சரித்திரம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நல்ல
புத்தகம்/வலைத்தளம் கிடைத்தால், விடிய விடிய,
படித்துக் கொண்டிருப்பேன்.
எனவே சரித்திரத்திலிருந்து ஒரு சின்ன உதாரணம் –
மொகலாய மன்னன் அவுரங்கசீப் பற்றி அனைவருக்கும்
ஓரளவாவது தெரிந்திருக்கும். அவுரங்கசீப்
டெல்லியை மையமாகக் கொண்டு 49 வருடங்கள்
இந்தியாவை ஆண்டவன். கொடுங்கோலன் என்று பலர்
சொல்லுவர். அவன் பதவிக்கு வந்தவிதம் அவனைப்பற்றி
சொல்லும்.
தாஜ்மஹலைக் கட்டிய ஷாஜஹான் தான்
அவுரங்கசீபின் தந்தை. மும்தாஜ்மஹல் மற்றும்
ஷாஜஹானின் – இரண்டாவது மகன் தான் அவுரங்கசீப் .
அவனுக்கு மூத்ததாக ஒரு அண்ணன் இருந்தான்.
இளையவர்கள் இரண்டு தம்பிகள்.
ஷாஜஹான் தன்னைத்தொடர்ந்து, தன் மூத்த மகன்,
அவுரங்கசீபின் அண்ணன், பதவிக்கு வருவதையே
விரும்பினார். அரியணையைக் கைப்பற்ற நினைத்த
அவுரங்கசீப், தான் பதவிக்கு வர முதல் தடையாக இருந்த
தந்தையைப் பிடித்து சிறையில் அடைத்தான்..!
(சாகும் வரை சிறையிலேயே இருந்தார் ஷாஜஹான் –
கிட்டத்தட்ட 13 வருடங்கள் !).
சகோதரர்கள் 3 பேரையும் தயக்கமே இல்லாமல்
ஒவ்வொருவராகத் தீர்த்துக் கட்டினான். பதவியையும்,
அதிகாரத்தையும் அடைவதற்காக, எதையும் செய்யத்
தயங்கவில்லை அவுரங்கசீப்.
இப்போது ஏன் அவுரங்கசீப் ஞாபகம் …?
அரசியலில் – தலைமைப்பதவியும், அதிகாரமும்
அவ்வளவு முக்கியமானவை.
அறிஞர் அண்ணா மறைந்த பிறகு –
திமுகவில் கட்சியையும்,
அதிகாரத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட
கலைஞர் கருணாநிதியை – கடந்த 45 வருடங்களாகக்
கட்சியில் யாரும் அசைக்கக் கூட முடியவில்லை.
தன்னை எதிர்க்கத் துணிந்தவர்களை,
தன் அதிகாரத்திற்கு போட்டியாக உருவாகக் கூடியவர்களை,
எந்தவித தயக்கமும் இன்றி – தூக்கியெறிய தயங்கியதே
இல்லை அவர். ஈவிகே சம்பத்திலிருந்து துவங்கி,
நெடுஞ்செழியன், எம்ஜிஆர்,வைகோ என்று தனக்கு
போட்டியாக கட்சியில் எவரையும் உருவாக விட்டதில்லை.
ஆனால் – இன்று….. ?
தன் மகன் ஸ்டாலினே தன்னை செல்லாக்காசாக்கி
மூலையில் உட்கார வைத்து விட்டதைப் பார்த்து –
திகைத்துப்போய், கையாலாகாமல்,ஸ்டாலின் நீட்டிய
இடத்தில் எல்லாம், காட்டிய இடத்திலெல்லாம்
கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.
35 பாராளுமன்ற திமுக வேட்பாளர்களில் ஒருவர் கூட
அவரது சாய்ஸ் இல்லை….!
(மகள் கனிமொழி வற்புறுத்திக்கூறிய பழனிமாணிக்கத்திற்கு
கூட இடம் பிடிக்க முடியவில்லை…தான் வாக்கு கொடுத்த
குஷ்பூவிற்கும் இடம் பிடிக்க முடியவில்லை …!)
இவர் தலைவர் பதவியை விடாமல் இன்னும் கெட்டியாக
ஒட்டிக்கொண்டிருந்தாலும், கட்சி முழுவதும் எப்போதோ
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் போயாகி விட்டது…!
.
கிட்டத்தட்ட இதே நிலை தான் அங்கே – பாமக விலும்.
திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி
கூட்டு கிடையாது என்று கட்சியினர் மத்தியில்
சத்தியம் செய்து விட்டு,
கிராமம் கிராமமாக வன்னிய மக்களிடையே வெற்றிலை-
பாக்கு மீது சத்தியம் வாங்கி விட்டு, தேர்தல் களத்தில்
அனைவருக்கும் முன்னதாகவே இறங்கியவர் –
இன்று மகன் அன்புமணியை தட்டிக்கேட்க முடியாமல்
திண்டாடுகிறார் தமிழ்க்குடிதாங்கி டாக்டர் ராமதாஸ்..!
காடுவெட்டி குரு துணை இருந்தும் – மகனை எதிர்த்து
ஒன்றும் செய்ய முடியவில்லை. தனியாக
நின்றால் – இரண்டு இடங்களில் ஜெயித்தாலும் கூட
கௌரவமாக இருக்கும் என்று இவர் சொன்னாலும் –
அன்புமணி எங்கே கேட்கிறார் …?
தனியாக நின்று ஜெயித்து என்ன பயன் ? பாஜக வுடன்
சேர்ந்தால், எத்தனை சீட்டு வந்தாலும் சரி, போனாலும் சரி
-தேர்தல் முடிந்த கையோடு, மீண்டும் மத்திய மந்திரி
ஆகலாமே …!- என்கிற வாதத்திற்கு எதிராக இவர்
கையாலாகாதவராகவே தெரிகிறார். இன்று பெயருக்குத்
தான் டாக்டர் ராமதாஸ் பாமகவின் தலைவர்…!
கட்சியும், அதிகாரமும் மகனிடமே…!
நல்ல வேளை – இன்று IPC, Cr.P.C. சட்டங்கள்
இருக்கின்றன. அரசாங்கம் இருக்கிறது -போலீஸ்
இருக்கிறது. இவை எதுவுமில்லாத அவுரங்கசீப் காலம்போல்
இருந்திருந்தால் …..?
அதிகாரத்தையும், தலைமையையும் கைப்பிடிக்கத்
துடித்துக் கொண்டிருக்கும் “அருமை மகன்”களின் கையில் –
இந்த இரண்டு “தந்தை”களின் கதி இன்று என்னவாகி
இருக்கும் ..? எந்த “காராக்கிரகத்”தில் கம்பி எண்ணிக்
கொண்டிருப்பார்களோ ?
(ஒருக்கணம் கம்பிக்குப் பின்னால் இந்த “தந்தை”கள்
நிற்பதை கற்பனை செய்து பாருங்கள் –
எப்படி இருக்கிறது காட்சி …?)
.
பின்குறிப்பு –
ஒரு விதத்தில் இந்த development நல்லது தான்
என்று தோன்றுகிறது.
அரசியல் என்றால், கட்சி என்றால், தனக்குப் பிறகு
கட்சியில் திறமையானவர்களையும், நல்ல
உழைப்பாளிகளையும் வளர்த்து விடுவதை விட்டு விட்டு-
பிள்ளைகளையும், பெண்டாட்டிகளையும், மச்சான்களையும்
அரசியலுக்கு கொண்டு வந்து “குடும்ப அரசியல்” செய்து
கொண்டிருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் இது ஒரு
திகில் பாடமாக இருக்கும் அல்லவா …?




கற்பனை நன்றி உள்ளது. தன் வினை தன்னை சுடும். பழனி மாணிக்கம் நிதி இலாக்காவில் இருந்தும் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு. சீட் எப்படி கிடைக்கும். காங். உடன் கூட்டணி எவ்வாறு?
மன்னராட்சி கூடாது என்றுதானே மக்களாட்சி வந்தது? தற்போது அப்பனுக்கப்புறம் மகன் என்றால் மக்களாட்சிஎன்பதற்கு அர்த்தம் தான் என்ன?
Are you serious, Jayadev? சுயநலமில்லாத நல்ல தலைவர்களை தவிர ( மகாத்மா, படேல், லால்பகதூர் சாஸ்த்ரி, மொரார்ஜி, ராஜாஜி, கக்கன் போன்றோர்) மற்றவர் எல்லோருமே தங்கள் வாரிசுகளுக்கு பட்டம் சூட்ட முயற்சி செய்து கொண்டும் பெருமளவு வெற்றி பெற்றும் இருக்கிறார்கள். பதவி அவர்களுக்கு கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க மிக அவசியம். இதில் கொஞ்சம் ஆறுதல் தரும் விஷயம் அடிப்படையில் அவர்களுக்கு ஆற்றல் இல்லையேல் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடுவார்கள். ஒன்று சௌதாலா போல ஊழல் செய்து மாட்டிக் கொள்வார்கள்.. இல்லையேல்.. அஜய் சிங் போல மங்கி விடுவார்கள்.. வெகு சிலர் ஏர்டெல் போல அரசியலில் அடித்த பணத்தை வேறு வழியில் பெருக்கிக் கொள்வார்கள்!
அன்றே சொன்னார் அண்ணன் கவுண்டமணி…
இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து தான் கருணாநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டுவதை இத்தனை நாள் தவிர்த்து வந்தார் போல இருக்கிறது!
AURANZEB WAS SENT TO MADURAI, SORRY, TO DECCAN BY HIS FATHER , AS HE SUPPORTED HIS ELDEST SON DARA. AURANGZEB ALSO WAS DISMISSED FROM HIS POSITION BY HIS FATHER AND LATER HE GOT IT BACK. FINALLY AURANGZEB , THE SECOND SON, BECAME EMPEROR. NOW WE DONT KNOW EITHER FIRST OR SECOND SON WILL BECOME EMPEROR.
IF DMK AND IADMK ONE BY ONE ROUTED OUT FROM TAMIL NADU, IT WILL DO GOOD FOR TAMIL PEOPLE.
“அவுரங்கசீப்
டெல்லியை மையமாகக் கொண்டு 49 வருடங்கள்
இந்தியாவை ஆண்டவன். கொடுங்கோலன் என்று பலர்
சொல்லுவர்”
மக்களை கடவுளின் பேரால் ஏமாற்றி வயிற்றை வளர்த்துவந்த ஆன்மீக வியாதிகளுக்குத்தான், அவுரங்கசீப் கொடுமையான மன்னன்;
மக்களின் வரிப்பணத்தை வைத்து, ஆடம்பரமாக உல்லாசமாக வாழ்ந்து, மக்கள் பணத்தில் தாஜ்மகால் என்ற ஆடம்பர மாளிகையைக் கட்டிய அப்பனுக்குத்தான் அவுரங்கசீப் கொடுமையான மன்னன்.
ஆன்மீகவியாதிகளின் சொல்பேச்சைக் கேட்டு, விவசாயிகளுக்கு கடுமையான வரியை விதித்த கொள்ளைக்காரன் சிவாஜிக்குத்தான் அவுரங்கசீப் கொடுமையான மன்னன்.
மற்றபடி நம்மைப் போன்ற சாதாரண பாட்டாளி மக்களுக்கு அவுரங்கசீப், பொற்கால மன்னன்தான்.
எளிமையாக வாழ்ந்து, அரசு கஜனா பணத்தில் கைவைக்காமல், தொப்பிதைத்து அதனை வைத்து, எளிமையாக வாழ்க்கை நடத்தியவர்தான் அவுரங்கசீப்தான்.
நண்பரே,
ஆன்மீகவியாதிகள் எழுதிவைத்திருக்கும் போலி சரித்திரங்களை படித்துவிட்டு, கண்டபடி வாந்தி எடுக்காதீர்.
உலகில் உள்ள எல்லா மதங்களிலும் மக்களை ஏய்த்து, கடவுள் பெயரால் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஆன்மீகவியாதிகள்தாம் கொடுமையானவர்கள்.
நண்பரே, இதனைப் படித்துவிட்டு, என்னை ஓர் இஸ்லாமியன் என்று எண்ணிவிடாதீர்கள். நானும் உங்கள் மதத்தைச் சேர்ந்தவன்தான்.
i am surprised to see how one person can believe, a tyrant king can lead his life by stiching caps and selling. if some fake “chamchas” wrote some thing foolish, can we believe it?
aurangzeb was expanding his kingdom. His overall revenue was estimated more than four crore pounds per year. i request “writer Pudin” to write how that tyrant king collected tax from people and how much temples were demolished during his period and how much gold was looted and how “jisya” was imposed to a particular section of the society. If somebody wants to praise him for his tyrant acts, then there will be no arguement.
SHAJAHAN WAS KEPT IN PRISON AND ALONG WITH HIM HIS DAUGHTER WAS ALSO THERE TO TAKE CARE OF HIM.!
இன்றைய அரசியல்வாதிகளின் மறுபதிப்புதான் அன்றைய மன்னர்கள். அரசர்களுக்கும் பலம் – பலவீனங்கள் உண்டு. இந்தியாவை ஆண்ட எந்த மன்னனும் யோக்கியன் இல்லை. இன்றைய அரசியல்வாதிகளைப் போலத்தான்.
காட்டியும் கொடுப்பார்கள், கூட்டியும் கொடுப்பார்கள், சமயத்தில் கஜனாவில் பணம் குறைந்துவிட்டால், மாறுவேடம் பூண்டு, மக்களிடமே கொள்ளை அடிப்பார்கள்.
ஆனால் எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
அந்த வகையில் பள்ளிக்கூட வரலாற்று ஆசிரியர்கள் கதைவிட்டு வைத்திருப்பது போல, அவுரங்கசீப் அந்தளவுக்கு கொடுமையானவன் அல்லன். இந்திய அரசு பாதுகாத்து வரும், அவுரங்கசீப் எழுதிய உண்மையான கடிதங்களையும், ஆவணங்களையும் படித்துப் பாருங்கள். உண்மை தெரிந்துவிடும்.
வரலாற்று ஆசிரியர்கள் கதைவிடுவது போல, அவுரங்கசீப் மட்டும் கட்டாய மதமாற்றம் செய்திருந்தால், இன்றைக்கு நானோ, நீங்களோ இந்துவாக இருந்திருக்க மாட்டோம். ஒரு முஸ்லீமாக இருந்திருப்போம்.
JISYA TAX WAS ONE OF THE PRIMARY INCOME SOURCE. THAT IS WHY ALL WERE NOT FORCED TO CONVERT. ON THE OTHER HAND THERE ARE INFORMATIONS , HOW MANY PEOPLE SACRIFICED THEIR LIFE, HOW MANY PEOPLE LIVED IN JUNGLES TO SAVE THEIR RELIGION. BECAUSE OF THEIR SCARIFICE, NOW WE ARE PRAISING THESE KINGS! WE HAVE TO INROSPECT THAT WHY WE ARE HAVING FREEDOM OF SPEECH IN INDIA AND WHO ARE RESPONSIBLE FOR THIS. TO SOME EXTENT I ALSO READ HISTORY (NOT THROUGH SCHOOL BOOKS). AURANGZEB WAS ONE OF THE THE MOST CRUEL AND MERCILESS KINGS. NOWADAYS IN INTERNET ALL INFORMATIONS ARE AVAILABLE.
“இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள். இசுலாமியர்களுக்கும் வரி விதித்தான் என்கிறது வரலாற்றின் வரிகள்.
கடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே! தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.
வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி. பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரி மதவாதிகளுக்கு வரி கிடையாது”
இது குமுதம் அரசு பதிலில் வெளிவந்தது.
அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை.
ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான்.இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர்.
இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே.
இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு.
வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் “கிருமி கண்ட சோழன்’ என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.
இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது.
உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள்.
அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் – ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரததன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் அகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.
இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.
அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ ஆவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?
இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில.
தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார்.
ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர்.
வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.
ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர்.
அதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை.
சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார்.
சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 அண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.
அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, “ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை எற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப்.
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை எற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.
தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார்.
“”பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது” என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Some Foirmans Sauads and parwawas(1578 -1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.
“”ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் அகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது” என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.
பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஒர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.
தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன.
அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள்.
விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது.
ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர்.
மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.
இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது.
இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture)என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.
மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு.
நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஒர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?
ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும்.
முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)
http://www.tmmkonline.org/tml/others/108576.htm
ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம்.
அதற்கு முன்பு, முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ‘ஜக்காத் ‘ என்ற வரிபற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.
முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் ‘ஜகாத் ‘ எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர்.
முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் ‘ஜகாத் ‘ செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.
தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும்,
இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் ‘ஜகாத் ‘ எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும்.
இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது.
எனவே ‘ஜகாத் ‘ என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.
ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது.
குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும் ? அது எப்படி நியாயமாகும் ?
ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ‘ஜகாத் ‘தை விதிக்க முடியாது.
ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது.
ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும்.
வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும்.
அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் ?
எனவேதான் ‘ஜிஸ்யா ‘ வந்தது.
இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.
சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது ?
சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் ‘ஜஸியா ‘ விதிக்கப்பட்டது.
தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும்,
வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.
இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே.
சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான்.
இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ‘ஜஸியா ‘.
இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.
அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டன.
அவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.
T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :
‘ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல.
ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.
‘ ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது ( பக்கம் 228).
கரைகண்டம் நெடுஞ்செழியன் பேசுகிறார்.
‘பொதுமக்களின் வருவாயில் ஆட்சி செய்யும் இன்றைய ஜனநாயகத் தலைவர்களுக்குப் பல செய்திகளையும், பாடங்களையும் தமது செயல்கள் மூலம் விட்டுச் சென்றிருக்கிறார் பாதுஷா ஒளரங்கசீப் ஆலம்கீர்.
பொதுவாக ஆனால் தவறாக முஸ்லிம் ஆட்சியாளர் என்று கருதப்பட்ட இவர் தன் குடிமக்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் –
அந்த அன்பு எப்படி மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தது என்பது தெளிவாகப் புலனாகின்றது.
புனித மக்கா நகரத்தின் ஷெரிப் இரு முறை தமது தூதர்கள் மூலம் ஒளரங்கசீப்பிடம் தமது நகர மக்களுக்குப் பெரும் பொருள் அனுப்புமாறு வேண்டிக்கொண்டார்.
அதற்கு ஒளரங்கசீப், ‘எனது தேசத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்கக் கூடாதா ? ‘
என்று வினவி வெறுமே திருப்பி அனுப்பினார்.
இதிலிருந்து அவர் ஒரு முஸ்லிம் மதப்பற்றாளர் என்பதை விடவும் தம் குடிம்மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட பாதுஷா என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் – கரைகண்டம் கி நெடுஞ்செழியன். பக்: 226)
ஒரு சமயம் வரிகட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட, அது குறித்து பாதுஷாவின் யோசனைக் கேட்டு கவர்னர் கடிதம் எழுதினார்.
பாதுஷா பதில் – ‘நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மழையோ இல்லாமல் போனாலோ அல்லது இயற்கையின் எதிர்பாராத சதியாலோ விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலோ, அதற்காக விவசாய மக்களைப் பிரச்சினைக்குள்ளாக்க வேண்டாம்.
வரியைத் தள்ளுபடி செய்துவிடவும். கூடவே வரிகட்ட முடியாமலிருப்பது உண்மைதானா என்பதை நன்கு விசாரிக்க வேண்டும் ‘ என்றும் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகிறார் பாதுஷா. ‘ (வந்தார்கள் வென்றார்கள் – மதன். பக்: 169)
ராஜாங்க விஷயங்களிலும் ஆஸ்தான சபையிலும் மரபுகளும் சம்பிரதாயங்களும் சட்டத்திட்டங்களும் மீறப்படக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவர் ஆலம்கீர்.
பாதுஷாவின் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று குறிப்பாளர் விவரிக்கிறார்….
‘பாதுஷா ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது சபையில் ஒரு கெளரவமான அமைதி நிலவும். யாரும் தப்பும் தவறுமாகப் பேசி நான் பார்த்ததில்லை. சபையில் இல்லாத ஒருவரைப் பற்றி கேலியாகப் பேசுவது பெரும் குற்றமாக கருதப்பட்டது.
யாராக இருந்தாலும் சரி மிகவும் மரியாதையான, அடக்கமான வார்த்தைகளையே பேச்சில் உபயோகிக்கவேண்டும். சொல்வதைத் தெளிவாக, தீர்க்கமாகச் சொல்லவேண்டும்.
தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார் ஒளரங்கசீப்.
அப்போது யார் வேண்டுமானாலும் நேரடியாகத் தங்கள் பிரச்சினைகளை மன்னரிடம் கூறலாம். சாமானியராக இருந்தாலும் அவர் சொல்வதை சக்கரவர்த்தி மிகுந்த கவனத்துடன் கேட்டு உடனே தீர்ப்பு வழங்குவார்.
‘உடல் நலம் கருதி ஆலம்கீர் சற்று ஓய்வு எடுக்கவேண்டும்…. ‘ என்று ஒரு தளபதி பாதுஷாவுக்கு கடிதம் எழுதியதற்கு
‘இறைவன் கருணையால் நான் நாடாள அனுப்பப்பட்டிருக்கிறேன். கடைசிவரை உழைக்க வேண்டியது என் கடமை. எனக்காக அல்ல, குடிமக்கள் நலனுக்காக. மக்கள் மகிழ்ச்சியில் பின்னிப் பிணைந்தால் ஒழிய எனக்கு என்று தனிப்பட்ட மகிழ்ச்சி எதுவும் கிடையாது…. ‘ என்று ஒளரங்கசீப்பிடமிருந்து பதில் போனது.
(வந்தார்கள் வென்றார்கள் – மதன் பக்: 167-168)
நண்பர் புதின்,
காய்ச்சிய பாலை மூடி வைத்துவிட்டு,தன மகனிடம் “பால் பத்திரம்!!.பூனை வந்து பால் குடித்துவிட்டு போகாமல் பார்த்துக்கொள்” என சொல்லிவிட்டு, வெளியே சென்று திரும்பிய தாய்க்கு ஒரே கோபம்..பாத்திரத்தில்சொட்டுபால் இல்லை,.அமைதியாக மகன் சொன்னான்..”அம்மா நீ சொன்னது போல பூனை பால்குடித்தவுடன் அது எங்கும் போகாமல் இந்த அறையில் அடைத்து வைத்துள்ளேன்!” என்று.
.
நண்பர் கா.மையின் இந்தபதிவு கருணா, ராமதாஸ் சம்பந்தப்பட்டது. மகனால் பழிவாங்கப்பட்ட ஷாஜகான் நிலைக்கு ஒப்பானது அவர்கள் நிலைமை.
மற்றபடி இந்த வலைத்தளத்தில் உள்ள அனைவர்க்கும் கருணா ராமதாஸ் ஸ்டாலின் அன்புமணி மீதான மதிப்பைவிட ஓளரங்கசீபின் மீது அதிக மதிப்பு உண்டு எனபதில் எந்த ஐயமும் வேண்டாம்.
i want to close this argument. i maintain my stand. as i told, a lot of information is available in internet. my statement or somebody’s statement could not be basis for arguement. i could not subscribe to a thory of tax based on religion. i do not want to use this blog for pro/against ALAMGIR.
…. மெய்பொருள் காண்பது அறிவு!
அதிருஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ –
காலையிலிருந்து நான் வேறு பணியில் இருந்ததால்,
வலைத்தளம் பக்கம் வர முடியவில்லை.
வந்து பார்த்தால் ……
அவுரங்கசீப் – அரியணையை கைப்பற்ற,
தன் தந்தையையே சிறையில் அடைத்தவன் என்பது
வரலாற்று உண்மை.
தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள, சகோதரர்கள்
மூவரையும் கொன்றான் என்பதும் வரலாற்று உண்மை.
இந்த இரண்டு உண்மைகளை மட்டுமே தொடர்புபடுத்தி,
இந்த இடுகை எழுதப்பட்டது. மற்றபடி எந்த மதத்தைப் பற்றியும்
இங்கு விவாதம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
என்னைப் பொருத்த வரையில் – “மதங்கள் மனிதரை
ஒன்று படுத்தவே இருக்கின்றன – பிளவு படுத்த அல்ல ”
(Religion is to Unite people and
not to Divide ..)
நண்பர் “புதின்”சம்பந்தா சம்பந்தமில்லாமல் –
எங்கெங்கோ சுற்றி வெறுப்பு விதைகளை விதைக்கிறார்.
“புதின்” இந்த வலைத்தளத்திற்கு புதிய பெயரில்
வந்திருக்கும் “பழைய விதண்டாவாதக்காரர்” என்று
தெரிகிறது.
இந்த வலைத்தளத்தில் ஜாதியின் பெயராலோ,
மதத்தின் பெயராலோ – வெறுப்புணர்வுகள்
உண்டாக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
எனவே, நண்பர் “புதின்” அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள் –
“இதோடு போதும். இனி இந்த வலைத்தளத்தில்
தயவுசெய்து நீங்கள் எதையும் எழுத வேண்டாம் .
எழுதி, அவற்றை நீக்க வேண்டிய
அவசியத்தை எனக்கு உண்டு பண்ணாதீர்கள்”
———
மற்ற நண்பர்கள் என்னுடைய இந்த நிலையை
ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
திரு காவிரிமைந்தன்,
“தினமலர்” பத்திரிகையில் ஆசிரியருக்குக் கடிதம்
பகுதியில், வெவ்வேறு பெயரில் தினமும் எதையாவது
பெனாத்திக் கொண்டிருப்பவர் இந்த ஆள் தான். இவரை எல்லாம் உள்ளேயே நுழைய விடாதீர்கள். இங்கேயும் அசிங்கம் பண்ணி விடுவார்.
நீண்ட விவாதத்தை முடித்தமைக்கு நன்றி
SORRY. I ALSO WAS UNNECESSARILY DRAGGED INTO THIS SICK ARGUEMENT.
Dont worry Mr. Gopalasamy –
You were not doing anything intentionally –
like the other person.
with best wishes,
Kavirimainthan