திமுக, காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி
வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீவிரமாக
விரும்புபவர்கள் கவிஞர் கனிமொழியும், மதுரை
அண்ணனும்.கவிஞர் கனிமொழி இதற்கான
முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு
வருவதன் விளைவே முன்னர் குலாம் நபி ஆசாத்,
இப்போது பரூக் அப்துல்லா ஆகியோரின் விஜயம்..!
இதற்காகவென்று கவிஞர் கனிமொழியின் வீட்டில்
ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பிற்காக வந்த பரூக்
அப்துல்லா, கலைஞருடன் தன் நெருக்கத்தை
விளக்கும்படியாக புகைப்படம் இருக்க வேண்டும்
என்பதற்காகவே, தரையில் முட்டி போட்டு,
தோள்களை, உட்கார்ந்திருக்கும் கலைஞருக்கு சமமான
உயரத்தில் வரும்படி வைத்துக் கொண்டு ‘போஸ்’
கொடுத்தார்.
(பரூக் அப்துல்லா ஒரு மூத்த மத்திய
கேபினட் மினிஸ்டர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்)
(புகைப்படத்தை பாருங்கள்- தெரியும்)
இந்த புகைப்படம் தான் பொதுவாக அனைத்து
செய்தித்தாள்களிலும் வெளி வந்தது. ஸ்டாலினை
கடுப்படிக்க வைக்க விரும்பிய ஒரு புகைப்படக்காரர்
மட்டும், out of focus-ல் இருந்த ஸ்பெக்ட்ரம்
ராஜாவையும் சேர்த்து எடுத்து, எடிட் பண்ணாமலே
வெளியிட்டும் விட்டார்.
(இதன் விளைவாக ஸ்டாலினிடமிருந்து ராஜாவுக்கு
என்ன பதில் மரியாதை கிடைத்ததோ நமக்குத் தெரியாது.
ஆனால் ராஜாவுக்கு அடுத்த தேர்தலில் நிற்க சீட்டு
கிடைத்தால் அது அவர் அதிர்ஷ்டம் தான் …!)
(அந்த புகைப்படம் கீழே )





அப்போ பிஜேபியோடு கூட்டு நிச்சயம் என்று சொல்லுங்க!
(ஃபாரூக் அப்துல்லாவின் கட்சிதான் காங்கிரஸோடு கூட்டு கிடையாது என்று கூறிவிட்டனரே)
Super photo.
2014-02-02 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :
> vimarisanam – kavirimainthan posted: “திமுக, காங்கிரசுடன் மீண்டும்
> கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீவிரமாக விரும்புபவர்கள் கவிஞர்
> கனிமொழியும், மதுரை அண்ணனும்.கவிஞர் கனிமொழி இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து
> ஈடுபட்டு வருவதன் விளைவே முன்னர் குலாம் நபி ஆசாத், இப்போது பரூக் அப்துல்லா
> ஆக”
இதென்ன விபரீதம். மக்களிடம் திரும்ப 2G ஊழல் நினைவுபடுத்துவது போல் ராஜாவையும் தலைவரையும் இணைத்து…………கிடைக்க இருக்கும் ஓரிரு இடங்களும் ………..
It seems A.Rasa also wants congress alliance. natural alliance!