ஜாபர் சேட்-சரத்குமார் ரெட்டி,
ஜாபர் சேட்-கவிஞர் கனிமொழி,
ஜாபர் சேட்- கலைஞரின் செயலாளர் ஷண்முகநாதன் –
ஆகியோரின் 2ஜி ஊழல் சம்பந்தப்பட்ட உரையாடல்கள்
முதலில் ‘சவுக்கு’தளத்தின் மூலமும், பின்னர் வழக்கறிஞர்
பிரசாந்த் பூஷண் மூலமும் அகில இந்திய அளவில்
சென்றடைந்து விட்டன. சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கும்
இது குறித்து பிரசாந்த் பூஷண் மனு அனுப்பி இருக்கிறார்.
இந்த உரையாடல்கள் –
எப்போது, யாரால், எப்படி, எதற்காக –
பதிவு செய்யப்பட்டன என்பது குறித்து இன்னமும்
யாருக்கும் தெரியவில்லை.
இந்த தருணத்தில், ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜாபர் சேட்டின் நோக்கியா செல்போனில் தான் இந்த
உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன
என்றும், இவற்றை பதிவு செய்தவர் அவரே தான் என்றும்
அந்த தகவல் கூறுகிறது.
பிற்காலத்தில தனக்கு தேவைப்படும்
பல காரியங்களை செய்துகொள்ள (ப்ளாக் மெயிலுக்கு
இணையான தமிழ்ச் சொல் …?) இவை
பயன்படுமென்று, அவரே இந்த உரையாடல்களை
பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அந்த தகவல்
கூறுகிறது.இந்த காரணம் பொருந்தக்கூடியதாகவும்
இருக்கிறது.
இன்னும் சில அதிர்ச்சிகளையும் அந்த தகவல்
வெளியிடுகிறது. இன்னமும் வெளிவராத பகுதிகளில் ஜாபர்
சேட்டுக்கும் -கலைஞருக்கும் இடையே நிகழ்ந்த சில
உரையாடல்களும் இருக்கின்றன என்றும் சரியான நேரம்
பார்த்து அவை வெளியிடப்படும் என்பதும் தான் அந்த தகவல்.
இந்த ‘டேப்’கள் எப்படி வெளிவந்தன என்பது குறித்து
சொல்லப்படுவது –
ஜாபர் சேட் அடிக்கடி ‘இரவுவிருந்து’களில்
கலந்துகொள்ளும் பழக்கம் உள்ளவர் என்றும் அவ்வாறு
‘இரவுவிருந்து’க்கு சென்ற சமயத்தில் –
செல்போனைத் தொலைத்து விட்டார் என்றும்,
(அந்த செல்போனின் ‘value’ தெரிந்தவர்கள்
யாராவது வேண்டுமென்றே கூட அதை எடுத்திருக்கலாம் )
காணாமல் போன அந்த செல்போன் யாரிடம்
உள்ளதோ, அவர்கள் அதன் ‘real value’வை
இப்போது “தகுந்தபடி” பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
என்பதே.
ஓரளவு நம்பத்தகுந்ததாகவே இருக்கிறது இந்த தகவல் ..!
இரண்டு நாட்களுக்கு முன்னர் உருகுவே நாட்டின்
ஜனாதிபதி ஜோஸ் முஜீகாவைப் பற்றி ஒரு இடுகை
எழுதி இருந்தேன்.அவர் சொன்னது நினைவிற்கு வருகிறது.
“உண்ண உணவும்,
இருக்க இடமும்,
உடுக்க உடையும்,
மட்டும் தான் ஒரு மனிதனின் அத்தியாவசியத் தேவைகள்.
மீதி எல்லாமே ஆடம்பரம் தான்…”
“தேவையற்ற” “ஆடம்பரங்க”ளின் பின்னால்
ஓடுபவன் தான் வாழ்வில் நிம்மதியை இழந்து தவிக்கிறான்.
91 வயதில் ஒரு மனிதருக்கு இதெல்லாம் தேவையா ?
எதற்காக இத்தனை பொய்கள், திருட்டுகள்,
அவமானங்கள் …?
இப்படியெல்லாம் சம்பாதித்து என்ன ஆகப்போகிறது… ?
எது மனிதனின் கூட வரப்போகிறது …?
இறுதியில் போகும்போது -இவற்றில் எது – கூட
வரப்போகிறது …?
கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ -இல்லையோ
ஒவ்வொருவருக்கும் ஆன்மிக சிந்தனை அவசியம் தேவை.
நிறைய ஆன்மிக நூல்களைப் படிக்க வேண்டும் –
அதில் கூறப்படும் கருத்துக்களைப் பற்றி சிந்தித்துப்
பார்க்க வேண்டும். (நான் கூறுவது மதம் சம்பந்தப்பட்ட
நூல்களை அல்ல – நல்ல, பொதுவான,
எல்லாருக்கும்-எப்போதும் பொருந்தக்கூடிய ஆழ்ந்த
கருத்துக்களைக் கூறும் நூல்கள் ).
1500 ஆண்டுகளுக்கு முன்னர் காலடியிலிருந்து
தோன்றிய சங்கரர் கூறிய பஜகோவிந்தத்திலிருந்து
சில வரிகளை (மட்டும்) கீழே தருகிறேன். அவை இங்கே
எவ்வளவு அழகாகப் பொருந்துகின்றன பாருங்கள் –
” தாமரை இலை மேல் குவிந்துள்ள நீர்த்துளி போல்
வாழ்வு நிலையற்றது -(எப்போது வேண்டுமானாலும்
உடைந்து சிதறி ஓடி விடும் )
“உடல்வாகு தேய்ந்திட,தலைமுடி நரைத்திட,
வாய்ப்பற்கள் வீழ்ந்திட, முதியோன் நடக்கத்தேவை
கழி மட்டுமே – ஆனால் அப்போதும் விடுவதில்லை
அவனது ஆசை என்னும் சுழி !”
“எதுவரை உன்னுடலில் மூச்சு உள்ளதோ, அதுவரை
உன் மக்கள் உன்னை குசலம் கேட்பர்
மூச்சு நின்ற பின் உடல் அழுக, உன் மனைவியும்
உன் உடல் கண்டு அஞ்சுவாள்” –
“யார் உன் மனைவி, யார் உன் மக்கள் ?
எங்கிருந்து வந்தாய் நீ ?-
இறுதியில் போகும்போது யார் உன் கூட
வருவார்கள் ?
மனைவியா ? நீ பெற்ற பிள்ளைகளா ?
நீ சேர்த்து வைத்த செல்வமா ?
எது உன் கூட வரும் ?”
“நீர் முற்றும் வற்றியபின் அங்கு ஏது ஏரி ?
சொந்தங்கள் ஏது ? சம்சாரம் ஏது ?
வயது முதிர்ந்த பின் எதற்கு காமவிகாரங்கள் ?
“செல்வத்தைச் சேர்ப்பது கடினம்.
சேர்த்த செல்வத்தை பத்திரமாகப் பாதுகாப்பது
அதைவிட கடினம்.
அப்படி காத்த செல்வத்தை
பறி கொடுப்பது மிக மிகத் துன்பம் “
“செல்வம் அர்த்தமற்றது –
சுகமேதும் அதிலிருந்து கிட்டாது”
“செல்வந்தன் பெற்ற பிள்ளைகளிடமே பயமுறுவான்
இதுவே எங்குமுள்ள நியதி”
சரி சங்கரர் வேண்டாம் – ஏற்றுக் கொள்ள மாட்டார்.
நம் தமிழ் மூதாட்டி ஔவை இருக்கிறாரே –
அவர் சொன்னதையாவது கேட்கலாமே !
“பாடுபட்டுத் தேடிப் பணத்தை புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்
கூடு விட்டிங்கு ஆவி தான் போயின பின்
யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப்பணம் …!!”




அற்புதமான மொழிகளை
இணைத்துக் கொடுத்தது மனம் கவர்ந்தது
ஆனால் தூங்குவதுபோல நடிப்பவர்களை
எழுப்புவது கொஞ்சம் கடினம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
தன் வினை தன்னைச்சுடும்; பிறர்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தானே வரும். மற்றவர்களுக்கு ஆப்பு வைக்க ஒட்டு கேட்க வைத்ததன் மூலம் தமக்குத்தாமே ஆப்பு வைத்துக்கொண்டார் முதியவர். வேறு என்ன சொல்வது ?
பாலாஜி
அய்யா
உலகில் பாவ புண்ணியத்துக்கு பயந்தவர்களுக்குத்தான் தங்களது பதிவு மதிப்பு பெறும்.
வாழக வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Tell these things to N.Modi,Jeyendrar,Madurai Atheenam.Jeya Amma.Swamy nithyananda,and other acariyars.
KM sir ellorukum pothuvathaan pathivu pottu irukaar…
But Scientific corruptionla, Kalaignar thaan munnodi… ellorukum thaatha avar… adhanal, mudhal mariyadhai avarukuthaan.
avar adicha kollai -la, neenga sonna ellorduyathum sertha kooda 10% varadhu….
அருமையான பதிவு. நன்றி திரு காவிரி மைந்தன்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
அருமையான பதிவு. நன்றி திரு காவிரி மைந்தன்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
2014-02-07 17:05 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :
> vimarisanam – kavirimainthan posted: “ஜாபர் சேட்-சரத்குமார் ரெட்டி,
> ஜாபர் சேட்-கவிஞர் கனிமொழி, ஜாபர் சேட்- கலைஞரின் செயலாளர் ஷண்முகநாதன் –
> ஆகியோரின் 2ஜி ஊழல் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் முதலில் ‘சவுக்கு’தளத்தின்
> மூலமும், பின்னர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மூலமும் அகில இந்திய அளவில்
> சென்”
why after so much long time this tape is released???
what a question sir… it election time. its as simple as that…
idhula edho ” ull kuthu” irukunu neenga sandeha padaringa pol iruku….
kalaignara ” pazhi vaanga” yaaro seidha sathi idhu…
sir, kalaignara yaarum “pazhi vaanga” mudiyathu… avare adha senchukuvaaru…enna avar avalo nallavaru…
ADI SANKARAR, AVVAIYAR DID NOT TELL THESE TO ANY PARTICULAR INDIVIDUAL. THIS HOLDS GOOD FOR ALL POLITICIANS WHO RUN BEHIND MONEY. WHEN ANYBODY IS CAUGHT, IT BECOMES NEWS. IF ANYBODY INFORMS WHAT IS THE PROPERTIES JEYANDRAR AND HIS FAMILY MEMBERS HOLDING?
very good article
congress & dmk has to be defeated due to betrayal for Tamil people in Lanka
எனக்கு என்ன தோன்றியதென்றால் இவர்களுக்காக கணக்கு வழக்குகளையே மாற்றி தன் வாழ்க்கையே பாழாக்கி கொண்ட ஒருவனை தயவு தாட்சண்யம் இன்றி ‘ஊனமுற்றவன்’, ‘மாற்றுத் திறனாளி’, ‘ஒத்தக்காலு சரத்’ என்றெல்லாம் இவர்களால் எள்ளி நகையாட படுகிறான் என்றால் (Tape 4), இவர்களுக்காக குரல் எழுப்பும், கோடி பிடிக்கும் உடன் பிறப்புக்களுக்கு என்ன நிலை என்று எண்ணி பார்த்த போது பரிதாபம் தான் மேலிட்டது. (நிச்சயமாக பலாபழம் தான்)
அன்பு காமை அவர்களே, இங்கு சுயநலமே முக்கியம். பணம் அதிகாரத்திற்கு துணை போகிறது, அதிகாரம் பணத்திற்கு துணை போகிறது. நாம் நல்ல மாற்றத்திற்க்காகவும் வசந்ததிர்க்காகவும் காத்திருப்போம் நம்பிக்கையுடன்…
(இன்றைய தி இந்து நாளிதழ் முதல் பக்கம் ???).
குற்றவாளிகளில் நான்கு நிலையினர் உள்ளார்கள்.
முதல் நிலை..இவர்களிடம் கடவுளைப்பற்றி சொல்லி திருத்த முயல வேண்டும்.
இரண்டாம் நிலை..இவர்களிடம் சட்டம்,நீதி தண்டனை இவைகளைப்பற்றி சொல்லி திருத்த முயல வேண்டும்.
மூன்றாம் நிலை:கடவுளிடம் இவர்களை பற்றி சொல்லி தீர்வு கோர வேண்டும்
நான்காம் நிலை: தலை விதியை நொந்து கொண்டு அமைதி காப்பது தான்.
,நம் கதாநாயகன்…
கலைஞர் பட்டம் பெற்றதும் முதல் நிலையையும்,
முதல்வர் பட்டம் வென்றதும் இரண்டாம் நிலையையும்,
தொண்ணூறு வயதை கடந்தவுடன் மூன்றாம் நிலையையும்
அழகாக கடந்தவர்.
இவரிடம் “பஜகோவிந்த” மா?
ஆதி சங்கரர் மட்டும் திராவிடராக இருந்திருந்தால்,
இவர்தானே “வாழும் சங்கர”ராக இருந்திருப்பார்..
அப்போ நம் “இக்கட்டு” எப்போ நீங்கும்?
இவர் “பெக்கட்”டை உதைக்கும் போது!!.
அனைத்து நண்பர்களுக்கும் சேர்த்து –
என் இடுகைப் பதிவை விட இங்கு சுவை கூடி
இருப்பது பின்னூட்டப் பதிவுகள் தான்…!
எனவே, நான் மீண்டும் கருத்து ஏதும் கூறாமல்,
வெறுமனே பின்னூட்டங்களைப்
பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமென்று
எண்ணுகிறேன்.நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
there is one rumour, that still karuna / jaffer seth tapes are not released. if it is released, then that will be the climax. before that dmk will announce ” kootani” with congress.
Excellent sharing from Baja Govindam and Avvaiyar! All such quotes are meant for all of us – not necessarily only to politicians. Well done, KM! Please keep posting such lessons to be learned, and thank you.
Hello Mr. Chandramouli,
Nice to see you here after such a long time.
thanks for your comments.
with all best wishes,
Kavirimainthan