சாமிகளின் சாகசங்கள் தொடர்கிறது…… சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா …? ( சா.சா. பகுதி-6 )

chandra and subramanian swamy

(  சேர்ந்தே இருந்தவர்கள் தான்  –  சந்திராசாமியும் அவரது நண்பர் சுப்ரமணியன் சுவாமியும் …….  !!!  )

——-

அரசியல்வாதி என்கிற போர்வையில் இயங்கிக்
கொண்டிருக்கிற ஒரு political blackmailer பற்றிய
இடுகைத் தொடர் இது. பயங்கரமான கிரிமினல் மூளை,
பல முக்கிய மனிதர்களைப் பற்றிய தனிப்பட்ட
ரகசியங்கள் கைவசம், (தற்போதைக்கு மத்தியில்
ஆளும் கட்சியின் அதிகாரத் துணை ) ஆகியவை
இந்தப் பெரியமனிதரின் பலம்.

நான் இந்த இடுகைத் தொடரில் தரும் தகவல்களை
ஏதோ எரிச்சல் காரணமாக எழுதப்படுகிற இடுகை என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் இங்கு எழுதும் அத்தனை விஷயங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. (பல விஷயங்கள் பப்ளிக் டொமெய்னிலேயே உள்ளன ). பெரும்பாலான மக்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட மற்றும் பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாத பல தகவல்களை சேகரித்து நான் இங்கு தருகிறேன். இதில் எதுவுமே என் கற்பனை அல்ல.

இந்த தலைப்பில் நான் இதற்கு முன் தந்த தகவல்களுக்கும் இனி தரவிருக்கின்ற தகவல்களுக்கும் இது பொருந்தும்.

முதலில் தனித்தனியான சில தகவல்கள் –

—————

அமெரிக்காவில் BCCI bank scam-ஐ விசாரிக்க
William Carry என்கிற அமெரிக்க செனட்டர் தலைமையில்
ஒரு சப்-கமிட்டி நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டி
BCCI bank-ன் கணக்குகளை பரிசீலித்த பிறகு
சில தகவல்களை வெளியிட்டது. அதன்படி –

உலக அளவில் அறியப்பட்ட ஆயுத வியாபாரிகளான –
(international arms dealers )
Adnan Khashoggi,
Ernie Miller
ஆகியோர் அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தது
கண்டறியப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால், இவர்கள் இருவரும் சாமியார் சந்திராசாமியின் சீடர்கள்.

இந்த கமிட்டி மேலும் வெளியிட்ட தகவல் –

இவர்களது கணக்கிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு
84 மில்லியன் டாலர் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.
அந்தப் பரிமாற்றம் ராஜீவ் கொலை தொடர்புடையதாக
இருக்கலாம்….

——————-

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் போது
ஜூலை 17, 1991 அன்று – மிராசுதார் ஷண்முகம் என்பவர் SIT யிடம் சிக்கினார்.

மே 1, 1991 -அன்று சிவராசன் குழுவினர் இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக தமிழகம் வந்து சேர்ந்தபோது ஷண்முகம் தான் அவர்களை வரவேற்று அதன் பின் பல விஷயங்களில் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்.

அவர் வசம் ராஜீவ் கொலைக்கான சதித்திட்டம் மற்றும்
அதில் சம்பந்தப்பட்டிருந்த இந்திய அரசியல்வாதிகள் பற்றிய சில தகவல்கள் ரகசிய குறிப்புகளாக (coded messages ) இருந்தன என்று ஒரு செய்தி. SIT அவரை விசாரணைக்காக பிடித்து, தன் பாதுகாப்பில் வைத்திருந்தபோது, அவர் தப்பித்து ஓடி விட்டதாக SIT- யால் பிறகு சொல்லப்பட்டது.

பிற்பாடு அவர், பிணமாக ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரிடமிருந்த ராஜீவ் கொலை பற்றிய விவரங்கள் அடங்கிய ரகசியத் தகவல்கள் என்ன ஆயின என்பது பற்றிய விஷயம் எதுவுமே பின்னர் வெளிவரவில்லை.

முன்னாள் தமிழக டிஜிபி மோகன் தாஸ் இது பற்றிக்
கூறும்போது,
“சண்முகம் தற்கொலை செய்துகொண்டிருக்க முடியாது –
அவர் நிச்சயமாகக் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார்.
SIT பிடியிலிருந்தபோதும், அங்கிருந்து தப்பி ஓடியபோதும், வெள்ளை வேட்டி கட்டியிருந்த சண்முகம் – பின்னர் பிணமாகத் தொங்கும்போது லுங்கியில் தொங்கிக் கொண்டிருந்தது எப்படி ..?” என்று வினா எழுப்பினார்…. ஆனால் – பதில் ஏதும் கிடைக்கவில்லை….

——————–

முன்னாள் மத்திய அமைச்சர் கே.கே.திவாரி
“ராஜீவ் கொலைக்கான சதித்திட்டம் உதித்தது
சந்திராசாமியிடமிருந்து தான். அவருடன் சில
அந்நிய சக்திகளும் சேர்ந்திருந்தன” என்று கூறினார்.
ஆனால், இது அவரது அனுமானம் மட்டுமே. அவரால்
ஆதாரங்கள் எதையும் கொடுக்க முடியவில்லை.

————–

இந்த கொலையில் புலிகள் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருந்தனரா அல்லது இதன் பின்னணியில் உள்நாட்டு, வெளிநாட்டு சதி எதாவது இருக்கிறதா என்பதைப் பற்றி,
இந்தக் கொலை பற்றி தீவிரமாக விசாரித்த ஜெயின் கமிஷனால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.
ஆனால், நரசிம்ம ராவ் அரசு ஜெயின் கமிஷனிடமிருந்த
பல தகவல்களை மறைத்ததும்,
கமிஷனின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தராததும்,
கொலைக்குற்றத்தின் பின்னணியில் இருந்த சில முக்கிய மனிதர்களை பாதுகாக்க நரசிம்ம ராவ் அரசு முயன்றதோ என்கிற எண்ணத்தை உண்டு பண்ணுவது உண்மை.

சந்திராசாமிக்கும், சுப்ரமணியன் சுவாமிக்கும்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்த தொடர்புகள்
குறித்து பலர், ஜெயின் கமிஷன் உட்பட பல இடங்களில் கேள்விகள் எழுப்பினர்.

ஜெயின் கமிஷன், சுப்ரமணியன் சுவாமியை தீவிர சிபியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தது.

ஆனாலும், சிபிஐ இவர்களை விசாரிப்பதில் அக்கரை
காட்டவில்லை. ஏனோ …?

அந்த சாமிக்கும், இந்த சாமிகளுக்கும் தான் வெளிச்சம்….!!!

————————

ஜெ. ரங்கனாத்….40 வயதுடைய இவர்
கர்னாடகாவில் வசித்து வந்த ஒரு தமிழர்.
சிவராசனும், சுபாவும் – தன்னுடைய வீட்டில் இருக்கிறார்கள் என்ற தகவலை போலீசுக்குத் தெரிவித்தவரே இவர் தான்.
ஆனால், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக
ஆகஸ்டு 18,1991-அன்று, SIT யால் இவரும் கைது
செய்யப்பட்டு, ராஜீவ் கொலைவழக்கில் ஒரு குற்றவாளியாக ( 26வது எண் ) சேர்க்கப்பட்டு, அவருக்கும், முதலில் சிறப்பு நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ( பின்னர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பிறகு, அப்பீலில் – 1998, மே 11 அன்று சுப்ரீம் கோர்ட்டால் ரங்கனாத் விடுவிக்கப்பட்டார்.)

வழக்கு நடந்து கொண்டிருந்த போது, ஜெயிலில் இருந்தே இந்த ரங்கனாத் ‘Outlook,’ ஆங்கில செய்தி இதழில் பணிபுரிந்து வந்த செய்தியாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் மூலமாக ஜெயின் கமிஷனுக்கு ஒரு வாக்குமூலம் கொடுத்தார்.

கொலைக்கும்பலைச் சேர்ந்த சிவராசன், சுபா ஆகியோரும், அவர்களைச் சேர்ந்த இன்னும் 5 பேரும்,
1991, ஆகஸ்ட் 6-ந்தேதி – ரங்கனாத் வீட்டின் பின்புற வாசல்
வழியே, பலவந்தமாக உள்ளே நுழைந்து ஆகஸ்ட்            20-ந்தேதி பிணமாகப் பிடிபடும் வரை அங்கேயே தங்கி இருந்தனர்.

அவர்கள் தன் வீட்டில் தங்கி இருக்கும் விவரத்தை
போலீசுக்குத் தெரிவித்தவரே ரங்கனாத் தான். பின்னர்,
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது
செய்யப்பட்டு தண்டனை பெற்றவரும் அவரே.

அவர் வீட்டில் தங்கி இருந்தபோது, சிவராசன், சுபா
ஆகியோர் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்களைப்
பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் இந்த
ரங்கனாத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மட்டுமே.

ஜெயின் கமிஷன் முன்னர் ரங்கனாத் கொடுத்த
வாக்குமூலத்தில் அவர் சிபிஐ மீது பல குற்றச்சாட்டுக்களை கூறி இருக்கிறார்.

சிவராசனும், அவனது கூட்டாளிகளும், பத்திரமாக
இந்தியாவை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச்செல்ல உதவுவதாக சந்திராசாமி கூறி இருந்தாராம்.
சந்திராசாமி மற்றும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தனக்கு தெரிய வந்தது என்றும்,

ஆனால் இந்த தகவல்களை எல்லாம் ரங்கனாத் சிபிஐ யிடம் கூறியபோது, அவர்கள் பதிவு செய்ய மறுத்து விட்டனராம்.
ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் என்கிற தியரியை விட்டு வெளியே வழக்கை கொண்டு செல்ல சிபிஐ விரும்பவில்லை -என்று புகார் சொல்லி இருக்கிறார் ரங்கனாத். எந்தவித அரசியல் தொடர்போ, பின்னணியோ இல்லாத தன் சாட்சியத்தை, ஜெயின் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ரங்கனாத்.

அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரங்கனாத், சிறை அதிகாரியின் ஒப்புதல் கையெழுத்துடன், தன்னிடம் பேட்டி கண்ட outlook -இதழின் செய்தியாளர் திரு பன்னீர்செல்வம் கேட்ட பல கேள்விகளுக்கு
பதில் கூறி இருக்கிறார்.

பொதிந்திருக்கும் மிக முக்கியமான ரகசியங்கள் பல
அவற்றிலிருந்து வெளி வருகின்றன –

கேள்வி – சிவராசனும், சுபாவும் – தங்களுக்கு சந்திராசாமியுடன் உள்ள தொடர்பு பற்றி உங்களிடம் கூறினார்களா …?

பதில் – அவர்கள், சந்திராசாமியோடு தங்களுக்குள்ள
தொடர்புகளைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதோடு,  கர்னாடகாவைச் சேர்ந்த, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்த ஒரு காங்கிரஸ் தலைவரைப் பற்றியும் – அவர் மூலம் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்கள் தங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்பதைப்பற்றியும் கூட கூறினாகள்.

அதுமட்டுமல்லாமல், சிவராசன், சந்திராசாமியை
தன்னுடைய ‘God Father’ என்றும் கூறினான்.,

( தொடர்கிறது – பகுதி-7-ல் )

சாமிகளின் சாகசங்கள்
முந்தைய பகுதிகளுக்குச் செல்ல
கீழே ‘க்ளிக்’ செய்யவும் …..
PART1

Part2

Part3

Part4

Part5

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to சாமிகளின் சாகசங்கள் தொடர்கிறது…… சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா …? ( சா.சா. பகுதி-6 )

  1. R.RAMACHANDRAN's avatar R.RAMACHANDRAN சொல்கிறார்:

    Kavirimainthan Sir,

    First Class Article.
    I was eagerly waiting for this serial.
    Very well supported by genuine records,
    your article goes well to nail on the liars.
    I salute your hadwork behind bringing these
    information to public knowledge.

    Thank you.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    கா.மை.ஜி,
    மிகத்தெளிவாக விவரமாக பதிவு செய்து வருகிறீர்கள் மிக்க நன்றி.
    இதில் எனக்கு ஒரு நெடுநாள் சந்தேகம்.
    தன் கணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டால் எந்த பெண்ணிற்கும் அந்த கொலையாளிக்கு தண்டனை வாங்கித்தரவேண்டும் என்ற கோபமும் வேகமும் வரும்.இந்த நிகழ்வில் அது முற்றிலும் இல்லை.நரசிம்மராவ்,சு.சா.இதில் ஆர்வமற்றவர்களாக இருந்திருக்கலாம்.but why Mrs.Rajiv also did not show any interest?

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      அதற்கு என்னிடம் ஒரு தியரி இருக்கிறது நண்பர் கண்பத். ஆனால் அதை எழுதுவதற்கு முழுதான ஆதாரங்கள் இல்லை. மேலும் ரங்கநாத் “நாம் கேட்பதற்கு அதிகமாக நீ பேசினால் ஷண்முக பண்ணையார் நிலை தான் உனக்கும்” என விசாரணை அதிகாரிகளால் மிரட்டபட்டிருக்கிறார். அப்படி மிரட்டியது யார் என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        நண்பர்கள் கா.மைஜி மற்றும் எழில் அவர்களுக்கு நன்றி.
        இப்போ புரியுது,தூக்குத்தூக்கி வசனம்.
        இந்தியத் தாலியின் தாக்கத்தை விட இத்தாலியின் தாக்கம் அதிகமாக இருக்கும் போலும்.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கண்பத், ( மற்ற நண்பர்களுக்கும் சேர்த்தே…. )

    இதற்கு பதிலாக –
    நான் கீழே ஒரு செய்தியைத் தருகிறேன் –
    இதை யார் சொல்லி இருப்பார்கள் …?
    யோசித்துப் பாருங்களேன் –
    ———
    “ராஜீவ் உயிரோடு இருந்தால், திருமதி சோனியா காந்தி
    அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? ராஜீவ் குடும்பத்தின்
    பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து
    இன்றைக்கு யாரிடம் இருக்கிறது? கூட்டிக் கழித்துப்
    பாருங்கள், புரியும்.”

    ———–
    இதன் விவரங்கள் அடுத்தடுத்த பகுதிகளில்
    வருகிறது. எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
    விரைவில் விவாதிக்கலாம்…..

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  4. இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    இறக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது தொடர்! நன்றி!

    • Arun's avatar Arun சொல்கிறார்:

      எதற்காக சிவராசன் இத்தனை உண்மைகளையும் சம்பந்தம் இல்லாத ஒருவரிடம் கூற வேண்டும் ?

      • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

        நண்பர் அருண்,

        // கொலைக்கும்பலைச் சேர்ந்த சிவராசன், சுபா ஆகியோரும், அவர்களைச் சேர்ந்த இன்னும் 5 பேரும், 1991, ஆகஸ்ட் 6-ந்தேதி – ரங்கனாத் வீட்டின் பின்புற வாசல் வழியே, பலவந்தமாக உள்ளே நுழைந்து ஆகஸ்ட் 20-ந்தேதி பிணமாகப் பிடிபடும் வரை அங்கேயே தங்கி இருந்தனர்.

        அவர்கள் தன் வீட்டில் தங்கி இருக்கும் விவரத்தை
        போலீசுக்குத் தெரிவித்தவரே ரங்கனாத் தான். பின்னர்,
        குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது
        செய்யப்பட்டு தண்டனை பெற்றவரும் அவரே.

        அவர் வீட்டில் தங்கி இருந்தபோது, சிவராசன், சுபா
        ஆகியோர் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்களைப்
        பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் இந்த
        ரங்கனாத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மட்டுமே.//

        கொல்லைப்புறமாக பலவந்தமாக உள்ளே நுழைந்த கொலைக்கும்பல் வந்தது என்னவோ அடைக்கலமாகத்தான். வந்தவுடனே அவர்களும் வெளியேசெல்லாமல் வீட்டுஉரிமையாளர்களையும் பதினைந்து நாட்களாக முடக்கியபோது, அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவை இவை. ரங்கனாத் அறியவந்த தகவல்கள். இவற்றை அவரே சிபிஐயிடம் கூறியும் எடு(க்கப்)படாத இந்தத் தகவல்களை பிற்பாடு தன்னை ஜெயிலில் சந்திக்கவந்த அவுட்லுக் நிருபர் மூலமாக ஜெயின் கமிசனுக்கு வாக்குமூலமாகத் தருகிறார்.

        திகில் கதை.. பதட்டத்தில் முதல் முறை கண்டினியுட்டி மிஸ் ஆகும். ஒருமுறைக்கு இரண்டு முறை படித்தால்தான் புரியும்.

        அந்தத் திகில் நிமிடங்களை கண்முன் கொண்டுவருவதில் கா.மை.க்கு நிகர்…. அவரேதான். 🙂

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்பரே,

          அருமையாக விளக்கியதற்கு நன்றி.

          ஆனால் –
          “அந்தத் திகில் நிமிடங்களை ………..”

          வஞ்சகப் புகழ்ச்சி என்று சிறு வயதில் படித்தது …..!!!

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

        • Arun's avatar Arun சொல்கிறார்:

          //அவர்கள், சந்திராசாமியோடு தங்களுக்குள்ள
          தொடர்புகளைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதோடு, கர்னாடகாவைச் சேர்ந்த, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்த ஒரு காங்கிரஸ் தலைவரைப் பற்றியும் – அவர் மூலம் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்கள் தங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்பதைப்பற்றியும் கூட கூறினாகள்.

          அதுமட்டுமல்லாமல், சிவராசன், சந்திராசாமியை
          தன்னுடைய ‘God Father’ என்றும் கூறினான்.,//

          This answer at the end of this article prompted me to ask this question. Thanks for the response.

  5. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    பதிவுக்கு சம்பந்தமில்லை தான்.
    ஆனாலும் தெரிந்துகொள்வதற்காக கேட்கிறேன்.
    புகைப்படத்தில் நடுவில் இருப்பவர் யார்?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உம் ஹூம் ….முன்னரே முயன்று பார்த்து விட்டேன்…
      என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

      நண்பர்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லலாம்…..

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. yarlpavanan's avatar yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  7. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    அன்பின் கா.மை.
    சா.சா. தொடரின் அனைத்து பழைய லிங்க்குகளையும் ஒவ்வொருதொடரின் முதலிலோ அல்லது இறுதியிலோ கொடுத்தால் நன்றாக இருக்கும். முந்தைய கதைப் (கதை…..!!!!??? கதை இதுவரை.. போல) பகுதிகளில் ஏதேனும் தொடர்ச்சியை க்ராஸ்செக்கிங் செய்வதற்கு தேடவேண்டிய கஷ்டம் இல்லாமல் எளிதாக இருக்கும் என்பது என் கருத்து.
    நன்றி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் today.and.me,

      நீங்கள் கொடுத்தது அற்புதமான யோசனை….
      ஆனால் என் கம்ப்யூட்டர் அறிவு….. பூஜ்யம்…!!

      இருந்தாலும் விட மனசில்லை. அங்கு இங்கு தெரிந்தவர்களிடம்
      கேட்டு, கேட்டு – ஒருவழியாக ஒப்பேற்றி விட்டேன்.

      இப்போது பார்த்தால் மிகவும் திருப்தியாக இருக்கிறது.

      நீங்கள் சொன்னது போல் இது புதிய மற்றும் பழைய வாசகர்கள்
      எல்லாருக்கும் – ஏன் எனக்குமே கூட உதவியாக இருக்கும்.

      உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

        அன்பின் கா.மை.,

        இன்ஸ்ட்ன்ட் ரிசல்ட் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் பில்டர் காபிக்கு இணையாகுமா?

        அதிகமாக வேலைவாங்குகிறேனோ என்று தோன்றுகிறது. என்றாலும் பரவாயில்லை. நீங்கள் கம்யூட்டரைக் கற்றுக்கொள்ள தூண்டுகோலாக இருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு இன்னொன்று சொல்லிக்கொள்ள(ல்ல) விழைகிறேன்.

        அந்த கீழ்ப்பகுதி லிங்க்குகளை காப்பி பேஸ்ட் ஆக எல்லா பழைய பதிவுகளிலும் போடவேண்டுமாக்கும். 🙂 🙂 அதுதான் உண்மையிலேயே உபயோகம். அதாவது 2-வது பகுதியைப் படித்துவிட்டு 6-வது பகுதியைப் படிக்கவேண்டுமானாலும் ஸ்ட்ரைட் ஜம்ப் கொடுக்கவேண்டும்.

  8. DeathBirthRaceR's avatar visujjm சொல்கிறார்:

    சோனியா ~ மொசாத் என்கிற இஸ்ரேலிய உளவுத்துறை ~ கல்லூரியில் துவங்கிய காதல் பின்னனி ~ கடைசி அமெரிக்க பயணம் சோனியாவின் பிளாக்பெரி கைபேசி களவு போனது! !! ~ மற்றும் அமெரிக்க உளவுத்துறை ~ ஏராளம் ஏராளம் உலகப்பந்தின் சுழற்சி …

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      அக்சுவலா நீங்க அவரு அப்பாருல இருந்து நூல் புடிச்சிட்டு வரணும். 🙂

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        எழில்,

        இப்போ எப்படி எழில் ….? (சட்டைக் காலரை
        தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறேன்….!!!)
        (இடுகையின் கடைசியில் பார்த்து விட்டு சொல்லவும்…)

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

        • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

          சும்மாவா?இரண்டு சாமிகளைப்பற்றி எழுதும்போது நண்பர் கா.மை.க்கும் சாகசம் தன்னால் வந்து விடுகிறது. 😉
          அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

        • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

          காமை ஐயா… அந்த பதில் மேலே உள்ள அன்பருக்கான பதில். என் படிப்பறிவும் (knowledge acquired by reading), பட்டறிவும் (knowledge acquired by experience) நிச்சயமாக உங்களின் பாதியிலும் கீழ் என்பதை உங்கள் இடுகைகளை படித்து அறிந்தவன். உங்களுக்கு போய் அப்படி நான் சொல்லுவேனா? நிச்சயமாக எங்காவது வரும் என்று தெரியும். 🙂

          இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்!

  9. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    Known is fistful, unknown is earth sized .
    Happy Deepawali to all.

  10. DeathBirthRaceR's avatar visujjm சொல்கிறார்:

    தீபாவளி சுகம் கண்டு 3ஆண்டுகள் ஓடி விட்டன நரம்பு முறுக்கேறிய நண்பர்களே … எனக்கு இன்றில்லாவிடின் என்றாவது மாறாதா என்ற ஏக்கம் + தாகம் ஒன்றே இலட்சியம்… மனவெதும்பலுக்கும் குமுறலுக்கும் பொறுத்துக் கொள்ளவும் நரம்பு முறுக்கேறியை நல்லுள்ளங்களே…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் விஷ்ணு வரதராஜன்,

      உங்களுக்கான உடனடித் தேவை தன்னம்பிக்கை தான்.
      தன்னம்பிக்கை ஒன்றிருந்தால் போதும்….வாழ்க்கையின்
      எந்த சவாலையும் சந்தித்து விடலாம்.

      தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி இவற்றோடு
      தொடருங்கள். இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்.

      ஐந்து வருடங்கள் கடந்த பின் தான் நீங்கள்
      திரும்பிப்பார்க்க வேண்டும். அப்போது தான் நீங்கள்
      எவ்வளவு தூரம் முன் வந்து விட்டீர்கள் என்பது
      உங்களுக்குப் புரியும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • DeathBirthRaceR's avatar visujjm சொல்கிறார்:

        Thank u sir…

      • DeathBirthRaceR's avatar visujjm சொல்கிறார்:

        வணக்கம் ஐயா…

        தங்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் சிரம் தாழ்ந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்…

        தங்களை போன்ற நடுநிலை தவறாத சான்றோர் கூறும் அறம் சார்ந்த நன்னெறி தகவல்களை முடிந்த மட்டும் என்னால் இயன்ற வரை இளைஞர்கள் வழி கொண்டு செல்கிறேன் அதுமட்டுமில்லாது சமுதாய கழிவுகளை சுத்தம் செய்ய இன்றளவும் என்னோடு பேசும் கல்லூரி மாணவசெல்வங்களுக்கு சிறு உந்து சக்தியாக இருந்து வருகின்றேன், அதில் நான் கண்ட சிறு தீப்பொறி வலைபதிவுக்குள் அறிமுகமாகியுள்ளது… நேரமிருந்தால் சற்று அந்த சுத்த தமிழனை காண்பீர்கள் என்ற உவகையில் இதோ அந்த Website koottruvan.blogspot.in

        நன்றி …

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்பர் விசு,

          வாழ்த்துக்கள். இனிதே தொடரட்டும்.

          -அன்புடன்,
          காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.