தேர்தல் நேரங்களில் வரும் ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு
எப்போதுமே தனி மவுசு தான். சம்பந்தப்பட்ட மதத்தலைவர்களை
ஆளாளுக்கு ஒவ்வொரு கட்சியும் பங்கு போட்டுக் கொண்டு,
தங்கள் பக்கம் இழுப்பதைப் பார்க்க தமாஷாகத்தான் இருக்கிறது.
சிலர் பலியாடுகளைப் போல பரிதாபமாக வேறு வழியின்றி பங்கு
கொள்வது இன்னும் தமாஷ்.
இப்போது கிறிஸ்துமஸ் சீசன். புதன் கிழமைக்குள் எல்லா கட்சிகளும்
தங்கள் கிறிஸ்துமஸ் ஷோ வை முடித்தாக வேண்டும்.
ஆளும் அதிமுக ஏற்கெனவே முடித்து விட்டது. அதன் மூலமாக இரண்டு
கம்யூனிஸ்ட் கட்சிகளும் – தாங்கள் இன்னும் அதே கூட்டணியில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள உதவியது குறித்து பெருமகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
வழக்கமாக திமுக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்,
திமுக ஆதரவாளரான பேராயர் எஸ்ரா சற்குணம்,
விஜய்காந்தின் பார்ட்டியில் கலந்து கொள்கிறார் என்று அறிந்தவுடன்,
சிறிது வியப்பாகத்தான் இருந்தது.
ஆனால் விழா முடிந்ததும் விஷயம் தெளிந்து விட்டது.
ஃபாதர் எவ்வளவு அழகாக கிறிஸ்துமஸ் செய்தி தருகிறார் பாருங்கள் ..!
எஸ்ரா அவர்களின் பேச்சிலிருந்து ஒரு பகுதி –
“கடந்த ஆண்டை விட இப்போது நடக்கும் இப்போது நடக்கும் விழாவில்
கூட்டம் அதிகமாக இருக்கிறது. இங்கிருந்து பலர் ஓடுகிறார்கள்
ஓடட்டும். டாக்டர்கள் அறிவுரை சொன்னதாகக் கூறி, ஓய்வெடுக்க
போனவர்களும் உண்டு (பண்ருட்டி ..?). களை போவதால் யாரும்
கவலைப்பட வேண்டாம். களை எடுத்தால்
தான் பயிர் நன்றாக வளரும் !
கேப்டனுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் –
ஒரு விமானத்தில் 2 கேப்டன் கள் இருப்பார்கள். ஒருவருக்கு
எதாவது என்றால் (?) – இன்னொருவர் காப்பாற்றுவார் …!
அதனால் நீங்கள் இன்னும் ஒரு கேப்டனையும் வைத்துக் கொள்ளலாம்.
நல்லவர்கள் ஒருங்கிணைந்து, செயல்பட வேண்டும்.
தேமுதிக – தேர்தலின்போது, பாஜக வுடன் கூட்டணி சேரக்கூடாது.
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ள கூட்டணியுடன் தான்
சேர வேண்டும்.
விஜய்காந்த் சினிமாவில் பலமுறை திருமணக்காட்சிகளில் நடித்திருக்கிறார். அதை எல்லாம் இன்னும் நினைத்துக் கொண்டேயா இருக்கிறார் (!) –
அதெல்லாம் நிஜம் இல்லை. அது போலவே –
(கலைஞருடனான …?) கடந்து போன
சம்பவங்களையும் அவர் மறந்து விட வேண்டும்.
விஜய்காந்த் வெள்ளை மனம் படைத்தவர் (இந்த வார்த்தைகூட கலைஞர்
சென்ற வாரம் விஜய்காந்த் குறித்து சொன்னது ..!) “
இப்படியாக ………
கலைஞர் சொல்லியனுப்பியதை பேராயர் கச்சிதமாகச் சொல்லி விட்டார்.
ஆனால் விஜய்காந்த் …..?
அதே விழாவில் இதற்கு பதிலும் கூறி விட்டார் விஜய்காந்த் –
“பேராயர் எஸ்ரா சற்குணம் கூட்டணி குறித்து பேசினார்.
அது குறித்து யோசித்து பிறகு முடிவு செய்கிறேன்”
ஆளாளுக்கு கையைப் பிடித்து இழுத்தால் –
இருப்பதோ இரண்டு கைகள் –
இழுப்பதோ – 3 பேர் – மூன்று திசைகளில்…!
ஒரு பக்கம் கலைஞர் –
இன்னொரு பக்கம் காங்கிரஸ் – ( வாசன், இளங்கோவன், ப.சி. எல்லாருமே இது விஷயத்தில் ஒன்று சேர்ந்து அழைக்கிறார்கள் !)
மூன்றாவது பக்கம் – பாஜக –
(ஞானதேசிகன் படத்தை இப்போதும் போடா விட்டால் வேறு எப்போது தான் போடுவது …!!)
பாவம் என்ன செய்வார் விஜய்காந்த் …?
.




[…] […]