
கெஜ்ரிவாலை நம்பலாமா என்று ஒரு இடுகை சில நாட்கள் முன்பு
வந்தது. அதில் பாஜக – கெஜ்ரிவாலுக்கு கொஞ்ச காலம் அவகாசம் கொடுத்து, அவர் பதவியில் இருந்து கொண்டு எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தோன்றியதை எழுதி இருந்தேன்.
இப்போது காங்கிரஸ் கட்சி அந்த நிலையை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ‘வெளியிலிருந்து ஆதர’வுடன், கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக சனியன்று பதவியேற்க இருக்கிறார்.
இடைப்பட்ட காலத்தில் – கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகளை கவனிக்கக்கூடிய – எடை போடக்கூடிய – சந்தர்ப்பங்கள் சில உருவாகியுள்ளன.
1) ஆம் ஆத்மியின் சார்பில் டெல்லியில் சுமார் 300 “மொஹல்லா” (பேட்டை) கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டு, மக்களிடம் நேரடியாக “ஆம் ஆத்மி கட்சி” காங்கிரஸ் ஆதரவுடன் பதவி ஏற்கலாமா ? வேண்டாமா ? -என்று கேட்டு, கூட்டத்தில் உள்ள மக்கள் கையை தூக்கி ஆதரவு தெரிவிப்பதை எண்ணி, சுமார் 250 கூட்டங்களில் பெரும்பான்மை மக்கள் அரசு அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர – ஈமெயில், எஸ்எம்எஸ்,தொலைபேசி மூலம் கிடைத்த ஆதரவு-எதிர்ப்புகளும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
-இத்தகைய பழக்கத்தை ஏற்படுத்துவது எந்த அளவிற்கு நல்லது .. ?
ஒவ்வொரு விஷயத்திற்கும் இந்த முறையில் மக்களின் கருத்தை
அறிவது நடை முறை சாத்தியமான விஷயமா ?
“மொஹல்லா”(பேட்டை) கூட்டங்களில் மோதல்கள் ஏற்படாதா ?
தண்டையார் பேட்டை கூட்டத்தில், வண்ணாரப்பேட்டை மக்களோ,
திருவல்லிக்கேணி கூட்டத்தில் -புதுப்பேட்டை மக்களோ, அல்லது
மைலாப்பூர் கூட்டத்தில் – மந்தவெளி மக்களோ,
கலந்து கொள்வதையோ, ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதையோ
தடுக்க முடியுமா ? அல்லது அவர்களை எந்த பேட்டை மக்கள் என்று
பிரித்து அறியத்தான் இயலுமா ?
இத்தகைய தெருமுனை கூட்டங்களில், கும்பலாக சிலர் சேர்ந்து கொண்டு – வாதம் அல்லது விதண்டாவாதம் செய்வதை
தடுக்க முடியுமா ?
(கூட்டுறவு சங்கங்கள் போன்ற சங்கங்கள் தொடர்பான நிறைய
பொது மகா சபைகளை நடத்த வேண்டிய பொறுப்பில்
நான் இருந்திருக்கிறேன். நிறைய கூட்டங்களை நிகழ்த்தியும்
இருக்கிறேன். இத்தகைய கூட்டங்களில் – பெரும்பாலானவை ரகளையில் தான் முடியும்.. mob democracy – நடைமுறை சாத்தியமே இல்லை ..)
இதை நடைமுறையில் சமுதாயம் அனுபவித்த பின்னர் தான் பிரதிநிதித்துவ முறை ( representative democracy ) ஏற்பட்டுள்ளது.
2) பதவி ஏற்பது என்று அறிவித்தது முதலே, கெஜ்ரிவாலும், அவரது கட்சியின் முக்கிய தலைவர்களும் திரும்ப திரும்ப, தாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, கடந்த
15 ஆண்டுகளில், காங்கிரஸ் அரசு செய்த ஊழல்கள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு,
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
(எப்படியாவது காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டால் தேவலை –
பதவியேற்காமலே மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என்கிற எண்ணம் அதில் இருப்பதாகத் தோன்றியது !)
3) நேற்று முதல் – பதவியேற்ற 24 மணிநேரத்தில், டெல்லி மக்களுக்கு,
வீடு ஒன்றிற்கு 700 லிட்டர் வீதம் இலவசமாக நீர் விநியோகிக்கப்படும் என்று சொல்லி வருகிறார்கள்.
4) பதவியேற்று 15 நாட்களில் ‘ஜன்லோக்பால்’ சட்டம் கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
5) மின்சப்ளை செய்யும் நிறுவனங்களின் கணக்கு வழக்குளை தணிக்கை
செய்யும் பணி துவங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். மின்செலவை பாதியாகக் குறைப்பது குறித்த அறிவிப்பு எப்போது என்பதைப்பற்றி இன்னும் ஒன்றும் சொல்லவில்லை.
எகனாமிக்ஸ் டைம் செய்தித்தாள் மூலம் கிடைக்கும் செய்திகள் –
முந்தைய முதல்வர் ஷீலா தீக்ஷித், உபரி பட்ஜெட் போட்டு, கையிருப்பில்
கணிசமான அளவு நிதிவசதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றும்,
குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு எந்த கவலையும் இல்லாமலே
இலவச தண்ணீர், பாதி விலையில் மின்சாரம் ஆகியவற்றை
புதிய அரசு மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது.
அதற்குள்ளாகவே காங்கிரசை வெறுப்பேற்றுகிற மாதிரி சில காரியங்களைச் செய்தால், மைனாரிடி அரசு கவிழ்ந்து விடும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றிய மாதிரியும் ஆகும்,
மீண்டும் தேர்தலுக்கு வழி வகுத்தது மாதிரியும் ஆகும் என்று சொல்கிறது.
6) இரண்டு நாட்களாக கெஜ்ரிவால் சில காரியங்களைச் செய்திருக்கிறார்…!
அவர் குடியிருப்பது, டெல்லியை ஒட்டிய (சென்னைக்கு தாம்பரம் மாதிரி)
காஜியாபாத் என்கிற பகுதியில்- மூன்று அறைகளைக் கொண்ட
12 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில்.
தன் குடியிருப்பின் வாசலில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, கூடிய பொதுமக்களிடம் குறை கேட்டிருக்கிறார். பெரும்பாலான மக்கள் – பெண்கள் – குடிதண்ணீர், தெருவிளக்கு, சாக்கடை, சீரற்ற சாலைகள் – ஆகியவற்றைப் பற்றியே குறை சொல்லி இருக்கிறார்கள் …! அவரும் – அவர்களது குறைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்று கூறி இருக்கிறார். கூடவே தான் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள ராம்லீலா மைதானத்திற்கு வரும்படி அனைவரையும் அழைத்திருக்கிறார். விஐபி க்கள் யாருக்கும் தான் அழைப்பு அனுப்பவில்லை என்றும், தம்மைப் பொறுத்த வரை, பொதுமக்கள் தான் விஐபி க்கள் என்றும் கூறி இருக்கிறார்…
7) அடுத்து அவர் செய்தது –
பத்திரிகையாளர்களின் மூலம் அவர் விட்ட செய்தி –
“டெல்லி மாநில அரசில் பணி புரியும் நேர்மையான அதிகாரிகள் அனைவரும் தன்னை தொலைபேசி மூலமோ, ஈமெயில் மூலமோ, எஸ்எம்எஸ் மூலமோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களது திறமை பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கு தகுந்த பதவிகள், பொறுப்புகள் –
கொடுக்கப்பட்டு,
பதவி உயர்வும்
கொடுக்கப்படும்.”
(இது ஒரு விபரீத அர்த்தத்தை கொடுக்கிறது. இவரிடம் பதிவு செய்து
கொள்ளாத ஊழியர்கள் அனைவரும் ஊழல்காரர்கள், அல்லது
உழைப்பைத் தவிர்ப்பவர்கள் என்று பொருளாகி விடுகிறது ..!
மேலும், அரசாங்க ஊழியர்கள் கெஜ்ரிவாலுடன் தனிப்பட தொடர்பு வைத்துக் கொண்டால், அவர்களுக்கு முக்கியமான பதவிகளும், பதவி உயர்வும் கிடைக்கும் என்கிற ஒரு எண்ணத்தை அவர்களிடையே ஏற்படுத்தி விடுகிறது)
பணியிட மாற்றங்களை மட்டுமே கெஜ்ரிவால் செய்ய முடியும் –
அரசாங்க ஊழியர்களின் பதவி உயர்வுக்கென தனிப்பட்ட விதிமுறைகள்
இருக்கின்றன. கெஜ்ரிவால் உண்மையிலே நினைத்தாலும் அவற்றை
மீறி யாருக்கும் பதவி உயர்வெல்லாம் கொடுக்க முடியாது.
அரசு ஊழியராக இருந்த கெஜ்ரிவாலுக்கு இது நிச்சயம் தெரியும்.
அப்படி இருந்தும் இத்தகைய அறிவிப்புகள் செய்யப்படுவதன்
உண்மையான காரணமென்ன ..?
8) மற்ற விஷயங்களில் இருந்த வெளிப்படைத்தன்மை –
அமைச்சர்களின் தேர்வில் இல்லை.
அமைச்சர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்கிற விவரம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இதில் மட்டும், மக்களைக் கலந்து ஆலோசிக்கும் எண்ணத்தைக் காணோம்.
“பின்னி” என்கிற சட்டமன்ற உறுப்பினர், தனக்கு அமைச்சர் பதவி
கொடுக்கப்படவில்லை என்பதால், கோபத்துடன் ஆலோசனைக்கூட்டத்தை விட்டு வெளியேறியதாகவும்,
அவரை மடக்கிய செய்தியாளர்களிடம், மறுநாள் காலை இது குறித்து சில ரகசியங்களை வெளியிடுவதாகச் சொன்னதாகவும் முதலில் செய்தி வந்தது.
பின்னர் – பின்னியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து
முக்கிய தலைவர்களான யோகேந்திர யாதவும், குமார் கௌரவும்—-
“பின்னி”க்கு சபாநாயகர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுத்து
சமாதானப்படுத்தியதாகவும் செய்திகள் வந்தன. மறுநாள் செய்தியாளர்கள்
“பின்னி”யிடம் இதுகுறித்து கேட்டதற்கு, தனக்கும் கட்சிக்கும் பிரச்சினை
ஏதும் இல்லை என்றும்,
அந்த தலைவர்கள் முதல் நாளிரவு “பாயசம்-விருந்து ” சாப்பிடவே தன் வீட்டுக்கு வந்ததாகவும் “பின்னி’ கூறி இருக்கிறார்….!
நடந்தவை, நடப்பவை எல்லாவற்றையும் சேர்த்து யோசித்துப் பார்த்தால் –
ஒரு விஷயம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
அர்விந்த் கெஜ்ரிவால் – புத்திசாலி – அதிபுத்திசாலி, மகா சாமர்த்தியசாலி –
இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கெஜ்ரிவாலின் தொலைக்காட்சி பேட்டிகளிலிருந்து இன்னொறு விஷயமும் உறுதியாகிறது –
கெஜ்ரிவால் ஒரு மிகச் சிறந்த ஒரு நடிகர்…..!
ஆனால் –
அவர் புத்திசாலி மட்டும் தானா ?
நல்லவர் என்று சொல்லலாமா ?
அல்லது இப்போதிருக்கும் அரசியல்வாதிகளை விட
மிகவும் கெட்டிக்காரர் என்று மட்டும் தான் வகைப்படுத்த முடியுமா .. ?
தெரியவில்லை …! இன்னும் கொஞ்ச நாட்கள் போக வேண்டும்.
அது – 6 மாதமாகவும் இருக்கலாம் – 6 வருடங்களாகவும் இருக்கலாம் …!



யார் ஒருவரையும் எடுத்த எடுப்பிலேயே தீர்மானிக்க முடியாது. ஆட்சி அதிகாரம் என்பது ஒரு சிலரின் கையில் கிடைத்தால், ஒரு சிலர் என்ன பெரும்பான்மையினோர், கண்மூடித்தனமாக துஷ்பிரயோகம் செய்வார்கள். கெஜ்ரிவால் அதிகாரம் படைத்த அதிகாரி பணியினை துறந்து வந்திருக்கின்றார். பொறுத்திருந்து பார்ப்போம்.
அரவிந்த் எப்படிப்பட்டவர், அவரது ஆட்சி எத்தகையானது, அவர் செயலாற்றுவதற்கு அரசியல் அமைப்பு சட்டம் எந்த வகையில் உறுதுணையாக /தடைக்கல்லாக இருக்கும் என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும். முன்முடிவுகள் / கணிப்புகள் தேவையற்றவையெனக் கருதுகிறேன். ஆறு மாதங்களாவது அவகாசமளிப்போம்.
காங், பாஜ ரெண்டு கழுதைகளுக்கு மாற்றாகத் தான் இதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் டெல்லி மக்கள் என்றே இதை நான் அணுகுகிறேன். ஆம் ஆத்மியால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்று கருத மாட்டார்கள் என நினைக்கிறேன். வெயிலின் கொடுமையில் இருந்து சற்றே இளைப்பாற ஒரு பனைமர நிழலாவது கிடைத்ததே என்பதே அவர்களது நினைப்பாக இருக்கலாம்.
அடுத்து.. Mob democracy என்பது Demo-Crazy ஆகவே முடியும் என்பது சரிதான். ஆனால் தற்போதைய முறைமை Representative democracy அல்ல என்பதை பதிவு செய்கிறேன். கழுதைகளை குதிரைகள் என்று சொன்னால் ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது!!
காங்கிரசிற்கு அறுபது ஆண்டுகள் கொடுப்போம் இன்னமும் கொடுப்போம்..ஆனால் ஆம் ஆத்மிக்கு ஆறு மாதம் கூட கொடுக்க மாட்டோம்.வாழ்க இந்திய ஜனநாயகம்.
காங்கிரஸ் ஆதரவு தரத் தயார் என்று சொல்லி ஆனால் அதை அரவிந்த் ஏற்க மறுத்தவுடன், பிஜேபி ஆம் ஆத்மிக்கு ஆட்சியமைக்க பயம் என்று சொன்னது. காங்கிரஸ் ஆதரவை ஏற்க வேண்டியதுதானே.. என்ன பயம் எனக் கேட்டது. தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க முற்படும்போது எதிராளியுடன் கூட்டா என்கிறது பிஜெபி. இத்தனைக்கும் அரவிந்த் ஆதரவே கேட்கவில்லை. தற்போதும் தனது எம் எல் ஏக்களின் எண்ணிக்கையை நம்பியே அவர் களமிறங்குகிறார். பேரவையில் ஏதேனும் ஒரு சட்டம் பெரும்பான்மையின்றி நிறைவேறாமல் போனால் அதற்கு அவர் பொறுப்பாக முடியாது. அதற்கு பிற கட்சிகளும், இந்த அரசியல் அமைப்பு சட்டமும்தான் காரணம். ஆகவே பிஜெபியின் இந்தப் பேச்சு முற்றிலும் ஆண்மையற்றது. இந்தப் பொழப்புக்கு அவர்கள் வேறு தொழில் செய்துவிட்டுப் போகலாம்.
Let me know one thing. Why didn’t AAP contact a SMS contest for the support of BJP which has the highest mandate? If they are really having faith in democracy, they should have asked the people, so you want AAP to support BJP, than asking do you want AAP to come to power. No media, so called intellects who wanted t give AAP a chance for governance, answer the question “IS AAP POWER HUGNRY?”
பிஜெபி – 33; காங்கிரஸ் – 8; ஆம் ஆத்மி – 28; மற்றவை – பிற;
கவனிக்கவும். இவை வெறும் நம்பர்கள். இவை எந்த வகையிலும் மக்களை “பிரதிநிதித்துவம்” செய்யவில்லை. ஏன்.. பிஜெபிக்கு தில்லு இருந்தா காங்கிரஸ் ஆதரவோட ஆட்சியமைக்கட்டுமே? யார் வேணாம் என்கிறார்கள்! கார்ப்பரேட் தொழில்களில் இருவருக்குமே கள்ளக்கூட்டும், நேரிடையான கூட்டும் இருப்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும். இருப்பினும் இந்திய ஜனநாயக முறைக்கு மாற்றான ஒன்றைக் கொணர அவர்களுக்குத் தெரியவில்லை. அதுவரை பிசாசுகளின் ராஜ்ஜியமே! ஆளட்டும்!
Very good analysis!! Still I think this gentleman will be far far better than Congress/BJP.
If referendum can be achieved by SMS polls and lifting hands, the election commission can do the same and can save enormous money, with which every house can get 7000 Litres of water and a storage tank to store it. Aravind should do this as the EC is in delhi (as he says he will bring reforms in delhi police, which is not under his jurisdiction) and if the ec disagrees, then he should order a probe against EC and should conduct a open trial in the ramleela grounds.
Friends, there should be some shame when you say something as a mandate.What these gentlemen are doing is far from that and i am not sure, how do you accept when he says he will bring a janlok pal, which suggest autonomy for CBI, being a CM of a state. He says he will ask the UPA government for 3700 crores to cut the power price by half. Asking money from the centre is not a states achievement, but the AAP claims that it is thier achievement. Building schools and hospitals when there is no land in NCR – strange to know people accepts this.
Can anyone in the respondents, say about a policy implementation method of AAP. Please dont give onliners. Framing congress or BJP is not an achievement. Governance is much more than setting up commission.(Not sure who will head these except prashant).
Any support to alternate party is always welcome. But please remember what they vow and how they speak in public.
There is nothing called as impossibility. AAP can do a lot and implement a lot. But when they say they will do it in 6 months, that shows their immaturity. India is not in a condition, where we give its rule to someone, who doesn’t have plans and vision. India, for that matter even Delhi, should be given to a administrator than to a person who is more miles distanced from reality.
Humbleness cannot be a route to become a leader.We need an administrator and not a leader who says, i dont have a magical wand to do things 2 days before he sworn in
DECIDING THROUGH STREET CORNER MEETINGS AND SMS IS A BOGUS AND ABSURD STEP. WILL WE ACCEPT, IF CONGRESS DOES THIS AND CLAIMS THEY CAN FORM THE GOVT? AS A READER POINTED OUT, WHY KEJRI DID NOT ASK THE SAME ABOUT BJP FORMING GOVT? KEJRIVAL IS INTELLIGENT (FROM IIT), STREET SMART AND CLEVER POLITICIAN ALSO.
IF THERE IS ANY WAY TO REDUCE POWER TARIFF AND GIVE FREE WATER, DEFINITELY SHIELA DIXIT ALSO WOULD HAVE DONE IT.
THERE IS NO DIFFERENCE BETWEE ANNA’S THREE MEASURES RICE FOR ONE RUPEE AND KEJRIVAL’S SCHEME. (KARUNA’S THREE ACRES OF LAND ALSO)
MANMOHAN SINGH ALSO PROMISED THAT HE WOULD BRING BACK BLACK MONEY WITHIN 100 DAYS. KEJRIVAL KNOWS THE VALUE OF ELECTION PROMISES.
MY DOUBT IS, THAT CONGRESS LOST IT’S HOPE ON RAHUL AND THEY WANT TO USE KEJRI TO FACE MODI AND GET THE POWER BACK IN CENRE.
AAP சிறுபான்மை (minority ) கட்சியாக இருப்பதால் கட்சியின் வரலாற்று போக்கை மாற்ற போகும் முடிவுகள் குறித்து (ஆட்சி அமைப்பது பற்றி) மக்களின் கருத்தை கேட்டதில் தவறில்லை என்றே என்ன தோன்றுகிறது. தெருமுனையில் கையை தூக்குவது முதல் 5 லட்சம் SMS வரை பரிசீலிக்கப்படதாக செய்திகள் கூறுகின்றன. அதே நேரம் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் (petty issues ) இந் நடைமுறையை பின்பற்றும் அளவுக்கு அவர்கள் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள் என்றும் தோன்றுகிறது.
1956 மே மாதம் கட்சி மாநாட்டில்,அங்காங்கே வைக்கப்படிருந்த ஒட்டு பெட்டியில் போடப்பட்ட மக்கள் வாக்குகளின் அடியப்படையிலேயே திமுக தேர்தலில் போட்டி இடும் முடிவு எடுக்க பட்டதாக படித்ததாக ஞாபகம்.
ஆக இது ஒன்றும் முதல் முறை அல்ல!
நான் கருதுவது –
அர்விந்த் கெஜ்ரிவால் – ஒரு உண்மையான அதாவது உண்மையாகவே
சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் –
அரசியலில் இறங்கி இருந்தால் –
அவரது அணுகுமுறையில் இருக்கும் சில குறைபாடுகளை ஒதுக்கி விட்டு,
அவருக்கு ஆதரவு கொடுப்பது நம் கடமை. அவரது அணுகுமுறையில்
இருக்கும் குறைபாடுகளை அவரே அனுபவபூர்வமாக உணர்ந்து –
அதிலிருந்து வெளிவரக் கூடும்.
அதல்லாமல், அவரும் மற்ற அரசியல்வாதிகளைப்போல் தான்,
ஆனால் அவர்களை விட புத்திசாலி மட்டுமே என்றால் –
அந்த உண்மை விரைவில் வெளிப்பட்டு விடும்.
எனவே, அவருக்கு -அதற்கான கால அவகாசத்தை அளித்து
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாஜக வினர் அவர் மீது எரிச்சல் காட்டத்தேவை இல்லை. அவர்களும்,
பொது வாழ்வில் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்தால் –
அர்விந்த் அவர்களுக்கு போட்டியாக மாட்டார். காங்கிரஸ் காலியாவதன்
மூலம் உருவாகும் வெற்றிடத்தை ஆம் ஆத்மி கட்சி நிரப்பட்டுமே…!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
காவிரிமைந்தன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நனறி கண்பத்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Yes, governance is a different cup of tea. Arvind should promise what he can do, not what he wishes to do (‘under promise, over deliver’ – not vice versa). He has to learn the ropes. The media must give him sufficient time before criticizing him. As of now, his sincerity cannot be doubted. In fact, Rahul and Modi, it seems, have now understood the anger and pulse of the people through AAP’s stunning victory. And possibly, the two entrenched parties would try to ape Arvind’s tactics. If AAP’s entry into politics could change the mindset of Congress and BJP, at least partly, that could be a game changer for Indian democracy. I still opine that AAP augurs well for India – at least, let us hope so. So far, our hopes on the old political parties in India have all dashed and they have proved time and again that they cannot give a corrupt free administration.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
வாழ்க நலமுடன், வளமுடன்!
‘ஆம் ஆத்மி’ ஆளுகள பார்த்தா ‘கோ’ படம் ஞாபகம் வர்றத தவிர்க்க முடியல…!
நீங்கள் சொல்வது உண்மை தான் சிவா.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்