ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார் கபில் சிபல் –
டெஹல்கா கற்பழிப்பு வழக்கு புகழ்
தருண் தேஜ்பாலுக்கு…!!

பிசினஸ் ஸ்டாண்டர்டு தளம் மூலமாக –
நேற்று ஒரு தகவல் வெளியாகியது-
டெஹல்கா-வில் மத்திய அமைச்சர் கபில் சிபலும் ஒரு
பங்குதாரர் (share holder) என்று.
கபில் சிபல் – தருண் தேஜ்பால்
இருவருமே பஞ்சாபிகள் ..
இதே சமயம் –இன்னோரு வதந்தியும் வெளியாகியது –
தருண் தேஜ்பாலுக்கு
கபில் சிபல் தாய் மாமன் உறவு என்று.
இந்த இரண்டையும் இன்று மறுத்த கபில் சிபல்
அதை மறுக்கையிலேயே –
இதைவிட விவகாரமான ஒரு விஷயத்தை
வெளியிட்டு விட்டார்.
2003ஆம் ஆண்டு டெஹல்கா தளத்தை பத்திரிகையாக
மாற்றும்போது, தருண் தேஜ்பால் தன் உதவியை
நாடியதாகவும், தான் அப்போது ஐந்து லட்சம் ரூபாய்
அவருக்கு கொடுத்ததாகவும் இன்று கபில் சிபல்
கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.
மேலும் கபில் சிபல் – தான் டெஹல்காவில்
“பங்குதாரர் அல்ல” என்றும் தான் கொடுத்தது
வெறும் “நன்கொடை மட்டுமே” என்றும்
கூறி இருக்கிறார் !
பங்குதாரரோ, நன்கொடையாளரோ – டெஹல்காவில்
காங்கிரஸின் பங்கு இருக்கிறது என்பது இப்போது
வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இன்னும் சில தகவல்கள் வெளிவந்திருக்கின்றன –
தனக்கு முன் ஜாமீன் கோரியும்,
இந்த வழக்கு கோவாவில் நடந்தால் தனக்கு நியாயம்
கிடைக்காது என்றும் எனவே வேறு மாநிலத்திற்கு மாற்ற
வேண்டும் என்று கோரியும்,
தருண் தேஜ்பால் நீதிமன்றத்தை நாடி இருக்கிறானாம் !
அவனுக்கு நம் வலைத்தளத்தின் சார்பாக
ஒரு “இலவச ஆலோசனை” –
கபில் சிபலையே தன் வழக்குக்கு வக்கீலாகவும்
அமர்த்திக் கொண்டால், 2 ஜி அலைக்கற்றை விஷயத்தில்
“ஜீரோ லாஸ்” என்று வாதாடிப் புகழ்பெற்ற சிபல்-
இந்த வழக்கில் –
“முயற்சி தான் துவக்கத்திலேயே தோல்வி
அடைந்து விட்டதே – பின்னர் எப்படி தருணை
குற்றம் சாட்ட முடியும் ?”
என்று கேட்டு –
வழக்கை சுலபமாக உடைத்து விடலாம் …!!



காங்கிரஸ் கட்சிக்கும் டெஹல்கா வுக்கும் சம்பந்தமே
இல்லையென்று இது வரை சாதித்து வந்தார்களே –
இப்போது என்ன சொல்வார்கள் ? காங்கிரஸ் தலைமைக்கு
பிடிக்காததை கபில் செய்திருப்பாரா ? மீடியாக்கள் இந்த
செய்தியை மிஸ் பண்ணி விட்டார்களா ? சத்தத்தையே
காணுமே ?
இது கூடுதல் தகவல் –
அரசாங்கத்தை – வருமான வரி இலாகாவை
தொடர்ந்து ஏமாற்றும் முயற்சி –
டெஹல்கா தொடர்ந்து நஷ்டத்தில் நடந்து
வருகிறதாம். ஒவ்வொரு ஆண்டும் நஷ்டக்கணக்கு
காண்பித்திருக்கிறது.
2012 நிதி ஆண்டில் நஷ்டம் – 10 கோடி…!
2011 நிதி ஆண்டில் நஷ்டம் – 17 கோடி …!!
இப்படி நஷ்டத்தில் நடக்கும் ஒரு நிறுவனம் தான்
கோவா வில் 5 நட்சத்திர ஓட்டலில் “திங்க் திருவிழா”
நடத்துகிறது ! (அதற்கான தனி ஸ்பான்சர்கள் –
பல கருப்புக் கம்பெனிகள் !).
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
கபில் சிபலுக்கு தெஹெல்காவில் ௦.௦9% பங்குகள் உள்ளன என பத்திரிகை செய்தி கூறுகிறது.