
“நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும்,
இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லை
அவர் சொன்னார். அதாவது ……………………. இன்னும்
மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார்
என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்”.
செய்தியாளர் கூட்டத்தில் இவ்வளவு சீரியஸான
விஷயத்தைச் சொல்லி விட்டு,
அடுத்த இரண்டாவது நிமிடமே – வேறு ஒரு
விஷயத்தைப் பற்றி சிரித்துக்கொண்டே பதில்
சொல்கிறார். தொலைக்காட்சிகள் இருப்பதால் நமக்கு
இந்த உணர்வு மாறுபாடுகள் நன்றாகவே
தெரிய வருகின்றன !
நிகழ்ந்தது வெள்ளிக்கிழமை.
வெள்ளி, சனி, ஞாயிறு,திங்கள் கடந்து 5ஆம் நாள்
செவ்வாயன்று தலைவர் இதைக் கூறுகிறார்.
ஏன் 5 நாள் இடைவெளி ..?
வெளியேற்றப்பட்ட மூத்தவருக்கு மதுரையில்
மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த விஷயமும்,
தடையை மீறி சில கட்சிப் பெருந்தலைகள் ஆதரிப்பதும்,
பிறந்த நாளுக்கு மற்ற மாவட்டங்களிலிருந்தும்
பெரிய அளவில் கூட்டம் வரவிருக்கிறது என்கிற
தகவலும் வெளிவந்த பிறகு –
செய்தியாளர்களை மெனக்கெட்டு கூட்டி இந்த விஷயம்
சொல்லப்படுகிறது.
நிஜமா அல்லது நாடகமா ?
சந்தேகம் ஏன் வருகிறது ?
இது போன்ற நாடகம் ஏற்கெனவே
அரங்கேற்றப்பட்டிருக்கிறதே – அதனால் தான்!
“என்னக் கொலை செய்துவிட்டு தலைமையை
கைப்பற்ற முயற்சி செய்கிறார்” என்று ஏற்கெனவே
வைகோ குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு
வெளியேற்றப்பட்டது இன்னும் நினைவில் இருக்கிறதே !
பின்னணியில் தென்படுவது –
சண்டையின் பின்னணி – உண்மையில், பலரும்
நினைப்பது போல் கட்சிப் பதவி அல்ல..!
சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்சியின்
சொத்துக்களை கையாளும் பொறுப்பு மொத்தமும்
எப்படி ஒருவரிடமே போய்ச் சேரலாம் என்பது தான்..!
இளையவரின் மகனுக்கு அறக்கட்டளையில்
கொடுக்கப்பட்ட இடம்
மூத்தவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது !
“………… இன்னும்
மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார்
என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்”
“இந்த உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்குத்
தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே
பத்திரிகையாளர்களாகிய
உங்கள் மூலமாக இந்தச் செய்திகளையெல்லாம்
தெரிவித்துக் கொள்கிறேன்”.
இதிலும் ஒரு நாடகத்தன்மை தெரிகிறது.
மிக ஜாக்கிரதையான,மிகவும் யோசித்து சொல்லப்பட்ட
“சொற் பிரயோகம்” தெரிகிறது.
கோபத்தில் பயமுறுத்துபவர்கள்
“செத்து விடுவார்”என்றா சொல்வார்கள் ..?
“தீர்த்துக் கட்டி விடுவேன்”
“தொலைத்து விடுவேன்”, “ஒழித்து விடுவேன்”
என்பது போன்ற வார்த்தைகள் தானே வெளிவரும் ?
“செத்து விடுவார்” என்று சொன்னதற்காகவா
கருப்புப்பூனை (கமாண்டோ) பாதுகாப்பு கேட்டு
மத்திய அரசுக்கு பெட்டிஷன் கொடுப்பார்கள் ..?
இரண்டு கோணங்கள் தென்படுகின்றன –
ஒரு கோணம்-
பயமுறுத்துவதற்காக,
உண்மையாகவே இந்த வார்த்தைகளில் எதாவதொன்று
சொல்லப்பட்டிருக்கலாம்.
சொன்னவர் … இதைச் சொல்லக்கூடியவர் தான் !
தந்தை அந்த வார்த்தையை அப்படியே வெளியே
சொல்லாததற்கு காரணம் – அப்படிச் சொன்னால்,
அவரது பேச்சின் அடிப்படையிலேயே,
காத்துக் கொண்டிருக்கும் காவல் துறை, மூத்தவரின்
மீது நடவடிக்கை எடுக்க முடியும். தந்தையின்
பேட்டியே பிள்ளைக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் !
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக முடியும்.
இரண்டு பக்கங்களிலிருந்தும் ஆபத்து !
எனவே அத்தகைய சூழ்நிலையை தவிர்க்கவும்,
அதே சமயம் கட்சிக்காரர்களுக்கு – மூத்தவர்
எந்த அளவிற்கு போகத்துணிந்திருக்கிறார் என்பதை
உணர்த்தவும், இப்படிப் பேசி இருக்கலாம்.
இந்த நிகழ்வு, இந்த பேச்சு, வெளியாகி விட்டால்,
எக்குத் தப்பான செயலில் மூத்தவர் ஈடுபட முடியாது.
இரண்டாவது கோணம் –
உண்மையில் மூத்தவர் இந்த சொல்லை
பயன்படுத்தாமலே இருந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
கோபமாகப் பேசி இருக்கலாம்.
அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து
கொண்டிருக்கலாம்.
“சேரைத் தூக்கி எறிந்தான்.
என்னையே அடிக்க வந்தான்” என்று முன்னதாக
தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்ட (leak செய்யப்பட்டுள்ள)
வார்த்தைகள் அத்தகைய ஒரு நடப்பை உறுதிசெய்கின்றன.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, ஒருவழியாக,
மூத்தவரை, நிரந்தரமாக, அரசியலில் இருந்து
அப்புறப்படுத்த இந்த “கொலை மிரட்டல்”
பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
விஷயம் தெரிய வரும்போது,
நமக்கென்னவோ கொஞ்சம் கூட இரக்கம்
வர மாட்டேனென்கிறது.
இந்த வயதிலும் நாடகமா ?
என்று தான் கேட்கத் தோன்றுகிறது..!
காரணம் …?
முன் சரித்திரம்…!
நமக்குத் தெரிந்த பழமொழிகள்- சொற்றொடர்கள் !
“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” !
“தன் வினை தன்னைச் சுடும்” !
“முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்” !
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” !
“ஊழ்வினை உருத்து வந்து உருட்டும்” !



நித்தம் நித்தம் ஒரு நாடகம்…!
அவர் ‘இறந்து விடுவார்’ என்று இவர் சொன்னதற்கு, அவர் அடிக்கடி சிகிச்சைக்கு வெளிநாடு செல்லும் ஒரு கோணமும் இருக்கலாம் அல்லவா?!.
இதில் எனக்கு புரியாதது, அந்த பகுத்தறிவு பகலவன், பெரியாரின் உத்தம சீடன், தரணி ஆள் என்றாலும் தண்டவாளத்தில் தலை வை என்றாலும் ஒரு சேர பார்க்கும் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் “நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான இறந்து விடுவார் எனும் ஒரு சொல்லை இவர் சொன்னார்” என்று பொதுவில் புலம்புவது பகுத்தறிவின் எத்தகைய வெளிப்பாடு என்று யாராவது சொன்னால் நன்றியுடையவனாவேன்.
தங்களுடைய பதிவில் உள்ள கடைசி வரிகள் மெய்யானவை.
செய்த பாவங்கள்.இப்பொழுதுதான் அறுவடையாகிறது.
மொத்தத்தில் அவரது வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்.
பாவம் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்காமல் யாருடைய வாழ்க்கையும் முடியாது.
கொச்சின் தேவதாஸ்
பல வருடங்களுக்கு முன்பே இவர் கோட்டூர்புரத்தில் ஒரு கும்பல் தன்னை கொலை செய்ய முயன்றார்கள் என்றும் தான் ஒரு குடிசையில் இரவு முழுதும் ஒளிந்து இருந்து தப்பித்து வந்ததாகவும் கூறி அந்த தேர்தலில் வெற்றி பெற்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும். நிற்க, தற்போது நீங்கள் குறிப்பிட்ட செய்தி பற்றி அவர் துணைவியார் (அழகிரி தாயார்) வெள்ளி கிழமை நடந்தது பற்றி கூறுவது என்ன எனவும் அறிந்தால் ஓரளவு உண்மை தெரிய வாய்ப்பு
எழில்!
மஞ்சள் துண்டுக்கே இன்னும் விளக்கம் வரவில்லை, அப்படி வந்தாலும் “பஞ்சக் குங்குமம், பரம்பரைக் குங்குமம் ” போல் ஏதாவது வளவளா என வரும்.
“அவர் உடல்நலம் தேறி வந்தால், முதல்வர் பதவியை அவரிடமே தந்துவிடுகிறேன்” என்று உணர்ச்சி வசனம் பேசி நடித்தவர், “ஐயோ கொல்றாங்களே” என்று ஆக்ஷன் டப்பிங்க் பேசி நடித்தவர், இப்போது கண்ணீர் காட்சியில் தோன்றியுள்ளார்!
இதுவும் மாறும். ஆல் பார்ட் ஆஃப் த கேம்.
வெகுவிரைவில் “பனிக்கும் … இனிக்கும்…”
ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டால், மிரட்டியவரை தண்டிக்காமல் மிரட்டப்பட்டவருக்கு பாதுகாப்பை மத்திய அரசிடம் கேட்பது சரியா காவிரி சார்?
இவ்வளவுக்கும் இவர் 1957 முதல் சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் etc etc
எல்லோருக்கும் அனுபவம் நல்ல படிப்பினையை தரும் என்பார்கள், ஆனால் இவருக்கோ…
நீங்கள் கூறிய பழமொழிகளோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்…
உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்!
ஸ்டாலின் உடல் நிலையை ப்பற்றி பல ஆண்டுகளாக வதந்திகள்.அவைகளை வைத்து பார்க்கும்போது அழகிரி சொன்னது ஸ்டாலின் உடல் நிலை சம்பந்தப்பட்டது கொலை மிரட்டல் எதுவும் இல்லை என்பது தெளிவு.மேலும் கோமாவில் இருந்த ஒருவரையே பிரதம மந்திரியாக நாம் பத்தாண்டுகள் சகித்துக்கொண்டோம் .உடல் நலம் குன்றிய ஒருவர் முதல்வராக ஓர் ஐந்தாண்டுகள் ஆண்டால் என்ன தப்பு?ஆனால் ஒருவர் தாலூக்கா ஆபீஸ் டவாலியாக வேலை செய்ய நினைத்தால் தன உடல் நலமாக உள்ளதாக மருத்துவ சான்றிதழ் தேவை.சிரிப்பதா அழுவதா?
நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்…
one thing is sure. huge money is involved. the actual compulsions of karuna will be known later only. as usual karuna is telling something cheaply.