இந்தியா முழுவதுமாக 1.54 லட்சம் (ஒரு லட்சத்து
ஐம்பத்து நாலு ஆயிரம் ) – கிளைகள்.
அதில் 90 சதவீதம் கிளைகள், கிராமப்புறங்களில்.
சராசரியாக, இந்திய மக்கள் – ஒவ்வொரு
5682 பேருக்கும் ஒரு கிளை அலுவலகம் –
இந்தியா முழுவதுமாக, ஊரக வேலை வாய்ப்புத்
திட்டத்தின் கீழ் வேலை பெறும் சுமார்
2.2 கோடி கிராம மக்களுக்கு இதன் மூலம்
தான் சம்பளம் வழங்கப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய,
மக்களுடன் மிக நெருக்கமாக
தொடர்பு கொண்டு செயல்படும்,
மிகப்பரந்த தொடர்புகளை உடைய ஒரு ஸ்தாபனம் –
இந்திய அஞ்சல்(post office) அலுவலகங்கள்…!
இவை அஞ்சல் விவகாரங்களை மட்டும்
கவனிப்பதோடு அல்லாமல் –
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, மிகஅதிக அளவிலான,
சேமிப்பு வங்கிகளாகவும் செயல்படுகின்றன.
22.5 கோடி சேமிப்பு கணக்குகளை கையாளும்,
இதன் சேமிப்புக் கணக்கில் இருக்கும் மொத்த தொகை
சுமார் ஆறு லட்சம் கோடி…! இத்தனை பணமும்
நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் சேமிப்பு.
மிக முக்கியமாக, வயது முதிர்ந்த –
மூத்த குடிமக்களுடைய துணைவனாக,
சேமிப்புத் தொகையுடன் இணந்த
(Post Office Monthly Income Scheme)
மாதாந்திர ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இன்னொரு முக்கியமான விஷயம் –
இதன் சேமிப்புக் கணக்கில்
(Post Office Savings Bank )
சேர்த்து வைக்கப்படும் தொகை முழுவதும் –
மற்ற வர்த்தக வங்கிகளைப் போல் –
பெரும் முதலாளிகளுக்கும்,தொழிலதிபர்களுக்கும்
“வாராக்கடன்”களாக தாரை வார்த்துக்
கொடுக்கப்படுவதில்லை.
மாறாக, அஞ்சல சேமிப்பு வங்கியில் சேமிக்கப்படும்
பணம் முழுவதும், அந்தந்த மாநில அரசுகளுக்கு,
அவற்றின் வளர்ச்சித் திட்டங்களுக்கு – கடனாகக்
கொடுக்கப்படுகிறது.
இப்பேற்பட்ட ஒரு நிறுவனத்தின் அடுத்த கட்ட
மக்கள் சேவை விரிவாக்கமாக –
அஞ்சல் நிலையங்களில் உள்ள சேமிப்பு வங்கிகளை,
சாதாரண வர்த்தக வங்கிகள் போல், அனைத்துப்
பணிகளையும் செய்வது போல் மாற்றி செயல்பட வைக்க,
உரிய செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. அஞ்சல்
துறை விசேஷ கவனம் எடுத்துக்கொண்டு, அதற்கான
அத்தனை வரைபடங்களையும் (blue print)
தயாரித்து சுமார் 700 கோடி ரூபாய் செலவில்
அஞ்சல் வங்கிகளை (Post Banks) இந்தியா
முழுவதும் செயல்படவைக்க ஒரு திட்டத்தை ரிசர்வ்
வங்கியின் பரிசீலனை/அனுமதிக்கு அனுப்பியது.
ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை விரிவாகப் பரிசீலித்தது.
ஏற்கெனவே ப்ரைவேட் வங்கிகளைத் துவக்க அனுமதி
அளிக்கும் மத்திய நிதியமைச்சகத்தின் திட்டம் ஒன்றும்
ரிசர்வ் வங்கியில் பரிசீலனையில் இருக்கிறது…
26 பெருந்தொழில் நிறுவனங்களும், வர்த்தக
நிறுவனங்களும் ப்ரைவேட் வங்கி துவங்க
விண்ணப்பித்திருந்தன. இவற்றிற்கு மத்திய நிதி
அமைச்சகத்தின் ‘ஆசி’யும் இருந்தது.
இந்த வங்கிகளுக்கான அனுமதியை விரைவாகக் கொடுக்க
ரிசர்வ் வங்கிக்கு எல்லா தரப்பிலிருந்தும் அழுத்தம்
கொடுக்கப்பட்டு வருகிறது…!
.
இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் வங்கிகளைத்
திறக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும்
அரசு சொல்லிலேயே காட்டிக் கொண்டிருக்கிறதே தவிர
இதுவரை உருப்படியாக கிராமப்புற வங்கிகளைத்
துவக்க எத்தகையை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி,
மற்ற ப்ரைவேட் வங்கிகள் விஷயத்தில்
முடிவெடுக்கும் முன்னரே, இந்த திட்டத்திற்கு
தன் அனுமதியை அளித்து விட்டது.
இது மத்திய அரசின் செயல்பாடு என்பதால்,
இறுதி செயல் வடிவம் கொடுப்பதற்கு முன் மத்திய
நிதியமைச்சகத்தின் ஒப்புதலும் இதற்கு தேவை.
எனவே, அஞ்சல் துறை தன் திட்டத்தை
நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
அவ்வளவு தான் – போன கோப்புகள் போனது தான் –
மாதங்கள் பல ஆயினும், கோப்புகள் இன்னமும்
அஞ்சல் துறைக்கு திரும்ப வரவே இல்லை.
செயல்படத்துவங்கினால், இந்தியாவின் அனைத்து
கிராம அஞ்சல் வங்கிகளும், கம்ப்யூட்டர் நெட்வொர்க்
மூலம் இணைக்கப்பட்டு, அனைத்து கிராமங்களுக்கும்
கம்ப்யூட்டர் பயன்பாட்டின் அனைத்து வசதிகளும்
கிடைக்கும்.(ஈமெயில், இன்டர்னெட் ப்ரவுசிங் உட்பட)
அற்புதமான இந்த திட்டத்திற்கு நிதியமைச்சகம்
இன்னும் ஏன் அனுமதி தரவில்லை …?
யாருக்குத் தெரியும் …?
இதுவரை, வெளிப்படையாக எந்த காரணமும்
கூறப்படவில்லை.
இரண்டு காரணங்கள் இருக்கலாம் –
ஒரு வேளை, அஞ்சல் அலுவலகங்களில் வங்கிகள்
வந்து விட்டால், தனியார் வங்கிகளின் வியாபாரமும்,
புதிதாக விண்ணப்பித்திருக்கும் ப்ரைவேட் வங்கிகளின்
செயல்பாடும், வியாபாரமும் – பாதிக்கப்படலாம்..!
எனவே, இதனைக் கிடப்பில் போட, தனியார் வங்கிகள்
முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம்.
மத்திய அரசின் நிதி விவகாரங்களை தனிக்காட்டு ராஜாவாக
கையாண்டு கொண்டிருக்கும், நிதியமைச்சகம் –
அஞ்சல் துறை நிதிவிவகாரங்களை கையாள்வதை
விரும்பாமல் இருக்கலாம்.
இரண்டில் எது காரணமாக இருந்தாலும் – அல்லது
இரண்டுமே காரணமாக இருந்தாலும் –
இந்த நாட்டின் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கும்,
வளர்ச்சிக்கும் காரணமாக அமையக்கூடிய,
சாதாரண கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயன்
தரக்கூடிய – ஒரு அற்புதமான
திட்டத்தை குறுக்கே நின்று தடுப்பதும் –
ஊழலில் ஒரு வகை தான் என்றே தோன்றுகிறது.
ஒருவேளை நமது பார்வைக்கு வந்திருக்கும் இந்த
செய்திகள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
சுற்றுப்பயணங்களிலேயே இருக்கும்
நிதியமைச்சரின் பார்வைக்கு இன்னும்
போகவில்லையோ …?
உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில்
ஒருவரான நிதியமைச்சரின் பார்வைக்குப் போயிருந்தால்
எப்போதோ இந்த அஞ்சல் வங்கிகள் பாரதமெங்கும்
பரந்து விரிந்து செயல்படத்துவங்கி இருக்காதா என்ன …?!
எங்கோ காரைக்குடியில் சின்னஞ்சிறிய வங்கிக்கிளைகளை
எல்லாம் பறந்து வந்து திறந்து வைத்துக் கொண்டிருக்கும்
நிதியமைச்சர், இத்தனை அஞ்சல் வங்கிகளைத் துவக்கி
வைக்க எவ்வளவோ மகிழ்வு கொண்டிருப்பாரே …
தடங்கல் எங்கே என்று கண்டு பிடித்து,
நாடு முழுவதும் அஞ்சல் வங்கிகள் விரைவில்
துவங்கப்பட நிதியமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா ..?
.
பின்குறிப்பு –
இப்போது தான் படித்தேன் –
ரசனையுடனும், பொருத்தமாகவும் இருந்ததால்
கீழே தருகிறேன்…
“விடுதலைப் போராட்ட கால காங்கிரஸ் கட்சிக்கும்,
இன்றைய காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள வித்தியாசம்
என்ன ?”
“வ. உ. சிதம்பரத்திற்கும்,
ப. சிதம்பரத்திற்கும் உள்ள
வித்தியாசம் தான் “….




AFTER CELL PHONES, INTERNET CAME FOR USAGE, THE ROLE OF POST OFFICES DIMINISHED. WHEN PEOPLE WANT TO SEND LETTER, THEY PREFER COURIER SERVICES.
IF THE ROLE OF POST OFFICES ARE NOT CHANGED, SLOWLY, ONE ONE ALL POST OFFICES WILL BE CLOSED. IT APPEARS OUR CENTRAL GOVT PREFERS CLOSURE OF POST OFFICES. OUR P.C IS A PHILOSOPHER. (VEDANTHA OR VEDANTHI) . IN 1969, WHEN 14 BANKS WERE NATIONALIZED, IT WAS CONSIDERED AS AN ACHIEVEMENT OF INDRA.
NOW THIS POST OFFICE ISSUE ALSO AN ACHIEVEMENT OF UPA.
பொதுவாக கிராமப் புறங்களில் தபால் துறை சேவை இப்போதும் முக்கியமான ஒன்று. நீங்கள் கூறியது போல் தபால் சேமிப்பு ஆனது, நாட்டின் சேமிப்பு. ஆயின், இதன் முக்கியத்துவத்தை கடந்த பத்து ஆண்டுகளாகவே புறக்கணித்து வருகிறது மத்திய அரசு. முதலில் NSC, பின்பு கிராமப்புற மக்களின் சேமிப்புகளின் வட்டிகள் குறைக்கப் பட்டன. பின்பு, நல்ல கட்டிடங்கள் கொடுக்காமல் நிறுத்தினர். பின், நீங்கள் கூறிய படி, நமது நிதி அமைச்சகமும் நிதி அமைச்சரும், இந்த சேமிப்புகள் தனியார் வங்கி செல்வதையே விரும்புகிறார்கள். முன்பு ஒரு, ஜனார்த்தன பூஜாரி இருந்தார், அவர் அரசு வங்கிகள் நட்டம் அடைய விரும்பினார். இப்போது ப.சி. அவர்கள் கிராம சேமிப்புகள் தபால் துறை சிறு சேமிப்பு மூடப்பட முயற்சிக் கிறார்.
இது தான் உண்மை.
தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் அவருக்கு
கொஞ்சம் ஓய்வு கிடைக்கலாம்..
அப்போதாவது கொஞ்சம் மனசாட்சியை
தட்டிப்பார்த்து, (சுய)பரிசோதனை
செய்துக்கொண்டால் நல்லது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு காவிரி மைந்தன்.
அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு காவிரி மைந்தன்.
இது போன்ற விழிப்புணர்வு உள்ள பதிவுகளை அடிக்கடித் தாருங்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
நல்ல பதிவு வழக்கம்போல..நன்றி சார்!
1.மகராஜபுரம் விஸ்வனதய்யரிடம் ஒருவர் சென்று ,”சாவேரிக்கும் ,அசாவேரிக்கும் (ராகங்கள்) உள்ள வித்தியாசம் என்ன?” என்று கேட்க,இந்த “மேதமை”யில் மகிழ்ந்துபோன அவர் சொன்னாராம்..”கரண்டிக்கும் பாதாளக்கரண்டிக்கும் உள்ள வித்தியாசம்தான்” என்று! (இரண்டு சிதம்பரத்திற்கும் உள்ள வேறுபாடு)
2.நண்பர் கோபால்சாமியின் கீபோர்ட் கேப்ஸ் லாக் சரியாகிவிட்டது என நினைத்திருந்தேன்.மீண்டும் பிரச்சினை கொடுக்கிறதே!
3.காணாமல் போனவைகள் பற்றிய அறிவிப்பு.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்250 பயணிகளுடன் இரண்டு வாரங்களாக காணவில்லை.
இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு மாதமாக காணவில்லை.
கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த பரிசு உண்டு.
கலக்கறீங்க கண்பத்.
கரண்டி-பாதாளக் கரண்டி,
மலேசிய விமானம் – மன்மோகன் சிங் –
இன்னும் ஒரு goal போட்டிருந்தா hatrick
ஆகி இருக்கும் …!
சுவையான பின்னூட்டங்களுக்கு நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மிக்க நன்றி.கா.மை.ஜி..உங்கள் பதிவுகள் ரத்த கொதிப்பை அதிகப்படுத்தும் போது மன அழுத்தம் குறைய இவ்வாறு சில பின்னூட்டங்கள் தேவைபடுகின்றன.தவறாக என்ன வேண்டாம்.ஜெய் ஹிந்த்.
கண்பத்,
சுவையான பின்னூட்டங்கள் உங்களுடையது..
எப்போதுமே உங்கள் பின்னூட்டங்கள்
என்னால் மட்டுமின்றி, மற்ற நண்பர்களாலும்
வரவேற்கப்படுகின்றன.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
correct. Why Manmohan so far not attended one single election meeting?
Soniaji also not coming to meet people.
What about soniaji’s passport issue?
Since last two days i did not see kejrivaal in 7X24 channels.
Railway was owning lands everwhere. Lallu sold lands and showed excess budjet. Lke that, somebody might be having an idea about properties of postal dept.
Really I dont learn typing. By compulsion, I start using computer. That is why so many typing mistakes and CAPSLOCK problem. Pl bear with me.
Thank you Sir.The occurrence of small mistakes does not matter while describing mega mistakes.