நேற்று(திங்கள்) சென்னையில் – மனித உரிமைகள்
கருத்தரங்கம் நிகழ்ச்சியில், பாஜக பாராளுமன்ற
உறுப்பினரும்,
முன்னாள் (பாஜக)வெளியுறவுத் துறை அமைச்சருமான
யஸ்வந்த் சின்ஹா பேசி இருக்கிறார். அவர்
உரையிலிருந்து சில பகுதிகள் –
——–
“இந்திய அரசியலமைப்பில், மனிதஉரிமைகள் –
அடிப்படை உரிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா,
திபெத்தில் சீனா நடத்திய மனிதஉரிமை மீறல்கள் முதல்,
சிறிலங்காவில் இன்றுவரை நடந்து வரும்
மனிதஉரிமைமீறல்கள் வரை – அனைத்தையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின்
இயலாமைதான் காரணம்.
சிறிலங்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இந்தியாவை ஒரு
பொருட்டாகவே மதிக்கவில்லை.
அண்மையில் மியான்மரில், சிறிலங்கா அதிபர் மகிந்த
ராஜபக்சவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்த
போது, வடக்கு,கிழக்கில் படைக்குறைப்பு, மீனவர்கள்
விகாரம் உள்ளிட்ட எதிலுமே சிறிலங்கா உறுதியான
வாக்குறுதியை கொடுக்கவில்லை.
சிறிலங்காவுக்கு எதிராக, புதுடெல்லி கடும் நிலைப்பாட்டை
எடுத்தால், இந்தியாவுக்கு முக்கியமான இடமாகிய
சிறிலங்காவை சீனா கைப்பற்றிக் கொள்ளும் என்ற கருத்து
சரியானதல்ல.
அமெரிக்கா தென்துருவத்தில் மொன்றோ கோட்பாட்டை
வைத்திருக்க முடியுமென்றால், தெற்காசியாவில்
நம்மாலும் வைத்துக் கொள்ளமுடியும்.
சிறிலங்காவில் சீனா நிலைகொள்ளும் என்ற பயத்துடன்
இந்தியா தொடர்ந்து வாழ முடியாது.
நாம் நமது வலிமையை உணர்ந்து கொள்ள வேண்டும்
நம்மால், பாக் நீரிணையை தாண்ட முடியும் –
துப்பாக்கிகளுடன் அல்ல ரோஜாக்களுடன்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணுகுண்டு சோதனை
நிகழ்த்தியதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்
இந்தியாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தன.
அந்தத் தடையை நீக்கும்படி பிரதமர் வாஜ்பாய் யாரிடமும்
போய்க் கெஞ்சவில்லை.
மாறாக, அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை
இந்தியாவுக்கு வரவழைத்தார்.
கார்கில் போரின்போது பாகிஸ்தானுடன் சமாதானம் பேச
அமெரிக்கா அழைத்தபோது அவர் அங்கு செல்லவில்லை.
அந்த போரிலும் நாம் தான் வெற்றி பெற்றோம்.
ஆனால் இன்று, ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள்
பிரச்சினையில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நொண்டி
வாத்து போல் செயற்படுகிறார்.
அதனால்தான் இந்தியாவின் பேச்சை சிறிலங்கா
மதிப்பதில்லை.
இந்த நிலை மாறி அனைத்துலக அளவில்
இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க,
மோடி பிரதமராக வர வேண்டும்.
மோடி பிரதமரானதும், இந்திய அரசாங்கத்தின்
ஒட்டுமொத்த அணுகுமுறைகளுமே மாற்றமடையும்.
அதற்கு – தமிழ்நாட்டு மக்கள், சிறிலங்காவில் நிகழ்ந்த
இனப்படுகொலையில் ராஜபக்சவுக்கு துணை நின்ற
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கும்,
அந்த கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுக்கும்
தேர்தலில் வாக்களிக்கக் கூடாது.”
——–
இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரையில் –
யஸ்வந்த் சின்ஹா கூறுவது முற்றிலும்
சரியே.
ஆனால், பாஜக விலேயே, உயர்மட்டத் தலைவர்கள்
யாருக்கும் (யஸ்வந்த் சின்ஹாவைத் தவிர ) இலங்கைத்
தமிழர் பிரச்சினையைப் பற்றிய சரியான புரிதலே
இல்லையே.
நாடாளுமன்ற பாஜக தலைவர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் –
இலங்கைக்குப் போய் ராஜபக்சேயுடன் கைகுலுக்கி
விருந்து சாப்பிட்டு விட்டு வந்தார்.
அதே வேலையைத்தான் அவருக்குப் பிறகு போன
ராஜ்யசபா பாஜக துணைத்தலைவர் ரவிசங்கர் பிரசாத் தும்
செய்தார்.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் தான் ராஜபக்சேயை
விரும்பி அழைத்து விருந்து கொடுத்து உபசரித்தார்கள்.
(இதை எதிர்த்து, இங்கிருந்து வைகோ போபால் வரை
சென்று போராடியது யாருக்கும் நினைவில்லை என்று
பாஜக வினர் கருதுகிறார்களா ? )
ஏன் – ராஜீவ் காந்தி வழக்கில் 23 ஆண்டுகள் சிறையில்
கிடந்து வாடிய 7 பேரை விடுதலை செய்ய இங்கு
முயற்சிகள் துவங்கிய போது – ஏதோ தமிழ்நாடே
தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டிருப்பது போல்
பாஜக ராஜ்யசபா தலைவர் அருண் ஜெய்ட்லி பேசினாரே.
யஸ்வந்த் சின்ஹா சொல்வதை எதிர்காலத்தில்
பாஜக கூட்டணி அரசு அமைந்தால் –
செயல்படுத்துவார்கள் என்பதற்கு, பாஜக
தலைமையிலிருந்து, யார் உத்தரவாதம்
கொடுக்கப்போகிறார்கள்…?




சுஷ்மா அவர்களும் ரவி சங்கரும் தான் தமிழர் எதிர்ப்பு நிலை எடுத்தனர். இருவரும் இப்போது முக்கிய நிலையில் கட்சியில் இல்லை என எண்ணுகிறேன். மேலும் இப்போது தான் தமிழக பா.ஜ.க. தங்கள் தலைமை இடம் பேசக்கூடிய நிலையில் உள்ளனர். ஆகவே எதிர் கால பா.ஜ.க. அரசு, தமிழர் ஆதரவு அரசாக இருக்கும் என எண்ணுகிறேன்.
திருமதி சுஷ்மா ஸ்வராஜ், திரு ரவிசங்கர் பிரசாத் இவர்களை தவிர ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என வற்புறுத்திய, மோடியின் ஆலோசகர் என ஊடகங்கள் சொல்லும் திரு சுப்பிரமணிய சுவாமியை குறிப்பிட மறந்து விட்டீர்களே ஐயா!
நிறைய நம்பிக்கைகள், நிறைவேற வேண்டும், பார்க்கலாம். அரசியல் என்றாலே சந்தற்பவாதம்தான் என்பதை நாம் நமக்கு தேவையான நேரங்களில் மறந்து போகிறோம்.
திடீர் ஞானோதயம் வந்த யஷ்வந்த் சின்ஹா சொல்வதை பாஜக அரசு செய்யுமா..?
மோடி தமிழகத்திற்கு வந்தபோது ஒரு முறை கூட இலங்கை பிரச்சனையையோ, நதிகள் இணைப்பது பற்றியோ, இந்திய மீனவர்/முல்லை பெரியாறு அல்லது சேது சமூத்திரம் பற்றியோ வாயே திறக்கவில்லை என்பதும் உண்மையே!
தமிழகத்தில் சுப்ரமணியம் சுவாமியும் வைகோவும் ஒரே மேடையில் பேசுவதை எண்ணிப்பார்த்தாலே சிரிப்பாகத்தான் இருக்கு.
ஓட்டு வாங்க எவ்வளவு கீழே வேண்டுமானாலும் செல்வார்கள்!
//ஆனால், பாஜக விலேயே, உயர்மட்டத் தலைவர்கள்
யாருக்கும் (யஸ்வந்த் சின்ஹாவைத் தவிர ) இலங்கைத்
தமிழர் பிரச்சினையைப் பற்றிய சரியான புரிதலே
இல்லையே.//
என்ன சார், இலங்கை விவகாரத்துக்கான self-declared அகில உலக எக்ஸ்பர்ட் சுப்புணி சாமிய விட்டுட்டீங்களே!
அவரைப் போன்ற தமிழர் எதிரிகள் கட்சியில் இருக்கும் போது பாஜக தமிழர்களுக்கு நல்லது செய்யும் என்பது மடியில் பூனையைக் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பது போல.
ஈழத்தை ஆதரிப்பது எதிர்காலத்தில் தமிழ்நாடு பிரிந்து போக வழிவகுக்கும் என்கிற பிராமணீய சிந்தனையில் ஊறி இருப்பவர்கள் (மைய அரசு அதிகாரவர்க்கம், வட இந்திய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மலையாள ஜிங்சக்குகள் ) ராஜபக்ஷே அவர்களின் கோவணத்தை உருவினாலும் இலங்கையை என்றைக்கும் எதிர்க்க மாட்டார்கள், இதில் காங்கிரஸ், பாஜக இருவருக்கும் வித்தியாசமில்லை.
– பாஜக உண்மையிலேயே, தமிழர் பிரச்சினைகளில்
அக்கரை கொண்டிருக்கிறது என்றால் –
1) இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு
எதிராக “ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில்” வெளிப்படையான,
நேர்மையான விசாரணை நடத்தப்பட
இந்திய அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் –
2) கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று அறிவித்து,
கச்சத்தீவில் இந்திய கடற்படை நிலை நிறுத்தப்படும் –
3) தமிழக மீனவர்கள் பிரச்சினை 3 மாதங்களுக்குள்
தீர்க்கப்படும். இலங்கை அரசு ஒத்துழைக்கத் தவறினால்,
இந்திய ராணுவம் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு
கொண்டு வரும்
– இந்த 3 விஷயங்களையும் (சற்று கூட்டியோ, குறைத்தோ ) பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்த்து வெளியிட, தமிழக பாஜக தலைவர்களும், வைகோ அவர்களும் தீவிர முயற்சி
எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.
-காவிரிமைந்தன்
Vaiko is cleverly using vajpayee here ,by demanding more than twice in appealing to namo directly to follow his policy regarding srilanka, which namo is repeately speaking in rallies about vajpayee.i wish yaswant sinha will get the top ministry post in namo cabinet!!…..otherwise it will be diffficult for us to lobby in namo’s government……………for all of that vaiko should be sent to parliament first………(as demanded by ramjethmalani and yaswant sinha!!)
this words only election words