கடைசியில் ஒருவழியாக, டாக்டர் ராமதாஸ், மகனின்
விருப்பத்தையும் தாண்டி, சிங்கிளாகக் கிளம்பி விட்டார்.
சூழ்நிலைக்கு நன்றி சொன்னாலும், அவரது
துணிச்சலையும், சுயமரியாதையையும்,
தன்னம்பிக்கையையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
கிளம்பும்போது தில்’லாக ஒரு பஞ்ச் டயலாக் வேறு –
“சிங்கம் சிறுநரிகளிடம் பிச்சை கேட்காது !”
வாழ்த்துக்கள் டாக்டர் …
இன்னொரு விஷயம் – ஏற்கெனவே அதற்கேற்ற
சூழ்நிலை அமைந்திருப்பதால், இந்த ஒரு தேர்தலில்
மட்டுமாவது எல்லா கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு
பார்க்கலாம்.
இது அவர்களின் சொந்த பலம் என்ன என்பதை
அவர்களே உணர்ந்து கொள்ளவும், மக்களும் அதை புரிந்து
கொள்ளவும் உதவும் ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும்.
(அடுத்த தேர்தலில் கூட்டு சேரவும், சீட்டுகளை
உறுதியாகக் கேட்கவும் கூட இது உதவும் …!)




விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றுக்குள் விழுவது போன்றதுதான் இந்த முடிவு.
பார்ப்போம் ஜெயிப்பது பாமகா வா?அல்லது மக்களா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
டாக்டர் எவ்வளவு மார்க் வாங்கினாலும்
பரவாயில்லை.’தண்ணி மாஸ்டரிடம்’
மாட்டிக் கொண்டு அவமானப்பட வேண்டாமே,
தமிழக பாஜக கூட்டணி விஷயத்தை மிகவும்
கேவலமாக கையாளுகிறது.
எல்லாவற்றிற்கும் சேர்த்து தேர்தல் முடிந்தவுடன்
அனுபவிக்கப் போகிறார்கள் !
சிங்கம் சிங்கிளாக வேட்டைக்கு கிளம்பி, இரை ஏதும் கிடைக்காது, வெறும் கையுடன், திரும்பாது இருந்தால் மகிழ்ச்சி தான். தர்மபுரி மட்டுமாவது கிடைத்தால் மகிழ்ச்சி தான் தந்தைக்கு.
நண்பர் பரமசிவம்,
சிங்கம் தனியே போனாலும் ஜெயிக்க வாய்ப்பில்லை.
துணைகளுடன் போனாலும் வாய்ப்பில்லை
என்றே தோன்றுகிறது..!
ஆனால் – தனியே போனால் சுயமரியாதையாவது
மிஞ்சும்.. என்றே நான் சொல்ல வந்தேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஆக மொத்தத்துலே அம்மா சூப்பரா ப்ளான் பண்றாங்கன்னு நெனைக்கிறேன்.
அதிமுக ஓட்டு மொத்தமா அவங்களுக்கே!
மத்தவங்க ஓட்டு எதுவும் ஒண்ணு சேர்ந்துடக்கூடாது.
simple arithmatic!!
தாத்தா பாவம், தன் புள்ளயே தனக்கு எதிரா நிக்குது. கொறஞ்சது 2-3% வாக்குகள் சிதறினாலும் ஐயோ பாவம்தான்.
நீங்கள் சொன்ன மாதிரி ஒவ்வொருத்தரின் சுயபலம் தெரிந்துவிடும்.
//சிங்கம் சிறுநரிகளிடம் பிச்சை கேட்காது// இது எத்தன நாட்களுக்குன்னுதான் தெரியவில்லை.
எனக்கு என்னவோ சிங்கத்தோட நிலைமை இப்படி ஆகிடும்னு தோணுது…:)
http://youtu.be/yzV1c0QdMnM
இதில் Baffalo -வாக யாரைச்
சொல்லலாம் எழில் …!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
எல்லாமே எருமைகள். இதில் எந்த எருமை அதிகம் கவரும் எருமை என்பதை தீர்மானிப்பதே தேர்தல். எனவே அவர் அவரவர் . விருப்பப்படி வைத்து கொள்ளலாம்.(ஒரு மாதிரி தப்பிச்சுட்டனா?!)
it looks DMK is having only “formidable” alliance. But Alagiri factor is there. If all parties decide to go alone, we see their original strength.
AS PER TODAY’S NEWS, CUB (SINGA KUTTY) IS JOINING WITH SMALL FOXES.