திரு.உ.சகாயம்,IAS, அரசியலுக்கு வருவார்..!
எப்போது …?
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட திருப்தி, சனியன்று கிடைத்தது.
சுமார் ஒன்றே கால் மணி நேரம், இனிமையான,
அருமையான தமிழில், ஒரு மெல்லிய அருவியில்
ஆசைதீர திருப்தியாகக் குளித்த ஒரு சந்தோஷம்.
கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாகவே அவரைப் பற்றி
வரும் வித்தியாசமான செய்திகளை நாம் கவனித்துக்
கொண்டிருக்கிறோம்.திரு.சகாயம் அவர்களைத் தான்
சொல்கிறேன். இதற்கு முன்னதாக சகாயம் அவர்களை
நேரிலும் தூரத்திலிருந்து சில நிமிடங்களுக்குப்
பார்த்திருக்கிறேன். ஆனால், இவ்வளவு அருகிலிருந்து,
இவ்வளவு நேரம் கவனித்ததில்லை. அவர் தோற்றத்தையும்,
நடை, உடை, பாவனைகளையும் வைத்து – அவரைப்பற்றி
எடை போடுபவர்கள் ஏமாந்து போவார்கள்.
சகாயம் அவர்களைப் பற்றி நான் அறிமுகம் ஏதும் செய்து
வைக்க வேண்டியதில்லை.
நேர்மையான, துணிச்சலான, புத்திசாலியான,
வெளிப்படையான ஒரு தமிழக அரசு அதிகாரி.
“லஞ்சம் தவிர் – நெஞ்சம் நிமிர் ”
என்கிற சொல் இவரது அடையாளம்.
இவரது அனுபவம் – 21 ஆண்டுகள் அரசுப் பணியும்,
21 பணியிட மாற்றல்களும்.
அண்மையப் புகழ் – 15,000 – 20,000 கோடி ரூபாய்
அளவிற்கு மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கிரானைட் ஊழல்
கண்டுபிடிப்புகள்.
————-
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின்
“மக்கள் சக்தி இயக்கத்தின்” மூலம் ஈர்க்கப்பட்டு,
சமூகப்பணியாற்றி வந்த சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து
“சட்டப் பஞ்சாயத்து இயக்கம்” என்கிற அமைப்பு
ஒன்றினை துவக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின்
முக்கிய குறிக்கோள் –
-ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சி குறித்த விழிப்புணர்வை
சாதாரண மக்களிடையே ஏற்படுத்துதல்,
–தங்கள் சமூகக் கடமைகளை உணர்ந்து செயலாற்றிடவும்,
உரிமைகளை உரத்த குரலில் கேட்டிடவும், பொதுமக்களை
தயார்படுத்துதல்,
-முதல் படியாக, லஞ்ச ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு
பணிகளில் ஈடுபடுதல்.
– லஞ்சம், மது ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு
சட்டபூர்வமாக பிரச்சினையைத் தீர்க்க உதவி புரிவதற்காக
இந்த இயக்கத்தின் சார்பிலான தொலைபேசி அழைப்பு மையம்
(call centre ) ஒன்றினைத் துவக்கி வைக்கும் நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றினார் திரு. சகாயம்.
(சேவை மைய எண் -7667-100-100 )
—————
நல்ல தமிழ். உணர்வுபூர்வமான உரையாடல்.
உண்மையைப் பேசுகிறார் என்கிற உணர்வினைத் தருகிற
உடல்மொழி (body language).
தன் உள்ளத்தில் இருப்பதை, மிகத் தெளிவாக,
அழகிய தமிழில், கேட்பவர்களை ஈர்க்கும் விதத்தில்
அவரால் பேச முடிகிறது !
தன் கடந்தகால அனுபவங்கள் சிலவற்றை விவரமாக
எடுத்து கூறினார்.
கள்ளச்சாராய பேர்வழிகளை மடக்கப் போய், அவர்களிடம்
லஞ்சம் வாங்கிய சில காவல் துறை அதிகாரிகள் இவர்
மேலேயே உதவியாளரை அடித்ததாக பொய்யாக
FIR போட்ட பின்னணி –
உலகப் புகழ் வாய்ந்த பன்னாட்டு நிறுவனமான பெப்ஸி
கம்பெனியின் மதுராந்தகத்தில் உள்ள தொழிற்சாலைக்கு
எட்டு பூட்டு போட்டு, சீல் வைத்த பின்னணி-
மதுரை மாவட்டத்தில் இருந்தபோது, நள்ளிரவு 12 மணிக்கு
சாராயக்கடை வாசலிலிருந்து, குடிகாரர் ஒருவர்
வயிறு முட்டக் குடித்தும் போதை வராத சரக்கைப் பற்றி
குறைகூறி கலெக்டருக்கு போன் செய்த கதை –
உதவிகேட்டு கலெக்டரை நாடிவந்த ஒரு மாற்றுத்
திறனாளிக்கு, அவர் அன்றே ஒரு மூன்று சக்கர வண்டியோடு
வீடு திரும்ப உதவ முடிந்த சம்பவம் –
மதுரை கிரானைட் விவகாரங்கள் பற்றி – ஒன்றும்
சொல்லவில்லை – வழக்கு நிலுவையில் இருப்பது
காரணமாக இருக்கலாம்.
முக்கியமான விஷயம் –
தப்பித்தவறிக் கூட அவர் அரசியலே பேசவில்லை…!
ஆனால் – மதுவைப் பற்றி, போதையைப் பற்றி,
அந்த வழக்கம் தமிழர்களை சீரழிப்பது பற்றி விவரமாகவே
பேசினார். மதுப்பழக்கத்திலிருந்து தமிழர்களை மீட்க
வேண்டியது எந்த அளவிற்கு அவசியம் என்பது குறித்து
விவரமாகவே பேசினார்.
தன் எல்லைகுட்பட்ட எந்த ஊர் போனாலும்,
அங்குள்ள அரசுப்பள்ளிக்கு தவறாமல் விஜயம் செய்வதை
வழக்கமாகக் கொண்டுள்ள சகாயம், அதற்கான காரணத்தை –
“நம் தமிழை இன்னமும் வாழ வைத்துக் கொண்டிருப்பது
அரசுப்பள்ளி மாணவர்கள் தான்” என்றார்.
அரசு அதிகாரிகளிடையே நிலவும் லஞ்ச ஊழல் வழக்கங்களை
பற்றி விவரமாகவே பேசினார். தான் ஒருவர் மட்டும்
நேர்மையாக இருந்தால் போதாது, அனைத்து அரசு
அலுவலர்களும் நேர்மையாக இருக்க வேண்டும்.தவறான
அரசு அலுவலர்கள் திருந்த வேண்டும் என்றும்
வலியுறுத்திப் பேசினார்.
அப்படித் திருந்த மறுப்பவர்களை, இத்தகைய சட்ட உதவி
மையங்களின் துணையோடு சிறைக்கு அனுப்ப தயங்கக்கூடாது
என்றும் கூறினார்.
21 ஆண்டுகளில் 21 பணிமாற்றல்கள் குறித்து கூறும்போது
இந்த விஷயத்தில், தனக்கு சீனியராக அகில இந்திய அளவில்
(ஹரியானா மாநில அரசு அதிகாரி ) கேம்கர் போல் நிறைய
பேர்கள் இருப்பதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டினார்.
இன்னும் நிறைய விஷயங்களை, வெளிப்படையாக
கூற முடியாத நிலையில் இப்போது தான் இருப்பதாகவும்,
எதிர்காலத்தில் அவற்றை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள்
உருவாகும் என்று நம்புவதாகவும் கூறினார்.
அரசு அதிகாரியாக இருந்து கொண்டு இத்தகைய ஒரு
இயக்கத்தை துவக்கி வைப்பதிலிருந்தும், அவரது
பேச்சிலிருந்தும் – அவரது உடல்மொழிகளிலிருந்தும்
தனக்கு சரியென்று தோன்றுவதை, எந்தவித அச்சமுமின்றி
செய்யத்துணிந்த ஒரு நல்ல மனிதர் என்பது நன்கு புரிகிறது.
திரு.சகாயம் போன்ற அபூர்வமான மனிதர்கள்
அரசின் ஒரு அங்கமாக இருந்தாலும் சரி –
அரசியலில், பொது வாழ்வில் இருந்தாலும் சரி –
மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்யக்கூடியவர்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு
எனக்குத் தோன்றுகிறது –
இவர் நிச்சயம் அரசியலுக்கு வருவாரென்று.
எப்போது ?
அதற்குண்டான சரியான நேரம், தேவை,
தகுந்த பின்னணி ஆகியவை உருவாகும்போது…







மாற்றுச் சிந்தனைகள் இங்கே மலர வேண்டிய காலமிது
அய்யா.. இதை ஏற்றுகொள்ள .. மாற்று பார்வையை.. ஏற்றுகொள்ள மக்கள் தயாராக இல்லை.
மக்கள் தயாராக இருந்தால் .. எல்லா பிரச்சனை எல்லாம் எப்போதோ தீர்க்கபட்டு இருக்கும்.
இங்கே மக்கள் என்று யாரும் இல்லை.. சாதி மத ஆர்வலர் மட்டுமெ இருக்கின்றனர்.
எனவே..அரசியலலுக்கு வந்தால்… சமரசம் செய்துகொள்ளாமல் போராட துவங்கினால் ..
இன்றய சூழ்நிலையில் இவர் சாதி மத ஆரவர்லர்களை மக்கள் ஆக்கும் பணியையே செய்யவேண்டி இருக்கும்.
அதற்கு ஊண் உடை, உடல் அனைத்தையும் இழக்கவேண்டி வந்தாலும் வரலாம்.. தலைவர்கள் பிழைப்புக்கு வரும் இடையூறை பொருத்துகொள்வார்களா? என்ன?
அதனால் இவர்ன் அரசியல் பயணம் என்பது நீண்ண்ண்ண்ண்ணடடடடது…
பணி ஓய்விற்கு பின் வந்தால்…. குடும்பத்தினருக்கு பிரச்சனை இல்லை..
vanthalum namathu makkalukku nallathu seyya mudiyathu. 90 satahvikitha makkal nallavarkalaga illai. nallavana vaala vidamattargal. en anubavam idthu. sorry to say this comment
@palanaiappan…
முதலில் மக்கள் மக்கள் ஆகட்டும்… நல்லவர் ஆவது ரொம்ப தூரத்தில் இருப்பது..
மக்கள் ஆகட்டும்.. தான் யார் என தெரியட்டும்..
சுய நலம் ஒழிய பொது நலம் என்றா ஒன்று தெரியட்டும்..
வாங்குவது தவிர்த்து கொடுப்பதிலும் இன்பம் உண்டு என்று அறியட்டும்.
தன்னை சுற்றி இருப்பதை பாதுகாப்பது தனது கடமை என அறியட்டும்..
தான் வாழ்ந்த பின்பும் தான் விட்டு சென்றதை காணும் பின் சந்திதி…
வாழ்ந்தவரை வணங்குவது போல் வாழ்வதே வாழ்வு…
காறித்துப்புவது போல் வாழ்வவது வாழ்வல்ல எனறு புரியட்டும்..
பின்னே நல்லவராக முடியும்.
இவர் ஓய்வுக்கு பின் அரசியலுக்கு வந்தால் இவர் குடும்பம் பிழைக்கும்..
இல்லையெல் .. ஒன்றும் சொல்ல இயலாது..
Time is not ripe for him to come to politics. He should continue in Govt. Top job and assist downtrodden and also try to Change mindset of corrupt Govt. Employees.
ஒரு கலெக்டருக்கும் பியூநுக்கும் ஒறே ஊதியம் கொடுக்கவேண்டும் ரெண்டுபேருமே சாப்பாடுதான் சாப்பிடறாங்க தண்ணீர்தான் குடிக்கிறார்கள் இதற்க்கு ஏன் சம்பலத்தில் வித்தியாசம் என்று சொன்னால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? அதை எப்போது மக்கள் ஏற்றுக்கொள்ளும் மன நிலை வருகிறதோ அன்றுதான் மக்கள் மக்களாக இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தனக்கு கீழான ஒரு ஆள் மேலே வர்க்கூடது தனக்கு மேலே உள்ளவனை மட்டும் முந்தவேண்டும் என்ற மன நிலை 100% மனிதர்களிடமும் உண்டு.
அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு காவிரி மைந்தன்.
Ayya
A man brought from Rameswaram became as a scientist and then later elevated as the first man in India (president) was possible because of his sincerity, purity , integerity, loyalty, etc. in our period. They why not Sahayam will become as stated in your comment. May God do like so for our India*s progress. By Advocate Ramasami Chelliah