ஒரு நகைச்சுவை இடுகையோடு முடித்துக்கொண்டு, மேலே போகலாம் என்று பார்த்தால், வரிசையாக ஒவ்வொருவராக “ஜோக்” அடித்துக் கொண்டே போகிறார்கள்.
சரி – கொஞ்சம் நின்று ரசித்து விட்டுதான் போகலாமே !
நான் வெறுமனே கிடைத்த தகவலை அடுக்கிக்கொடுத்திருக்கிறேன் –
இதில் யார் “ஜோக்” சிறந்தது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..!
முதலில் திருமதி குஷ்பூ சுந்தர் –
பொதுக்குழு தீர்மானங்களை விளக்க நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்
நேற்று முன் தினம் பேசுகிறார் –
“கலைஞர் கருணாநிதியை தேடி பிரதமர் ஆகும் வாய்ப்பு பல முறை வந்தது. ஆனால் அவர் தமிழர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்தே அந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்தார்.
கலைஞர் கருணாநிதி தான் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தலைவர் .
அட்டப்பாடி தமிழர்கள் பிரச்சனை முதல் ஈழம், சிங்கப்பூர் தமிழர்கள்
பிரச்சனை வரை அனைத்திற்கும் முதலில் குரல் கொடுத்தவர் அவர் தான்.”
அடுத்து திருமதி ஜெயந்தி நடராஜன் –
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு
செய்தியாளரிடையே காரணம் கூறுகிறார் –
” காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், தீவிரமாக கட்சிப் பணியாற்றவுமே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்”.
(தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே – ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், பீட்டர் அல்போன்ஸ் போன்ற பல தலைவர்கள் “வேலை இல்லா” பட்டதாரிகளாக அலைகிறார்கள்.
திருமதி ஜெயந்தி யாரென்றே பல காங்கிரஸ்காரர்களுக்கு தெரியாது.
இவர் வந்து தமிழ்நாட்டில் தீவிரமாக பணியாற்றி
கட்சியை பலப்படுத்தப் போகிறாராம்..! )
ஆனால் -இந்த ஜோக்கை உணர்ந்து ரசிக்க வேண்டுமானால்,
இதன் முழு பின்னணி கதை தெரிய வேண்டும்.
டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் இது குறித்து கூறப்படுவது –
மதுராந்தகத்தில் ….யத்திரி தேவி என்று ஒரு டாக்டர். அவருக்கு டாக்டர்
தொழிலை விட, அரசியலில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தோன்றியதன் விளைவு, தொண்டர் பலம் இல்லாமல் இருந்த திருமதி ஜெயந்தி நடராஜனுடன் சில வருடங்களாக துணைக்கு இருக்கிறார். வருடா வருடம் திருமதி ஜெயந்தியின் பிறந்த நாளன்று இவர் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து செய்தித் தாள்களில்,போஸ்டர்களில் – விளம்பரம் கொடுப்பார் – கவனித்திருக்கலாம்.
டாக்டருக்கு படித்த இவரை – தான் மத்திய அமைச்சரானதும் தன் செயலாளராக நியமித்துக் கொண்டார் திருமதி ஜெயந்தி. (சம்பளம் மத்திய அரசு கொடுக்கும் !)
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவையில் – இந்தியா முழுவதும்
பல மாநிலங்களிலிருந்து, புதிதாகத் திறக்க உத்தேசித்திருக்கும்
தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி நிறைய
விண்ணப்பங்கள் வந்து காத்திருக்கும்.
சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக கொடுக்காமல், கிடப்பில் போட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள்/தொழிலதிபர்கள் வந்து பின்னால் அலைவார்கள்.
டாக்டரின் தம்பி என்று ஒருவர். அவர் “பேரம்” பேசி, “எல்லாம்” முடிந்த பிறகு டாக்டர் க்ளியரன்ஸ் கொடுத்த பிறகு தான் அமைச்சரவையிலிருந்து அனுமதி கிடைக்குமாம் !
கடந்த வெள்ளியன்று, FICCI meeting -ல் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் முன், விழாவில் நல்ல சூழ்நிலையை உருவாக்க, அவர்களது முக்கிய பிரச்சினைகளைப் பற்றி ஒரு review செய்திருக்கிறார். சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காமல் பல projects காத்திருப்பதும் அது குறித்து தொழிலதிபர்களிடையே பெருத்த அதிருப்தி
நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது. இப்போதைய அமைச்சரிடம் கேட்டால் இதற்கு உண்மையான விளக்கம் கிடைக்காது என்று, இதற்கு முன் சுற்றுச்சூழல் அமைச்சரவையை கவனித்து வந்தவரும், ராகுலுக்கு மிகவும் நம்பிக்கையானவருமான ஜெயராம் ரமேஷிடம் இது குறித்து விசாரித்திருக்கிறார் ராகுல்.
ஜெயராம் ரமேஷ், அமைச்சகத்தில் தனக்கு முன்பே பழக்கமான அதிகாரிகளின் மூலம் விசாரித்து, உண்மை நிலையை ராகுலுக்கு விளக்கி இருக்கிறார். கோபம் கொண்ட
ராகுல் காந்தி, உடனடியாக திருமதி ஜெயந்தியை அழைத்து பதவியை விட்டு விலகச் சொல்லி இருக்கிறார். ராகுல், தான் FICCI meeting-ல் கலந்து கொள்வதற்கு முன்னதாக திருமதி ஜெயந்தியின் ராஜினாமா செய்தி வெளியிடப்பட்டாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்..
இந்த நிலையில் -திருமதி சோனியா காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்தும், அவர் சந்திக்க மறுத்து விட்ட நிலையில் தான் இந்த அம்மா ராஜினாமா செய்திருக்கிறார். இது தான் சுற்றுப்புற சூழல் அமைச்சர் “தீவிரமாக கட்சிப்பணி ஆற்ற வந்த” கதை …!
ஒரு “கொசுறு” ஜோக் –
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த மகளிர் காங்கிரஸ் தலைவி – கிரிஜா வியாஸ்
என்னும் பெண்மணி. காங்கிரஸை கட்டாய ஆதரவு கொடுக்க வைத்து,
பின்னர் அவர்களையே ஜெயிலுக்கு அனுப்பப்போவதாகக் கூறிக்கொண்டு இன்று டெல்லி முதலமைச்சராக பதவியேற்க
இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இவர் ஒரு சாபம் விட்டிருக்கிறார்…!
அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு “ஆண் ஆதிக்கவாதி” – தன் கட்சிக்கு அவர்
” ஆம் ஆத்மி பார்ட்டி ” என்று எப்படி பெயர் வைக்கலாம் ? பெண்களை ஒதுக்கி வைக்கும் இவர் கட்சியை பெண்கள் ஆதரிக்க மாட்டார்கள் !
(இந்தியில் “ஆம்” என்றால் “சாதாரண” –
“ஆத்மி” என்றால் “ஆண்” என்றோ “மனிதன்”
என்றோ அர்த்தம் கொள்ளலாம்….!!! )




ஆம் ஆத்மி பார்ட்டி என்பதன் உண்மையான அர்த்தம் ஆமாஞ்சாமி கட்சியா இல்லை “மாங்கா” மக்கா கட்சியா (आम = ஆம் = மாங்காய்) அல்லது பொது மக்கள் கட்சியா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
குஷ்பு சொன்னது எவ்வளவு சரியென்று டமில் வாட்ச்மேனுக்கு நன்கு விளங்கியிருக்கும். அவர் பிரதமர் ஆகியிருந்தால் தமிழர்களின் எதிர்காலமே பாழாகிபோயிருக்கும்.
ஜெயந்தி கூறுவது போல பார்த்தால் இத்தனை நாட்களாக யாரும் கட்சிக்காக வேலை செய்யவில்லையா? அப்போ ராகுல் காந்தி இத்தனை நாட்களாக செய்துகொண்டிருந்தது எல்லாம் சும்மா டூப்பா?
2014 கடைசி மாதத்தில் பட்டாசு கௌப்புறீங்களே? பேத்திங்க சந்தோஷமாக வைத்திருப்பாங்க போல. அவங்களுக்குத்தான் என் முதல் நன்றி. அப்புறம் இந்த ஜெயந்தி மேட்டர் இப்படி ஒன்னு இருந்துச்சு இப்பத்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது. பல பத்திரிக்கைகள் படிச்சாலும் நீங்க எழுதுற சமாச்சாரம் புதுசு கண்ணா புதுசு ரகமாத்தான் இருங்குங்கோ. இன்னும் கொஞ்ச நாள்ல தெகஹல்கா மாதிரி காவேரிஹா இணைய தளம் உருவாகிடுமோன்னு பயமாயிருக்கு. இந்தியா முழுக்க பிரபல்யம் ஆக வாழ்த்துகள்.
ஜோதிஜி,
உங்கள் அன்புக்கும், நல்ல வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.
நான் எழுத ஆரம்பித்தது ரொம்ப லேட்டாக….!
எனவே என் எழுத்தின் – உயரம் மட்டுமல்ல – ஆயுளும் கூட
ரொம்ப கம்மி தான்.
உள்ளத்தில் இருக்கிற வலிவு, உடலில் இல்லை.
உடலிலும் வலிவிருந்தால் – இன்னும் வீரியத்துடன் செயலில்
இறங்கலாம். அது இயலாத நிலையில் –
இருக்கிற வரைக்கும் –
மனசாட்சி சொல்வதை செய்யலாம் என்று தான் எழுதுகிறேன்.
உண்மைக்கு மாறான எதையும் நிச்சயம் எழுத மாட்டேன்.
என் எதிர்பார்ப்புகள் மிகக் கொஞ்சம் தான்.
கடவுள் அதை கடைசி வரை கொடுத்தால் போதும்…!
உங்களைப் போன்ற நண்பர்களின் வாழ்த்துக்கள் தான்
எனக்கு டானிக்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மா மஹிலா பார்ட்டி MMP ஆரmபிக்கவேண்டியதுதான் போலிருக்கு.
பகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் இந்த BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும்.
kgopaalan@blogspot.com
after reading your blog, my mind immediately remembered the news that was reported in ndtv…
when jayanthi resigned, that morning, I switched on the tv, barkha dutt from ndtv was reporting this news from delhi… she spoke non-stop and continuously without even taking breath for almost 10 to 12 minutes reporting that it is a congress strategy, designed by Rahul Gandhi to manage 2014 elections and there are more ministers going to resign and congress has started working strategy… strategy, party work, Rahul… she repeated the same sentence atleast 10 times… these days, that’s how the news is getting reported…
for a second, I thought, may be congress has really made some strategy to manage 2014 elections and Rahul is really taking leadership role… now it looks like, how mad I am to believe the news reported by ndtv
Yes Srini, it is true.
No tv tells the whole truth…!
some tell half truth..balance by stories…
some tell half truth and half lies
Nowadays everything is buyable.
the tvs, anchors, …. politicians !
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு ”
-திருவள்ளுவர் 2000 ஆண்டுகள் முன்னரே, இத்தகைய
மனிதரைப் படித்து வைத்திருக்கிறார் …!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
//Nowadays everything is buyable.
the tvs, anchors, …. politicians !//
Why did you leave the Voters Kaa.mai ji?
Thank you Kaa.Mai for this good write up.
Many Indians came to know that there was a minister by name Jayanthi Natarajan only when the news of her resignation broke out.!! Good Bye madam and see you back in June 2019 as our Cultural Minister.
Did you read the story on Modi talking about ” Jayanthi Tax”….. when I heared it, immediately I remembered you sir…
நன்றி ஸ்ரீநி.
கட்சிப்பணிகளுக்காக அமைச்சர் பதவியை
துறப்பதாகக் கூறிய திருமதி ஜெயந்திக்கு
இன்று வரை எந்த கட்சிப்பணியும்
கொடுக்கப்படவில்லை என்பதே,
அவர் வெளியேறவில்லை –
ஊழல் காரணமாக
வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பதை
உறுதிப்படுத்துகிறது அல்லவா ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இன்னும், கொஞ்சம் தகவல் கிடைத்தது.
பதவியை விட்டதும் – முதலில்”அன்னை”யையும்,
பிறகு “பிள்ளை”யையும் சந்திக்க வாய்ப்பு
கேட்டாராம் – கொடுக்கப்படவில்லையாம்..!
பின்னர் லண்டன் சென்று, அங்குள்ள தன்
மகனுடன் 2 வாரங்களை ஓய்வில் கழித்து விட்டு
நாடு திரும்பி இருக்கிறாராம்.
வரும் 16-17 தேதிகளில் காங்கிரஸ் காரிய கமிட்டி
கூட்டம் இருப்பதால் “பெரியவர்களின்” தரிசனம்
கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.
இதற்குள் மோடி பிரச்சினையை கிளப்பி விட்டதால்,
அதற்காகவே இவருக்கு எதாவது புதிய பொறுப்பு
கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்