
சென்ற வாரம் தான் விஜய்காந்த் மாநாடு நடத்தினார்-
“ஒன்று படுவோம் – ஊழலை ஒழிப்போம்” என்று.
“என் மனதில் தனியாக ஒரு ப்ளான் இருக்கிறது”
என்று வேறு சொன்னாரா, சரி கேப்டன் ஊழலை
ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாரென்று தான்
தோன்றியது. ஆனால் அவர் இப்படி ஒரு ப்ளான்
வைத்திருப்பாரென்று உண்மையிலேயே தெரியாது தான்..!
இன்று வெளிவந்துள்ள தகவல்கள் சொல்கின்றன –
(எவ்வளவு தூரம் உண்மையோ – தெரியாது )
நாளை ஏ.கே.அந்தோனி வருகிறாராம் –
கலைஞருடன் பேச.(குலாம் நபி, பரூக்
அப்துல்லாவுடன் கலைஞரால் மனம் விட்டு
பேச முடியவில்லை..
ஏ.கே.அந்தோனி நன்றாகத் தமிழ் பேசுவார்..!)
திமுகவும் காங்கிரசும் மொத்தமாக கூட்டு வைக்கும்.
பிறகு காங்கிரஸ் தன் பங்கில் கேப்டனுக்கு
உள் குத்தகை விடுமாம்…!
எனக்கு இரண்டு பழமொழிகள் நினைவுக்கு வருகின்றன-
“காசே தான் கடவுளடா”
“பகையாளி குடியை உறவாடிக் கெடு “
(20 சீட்டு, 400 கோடி என்று
என்னவெல்லாமோ
காதில் விழுகிறது..!
இந்த இடுகை அவசரத்திற்கு –
பின்னர் விவரமாகப் பார்ப்போம் ..)



வனத்தில் ஓர் ஆண்டி. அவன் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி…தான்.
இது மட்டும் உண்மையானால், இந்த தேர்தலோடு தேமுதிக காலி.
What about BJP? If he has an alliance with BJP then it is OK for you?
congress & dmk to be routed out since they betrayed tamil people in Lanka
செத்துகொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் திமுகாவிர்க்கும் உயிர் கொடுத்து தன கட்சியை இந்த தேர்தலோடு மங்களம் பாட போகிறார் கேப்டன்.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் கூத்தாடி கூத்தாடி சட்டியை போடுடைத்தாண்டி. கஷ்ட்டமும் நஷ்ட்டமும் அவாவனுக்கு வந்தாத்தான் தெறியும் என்ன கஷ்ட்டமோ விஜயகாந்துக்கு கட்சியை விட காசு பெரியதா பட்டிருக்கு. அம்மோவோட கூட்டனி வெச்சி ஜெயிச்ச எம் எல் ஏ எல்லாம் அல்வா கொடுத்திட்டாங்க ஆனால் கலைஞர் மற்றும் காங்கிரஸார் கூட்டனி தர்மத்தை மதிப்பவர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கலாம்.
“விஜயகாந்தோட இப்போதைய தொகை 400 கோடி. இதை யாரு தர்றாங்களோ, அவங்களோடதான் கூட்டணின்ற முடிவுல இருக்கார். பிஜேபி பணம் தர்றதுக்கு தயாரா இருந்தாலும், 400 கோடின்னு மலைக்கிறாங்க.”
“அப்போ கேப்டனுக்கு பணம் கிடையாதா ? ”
“யாரு சொன்னது.. ? காங்கிரஸ் 500 கோடி கொடுத்தா, காங்கிரஸ் கூட கூட்டணி அமைச்சு, ஐந்தாவது ஆறாவது அணியெல்லாம் அமைக்க கேப்டன் தயாரா இருக்காரு. டெல்லிக்கு ஒரே ஒரு எம்.பியை அனுப்பி ஒன்னும் கிழிக்கப் போறதில்லன்றது, கேப்டனுக்கு நல்லாவே தெரியும். அதுக்கு பதிலா, 500 கோடியை வாங்கிட்டா, நிம்மதியா இன்னும் நாலு வருஷத்துக்கு பொழப்பை நடத்தலாம்…. அதுக்குள்ள இன்னொரு தேர்தல் வரும். அப்போ நம்ப ரேட்டை கூட்டிக்கலாம்னு இருக்காரு…” – நன்றி – சவுக்கு
i already wrote, that dmk and congress can not leave each other. corruption is the binding force.
(rettai pulavar kadaithaan)
i already wrote, congress will be the highest bidder.
if simple arithmatic works out, all forty should go to dmk/congress/vkanth alliance.
but in 1980 tamilnadu assembly election, result was otherwise.
தற்போதைய செய்தி –
தமிழக மீனவர் பிரச்சினையைப் பற்றி
விவாதிப்பதற்காக இன்று காலை கனிமொழி,
சோனியா காந்தியின் வீட்டிற்குச் சென்று
அவரைச் சந்தித்து ஒரு மணி நேரம்
பேசிக்கொண்டிருந்தார்.
கேப்டன் விஜய்காந்த், அதே காரணத்திற்காக
டெல்லி சென்றிருக்கிறார். நாளை அவர்
சோனியா காந்தியை சந்தித்து தமிழக மீனவர்
குறித்து விவாதிக்க இருக்கிறார்.
இதுவும் ‘இன்றைய தகவல்’ அய்யா –
திமுக, காங்கிரஸ், தேமுதிக கூட்டணி உறுதி.
திமுக – 15,
தேமுதிக – 12,
வி.சி. -2,
புதிய தமிழகம் – 1,
முஸ்லீம் லீக் -1,
மு.முன்னேற்றக் கழகம்- 1,
காங்கிரஸ் – 8 (புதுச்சேரி சேர்த்து)
வி.காந்துக்கு – 300
திமுக உடைய கூடும் என்று தோன்றுகிறது.
veRu eppadi olikka mudiyum. ippavE moththamaaga vaangi vittaal piRagu pangu kettu piRar pinnal Oda veNdi varathallavaa?