வெள்ளிக்கிழமை, மௌன சுவாமிகள் –
தவத்திரு மன்மோகன் சிங் அவர்கள் –
நீண்ட நாட்களுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்துப்
பேசப்போகிறார்..!
புத்தாண்டில் அவர் பாவ மன்னிப்பெல்லாம் கேட்பார்
என்று யாராவது எதிர்பார்ப்பார்களா என்ன ? அடுத்து
வரவிருப்பவருக்கு தான் இடத்தை காலி செய்யத்தயார்
என்பதை எப்படி, எந்த விதத்தில், அசடுவழிய
சொல்லப்போகிறார் என்பது தான் அதிக பட்ச
சஸ்பென்ஸ்..!
இந்த நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்களிடம்
ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
விடிவெள்ளியாக ராகுல்காந்தி உதித்திருக்கிறார்.
தேர்தலுக்குப் பின் பதவிக்கு வரும் புதிய அரசுக்கு
ராகுல் காந்தி பிரதமராக தலைமைப்
பொறுப்பேற்கப்போகிறார்.
நாடு ஒரு புரட்சி இளைஞரின் தலைமையில்
பீடு நடை போடப்போகிறது – என்று கூறக்கூடும்.
பீடு நடையா அல்லது பைத்தியக்கார நடையா என்று
மக்களுக்குத் தெரியாதா என்ன ?
அதற்கான பின்னணியை ஏற்கெனவே நிதியமைச்சர்
ப.சி. உருவாக்கி விட்டார். காங்கிரஸ் கட்சியும்
ஏகப்பட்ட ‘பில்ட் அப்’ களுடன் நாடகத்தை
அரங்கேற்றத் தயார் செய்து விட்டது.
4 மாநில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த
காங்கிரசுக்கு புதிய தலைமையை கொடுக்கப் போவது
போல் ‘பாவ்லா’ செய்கிறார்கள். ராகுல் காந்தி
புத்தம் புதிதாய்ப் பிறந்தவரா ?
காங்கிரசுக்கு புதியவரா ? இல்லை இந்த நாட்டிற்கு
தான் புதியவரா ? இத்தனை நாட்களாக
இல்லாமல் கட்சியை கரை சேர்ப்பதற்கே என்று
வானத்திலிருந்து பொத்’தென்று குதித்தவரா என்ன ?
இத்தனை நாட்களாக கட்சியையும், ஆட்சியையும்
ஆட்டிப் படைத்தவர்கள் அன்னையும்,
பிள்ளையும் தானே ? தேர்தல் தோல்விக்கு இவர்கள்
அல்லாமல் வேறு யாரோ பொறுப்பு போல்
தோற்றத்தை உருவாக்கியாகி விட்டது.
ஊழலை ஒழிக்கப் பிறந்தவர் ராகுல் என்பது போல்
புதிதாக ஒரு பின்னணியை உருவாக்குகிறார்கள்.
ராகுல் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் நிர்வாகத்தில்
பெரிய புரட்சி உண்டாகும் – புத்துணர்வு உண்டாகும்
என்றெல்லாம் அஸ்திவாரம் போடுகிறார்கள்.
மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடிகட்டிட ஊழல்,
காமன்வெல்த் கேம்ஸ் ஊழல்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்,
இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல்,
நிலக்கரி ஊழல்,
மைத்துனர் வாத்ரா ஹரியானா நில ஊழல் –
இத்தனையும் நடந்தபோது இவர் இந்த உலகத்தில்
தானே இருந்தார் ?
மௌன சாமியார் அமெரிக்கா போயிருந்த போது
“ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்ற அவசர சட்டமா?
கிழித்துப் போடுங்கள் குப்பைக் கூடையில் “ என்று
அவசர ஓரங்க நாடகம் நடந்ததே ..
அந்த நாடகத்தையாவது ஒழுங்காகத் தொடர்ந்திருக்கலாம்.
போடுகிற வேஷத்தை அடுத்த பாராளுமன்ற தேர்தல்
வரையாவது கலைக்காமல் இருந்திருக்கலாம்.
அதைக்கூட ஒழுங்காகச் செய்யத் தெரியவில்லையே இந்த
அரைகுறைகளுக்கு…
மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல் விவகாரத்தில்,
விசாரணை கமிஷன் கொடுத்த அறிக்கையை ஏற்றுக்
கொள்ள முடியாது என்று மஹாராஷ்டிரா அரசு
முதலில் முடிவெடுத்தது –
-“நான் இதை ஏற்க முடியாது” என்று ஊழலை
ஒழிக்கப்பிறந்த ரா.காந்தி வீராவேசமாக சொன்னவுடன்,
“விஷயத்தை மறுபரிசீலனை செய்வோம்” என்று
மஹாராஷ்டிரா முதல்வர் சொன்னபோதே சந்தேகம்
தான். 3 முன்னாள் முதல்வர்கள் /“அன்னை”க்கு
மிகவும் வேண்டப்பட்ட உள்துறை அமைச்சர் எல்லாரும்
சம்பந்தப்பட்டிருக்கிறார்களே – அதெப்படி முடியும்
என்று தான் தோன்றியது.
“மறுபரிசீலனை”யின் அர்த்தம் என்ன என்பதை இன்று
மஹாராஷ்டிரா முதல்வர் நிரூபித்து விட்டார்..!
(வியாழன் இரவு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்)
அரசியல்வாதிகள்/அமைச்சர்கள் “ஆதரவு”கொடுத்தது
“கிரிமினல் குற்றம்”ஆகாது – அவை வெறும்
கொள்கை சம்பந்தப்பட்ட முடிவுகள் தான் என்றும் –
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குற்றம் இழைத்திருக்கிறார்களா
என்று மட்டும் கண்டறிய மீண்டும் ஒரு (சிபிஐ)
விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறி
விவகாரத்தை”குப்பைக்கூடை”க்கு அனுப்பி
விட்டார் மஹா. முதல்வர். தேர்தல் வரை சமாளிக்க
இது மிகச்சுலபமாக உதவும். ராகுல் காந்தி ஊழலை
ஒழிக்கும் வழி இது தான் …!
வேறு என்ன செய்வார் மஹா. முதல்வர் ?
“அன்னை”க்கு மிகவும் வேண்டப்பட்ட சுஷில் குமார்
ஷிண்டேயும் அதில் சம்பந்தப்பட்டுத் தொலைக்கிறாரே..!
ஹிமாசல் பிரதேசத்தில் வீர் பத்ர சிங் –
காண்ட்ராக்ட் ஒன்றை விரிவுபடுத்த – பச்சையாக,
செக் மூலம் லஞ்சம் வாங்கியதை –கடன் வாங்கினார்
என்று சொல்லி காக்க முயல்கிறது காங்கிரஸ் தலைமை –
அவரும் அவர் மனைவியும், தேர்தலில்
போட்டியிடும்போது, தேர்தல் கமிஷனுக்கு
கொடுத்த வாக்குமூலத்தில் (அபிடவிட்) தங்களது
(கோடிகளில் மதிப்புள்ள )-
லட்சக்கணக்கான “ஷேர்” விவரங்களை மறைத்ததற்கு
என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள் ?
அடுத்த குண்டுவெடிப்பும் இன்று நிகழ்ந்திருக்கிறது –
பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு, பொதுத்துறை
வங்கிகள் கொடுத்து திரும்ப வராமல் இருக்கும்
கடன்களின் மொத்தத்தொகை 1,60,000 கோடியாம்.
இது யாருடைய அப்பன் வீட்டுப் பணம் ?
இவை மத்திய அரசின் வங்கிகள்.
இதில் உள்ளது நம் பணம்.
நாம் வரியாக கொடுத்ததும்,
சேமிப்பாக சேர்த்தும் வைத்த பணம் –
இப்படி ஆளும்கட்சி ஆதரவு கோடீஸ்வர
தொழிலதிபர்களுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது.
2009ல் 30,000 கோடியாக இருந்த வாராக்கடன்கள்
படிப்படியாக குறைந்திருக்க வேண்டுமேயல்லாமல்
இப்படி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது எப்படி ?
இந்த தொழிலதிபர்களின் பாக்கெட்டிலிருந்து
மாதாமாதம் “சம்பளம்” பெறும் ஆளும்கட்சியின்
அதிகாரப் புள்ளிகள் தானே இதற்கு காரணம் ?
ராகுல் காந்தி –
“கடுகளவு ஊழலையும்
பொறுத்துக் கொள்ள மாட்டேன் –
சகித்துக் கொள்ள மாட்டேன்.
தொலைத்து விடுவேன் -தொலைத்து …”
– என்று சொன்னதற்கு பிறகு தான் இத்தனையும்
நிகழ்ந்துள்ளன.
“நீங்கள் தொலைத்து விடுவேனென்று சொன்ன
பிறகும் ஊழல் இப்படி நடுத்தெருவில் வந்து நர்த்தனம்
ஆடுகிறதே” என்று கேட்கலாம் என்று நினைத்து-
செய்தியாளர்கள் சிலர் இன்று ராகுலைத்
தேடிப் போயிருக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைமையகத்தில் –
ஒருவர் சொல்கிறாராம் வெளியூர் போயிருக்கிறார் என்று.
இன்னொருவர் சொல்கிறாராம் வெளியூர் இல்லை –
வெளிநாடு என்று…!ஆனால் எங்கே என்று யாருக்கும்
சொல்லத் தெரியவில்லை.
இவர்கள் எங்கே போகிறார்கள் – எங்கே வருகிறார்கள்
என்பது “அன்னை”யையும்,அவர் பெற்ற
“பிள்ளை”யையும் தவிர வேறு யாருக்கு தெரியும்
இந்த நாட்டில் ?
ஏமாந்தால் – நமது அடுத்த பிரதமர் இவர் தான் ..!!




Sonia, Rahul team is very confident that the mango people of this banana country will once again “emandhu povargal”. Only time can tell …
இன்னமும் இந்த கொள்ளை கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கும் முட்டாள்களும் இங்கே உள்ளனரே. இதை எங்கே போய் சொல்லுவது? அதற்காக நான் மோடிதான் அடுத்த தெய்வம் என்று சொல்ல வரவில்லை. ஏன் ஒரு மாற்றத்தை இந்த இந்திய முட்டாள்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று தான் தோன்று கிறது.
//ராகுல் காந்தி –
“கடுகளவு ஊழலையும்
பொறுத்துக் கொள்ள மாட்டேன் –
சகித்துக் கொள்ள மாட்டேன்.
தொலைத்து விடுவேன் -தொலைத்து …”//
ஒரு வேளை…அவர் சொன்னது இப்படி இருக்குமோ?
“கடுகளவு ஊழலை
பொறுத்துக் கொள்ள மாட்டேன் –
சகித்துக் கொள்ள மாட்டேன்.
தொலைத்து விடுவேன் -தொலைத்து …”
(குறைந்தது மலையளவு ஊழலே ஏற்கப்படும்)
இதில் பெரிய காமெடி என்னவென்றால், ராகுல் பிறப்பதற்கு முன்பிருந்து காங்கிரஸில் இருப்பவர்களும், தங்களுக்கு இந்த நாட்டை ஆள தகுதியில்லை என்று கருதுவதே. பிறகு எதற்கு கட்சியில் இருக்கின்றார்கள்? ஒன்று கட்சியை கலைக்கட்டும் அல்லது கட்சியிலிருந்து வெளியேறட்டும்!
நாட்டுக்கு செய்யக்கூடிய இதைவிட பெரிய நற்காரியம் வேறு என்னவாக இருக்கும், சிந்தியுங்கள் காங்கிரஸ் தலைவர்களே!
அஜிஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன்
sonia, raul are having enough money power to meet 10 general elecctions.
America and its supporting countries will favour mother son combination to rule this country.
This is almost equal to british rule, India’s resopurces going to swiss banks. So there is no chance. RAUL IS THE NEXT PM.
KARUNA. LALU, NITHISH, MAYA,MULAYAM WILL SUPPORT RAUL ONLY. EVEN IT WILL NOT BE A SURPRISE, IF KEJRI ALSO SUPPORTS RAUL. WE HAVE TO WAIT FOR SOME MORE YEARS TO LIBERATE OUR COUNTRY.
i dont expect rahul to be announced as pm candidate this time, i expect some scape goat candidate or will face election without one, anyway they know they cant come back again, they will let 3rd front to rule with their support any mulayam or mayawati or someone like them to take pm chair, later once people start to believe they need stable govt and congress ruling is much better, then congress will revert its support to 3rd front and will face election again, then starts sucking again, till the last blood of last indian.
i think “tmnkin” is right.
Well I told this long back.The focus of Cong is 2019 elections and not 2014
not 2019, might be 2017