ஜஸ்டிஸ் சந்துரு -“ஆமையை திருப்பிப்போட்டுத்தான் அடிக்கணும்”

vizhi-2

அசந்து போய் விட்டேன். நீதிபதி சந்துரு அவர்கள்
இவ்வளவு வேகமாகவும், வெளிப்படையாகவும் தன்னை
வெளிப்படுத்திக் கொள்வார் என்று நான் கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை …!

பெரிய பதவிகளில் இருப்பவர்கள், இருந்தவர்கள் –
சமூக அக்கரையும், பொறுப்பும் மிகுந்தவராக
அமையப்பெற்றால், அது சமுதாயத்திற்கு கிடைக்கும்
பெரும் வரம். சந்துரு அவர்களால் தமிழ் நாட்டிற்கு பல
வகைகளில் பயன். பதவியில் இருந்தபோதும் சரி –
இல்லாதபோதும் சரி..!

justice chandru -vizhi-

திரு சந்துரு அவர்கள் நீதித்துறையிலிருந்து ஓய்வு
பெற்றதும் ஒரு விதத்தில் நல்லதே. இப்போது எந்தவித
கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக சமுதாய சேவையில்
ஈடுபட அவரால் முடிகிறது அல்லவா ..!

vizhi-1

“விழி தமிழ் நாடு” என்கிற பெயரில் அண்மையில் ஒரு
அமைப்பு துவங்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்கு கொள்கையை
அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற நிலையில் –
சட்டப்படி மதுவை ஒழிக்க வழி இல்லை.

ஆனால், சட்டப்படி மதுக்கடைகளை …
மூட முடியும்…!
எப்படி ?

அதைத்தான் தமிழகம் முழுவதும் செய்யவிருக்கிறது
‘விழி தமிழ்நாடு’ அமைப்பு. சட்டபூர்வமாக
மதுக்கடைகளை மூடுவதற்கான வழிகளை ஆராய்ந்து,
மக்களைத் திரட்டி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு,
மதுக்கடைகளை படிப்படியாக மூடச்செய்வதே இந்த
இயக்கத்தின் முக்கிய நோக்கம். இந்த இயக்கத்தின்
தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி
சந்துரு அவர்கள்.

vizhi-3

“சட்டப் பஞ்சாயத்து இயக்கம்” ஏற்கெனவே,
லஞ்ச ஒழிப்பு, மது ஒழிப்பு ஆகிய
இரண்டு லட்சியங்களையும் முன்வைத்து செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் –

ஞாயிறு (16/03/2014) மாலை இதற்காக சென்னை
தி.நகரில் நடத்தப்பட்ட கருத்தரங்கம்/பயிற்சி அரங்கத்தில்,
மது ஒழிப்பு இயக்கத்தில் ஆர்வமுடைய பலர் கலந்து
கொண்டனர் (நானும் ..).

அந்த நிகழ்ச்சியில் நீதிபதி சந்துரு அவர்கள்,
சட்டபூர்வமாக மதுக்கடைகளை மூடுவதற்கு, சமூக
ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டிய சில வழி முறைகளைப்
பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.
அவரது உரையிலிருந்து பொதுவாக அனைவருக்கும்
பயன்படக்கூடிய, சில கருத்துக்கள் சுருக்கமாக – கீழே –

-மதுபானக் கடைகளை மூடுவதற்கு சட்டத்தில் இடம்
இருக்கிறதா ? நீதிமன்றங்கள் நம் துணைக்கு வருமா ?
வழக்கு போடுவதற்கான நிதி உதவிக்கு எங்கு செல்வது ?
வக்கீல் பீஸ் கொடுத்து கட்டுப்படியாகுமா ?

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள்
மற்றும் மதுபானக்கூடங்கள்)விதிகளின் கீழ் –

டாஸ்மாக் கடைகள் வழிபாட்டுத் தலங்களிடமிருந்தும்,
கல்வி நிலையங்களிடமிருந்தும், குறிப்பிட்ட தூரத்திற்கு
வெளியே தான் வைக்கப்பட வேண்டும்
( நகராட்சிப் பகுதிகளில் 50 மீட்டருக்கு வெளியேயும்,
மற்ற பகுதிகளில் 100 மீட்டருக்கு வெளியேயும் –
அதே சமயம் வணிகப்பகுதிகள் அல்லது தொழிற்சாலை
பகுதிகளுக்கு இவ்விதிகள் பொருந்தாது என்பது விதி).

கடைகளை வைக்கும் இடத்திற்கு அனுமதி
வழங்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டருக்கு உரியது.
ஆக, இடத்தைத் தேர்ந்தெடுப்பது, மாவட்ட நிர்வாகமும்,
காவல் துறையும், வருவாய்த்துறையும் சேர்ந்து தான்..!

இந்த விதிகளை மீறும் வகையில் டாஸ்மாக் கடைகள்
எங்காவது இருந்தால், அந்தப் பகுதி மக்களில் யாராவது
ஒருவர் அல்லது அநேகர் சேர்ந்து ஒரு அமைப்பாக – அந்த
கடையை அகற்ற வேண்டுமென்று, முதலில் காவல்
துறைக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு கொடுக்க
வேண்டும். அந்த மனுவின் மீது சாதகமான நடவடிக்கை
இல்லையென்றால், தகுந்த ஆவணங்களுடன்
மதுரை/சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ரிட்’பெட்டிஷன்
மூலம் வழக்கு தொடரலாம்.

இதற்கான நிதி வசதியை அவர்களால் திரட்ட முடியவில்லை
என்றால், “இலவச சட்ட உதவி” மையத்தை அணுகி,
தகுதியுள்ள ஒரு நபரின் பெயரில்
(அதாவது, இலவச சட்ட உதவி பெறத் தகுதியுடையவர்
பெயரில் ..) இலவசமாகவே வழக்கறிஞர் உதவியையும்
பெறலாம். அதாவது – மதுக்கடைகளை மூட,
அரசு செலவிலேயே, அரசுக்கு எதிராக வழக்கு
தொடுக்கலாம்..!

இது குறித்து விவரமாகப் பேசும்போது, அவர் கூறிய
ஒரு விஷயம் மிக முக்கியமானது –
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,
மதுக்கடைகள் – ஆளும் கட்சியைச் சேர்ந்த,
பணபலமும், ஆள்பலமும், அரசியல் செல்வாக்கும்
உடைய – வலுவான நபர்களால் தான் நடத்தப்படுகின்றன.

எனவே – அவர்களை எதிர்த்து தொடர்ந்து
போராட்டத்தில் நிற்க, தாக்குப் பிடிக்க –
தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர் பெயரில்
வழக்கைத் தொடுப்பது அவசியம். ஆமையை
அடிப்பதென்றால், அதைத் திருப்பிப் போட்டுத் தான்
அடிக்க வேண்டும். அது போல், ரவுடிகளையும்,
குண்டர்களையும் எதிர்க்க மனவலிவும், சட்டத்தின்
துணையும் அவசியம். தனி நபரால் இதைச் செய்வது
கடினம் என்பதால், ஒரு குழுவாக, ஒரு அமைப்பாக
இதை முன்கொண்டு செல்வது தான் நடைமுறை சாத்தியம்.

வழிபாட்டு இடங்கள், பள்ளிகள் ஆகியவற்றைக் கடந்து,
வேறு சில காரணங்களை முன்னிட்டும், மதுக்கடைகளை
மூடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சில
வழக்குகளில் தீர்ப்பு கூறி இருக்கிறது.

சில சமயங்களில், காவல் துறைக்கும், மாவட்ட
கலெக்டருக்கும் மனு கொடுத்தும், நடவடிக்கை ஏதுமில்லை
என்கிற நிலையில் – நீதிமன்றம் தலையிட்டு கடையை
மூட உத்திரவு போட்ட முன் உதாரண வழக்குகள் உள்ளன.
(தன் பதவிக்காலத்தில் – இதுபோல் 26 மதுக்கடைகளை
மூட உத்திரவிட்டிருப்பதாகச் சொன்னார் ஜஸ்டிஸ் சந்துரு
அவர்கள்..!)

அத்தகைய முன்னுதாரண வழக்குகளை உதாரணம் காட்டியும்
வழக்குகளில் வாதாடவும், நல்ல தீர்ப்பு பெறவும் முடியும் !

உயர்நீதி மன்றத்தில் சட்டம், ஒழுங்கை ஒரு காரணமாக
கொண்டு செல்லலாம். பொது மக்களுக்கு தொல்லை
(public nuisance ) என்கிற காரணங்களையும்
முன் வைக்கலாம்.

கிராம பஞ்சாயத்துக்களில் தீர்மானம் நிறைவேற்றி,
மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி கடையை மூட
வற்புறுத்தலாம்.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை தடை செய்து,
உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
எனவே, கடைகள் நெடுஞ்சாலைகளை ஒட்டி இருந்தால் –
அவற்றை மூடச்செய்யவும் வழி உண்டு.

ஒட்டுமொத்தமாக மதுக்கடைகளை மூடச்சொல்லி
வழக்கு போட சட்டத்தில் வழி இல்லை. ஆனால்,
தனித்தனியாக, ஒவ்வொரு கடையாக, உரிய
காரணங்களைச் சொல்லி – எத்தனை கடைகளுக்கு
எதிராக வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம்…!

குடிப்பதால், உடல்நலம் கெடும் மனிதருக்கு – முழு
மருத்துவ வசதியும் செய்து கொடுக்க வேண்டியது
மாநில அரசின் கடமை. இதை வலியுறுத்திப் பெற
சட்டத்தில் இடமுண்டு.

பொதுவாக – குடிப்பவர் ஆணாக இருந்தாலும் கூட,
மதுவினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும்
குழந்தைகளும், குடும்பத்தைச் சேர்ந்த இதர உறுப்பினர்களும்
தான். எனவே, ஒட்டுமொத்தமாக – மதுவிலக்கு
கொள்கையை அமல்படுத்த, அரசாங்கத்தை வழிக்குக்
கொண்டு வர –

இத்தகைய பாதிக்கக்ப்பட்ட மக்களைத் திரட்டி,
மதுவிற்கும், மதுக்கடைகளுக்கும் எதிரான ஒன்றுபட்ட
கருத்தை உருவாக்குவது அவசியம்.
அதற்கான முயற்சிகளை சமூக ஆர்வலர்களும்,
தொண்டு நிறுவனங்களும்,
முக்கியமாக பெண்களுக்கான அமைப்புகளும் ஒன்று
சேர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஜஸ்டிஸ் சந்துரு -“ஆமையை திருப்பிப்போட்டுத்தான் அடிக்கணும்”

  1. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    A good move. we paray for it’s success. I presume, tasmak means, like hotel one can drink there it self. ( i saw only in films. i am away from tamil nadu since long time). Firstly, that provision , drinking there itself , to be curtailed. Nobody should dring in public place.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Dear Mr.Gopalasamy,

      Actually tamil films portray tasmaac in a better way -so colourful..!

      But in realty – it is a horrible ..
      non-drinkers cannot stay there even for a minute.
      It is a curse on our people.

      (You are quite good with Tamilnadu problems/issues..
      Can you please tell me whether you are
      within India or outside …? )

      With best wishes,
      Kavirimainthan

  2. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    நல்ல யோசனைகள் தான். ஆனால் இவை கடையை முற்றாக மூட உதவாதே. மீண்டும் 100/200 மீட்டர் தள்ளி திறந்தால் ஏதாவது பண்ண முடியுமா?

  3. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    எனகென்னமோ கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கை பிடிக்கும் கதைதான் நியாபகத்திற்க்கு வருகிறது. எதுவாக இருந்தாலும் நமது முட்டாள் ஜனங்களின் ஆதரவு இல்லையென்றால் நாம் எதிர்ப்பார்க்கும் இந்தியா கிடைக்க வழியில்லை. முதலில் நமது மக்கள், அரசு கொடுக்கும் இலவசங்களை அவர்கள் காசல்ல நமது காசில் தான் அவர்கள் குளிர்க்காய்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ளட்டும். மது, பணம் மற்றும் பிரியாணி பொட்டலங்களுக்கு தனது ஓட்டை விலைப் பேசும் இந்த காலத்து தமிழ் முட்டாள்கள் முதலில் திருந்தினால்தான் இது போன்ற பல பிரச்னைகள் தானாக முடிவுக்கு வரும் அல்லது இவரின் முயற்சி வெற்றி பெரும். நான் எந்தக் காரணம் கொண்டும் திரு சந்துரு அய்யா அவர்களின் முயற்சியை இங்கே குறைத்து மதிப்பிட வில்லை. குடிப்பவர்களை பின்னர் பார்க்கலாம் முதலில் நமது கோவணாண்டிகளுக்கு நல்லவர்களை தேர்ந்தெடுக்க கற்றுக் கொடுக்க வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன். அரசியல் கூட்டங்களுக்கு இந்தக் காலத்திலும் இவ்வளவு லட்சக் கணக்கான கூட்டம் கூடுவது எப்படி? இத்தனை பேர் வேலை வெட்டி இல்லாமல் சுற்றுகிறார்கள். இவர்களை 60/70 வருடங்களாக இந்த அரசியல் தலைவர்கள் தான் இப்படி சோம்பேறிகளாக உலகத்திற்கு ஒன்றுக்கும் உதவாதவர்களாக உதவாகரைகளாக வைத்திருக்கிறார்களே என்பதுக் கூட அறியாத இந்த முட்டாள் தமிழ் மக்களை திருத்துவத்ற்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை நாம் யோசிக்க வேண்டிய தருணமிது என்றே நான் நினைக்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கலாம்.

      முதல் தேவை – திருந்தும், திருத்த முடியும் என்கிற
      நம்பிக்கை.
      (உங்களுக்கு எதற்கு ‘கிணற்றுத்தவளை’ என்கிற
      பெயர் ? மாற்றிக் கொள்ளுங்களேன்.)

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நல்ல ஒரு ஆரம்பம்.
    நீதியரசர் சந்துரு அவர்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
    இவர் விதைத்துள்ள இந்த விதையானது சருகாமல் வேரூன்றி வளர்க்க வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசித்துக்கொண்டே இருந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் மணியையும் கட்டி பிரச்சனைகளிலிருந்து வெளியே வர சட்டபூர்வ ஆலோசனைகளையும் தருவதற்கு இதோ இவர் தயாரிகிவிட்டார். பயன்படுத்திக்கொள்வது நம் கையில் உள்ளது.
    //குடிப்பதால், உடல்நலம் கெடும் மனிதருக்கு – முழு மருத்துவ வசதியும் செய்து கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை//
    இது ஒன்றே போதும், அரசுக்கு ஆப்பு வைக்க!
    //மதுக்கடைகளை மூட,அரசு செலவிலேயே, அரசுக்கு எதிராக வழக்கு
    தொடுக்கலாம்..// இது அடுத்த ஆப்பு!

  5. TamilLinks360's avatar TamilLinks360 சொல்கிறார்:

    எப்படியோ… ஆமையை அடித்தால் சரிதான்…
    முயற்சி வெற்றி பெறட்டும்…

  6. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    Since last thirty thyree years in middle east. Now family settled in bangalore.

  7. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Justice Chandru’s efforts in leading a front to reduce the liquor outlets are laudable. Going back to the basics, wouldn’t it also be better to teach the young kids in school about the ill-effects of drinking at least on health grounds (if not on religious/moral viewpoints), perhaps to save the upcoming generation. In my younger days, right upto the First Form (that’s how 6th Std was used to be called then), periodical weekly moral instruction classes were held and weekly time tables used to contain the class schedule.

  8. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    எல்லாவற்றையும் விட எளிது யார் மது விலக்கு அமல் படுத்துவேன் என சொல்கிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஒட்டு என முடிவெடுத்தல்.அதை செயல் படுத்துதல்.(இப்போதைக்கு இதை சொல்வது பா.ம.க ஒன்றுதான்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.