தேஜ்பால்-ஷோமா ஜோடி யின் கருப்புப் பண
பரிமாற்ற மோசடிகள் ….
கற்பழிப்பு முயற்சியை விட்டு விடுவோம்.
இனி கோர்ட்டும்,
மீடியாவும் அதைப் பார்த்துக் கொள்ளும்.
-டெஹல்காவின் தருண் தேஜ்பாலும்,
அவரது பெண் கூட்டாளி ஷோமா சவுத்திரியும் சேர்ந்து
செய்துள்ள பண மோசடிகள் அவர்கள் கம்பெனியில் வேலை
செய்து,வெளியேறியுள்ள ஊழியர் ராம் கிர்பால் என்பவரால்
இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
படித்துப் பார்க்கவே அதிர்ச்சி தருகிறது இவர்களின்
ஊழலும் மோசடி வேலைகளும்.
லட்சிய புருஷராக, அரசியல் ஊழல்களை ஒழிக்க
வந்த ஆதர்ச பத்திரிக்கையாளராக –
பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக, சமுதாயத்தில்
மிகப்பெரிய ஹீரோவாகத் தெரிந்த தருண் தேஜ்பால்
என்கிற அயோக்கியனின் உண்மை உருவம் தெரிய
வரும்போது அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.
முதலில் கற்பழிப்பு முயற்சி பற்றிய செய்தி
வெளிவந்தபோது, பாவம், ஏதோ ஒரு கணநேர
சபலபுத்தியில் நிலைதடுமாறி விட்டார் என்று
நினைத்தவர்கள் பலர் உண்டு.
கீழே தரப்படும் செய்திகளின் உள்ளே போகும் முன்னர் –
ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் பதிய வைத்துக்
கொள்ள வேண்டி இருக்கிறது. அப்போது தான்
இதன் உண்மை ஆழம் (depth) புரிய வரும்.
2003-ல் துவக்கப்பட்ட டெஹல்கா நிறுவனம்,
வருமான வரியைப் பொறுத்த வரை,
தோன்றிய காலத்திலிருந்து –
தொடர்ந்து நஷ்டக்கணக்கையே காட்டி வருகிறது.
2011 நிதியாண்டில் 10 கோடி ரூபாய் நஷ்டம்.
2012 நிதியாண்டில் 17 கோடி ரூபாய் நஷ்டம்.
(இதற்கு முந்தைய வருடங்களுக்கான விவரங்கள்
உடனடியாகக் கிடைக்கவில்லை)
இவை அனைத்தும் முற்றிலும்
ஆதார பூர்வமாக வெளிவந்துள்ள உண்மைகள்.
கம்பெனி தொடர்ந்து நஷ்டக்கணக்கு காட்டினாலும்,
தனிப்பட்ட முறையில் இவர்கள் இருவரும்
கோடிக்கணக்கில் பணம் பண்ணி இருக்கிறார்கள்.
இதே கம்பெனியின், மற்ற பங்குதாரர்கள்
வைத்திருக்கும் பங்குகளின் விலையில் எந்தவித
மாற்றமும் இல்லாதபோது-
நஷ்டத்தில் ஓடும் கம்பெனியின்
பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு ஷேரை இவர்கள்
இருவரும் மட்டும் என்ன விலைக்கு விற்றிருக்கிறார்கள்
என்கிற விவரங்கள் கீழே –
ஷோமா சவுத்திரிக்கு டெஹல்கா கம்பெனியிலிருந்து
(அனந்த் மீடியா )2003 ஆம் ஆண்டு
1500 ஷேர்கள் ஒரு ஷேர் 10 ரூபாய் என்கிற
விகிதத்தில் ஒதுக்கப்படுகின்றன. ஆக மொத்த
பங்குகளின் மதிப்பு 15,000 ரூபாய் (மட்டுமே).
2006 ஜூன் மாதத்தில் – ஷோமா தன் பங்கு
ஷேர்களிலிருந்து 500 பங்குகளை(10 ரூபாய் பங்கு)
ஒரு பங்கு 13,189 ரூபாய் என்கிற விலைக்கு
AK Gurtu Holdings Private Ltd க்கு
விற்கிறார்.(லாபம் 66 லட்சம்)
அதே சமயம் தருண் தேஜ்பாலின் மனைவி கீதன் பாத்ரா
பெயரிலுள்ள 2000 ஷேர்கள்(அதே 10 ரூபாய் ஷேர்)
ஒரு ஷேர் 13,189 என்கிற விலையில் சுமார் 2.64
கோடிக்கு (ஆமாம் கோடிகள் தான் !)அதே கம்பெனிக்கு
விற்கப்படுகின்றன.
தேஜ்பாலின் சகோதரர் மிண்டி குன்வர் பெயரிலுள்ள
1500 ஷேர்கள் அதே குர்து கம்பெனிக்கு,
அதே நாளில் 2 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
தேஜ்பாலின் தந்தை இந்தர்ஜித் தேஜ்பாலின்
1000 ஷேர்கள்
அதே கம்பெனிக்கு 1.32 கோடிக்கு –
தேஜ்பாலின் தாய் சகுந்தலாவின் 1000 ஷேர்கள்
அதே நாள், அதே கம்பெனிக்கு 1.32 கோடிக்கு –
தேஜ்பாலின் சகோதரி நீனா ஷர்மாவின் 432 ஷேர்கள்
57 லட்சத்துக்கு,அதே கம்பெனிக்கு -விற்கப்படுகின்றன.
தேஜ்பால் தன் பங்குகள் எதையும் விற்கவில்லை.
ஆனால் அதே நாளில் (14 ஜூன் 2006 ),
ஒரு ஷேர் 10 ரூபாய் என்கிற விலைக்கு
4125 ஷேர்களை இரண்டு வெவ்வெறு நபர்களிடமிருந்து
வாங்கி தன் கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்.
அதாவது ஒரே நாளில் இவர் பத்து ரூபாய் விலைக்கு
ஷேர் வாங்கி சேர்த்துக் கொள்கிறார். இவர் குடும்பத்தினர்
அனைவரது ஷேர்களையும் ஒரு ஷேர் 13,189 ரூபாய்
என்கிற விலைக்கு விற்கிறார்…!!!
கம்பெனியோ – நஷ்டத்தில் ஓடும் கம்பெனி.
எனவே,நிஜத்தில் பத்து ரூபாய்க்கும் குறைவான மதிப்புடைய
இவர்களது ஷேர்கள் மட்டும் ஒவ்வொரு ஷேரும் 13,189
ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
இப்படி 14 ஜூன் 2006 – ஒரு நாளில் மட்டும்
ஷோமா பண்ணியிருப்பது 66 லட்சம்.
தேஜ்பால் (தன் குடும்பத்தினரின் பெயரில்)
பண்ணியிருப்பது – 7.85 கோடிகள்.
இவர்கள் அத்தனை பேரும் ஷேர்களை விற்றிருப்பது
AK Gurtu Holdings Private Ltd என்கிற
அட்ரசே இல்லாத ஒரே கம்பெனிக்கு.
அந்த கம்பெனி – ஒரு வருடத்திற்குள்ளாக தான் வாங்கிய
அத்தனை ஷேர்களையும் இவர்களது அனந்த் மீடியா
கம்பெனிக்கே திரும்ப நஷ்டத்திற்கு ( ஒரு ஷேர் பத்து
ரூபாய்) விற்று விட்டு பின்னர் காணாமல் போய் விடுகிறது.
இந்த ஒரே ஒரு transaction க்காக மட்டும்
உருவாகி இருக்கிறது அந்த கம்பெனி. அந்த கம்பெனி
கொடுத்திருக்கும் விலாசத்தில் சென்று விசாரித்திருக்கிறார்கள்.
அந்த பெயரில் ஒரு கம்பெனி
அந்த விலாசத்தில் என்றுமே இருந்ததில்லையாம் …!
இதைவிட சூப்பர் க்ளைமாக்ஸ் ஒன்று
இதற்கு முன்னாலேயே -2005 -லேயே
“கோத்ரா” பெயரைச் சொல்லி நிகழ்ந்திருக்கிறது.
தேஜ்பால் 2005ல் கோத்ரா சம்பவம் தொடர்பாக சில
sting operations-ஐ நிகழ்த்தியவுடன்,
இவரது கம்பெனியின் 10 ரூபாய் மதிப்புள்ள
19,326 ஷேர்கள் Fakhruddin Shaikh
Taherbhai Khorakiwala என்கிற நபரால்
ஒரு ஷேர் 2,409.35 என்கிற விலையில்
25.49 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுகின்றன.
ஒரே வருடத்தில், 2006 -ல் இந்த Fakhruddin
Shaikh Taherbhai Khorakiwala என்கிற
நபர் தன்னிடமிருக்கும் அத்தனை ஷேர்களையும் –
மேலே கூறியுள்ள AK Gurtu Holdings Private
Ltd கம்பெனிக்கு ஒரு ஷேர் 13,189 என்கிற விலையில்
மொத்தம் 25.49 கோடிக்கு விற்று விட்டு காணாமல்
போய் விடுகிறார்.
(பின்னர் 2006ல் அந்த AK Gurtu Holdings
Private Ltd தன் அந்த ஷேர்களையும்
அனந்த் மீடியா விற்கு ஒரு ஷேர் பத்து ரூபாய் என்கிற
விலைக்கு விற்று விட்டு பின்னர் அதுவும்
காணாமல் போய் விடுகிறது )
அந்த Fakhruddin Shaikh Taherbhai
Khorakiwala என்கிற புண்ணியவானைத் தேடி
இதுகுறித்த விவரங்களை விசாரிக்கப் போயிருக்கிறார்கள்.
அந்தப் பெயர் 93 வயதில் இறந்து போன
ஒரு முஸ்லிம் பெரியவருக்குச் சொந்தமானதாம்.
அவரது சொந்தக்காரர்கள் இந்த
கோடிக்கணக்கை எல்லாம் கேட்டு திகைக்கிறார்களாம் !
இத்தகைய transactionகளுக்கும் அவர்களுக்கும்
எந்தவித சம்பந்தமும் கிடையாதாம்…!!!
அத்தனையும் பினாமி கணக்கில் தேஜ்பால் சம்பாதித்து-
அசல் கணக்கில் கொண்டு வந்திருக்கும் பணம்.
(அதாவது கருப்பு – வெள்ளையாகி இருக்கிறது !)
சரி இந்தப் பணம் அவருக்கு உண்மையில் எப்படி
வந்திருக்கும் …?
very simple –
ஒன்று – அவரை இத்தகைய sting operations-ஐ
நடத்தச் சொல்லி assignment கொடுத்தவர்கள்
தந்ததாக இருக்கும்.
இரண்டு – இவர் இன்னும் சில sting operations-ஐ
நிகழ்த்தி, சம்பந்தப்பட்டவர்களிடம் அதைப் போட்டுக்
காண்பித்து, அந்த வீடியோக்களை வெளியிடாமல்
இருப்பதற்காக பெற்ற black mail வசூலாக இருக்கும்.
எப்படி இருக்கிறது கதை …?
சரி இத்தனை நடந்திருக்கிறதே –
அரசின் அமலாக்கப் பிரிவு,கம்பெனிகள் சட்ட பிரிவு,
வருமான வரி இலாகா, ரெவெனியூ இன்டெலிஜென்ஸ் –
போன்ற எந்த இலாகாவும் இவற்றை கவனிக்காதா –
கண்காணிக்காதா என்கிற சந்தேகம் வரலாம்…
கபில் சிபல் போன்ற எத்தனையோ தாய்-மாமன்கள்,
மத்திய அரசின் மந்திரிகள் –
அவரை தத்து எடுத்து ஆதரவு கொடுக்கத்
தயாராக இருக்கும்போது இதெல்லாம் எப்படி வெளிவரும் ?
think festல் கலந்து கொண்ட பெரியவர்களின்
புகைப்படங்களை எல்லாம் தான் பார்த்தீர்களே !
அவர்கள் எல்லாரின் ஆசியும் இருக்கும்போது
இவனுக்கு என்ன கவலை ?
தனிப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட
ஒரு அவல நிலை மூலமாக இந்த தேசத்தின் எந்தஒரு
சட்டவிதிமுறைகளுக்கும் உட்படாத தேச விரோத
கும்பல் ஒன்றின் பித்தலாட்டங்கள் வெளிவர
வழி பிறந்திருக்கிறது.
இப்போது தானே புரிய ஆரம்பிக்கிறது
இந்த ஆளுக்கு இத்தனை துணிச்சல் எப்படி
வந்தது என்று …!!! இவன் பின்னர் யார் யார்
இருக்கிறார்கள் என்கிற விவரங்கள்
முழுவதுமாகத் தெரிய வரும்போது
இன்னும் பல அதிர்ச்சிகள் ஏற்படலாம் ..!




//இனி கோர்ட்டும்,
மீடியாவும் அதைப் பார்த்துக் கொள்ளும்.//
ஓ சும்மா பார்த்துகொண்டு இருக்கும்.. என்று சொன்னிங்களா…
அப்படின்ன சரிதான்.. பார்த்து தீர்ப்பு கொடுக்கும்னு நினைச்சா…
சங்கராச்சாரி கேஸ் பார்த்தீங்கள்ள… ?
கருப்பு பணம் பச்சை பணம், சிவப்பு பணம் எல்லாம் யாரும் எதுவும் செய்ய முடியாது ஜி..
கருப்பு பணம் ஜிக்குசான்
சிவப்பு பணம் ஜங்குசா
எல்லா பணமும் ஜிங்குசா
I salute you Kaviri Mainthan Ji!
மேலும் சொல்ல ஒன்றுதான் உள்ளது..
கடவுளே! கடவுளே!!
thank you Ganpat.
with all best wishes,
Kavirimainthan
He would not have ventured in these money dealings without the support of “higher-ups”. Already he got 5 lakes from Kapilji during 2000. For the 50000shares @ Rs 13,190 it comes to ……oh, oh.
You are doing a wonderful service to the society by systematically exposing
corrupt and dishonest people.
I congratulate you and wish you all the best in carrying forward your efforts.
thanks for your good words Dr. Vigneshwaran.
with best wishes,
Kavirimainthan
KM Sir
one picture on Tejpal empire
https://drive.google.com/file/d/0B6hwFat24CQoUTBGTmR1WXhtcVE/edit?usp=sharing
thanks
Srini
thank you Srini.
with best wishes,
Kavirimainthan
what is the circulation rate of tehelka? i never saw that magazine in shops. only in internet i saw it.
what is the salary for the employees?
how much money spent for goa think festival? who sponsored it?
what is the connection between tejpal and the taliban leader?
is he having any connection with pakistan ISI and Dawood ibrahim?
what is the total value of assets for thejpal and his family?
from tv clippings we saw he is having a very big villa.
how many times he went to dubai or middle east?
why our income tax dept did not take any action?
sri KM , please continue your service.
thank you Mr.Gopalasamy.
with best wishes,
Kavirimainthan
இப்ப என்ன செய்யபோறீங்க…
http://namathu.blogspot.in/2013/11/blog-post_4372.html
யாரை கூட்டாளின்னு சொல்லுறிங்களோ.. அந்த ஷோமா இப்ப பலாத்கார புகார் தருகிறாரே…
ஒருவேளை பலாத்காரத்தில் எதிர்ப்பு.. கருப்பு பணத்தில் கூட்டுன்னு சோடி சேர்ந்திருப்பாங்களா…
இல்லை.. பலாத்காராத்தால் நட்டம் அதிகமா.. கருப்பு பணத்தால் லாபம் அதிகமான்னு பார்த்திருப்பாஙகளா?
நண்பர் வினோத்,
வருந்துகிறேன்.ஒரு தவறான செய்திக்கு
இங்கு விளம்பரம் கொடுத்து விட்டீர்களே..
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
i am suprised to see vinodh’s comments. i was thinking vimarisanam readers are well informed.
“namathu” published victim’s letter on shoma choudry’s name.
@gopalsamy
இதை அப்படி த்தான் நானும் நினைத்தேன்..
ஆனால் மட்டிகொண்டவுடன் கூட்டணியை முறித்து.. தன் மேல் பழிவராமல் இருக்க..
தானும் தன் பங்குக்கு பாலியல் குற்றச்சட்டை சுமத்திவிட்டால்…
சோமா வும் பெண் என்பதால் சொல்லலாம் அல்லவா?
இதை உண்மயில் சோமா சொல்லியிருக்க வாய்ப்புண்டு தான்.
பேட்டியை நேரில் பார்க்காதவரை நம்ப முடியாது..
//இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?//…மாற்றம் இப்படியும் நடக்கும்..
//இனி கோர்ட்டும்,
மீடியாவும் அதைப் பார்த்துக் கொள்ளும்.//
பத்து வருடம் கழித்து இந்த ஆள் கோவாவே வரவில்லை, அந்த பெண்ணும் ‘இவர் யார் ?’ என்று கேட்டதாக வரும். எல்லோரும் விடுதலை ஆவர்கள்.
நம் நாட்டில் (தமிழ்நாட்டிலும்), சிலர் தங்களை தாங்களே கொலை செய்து கொள்(ல்)கிறார்கள். பிறகு எப்படி குற்றவாளிகள் கிடைப்பார்கள் ? ஒரு அரசியல்வாதி, பத்திரிக்கை அலுவலகத்தில் மூவர், கோயில் மேலாளர் என்று வரிசையாக உள்ளது. பலம் வாய்ந்த இடம் vs பலமில்லாத இடம்…இதுதான் நம் ஜனநாயகம். பொது ஜனம் புரிந்து கொள்ள வேண்டும், சிறையில் இருப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை, வெளியில் இருப்பவர் அனைவரும் நிரபராதியும் இல்லை. சினிமாவில் வடிவேலு சொல்வது மாதிரி, ‘ நம்மளை வைத்து காமெடி கிமெடி பண்ணலையே ?’, ஆனால் இங்கு காமெடி தான் தொடர்கிறது,இன்னும் தொடரும்…
நாம் அனைவரும் நல்ல மாற்றம் எதிர்பார்க்கிறோம். தனி மனிதன் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.
சார், ஒரு சிறு வேண்டுகோள். ஏதாவது முக்கிய சாலை சந்திப்பில் நின்று போக்குவரத்தை கவனியுங்கள். ஒவ்வொருவரும் வாகனம் செலுத்துவதின் ஒழுக்கம் புரியும். அடிப்படையாகவே நிறைய மாற்றம் வேண்டும்.
நாம் அனைவரும் மாற வேண்டும். தனி மனித ஒழுக்கம் வேண்டும்.
உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.
எந்த விதமான ஆட்பலமோ பண பலமோ இல்லாத ஒரு தனி குடிமகனால் இவ்வளவு செய்திகளை சேகரித்து அதை கோர்வையாக வெளியிட் முடியுமென்றால் ஒரு சக்தி வாய்ந்த அரசாங்கத்தினால் என்னதான் செய்ய முடியாது?என் கேள்வியெல்லாம் இது தான்….காங்.கட்சி குற்றவாளி…தோல்வி அடையப்போவது திண்ணம்.அதேபோல ஆட்சி அமைப்பதும் மோடி தலைமையில் பா.ஜ.க என்பதும் ஓரளவு உறுதி.இந்த நிலையில் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்த விசாரணையை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்ட காங் அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவாரா?நிச்சயமாக மாட்டார் என்கிறேன் நான்.2011 தேர்தலுக்கு முன் ஜெயா கருணாவின் ஊழல்களைப்பற்றி ஊர் ஊராக சென்று விளக்கிகொண்டிருந்தார்.ஆட்சியையும் பிடித்தார்..ஓடியது முப்பது மாதங்கள்.இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.நம் நாட்டின் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள “சத்யா” என்ற படமும்,”புதுப்பேட்டை” என்ற படமும் பார்த்தால் போதும்.நம் தேர்தல்கள் திருடர்களை மாற்ற மட்டுமே பயன் படுகின்றன..திருட்டை நிறுத்த அல்ல.
நண்பர் கண்பத் உங்களின் கூற்று மிகவும் சரியானதே. உற்று கவனித்தால் இதெல்லாம் ஒரு பிசினஸ் புரிந்துணர்வு மாதிரி. இந்த சல சலப்புகள் கொஞ்ச நாளில் வேறு ஒன்றாக மாறிவிடும். நாடாளுமன்றம் கூடும் அமளி நடக்கும், மன்றம் நடக்காது. இப்போதைக்கு இது, அடுத்தது வேறு என தொடரும். மன்றம் நடந்ததாக செலவு தான் மிச்சம். அதனால் என்ன மக்களின் வரிப்பணம் தானே ?. மத்திய அரசையே பார்க்கிறோம், கொஞ்சம் நம்ம இடத்தையும் பார்க்க வேண்டும் என வேண்டுகிறேன். நம்மூரில் மீதேன் எடுக்க போகிறார்கள், இங்குள்ள அரசியல் கட்சிகள் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். எல்லாம் முடிந்த பின் அறிக்கை போர் நடைபெறும். ஆனாலும் தொடரும் அவலங்கள்…
MY HEAD IS GOING MAD