இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின்
மொத்த எண்ணிக்கை சுமார் 9 கோடி இருக்கலாமென்று
மதிப்பிடப்படுகிறது.அதில் தமிழ் நாட்டில் வாழ்பவர்கள்
மட்டும் 7.21 கோடி பேர். இந்தியாவின் இதர பகுதிகளில்
உள்ளவர்கள் 60 -70 லட்சம் பேர்.
மீதம் உள்ள தமிழர்கள் பரந்து, விரிந்த இந்த உலகின்
195 நாடுகளிலும் பரவி வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட
உலகில் இன்று தமிழர் வாழாத நாடே இல்லையென்று
சொல்லக்கூடிய அளவுக்கு அனைத்து நாடுகளிலும்
தமிழர்களைக் காணலாம்.
எல்லா நாடுகளிலும் தமிழர்கள் இருந்தாலும்,
சில நாடுகளில் மட்டும், குறிப்பாக 10-12 நாடுகளில்
மட்டும் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமான
அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது.
இந்த நாடுகளில் மட்டும் தமிழர்களின் எண்ணிக்கை
அதிகமாக இருக்க என்ன காரணம் ?
எந்த சூழ்நிலையில், எப்போது, தமிழர்கள் இந்த
நாடுகளுக்கு சென்றார்கள் ?
அவர்கள் வாழ்வும், சமூகச் சூழ்நிலையும்,
அவர்கள் வாழும் நாடுகளும் எப்படி இருந்தன ? எப்படி
இருக்கின்றன ?
நமது உடன் பிறவாத இந்த தமிழ்ச் சகோதரர்களைப்
பற்றிய, அவர்கள் வாழும் நாடுகளைப் பற்றிய,
விவரங்களை என்னால் இயன்ற வரை தேடி அறிந்து,
சேகரித்து, ஒரே இடத்தில் தொகுக்க வேண்டும் என்று
நீண்ட நாட்களாகவே முயன்று வந்தேன்.
அதற்கான விவரங்களை கொஞ்சம் கொஞ்சமாகச்
சேகரித்து வந்தேன். அந்தப்பணி ஓரளவு முன்னேறிய
நிலையில் –
அத்தகைய தகவல்களை –
இந்த ‘விமரிசனம்’ வலைத்தளத்தில் –
தகுந்த இடைவெளிகளில்,
‘கடல்களைக் கடந்து’ என்று தலைப்பிட்டு
அவ்வப்போது பகுதி பகுதியாக
(வாரம் ஒரு பகுதியாக ..?)
பதிவிடலாமென்று இருக்கிறேன்.
–
தமிழகத்திற்கு அப்பால் கடல்களைக் கடந்து சென்ற
தமிழர்கள் பொதுவாக கீழ்க்கண்ட 3 வகைகளுள்
வந்து விடுகின்றனர் –
1) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கடந்து
மேற்கே – மத்திய தரைக்கடல் பகுதிகளில் –
கிரேக்கம், ரோம், எகிப்து
முந்நீர்ப்பழந்தீவு(மாலத்தீவு)போன்ற நாடுகளுடனும்
கிழக்கே, காம்போஜம்(கம்போடியா),
ஸ்ரீவிஜயம்(சுமத்ரா), சாவகம்(ஜாவா),
சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா),
நக்காவரம்(அந்தமான்,நிக்கோபார் தீவுகள்),
போன்ற நாடுகளுடனும் – சீனம் வரையிலும் கூட
வாணிபத்திற்காக பல தமிழ் வணிகர்கள் சென்றனர்.
மேற்கே அவர்களுக்கு எந்தவித தடையும் ஏற்படவில்லை.
ஆனால் கிழக்கே, வர்த்தக முயற்சிகளுக்கு ஆங்காங்கே
உள்ள சிலஅரசுகளால் தடங்கலும்,
கடற்கொள்ளைக்காரர்களால் பாதிப்பும் ஏற்பட்டதால் –
– முக்கியமாக இந்த வணிகர்களுக்கு உதவுவதற்காக
பல்லவர் காலத்திலும், பிற்பாடு ராஜேந்திர சோழன்
காலத்திலும் சில படையெடுப்புகள் அவசியப்பட்டன.
கீழே காணும் படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
ராஜேந்திர சோழன் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய –
அவன் சென்ற, வென்ற நாடுகளை காட்டுகிறது.
( இன்றைய பர்மா, அந்தமான் தீவுகள், சிங்கப்பூர்,
மலேசியா,இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா,
கம்போடியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் இவற்றில் அடக்கம்.)
2)கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பிரிட்டிஷ்
ஆட்சியின் போது தமிழர்கள் சென்ற இடங்கள் –
(ஒரே ஆட்சியின் கீழ் இருந்தமையால்
பாஸ்போர்ட்டோ, விசாவோ இல்லாமல் வேலை
நிமித்தமாக பர்மா, மலேசியா, தென்னாப்பிரிக்கா,
பிஜி, ரீயூனியன் போன்ற பல நாடுகளுக்கு தமிழர்கள்
தமிழ் நாட்டில் இருந்து சென்றார்கள்.)
3) நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த
40-50 ஆண்டுகளில், வேலை வாய்ப்புகளைத்தேடி
வெளிநாடு சென்ற தமிழர்கள் –
———–
இவற்றில் முதல் வகையில் வரும் நாடுகளில் ஒன்று –
காம்போஜம் …!!
தலைப்பிற்கு உள்ளே செல்லும் முன் சில புகைப்படங்கள் –
(அடுத்து – பகுதி-2ல் தொடரும் )








Mr.Kavirimainthan,
whatever you write are quite interesting,
informative and useful. So, I welcome
your new effort also. Shall wait for
your next chapter eagerly.
அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு காவிரி மைந்தன்.
அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு காவிரி மைந்தன்.
2014-02-12 13:03 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :
> vimarisanam – kavirimainthan posted: “இன்று உலகம் முழுவதும் வாழும்
> தமிழர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 9 கோடி இருக்கலாமென்று
> மதிப்பிடப்படுகிறது.அதில் தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் மட்டும் 7.21 கோடி பேர்.
> இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ளவர்கள் 60 -70 லட்சம் பேர். மீதம் உள்ள
> தமிழர்கள் பரந்து”
during british rule, so many tamils left india due to poverty. they did not know where they were going; what job they had to do; whether they would return back>
just like slaves they were deported.
i am quite interested in you articles. you are writing truth without any bias.
நீங்கள் எழுத நினைத்த விசயங்களை இந்த மின் நூலில் எழுதியுள்ளேன். உங்களுக்கு தேவை எனில் உங்கள் தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள உதவும்.
வெள்ளை அடிமைகள்
நீங்க எழுத நினைத்துள்ள விசயங்களைத்தான் இந்தமின் நூலில் எழுதியுள்ளேன். குறிப்புகள் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்.
வெள்ளை அடிமைகள்
http://freetamilebooks.com/ebooks/white-slaves/
ஜோதிஜி,
உங்கள் தகவலுக்கு நன்றி.
உங்கள் உழைப்பு பாராட்டிற்குரியது.
ஆனால் நான் உங்கள் வழியில் வரவில்லை –
வேறு பாதையில் பயணிக்கிறேன்.
இவ்வளவு விரிவாக
எழுதுவதாக இல்லை.
சுருக்கமாக சில தகவல்களை மட்டும்
வேறு கோணத்தில் தருகிறேன்.நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
வரலாற்றை அறிய எங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
முழுமையாக எழுத முயற்சி செய்யுங்கள். இதையும் படித்துப் பாருங்கள். http://thamizhan-thiravidana.blogspot.in/2010/12/14.html