏனிந்த எதிர்ப்பு அரசியல்?//
கலைஞ்சர் வைக்கிற அதே வாதத்தை தானே நீங்களும் முன்வைக்கிறீர்கள். நீங்கள் செய்வது தான் எதிர்ப்பு அரசியல்.
என்ன நடக்கிறது என்று பார்க்காமலே, கண்களை மூடிக்கொண்டு
ஜட்ஜ்மெண்ட் கொடுக்கிறீர்களே. இதற்கென்ன பெயர் ?
நாளை தண்டனையை உறுதி செய்து விட்டால் எங்கே கொண்டு
போய் வைத்துக் கொள்வீர்கள் உங்கள் முகத்தை ?
கே.எம்.சார். இந்த தடவை மட்டும் மன்னித்து விடுங்கள்.
இதற்கு மேல் நிச்சயம் விவாதத்தை தொடர மாட்டேன்.
ஜெயிட்லி மாயா ஜாலம் சில நாட்களில் தெரியும்.
ஜோதிஜி சொன்னது போல இதெல்லாம் எப்போதே முடிந்த விஷயம்.
குன்ஹா விற்கு தண்டனை கிடைக்காமல் இருந்தால் சரி.
சிரித்து விட்டேன். நிலவரம் அப்படித்தான் உள்ளது.
நிச்சயம் தண்டனை உண்டு அது சட்டப்படி அல்ல.அவர்கள் பாணியில் ஷேசன் .சு சுவாமி. ப சி இவர்களுக்கு கிடைத்தது போல் கிடைக்கும்
டிக்….டிக்….. திக்… திக்…. கடவுளே அம்மா வை காப்பாற்று.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
“நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம்: மக்களவையில் மசோதா நிறைவேறியது- அதிமுக ஆதரவு; காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு.” விவசாயிகளை விட ஆதரவு முக்கியம், அமைச்சரே…கெயில்,மீத்தேன், நியுட்ரினோ…வரும்,வரும்….ரும்
பெரும்பாலான நீதியரசர்கள், தங்களின் அறிவுத்திறனை, பொது அறிவை தீர்ப்பளிக்கும் போது பயன்படுத்துவதில்லை. சட்டம் பொதுவானது. அதன் உள்ளர்த்தத்தை தங்களுக்கு ஏற்றவாறு அதாவது வாதி அல்லது பிரதிவாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பளிப்பதாகவே உள்ளது. உதாரணத்திற்கு ஒன்று. ஒரு சொத்தானது முதலாம் நபரின் பெயரில் பதிவாகியிருக்கையில், சம்பந்தமே இல்லாத ஒரு இரண்டாம் நபர் அதனை ஒரு மூன்றாம் நபருக்கு விற்பதாக பதிவுத்துறையில் பதிவு செய்கின்றார். பதிவுத்துறை அதிகாரி ஆவண ஆதாரங்களை சரி பார்க்காமல் விற்கிரயம் பதிவு செய்தது தவறு இதனால் பலத்த மன உளைச்சல், கால விரயம், பொருள் விரயத்திற்கு ஆளாகினேன் என்று உரியவர் முறையிட்டால், பதிவுத்துறை அதிகாரி பதிவுத்துறை சட்ட விதிகளின் படியே பதிவு செய்தார். அவரின் செயலில் குற்றம் காண முடியாது, சொத்து உங்களுடையது என்றால் கீழ்க்கோர்ட்டில் மனுதாரர் முறையிடலாம் என்று தீர்ப்பளிக்கின்றது. பதிவுத்துறை சட்டத்தில் யார் சொத்தை யார் வேண்டுமானாலும் விற்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றதா ? வழக்கு தொடுத்ததன் நோக்கமென்ன ? எங்கு தவறு .நடந்துள்ளது அதற்கு தீர்வு என்ன ? அரும்பாடு பட்டு பொருக், நேரம் செலவு செய்து உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்கினை சரிவர ஆராயாமல், கீழ் நிலை நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லும்படி அறிவுறுத்துவது நியாயம் தானா ? மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று சட்டம் இருக்கையில், நான் விஸ்கி அருந்திவிட்டுத்தான் வாகனம் ஓட்டினேன். மது அருந்தி விட்டு ஓட்டவில்லை என்று வாதாடினால், சட்டத்தில் மது அருந்திவிட்டுத்தான் வாகனம் ஓட்டக்கூடாதென்று இருக்கின்றது, விஸ்கி அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாதென்று கூறப்படவில்லை என்று கூட தீர்ப்பளிப்பார்கள் நமது நீதியரசர்கள். எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, மணி…..
பாலாஜி நீங்க எழுதியதற்கு இன்னும் எதிர்ப்பு வராமல் இருக்கின்றதே? கொடுத்து வைத்தவர் நீங்க.
நண்பர்கள் அனைவருக்குமே
ஒரு வேண்டுகோள் –
இந்த இடுகையில் நான் நீதிமன்ற நிகழ்வுகள்
பற்றிய செய்திகளை
தொகுத்து மட்டுமே கொடுத்திருக்கிறேன்.
விவாதம் நடத்துவதற்கான சூழ்நிலை இது அல்ல.
அதற்கான சூழ்நிலை ஏற்படும்போது,
தாராளமாக விவாதிக்கலாம்.
நண்பர்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க கோருகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Sir,
Here also fans club,
rgs
yogi
🙂
Is JJ is the only criminal?If it is so ,then surely she deserves punishment.But the condition is totally different here.The case was filed by some criminals who are worser than here. If our law is correct ,it has to punish all the criminals.It shouldn’t be revenge taking.That is the feeling of an ordinary Indian who doesn’t follow acertain party blindly.
The current system can generate criminals only. The structure is like that. Unless we change the structure, we could not change the way it works.
sir,
problem is not with our system or politicians.
it is with us.
so we deserve our politicians.
like we deserve our fan clubs.
rgs
yogi