இப்படி ஒரு முதிர்ச்சி இல்லாத் தன்மையா …?
உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அவர்கள் காட்டும் படபடப்பும், நிதானமின்மையும்,
பக்குவமற்ற அணுகுமுறையும் ………
இனி மத்தியில் எவ்வளவு சிறப்பான ஆட்சி நடந்தாலும் கூட, தமிழகத்தில் பாஜக விலாசம் இல்லாமல் தான் போகும் என்பதை உறுதி செய்கின்றன.
ஏன் இப்படி குதிக்கிறார்கள்……
தங்கள் உயரம் அவர்களுக்குத் தெரிய வேண்டாமா ..?
பொதுவாகவே உள்ளாட்சி, நகராட்சி தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பது அரசியல்வாதிகளுக்கு – தெரியாதா ?
மற்ற முக்கியமான, பெரிய கட்சிகள் எல்லாம் ஒதுங்கும்போதே தெரிய வேண்டாமா … ?
திமுக வை விட, பாமக வை விட, தேமுதிக வை விட,
தமிழக பாஜக என்ன பெரிய கட்சியா …..?
ஒரு பேச்சுக்காக –
ஜெயிக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட
மிச்சமுள்ள சொற்ப காலத்திற்கு அங்கே போய்
இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் ….?
மெஜாரிடி உறுப்பினர்கள் ஒரு கட்சியும், மேயர் மற்றொரு
கட்சியுமாக இருந்தால், மேயரால் என்ன சாதிக்க முடியும் …?
மற்ற கட்சிகள் எதுவும் தேர்தலில் நிற்கவில்லை என்றவுடன் – தாங்கள் நின்றால், அத்தனை எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்களையும் பெற்று,
தேர்தலில் தோற்று விட்டாலும் கூட –
தங்கள் பலம் அதிகரித்து விட்டதாக தலைமையிடத்தே காட்டிக் கொள்ளலாம் என்கிற அசட்டுத்தனம் தானே ….?
புதிய தலைமையின் ஆர்வக் கோளாறு என்று
மட்டும் இதைச் சொல்லி விட்டு விடலாமா ….?
மற்றவர்கள் பங்கு ….?
காங்கிரசை விட எந்த விதத்திலும் தாங்கள் தாழ்ந்தவர்களல்ல
என்று ஊருக்கு ஒரு க்ரூப்., கோஷ்டி….
குமரியின் மகள் – கன்யாகுமரியில் ஒரு கூட்டத்திலாவது
பேசிவிட முடியுமா? ‘பொன்ரா’ அனுமதிப்பாரா….?
காரைக்குடியில் எத்தனை “ராஜா”க்கள்…..!!
கோவையில் எத்தனை “ராதா”க்கள் …!!!
எங்கே பிரச்சாரத்திற்கு கூப்பிட்டு விடப்போகிறார்களே
என்று இல.கணேசன் நாட்டை விட்டே போய் விட்டார்..! (ஆஸ்திரேலியா பயணம் …..)
தங்கள் கூட்டணியில் இத்தனை கட்சிகள் இருக்கின்றன
என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறார்களே தவிர –
கூட்டத்தில் பேச எந்த கூட்டணித் தலைவராவது
வருகிறார்களா ….?
டாக்டர் ராமதாஸ்….?
டாக்டர் அன்புமணி…?
விஜய்காந்த் …?
அட்லீஸ்ட் – அவரது மனைவி …?
(விஜய்காந்தை பாஜக தலைவர் வேண்டி, விரும்பி கேட்டுக் கொண்டதற்கு, அவர் பார்த்தசாரதியை வேண்டுமானல் அனுப்புகிறேன் -பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றாராம்…!)
கூப்பிடாமலே கூட வந்திருப்பார் வைகோ அவர்கள்….
ஆனால் அவர் கூறிய ஒன்றையாவது மதித்தார்களா இவர்கள் …?
வரிசையாக – மீனவர் கைது, கச்சத்தீவு பிரச்சினையில் பதில், ராஜபக்சேவுடன் உறவு, இந்தி திணிப்பு …..
அவருக்கு எப்படி மனம் வரும் …..?
அதான் அவர் கூட கண்டு கொள்ளவில்லை….
திமுக வையும், காங்கிரசையும் தங்களை ஆதரிக்குமாறு
தமிழக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது ….. கூச வேண்டாம் …..?
கொஞ்சம் கூட வெட்கமில்லாமல்
எப்படி அவர்களிடம் போய் ஆதரவு கேட்கிறார்கள் ..?
அதுவும் நிச்சயமாகத் தோற்கப் போகிறோம் என்பது
தெரிந்த பிறகு கூட ….?
தங்கள் வேட்பாளரை பத்திரமாக கன்யாகுமரி மத்திய மந்திரியின் பாதுகாப்பில் வைத்திருப்பதாகச் சொல்லி விட்டு,
அவரையும் விலை கொடுத்து வாங்கி விட்டார்கள் என்று
புலம்புவது கேவலமாக இல்லை …..?
மந்திரியின் பாதுகாப்பில் இருப்பவரை எப்படி விலை
பேச முடியும்..? எப்படி வாபஸ் வாங்க வைக்க முடியும் …?
அப்படியென்றால் அவரும் அதற்குத் துணை என்று
சொல்கிறாரா தமிழக பாஜக தலைவர்…?
தான் ஜெயித்த கன்யாகுமரி மாவட்டத்தையே, கேரளாவுடன் சேர்க்கத் துடிக்கும் இவர் தான் பாஜகவின் ஒரே ஒரு தமிழக மத்திய மந்திரி…..பெரும் வெட்கக்கேடு.
இவரெல்லாம் தமிழ்நாட்டிற்கு என்ன சேவை
செய்து விடப்போகிறார்….? பாவம் மீனவர்கள் இன்னமும்
இவரை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பொன்ரா’வின் வேட்பாளர் ஏற்கெனவே பாராளுமன்ற
தேர்தலின்போது, நீலகிரி தொகுதியில் -ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா’விடம் விலை போனதைப் பார்த்தோம் தானே …? இவர்களது வேட்பாளர்களின் யோக்யதை புரியாதா என்ன …?
மிகக் கேவலமாக இருக்கிறது –
இவர்களது போக்கைக் காண…!



🙂
a good ananysis about tamil nadu b.j.p wing… byk.m.ji
விஜயகாந்த் கட்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் போனார்கள் .இவர்கள் கட்சியில் வேட்பாளர்களே பறந்து போகின்றார்கள்.
They would have retained the prestige of Modi and BJP by remaining on the sidelines for the time being and decide their strategy for the assembly poll.
Yes Dr.KGP,
You said it rightly…
– that should have been their strategy.
with all best wishes,
Kavirimainthan
பத்து வருஷம் கழிச்சு ஆட்சியப் பிடிச்சது ஒன்னு. தகுதிக்கு மீறுன பெரும்பான்மை கிடைச்சது ரெண்டாவது. வழிநடத்த வேண்டிய பெருந்தலைகளை டம்மியாக்குனது மூணாவது. இந்த மூணு சேர்ந்ததால ரொம்ப நாள் பசியில் கிடந்தவனுக்கு கட்டுச்சோற்றை பிரிச்சி காமிச்ச மாதிரி ஆயிப்போச்சு!!! வேறொன்னுமில்ல.. தெளியறதுக்கு கொஞ்ச நாள் ஆகும் 🙂
அப்பாடா – ஒரு வழியாக ரிஷிக்கும்
நடப்பு அரசியலில் ஆர்வம் வந்து விட்டது
போலிருக்கிறதே….!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
வேறு வழி இல்லையே.. ஐயா. ஒரேயடியாய் வெறுப்பாய் இருந்து யாருக்கென்ன பயன்! அதான் கொஞ்சம் கரிசனமும் காட்டுவோம் என இறங்கிவிட்டேன் 🙂
போகப் போகப் பார்க்கலாம்…
ரிஷி,
உங்கள் மனமாற்றத்தை –
மனமாற வரவேற்கிறேன்.
இனி, உங்களிடமிருந்து
சுவையான பின்னூட்டங்களையும்
எதிர்பார்ப்பேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்