ஜூனியர் விகடன் சொன்னது கொஞ்சம் – சொல்லாமல் விட்ட மிச்சம் ….??

05/02/2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில்
‘டெல்லியைக் கலக்கும் கடிதம்’ என்கிற தலைப்பிட்டு
வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி கீழே –

 junior vikatan news bit

எதாவது புரிகிறதா ? அவர்களிடம் முழுச்செய்தியும்
நிச்சயம் இருக்கும்.அது இல்லாமல் இந்தப் பெட்டிச்
செய்தியை போட முடியாது. இன்னும் கொஞ்சம்
விவரம் கொடுத்திருக்கலாமே ! யாருக்கும்
புரியாதபடி இப்படி ஒரு சங்கதியை ஏன் போட
வேண்டும்..?
ம்..சரி.அதற்கும் எதாவது காரணம் இருக்கலாம்..
சரி கிடக்கட்டும். அவர்கள் போடும்போது நாம்
முழு விவரமும் தெரிந்து கொள்வோம்.

—–

என் நண்பர் ஒருவர், திரைப்படத்துறையில் துணை
இயக்குநராக பணி புரிகிறார். ஒரு அருமையான
ஸ்கிரிப்டை வைத்துக் கொண்டு அலைகிறார் – ஒரு
நம்பிக்கையூட்டும் படத்தயாரிப்பாளரைத் தேடி ..

அவர் தனது ஸ்கிரிப்டை என்னிடம் கொடுத்து படித்துப்
பார்க்கச் சொன்னார். அரசியல் பின்னணியில் உள்ள கதை.
ஏற்கெனவே இது போல் சில கதைகள் வந்திருக்கின்றன.
இருந்தாலும், இதன் ஸ்கிரிப்ட் கொஞ்சம் வித்தியாசமாகப்
போகிறது.

அந்த விறுவிறுப்பான திரைக்கதையை இங்கு உங்களுடன்
பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

—-

நியூடெல்லி யில் டிவி கம்பெனி ஒன்றில்
நடக்கும் ஊழல்கள் தான் கதையின் அடிப்படை..!!

அந்த டிவியின் உண்மையான முதலாளி யார் என்று
தெரிய வருவது தான் க்ளைமாக்ஸ். முதலாளி
இவர் தான் என்பதை கதையின் போக்கில் நம்மால்
யூகிக்க முடியும். ஆனால் நிரூபிக்க எந்த ஆதாரமும்
கிடைக்காது.
க்ளைமாக்ஸ் எப்படி முடியும், எப்போது முடியும்
என்று தெரியாமல் பார்ப்பவர்களைக் குழப்பமடையச்
செய்வது தான் கதையே !

இண்டர்வெல்லுக்கு முன்னால், முதல் பகுதியில்
வருவது ஒரு குட்டிக்கதை. இரண்டாம் பாதியில்
வருவது தான் சீரியஸான கதை..!

அந்த டிவி கம்பெனிக்கு வருமான வரித்துறையுடன்
சில சிக்கல்கள் – அவர்களது வருமானம் குறித்த
ரிப்போர்ட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்.
முதலில் சிறிய அளவில் ஆரம்பிக்கிறது. அதை
சரி செய்ய அவர்கள் கையாளும் முறை ரொம்ப சிம்பிள்.

வருமான வரி இலாகாவில் ஒரு பெண் அதிகாரி.
அவர் தான் இந்த டிவி கம்பெனியின் வருமான வரி
கணக்குகளை கவனிக்கிறார். அவரை இந்த கம்பெனி
கவனித்துக் கொண்டால், கம்பெனியின்
பைசலாகாமல் இருக்கும் சில சிக்கல்கள் தீர்வுக்கு வரும்.

ஒன்றுக்கும் உதவாத அவர் கணவரை டிவி கம்பெனியில்
ஒரு வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். அந்த
கணவருக்கு கம்பெனி சார்பாக, குடும்பத்தோடு
ஐரோப்பிய நாடுகளுக்கு விமானத்தில் விடுமுறையில்
சுற்றுப்பயணம் சென்று வர சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த ஒருவார பயணத்திற்கு அதிகம் போனால்
10 லட்சம் செலவாகலாம். ஆனால், மறைமுகமாக
அந்த பெண்மணி அந்த சுற்றுப்பயணத்தை வைத்து
ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுகிறார்..!
அதாவது ஒரு கோடி ரூபாய் லஞ்சம்..!

வருமான வரி இலாகா சட்டப்படி, கணவர் அல்லது
மனைவி பணி புரியும் கம்பெனி சம்பந்தப்பட்ட
வருமான வரி கணக்குகளை ஒரு அதிகாரி தணிக்கை
செய்யக்கூடாது. இது குறித்து என் கணவர்/மனைவி
இந்த கம்பெனியில் சம்பந்தப்படவில்லை என்று ஒரு
டெக்ளரேஷன் கூட கொடுக்க வேண்டும். அந்த பெண்மணி
இது குறித்து ஒரு பொய் டெக்ளரேஷனும் கொடுக்கிறார்.

உண்மைகளை மறைத்து இந்த விதிமுறை மீறப்படுகிறது.
அதற்கு, வருமான வரித்துறையில் இருக்கும் இன்னும்
சில பெரிய தலைகளும் உதவி புரிகின்றன.

உண்மையில், இந்த டிவி கம்பெனியின் பங்குகள்
கேமேன் தீவு, பிரிட்டிஷ் வெர்ஜினியா தீவு ஆகிய
இடங்களில் இருந்து சில பினாமி பெயர்களால்
வாங்கப்பட்டிருக்கின்றன. 5000-6000 கோடியளவிற்கு
இவ்வாறு பரிமாற்றங்கள் நடைபட்டிருக்கின்றன.
இந்த பினாமி பரிமாற்றங்கள் மூலம் ஷேர்களை
வாங்கியவர்கள் தான் இந்த டிவி கம்பெனியின் அசல்
சொந்தக்காரர்கள். அவர்கள் அரசாங்க நிர்வாகத்தில்
மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள். வருமான வரி
துறையே அவர்கள் பார்வையில் தான் இருக்கிறது
என்று வைத்துக்கொள்ளுங்களேன் ..!

அவர்களின் உண்மை முகங்கள் வெளிப்படுவது
எப்போது, எப்படி ?-
என்பது தான் இந்தக் கதையின் க்ளைமாக்ஸ்.

அடுத்து இதே டிவி கம்பெனியின் இன்னும் பெரிய
அளவிலான சில நிதி அறிக்கைகள் இலாகாவால்,
தணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதற்கு,
அந்தப் பெண்ணைத் தவிர்த்து, அவரது உடனடியான,
மேலதிகாரியின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.
ஆனால், அவர் மிக நேர்மையானவர் –
அவர் இதற்கு ஒத்து வரவில்லை.

விளைவு ..?

டிவி கம்பெனியின் கணக்குகளைப் பற்றிய தணிக்கை
அறிக்கையில் பல பெரிய குறைபாடுகளை சுட்டிக்காட்டி
ஒரு அறிக்கையைத் தயாரிக்கிறார்.
அவரை வழிக்கு கொண்டு வர டிவி கம்பெனி தரப்பிலும்,
வருமான வரி இலாகாவில் அவருக்கு மேலே இருக்கும் சில
அதிகாரிகளின் மூலமும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அவரோ எதற்கும் மசிய மாட்டேனென்கிறார்.

திடீரென்று அந்த அதிகாரியின் மீது –
தனக்கு கீழே பணி புரியும் (மேற்கண்ட) பெண்மணியை
பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கற்பழிக்க
முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு,
அவர் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்படுகிறார்.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அந்த அதிகாரி
நீதிமன்றத்திற்கு சென்று சட்டபூர்வமாக விடுவிக்க்கப்பட்டு
வெளிவருகிறார்.
பழைய விஷயங்களைக் கிளறுகிறார்.
அடங்க மறுக்கிறார்…

இப்போது அவர் பணி புரியும் வருமான வரித் துறையால்
அவர் மீது விசித்திரமான குற்றச்சாட்டுகள்
கூறப்படுகின்றன. அவர் தன் பணியை செய்யத் திறமை
இல்லாதவர் – மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று.
அரசு மருத்துவர்களைக் கொண்டு அவர் மனநிலை
பாதிக்கப்பட்டவர் என்று சான்றிதழும் பெறப்படுகிறது !
அவர் மீது பழிவாங்கும் நிலை தொடர்கிறது.

இடையில், சில ஆண்டுகள் கடந்து செல்கின்றன.
தொடரும் இந்த சித்ரவதைகளை
தாங்க முடியாத அந்த அதிகாரி, இறுதியில் ஒரு
மூத்த, புகழ்பெற்ற சட்ட நிபுணரை நாடி
உதவி கோரி கோருகிறார்.

அந்த சட்ட நிபுணருக்கு விஷயம் தெள்ளத் தெளிவாகப்
புரிகிறது. இருந்தாலும், நீதிமன்றம் எதிர்பார்க்கும்
அளவுக்கு அவரிடம் ஆதாரங்கள் இல்லை.
எனவே அந்த மூத்த அமைச்சருடன் வெளிப்படையாகவே
மோதுகிறார்.

தன் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களையும்
கூட இணைத்து, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கு
ஒரு கடிதம் எழுதி இதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம்
என்ன என்று கேட்கிறார்…!

பிறகு என்ன நடக்கிறது…?
என்ன நடக்கும் …? வழக்கம் போல் தனக்கு கீழே
பணி புரியும் ஒரு அதிகாரியைக் கொண்டே அனைத்து
விவரங்களையும் ஆராய்ந்தறிந்து ஒரு ரிப்போர்ட்
கொடுக்கும்படி அந்த அமைச்சர் உத்தரவு போட்டு விட்டு,

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் விளங்கவில்லை –
இதனை விவரமாக விசாரணை செய்ய உத்தரவு
போட்டிருக்கிறேன் என்று அதை மூத்த வழக்கறிஞருக்கும்
தெரிவித்து விடுகிறார்…!

பிறகு …?

அந்த துணை இயக்குநர் இவ்வளவு தான் ஸ்கிரிப்ட்
எழுதி இருக்கிறார்…
உங்களைப் போலவே நானும் கதை அடுத்து
எப்படி நகரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள
ஆவலாகக் காத்திருக்கிறேன்..!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஜூனியர் விகடன் சொன்னது கொஞ்சம் – சொல்லாமல் விட்ட மிச்சம் ….??

  1. Dr. Vigneshwaran.M.'s avatar Dr. Vigneshwaran.M. சொல்கிறார்:

    Mr.Kavirimainthan.

    Excellent article.
    I salute your skills.

  2. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    i am regularly watching CNN-IBN news channel. i hope, they will clear the issue oneday.
    PC AND HIS LAWYER WIFE ARE THE MOST HONEST PEOPLE. THEY MAY ALSO MAKE THINGS CLEAR ONEDAY.

  3. Rajagopalan Rangarajan's avatar Rajagopalan Rangarajan சொல்கிறார்:

    திரு.காவிரிமைந்தன்,

    மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் எழுதி இருக்கிறீர்கள்.
    பாராட்டுகள்.
    நீங்கள் சொன்னதும் புரிகிறது. சொல்லாததும்
    புரிகிறது. பணி தொடர வாழ்த்துக்கள்.

  4. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    துணை இயக்குனரான உங்கள் நண்பரின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளது. கரம்சந்த், சிஐடி போன்ற திரில்லர் சீரியல் பார்ப்பது போன்ற பரபரப்பான காட்சியமைப்புமள் இருக்கின்றன. அவருக்கு என் வாழ்த்துக்களை கூறுங்கள், காவிரி சார்.
    (மிகவும் வித்தியாசமான முறையில் பதிவாக்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா)

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி அஜீஸ்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  6. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    திரைக் கதை நன்கு உள்ளது. தேர்தல் நெருங்கு முன் இக் கதையில் வரும் மூத்த வழக்கறிஞ்கர் டில்லி கோர்ட்டில் வாதாடுவது கதையில் வரும் என எண்ணுகிறேன்.இதற்கிடையே நேர்மையான அதிகாரி, தான் மனநலம் பாதிக்கப் பட்டவன் இல்லை என்பதை தகுந்த மருத்துவ மனை சான்றுகளுடன் கோர்ட்டில் பதிவு செய்துள்ளதை திரைக் கதையில் பார்த்த ஞாபகம். 24/7 நாம் பார்த்துக் கொண்டு இருந்தால் மீதி திரைக் கதை முழு வடிவம் பெறலாம்.

  7. shivagiri's avatar shivagiri சொல்கிறார்:

    For more details – contents of the letter from Sh Ramjethmalani to PC in the following link

    Click to access letter.pdf

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.