ஜீ.பூ.ம்.பா – 35 லட்சம் வழக்குகள்
காணாமல் போயின …! எப்படி ?
—
சுப்ரீம் கோர்ட் முதல் உள்ளூர் கோர்ட் வரை
காத்திருக்கும் வழக்குகள் – சுமார் 3.75 கோடி.
இதில் 30 ஆண்டுகளாகக் காத்திருக்கும்
வழக்குகளும் கூட உண்டு.
நால்ஸா (National Legal Services Authority)
என்பது ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிப்பதற்காக
உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பு.
சுப்ரீம் கோர்ட்டிலிருந்து
உள்ளூர் கோர்ட் வரை அனைத்து நீதிமன்றங்களிலும்
வக்கீல் வைத்து வாதாட வசதி இல்லாதவர்களுக்கு
உதவ ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இதன் நிரந்தரத் தலைவர்.
இப்போதைக்கு – ஜஸ்டிஸ் ஜி.எஸ்.சிங்வி இதன் செயல்
தலைவர்.
சுப்ரீம் கோர்ட்டிலிருந்து இயங்கும் இந்த அமைப்பின் கீழ்,
அனைத்து மாநிலங்களிலும்,
அனைத்து மாவட்டங்களிலும்,
“லோக் ஆயுக்தா” என்கிற
மக்கள் நீதி மன்றங்கள் இயங்குகின்றன.
சில வகைப்பட்ட வழக்குகள் – சட்ட வழிமுறைகளில்
போய், நீண்ட நாட்களாகக் காத்திருக்க நேர்ந்து முடிவு
கிடைக்காத நேரங்களில்,
வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும்
நேரில் வரவழைத்து, எதிரெதிரே அமர்த்தி,
கலந்து பேசி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,
ஒரு சமரசத்திற்கு வர உதவுவதும்,
அதற்கு ஒரு சட்டபூர்வமான அந்தஸ்து கொடுப்பதும்
தான் இதன் முக்கிய நோக்கம்.இங்கு எடுக்கப்படும்
முடிவுகள் சட்டபூர்வமான தீர்ப்பாக அங்கீகரிக்கப்படுவதோடு
இதற்கு எதிராக, இதற்கு மேல் எந்த கோர்ட்டிலும்
அப்பீல் செய்ய முடியாது.
“லோக் அதாலத்” அமைப்பிற்கு 1987ஆம் ஆண்டு
இயற்றப்பட்ட Legal Services Authorities
Act, ஒரு சிவில் கோர்ட்டிற்கு இணையான சட்டபூர்வ
அந்தஸ்து கொடுக்கிறது.
வங்கி கடன் பாக்கி வழக்குகள்,
சிவில் வழக்குகள்,
சொத்துரிமை சம்பந்தப்பட்ட வழக்குகள்,
விபத்துகள் சம்பந்தப்பட்ட நஷ்ட ஈடு வழக்குகள்,
குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட வழக்குகள்,
கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட வழக்குகள்,
நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தப்பட்ட வழக்குகள்,
செல்லாத வங்கிக் காசோலை – சம்பந்தப்பட்ட வழக்குகள்,
உபயோகிப்பாளர் தொடர்புடைய பிரச்சினைகள்,
சமரசம் செய்து கொள்ளக்கூடிய
கிரிமினல் வழக்குகள்-புகார்கள்
– இத்தகைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரண்டு
தரப்பினருமோ, அல்லது யாராவது ஒருவரோ,
மனு செய்துக் கொண்டால், லோக் அதாலத் அவற்றை
விசாரித்து – சட்டவிதிகளுக்கு உட்பட்டு – சமரசமான
உடன்பாடு ஏற்பட உதவி செய்கிறது.
இந்த வகையில்,மிகுந்த முயற்சியின் பேரில்,
அகில இந்திய அளவில் –
நாடு முழுவதும், அனைத்து மாநிலங்களிலும்,
அனைத்து மாவட்டங்களிலும் -ஒரே சமயத்தில்,
ஒரு லோக் அதாலத் விசாரணைக்கு நவம்பர் 23,2013
அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் அதிக அக்கரையும் ஆர்வமும் எடுத்துக்கொண்டு
செயல்படுத்த முனைந்த பெருமை சுப்ரீம் கோர்ட்
நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.எஸ்.சிங்வி அவர்களைப்
போய்ச்சேர வேண்டும்.
இந்தியா முழுவதுக்குமாக சுமார் 39 லட்சம் வழக்குகள்
எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் சுமார் 35 வழக்குகள்
அன்றே முடிவு காணப்பட்டு விட்டன.
மிகப்பெரிய சாதனை இது !
இத்தகைய முயற்சிகள் கைதட்டி வரவேற்கப்பட
வேண்டியவை.
ஆறு மாதத்திற்கொரு தடவை இத்தகைய நிகழ்வுகள்
நடந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அது பேருதவியாக
இருக்கும்.
இந்த முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு,
அற்புதமான விளைவுகளைக் கொடுத்துள்ள
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நமது மனப்பூர்வமான
வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.
பின்குறிப்பு –
வாழ்த்து சொல்லும் இடத்தில் குறைகளைச் சொல்ல
மனம் வரவில்லை. எனவே தனியாக பின்குறிப்பில்
சொல்கிறேன்-
நம் கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதற்கான
முக்கிய காரணங்கள் –
தங்கள் வருமானத்திற்காக, வாய்தா வாங்கியே
வழக்குகளை நீட்டிக்கும் -சில அல்ல, பல –
சுயநலமிக்க வக்கீல்களும் –
அவர்கள் கேட்கும்போதெல்லாம் எந்தவித கட்டுப்பாடோ,
கண்டனமோ இல்லாமல் தாராளமாக வாய்தா வழங்கும்
நீதிமன்றங்களும்,
எடுத்ததெற்கெல்லாம் கோர்ட்டுக்குப் போகும்
நம் மக்களின் மனப்பான்மையும்,அணுகுமுறையும் –
குறித்த காலத்திற்குள் வழக்குகளை முடிக்க வேண்டும்
என்கிற சட்ட விதிமுறைகள் எதுவுமே இல்லாமையும்,
ஏகப்பட்ட அப்பீல் கோர்ட்டுகள் இருப்பதும் தான்..!
இந்த பிரச்சினைகளைக் களைய அரசியல்வாதிகள்
உதவிக்கு வர மாட்டார்கள். சுப்ரீம் கோர்ட் முனைந்தால் –
இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கட்டலாம்.
நீதித்துறை நிர்வாகத்தைச் சீர்திருத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு
முழு அதிகாரமும் உண்டு.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை இப்போது
நடந்து முடிந்திருக்கும் ” மெகா லோக் அதாலத்”
விளைவுகள் கண்கூடாகக் காட்டுகின்றன.
இன்றில்லா விட்டாலும் –
நாளையாவது நிலைமை மாறும்
என்றே நம்புவோம் …!




Sir, Please write about your view on AAP & the delhi elections.
Thank you Mr. Prakash.
I really wanted to do – but presently occupied with some thing else !
To be short – I regret to say –
” with Arvind Kejriwal – I feel very badly disappointed ”
with all best wishes,
Kavirimainthan
http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1884:–25&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19
“வர்ற 23ம் தேதி நடைபெற இருக்கிற மெகா லோக் அதாலத் மாதிரி அடிக்கடி நடத்தணும்னு மேஜிஸ்ட்ரேட்டுகளும், நீதிபதிகளும் விரும்பறாங்களாம்.”
”வழக்குகளை விரைவா முடிக்க நினைக்கிறாங்களா… ? ”
”நல்லா நினைப்பாங்களே… வழக்குகள் விரைவா முடிஞ்சா அவங்க பொழப்புக்கு என்ன பண்ணுவாங்க…
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, இந்தியா முழுக்க 23 நவம்பர் அன்னைக்கு மெகா லோக் அதாலத் நடக்க இருக்கு. இதுல, இந்தியாவுலயே தமிழ்நாடு முதல் மாநிலமா வரணும்னு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்காம். இதுக்காக வழக்குகளை முடிக்க வேக வேகமா வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.”
”நல்ல விஷயம்தானே… இதுல என்ன தப்பு இருக்கு ?”
”சென்னைப் பெருநகர தலைமை நீதிபதியா இருக்கிற கோபாலன் தலைமையிலதான் இதுக்கான வேலைகளை முன்னின்று நடத்துறார். அவரோட உத்தரவு என்னன்னா… பழைய வழக்குகளை முடிக்க முடியலன்னா, புதுசா வழக்குகளை தாக்கல் செய்து, அதை உடனடியா முடிக்கும்படி உத்தரவு போட்டிருக்கார்.
உதாரணத்துக்கு, ஒவ்வொரு காவல் நிலையமும், போதையில் வாகனத்தை ஓட்டிய வழக்கு, அடிதடி தகராறு வழக்கு, சென்னை மாநகர காவல்துறை சட்டத்தின் படியான சிறு வழக்குகள் ஆகியவற்றை அதிக அளவில் தாக்கல் செய்து, அவற்றை உடனடியா முடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னையின் அத்தனை துணை ஆணையர்களுக்கும் கோபாலன் உத்தரவு போட்டிருக்கார். இதன் அடிப்படையில கடந்த ஒரு மாதமா, சென்னை மாநகர காவல்துறை வளைச்சு வளைச்சு வழக்குகள் பதிவு பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதன் அடிப்படையில முடிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கு காண்பித்து, இந்தியாவிலயே முதன்மையான நீதிமன்றம் சென்னை நீதிமன்றம்தான் னு காண்பிக்கத்தான் இந்த ஏற்பாடு.”
http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1886:–26&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19
” மெகா லோக் அதாலத் என்னப்பா ஆச்சு… நெறய்ய ஊழல் நடக்குதுன்னு சொன்னியே… ”
“வெறும் புள்ளி விபரங்களுக்காகே இந்த லோக் அதாலத்தை நடத்தறாங்கன்னு சொன்னேன்ல.. அதே மாதிரியே 9 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதா அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கு. போன வெள்ளிக்கிழமை, கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் மட்டும், இந்த மோசமான போக்கை எதிர்த்து போராட்டத்துல குதிச்சாங்க.. அடாவடியா பல வழக்குகள் லோக் அதாலத்துக்கு எடுத்துச் செல்லப்படுது. இன்னைக்கு அபராதம் கட்டுறேன்னு சம்பந்தப்பட்டவங்க சொன்னாக் கூட, லோக் அதாலத்துல கட்டுங்கன்னு மிரட்றாங்க ன்னு போராட்டம் பண்ணாங்க.
உடனே தலையிட்ட மாவட்ட நீதிபதி, யாருடைய விருப்பத்துக்கும் மாறா, லோக் அதாலத்தில் வழக்குகள் முடிக்கப்படாது. கிரிமினல் வழக்குகள் முடிக்கப்படாது. சிவில் வழக்குகள் மட்டுமே முடிக்கப்படும் னு உத்தரவாதம் கொடுத்த பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது””
உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே,
நான் இடுகையை எழுதும் முன்னர் இதைப்பார்த்திருந்தால்,
இதைப்பற்றி இன்னமும் விளக்கமாக எழுதி இருப்பேன்.
இப்போது உங்கள் மறுமொழியைப் பார்த்த பின் தான்
இதைப் பார்க்க நேர்ந்தது.
ஒரு விஷயம் – இதில் எண்ணிக்கைகள் மிகைப்படுத்தப்
பட்டிருக்கலாம். தாங்கள் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும்
என்று சம்பந்தப்பட்டவர்கள் அதீத ஆர்வத்துடன் செயல்
பட்டிருக்கலாம். இதில் ஈடுபட்டவர்கள் முழுக்க முழுக்க
நீதித்துறையையும், காவல் துறையையும் சேர்ந்தவர்களே.
எனவே வெளி நபர்கள் இது குறித்த மேல் விவரங்களை அறிவது கடினம்.
இதில் சொல்லப்பட்டிருப்பவைகளை
அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை.
அப்படியே இருந்தாலும் கூட, “லோக் அதாலத்” என்கிற
முயற்சி கொள்கை அளவில் மிகச்சிறப்பானது.
மிகைப்படுத்தல் இருந்தாலும் கூட இப்போது நிகழ்ந்திருப்பது
மிகப்பெரிய சாதனையே.
எனவே இதை யார் எதிர்ப்பார்கள் ? – யோசிப்போமே !
வாதிகளாக இருக்க முடியாது.
பிரதிவாதிகளாக இருக்க முடியாது.
ஏனெனில் இரு தரப்பினரும் உடன்பட்டால் தான் வழக்கை
முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.
இங்கு கட்டாயப்படுத்துதல் செல்லுபடி ஆகாது.
நீதிபதிகளாகவும் இருக்க முடியாது. ஏனெனில் இதை
நடத்த தீவிரமாக முயற்சி செய்பவர்களே அவர்கள் தான்.
எனவே இதை எதிர்க்கக்கூடியவர்கள் –
வாய்தா வக்கீல்களாகத் தானே இருக்க முடியும்.
வழக்கு விரைவாக முடிக்கப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள்
அவர்கள் தானே ? கோயம்புத்தூர் வக்கீல்களின்
எதிர்ப்பு செய்தியும் இதைத்தான் உறுதி செய்கிறது.
எனவே, இந்த எதிர்ப்பை நம்மால் புரிந்து கொள்ள
முடிகிறது.
என் இடுகையின் இறுதியில் உள்ள பின்-குறிப்பு இதற்கு
விளக்கமளிக்கிறது. நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்