இந்த Black Mailer ஐ “உள்ளே” தள்ளினால் தான்
சாட்சிகள் முன் வருவார்கள் …

5-6 நாட்கள் ஆகி விட்டன. முதல் நாள் “தவறாக
மதிப்பிட்டு விட்டதால்” தவறு நிகழ்ந்து விட்டது.
நிபந்தனையின்றி மன்னிப்புக் கோருகிறேன் என்று
சொன்னவன் –
நேற்று சொல்கிறான் “இருவரும் விரும்பி
ஈடுபட்ட செயல் அது – அந்தப் பெண்ணும் அதை
விரும்பினாள் “. அநாவசியமாக விஷயம் பெரிதாகாமல்
தடுப்பதற்காகத் தான் அந்த பெண் கோரியபடி மன்னிப்புக்
கேட்டேன். மற்றபடி நான் தவறு எதுவும் இழைக்கவில்லை-
என்கிறான்.
“விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயார். ஆனால் முதலில்
ஓட்டல் வீடியோ பதிவுகளை வெளியிடுங்கள்” என்கிறான்.
அந்த 5 நட்சத்திர ஓட்டலுக்கு 5 நாட்களில் கோடிக்கணக்கில்
பிசினஸ் கொடுத்திருக்கிறான். இவன் காரணமாக அத்தனை
அறைகளும் புக் செய்யப்பட்டிருக்கின்றன. “பாரி”ல்,
கேளிக்கை விடுதிகளில் (கேசினோ) கோடிக்கணக்கில்
பணம் பண்ணி இருக்கிறார்கள். think fest அழைப்பில்-
“இது கோவா.
வேண்டிய மட்டும் குடியுங்கள்.
விரும்பியவருடன் படுங்கள்.”
– என்று இந்த நாய் கூறுகிறது. எதற்காக இந்த “திருவிழா”
இவனால் நடத்தப்படுகிறது என்பது இதிலிருந்தே வெட்ட
வெளிச்சமாக வில்லை ?
இவனால், இத்தனை வியாபாரம் நடந்திருக்கும் அந்த
நட்சத்திர ஓட்டலில் இன்னுமா அந்த வீடியோவை ஒழுங்காக
விட்டு வைத்திருப்பார்கள் ? அப்படி எதாவது இவனுக்கு
எதிரான காட்சிகள் இருந்தால், இந்நேரம் – அவை பார்க்க
முடியாத அளவிற்கு குழப்பப்பட்டிருக்குமே ! அந்த தைரியம்
இல்லாவிட்டால், இவன் இப்படி கூறுவானா ?
காங்கிரஸ் கட்சியிலிருந்து, இந்த செயலைக் கண்டித்து
இன்னும் ஒரு பெரியவரும் பேசவில்லை. திக் திக் விஜய்
சிங் கிலிருந்து, மணீஷ் திவாரி, கபில் சிபல் வரை
அனைவரும் மவுனம் சாதிப்பது எப்படி ? காங்கிரஸ்
கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் இது நடந்திருப்பது
தான் இவனது துரதிருஷ்டம் !
முதல் இரண்டு-மூன்று நாட்கள் வாய் திறவாமல் இருந்த,
இவனது கூட்டுக் களவாணிகள் என்று சொல்லப்படுகிற
பெரிய மனிதர்கள் ஒவ்வொருவராக இவனுக்கு ஆதரவாக
கருத்து வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.
பாதிக்கப்பட்ட அந்தப்பெண், முதலில் தெஹல்கா
நிறுவனத்திற்கு அளித்திருக்கும் புகாரில், நடந்தவைகளை
மிக விவரமாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பொறுக்கியின் மகளும் அந்த “விழா”விற்கு
வந்திருக்கிறாள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நன்கு
அறிமுகமான அந்தப் பெண்ணிடம், முதல் முயற்சி
நடந்தவுடனேயே இது குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பெண்ணுடன் “விழா”விற்காக வந்திருந்த
சக தெஹல்கா ஊழியர்கள் மற்றொரு ஓட்டலில் தங்கி
இருந்திருக்கின்றனர்.
முதல் சம்பவம் நடந்தவுடன், இந்தப் பெண், தன் சக
ஊழியர்களான 3 நண்பர்களிடம் இதைப்பற்றி
தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த அவர்கள் அனைவரும்
“விழா”முடிந்து ஊர் திரும்பியவுடன் டெஹல்காவிலிருந்து
எல்லாருமே கூண்டோடு வெளியேறி விடலாம் என்று
தீர்மானித்திருக்கின்றனர். எத்தியோப்பியாவில் இருக்கும்
தன் காதலரிடமும் அந்தப் பெண் உடனடியாக தொலைபேசியில்
இதைத் தெரிவித்திருக்கிறார்.
இரண்டாவது சம்பவம் நடந்தவுடனும் அதே போல்
சக ஊழியர்களிடமும், காதலரிடமும், தொலைபேசி மூலம்
தன் அன்னையிடமும் தெரிவித்திருக்கிறார்.
இத்தனை சாட்சிகள் இருந்தாலும்,
இவனது பெண் இவனுக்கு எதிராக சாட்சியம் அளிப்பாரென்று
எதிர்பார்க்க முடியாது.
– இவன் இன்னமும் வெளியிலேயே இருந்தால் –
சாட்சி அளிக்கக்கூடிய டெஹல்கா சக ஊழியர்கள்
பயமுறுத்தப்பட்டு மவுனிக்கச் செய்யப்பட்டு விடுவார்கள்.
சாட்சியங்களும், தடையங்களும் அழிக்கப்பட்டு விடும்,
மாற்றப்பட்டு விடும்.
இந்தப் பெண்ணின் பழைய புராணங்கள் எதாவது தோண்டி
எடுத்து வெளியிடப்படும். அவர் நடத்தையை கேவலப்படுத்தக்
கூடிய சம்பவங்கள் புனையப்படும். அதற்கான ஆதாரங்கள்
உருவாக்கப்படும்.
மிக பயங்கரமான அரசியல் செல்வாக்கும்,
கோடிக்கணக்கில் பணமும்,
அதிகார மையத்தின் நெருக்கமும் உடைய இந்த மனிதனை
வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டு விட்டு,
விசாரண நடத்தினால் – அது அந்தப் பெண்ணுக்கு மிகவும்
பாதகமாகவே இருக்கும்.
எனவே, இவனை உடனடியாக “உள்ளே” தள்ளி விட்டு,
போலீஸ் விசாரணையை துவக்கினால், சாட்சிகள்
தைரியமாக வெளி வந்து உண்மையை வெளிப்படுத்துவார்கள்.
இதைச் செய்ய வேண்டியது –
கோவா மாநில போலீஸ் தான்.
செய்வார்களா ?



நீங்கள் கூறுவது உண்மை. கோவா போலீஸ் செய்வார்களென எண்ணுகிறேன்.
உடன்பட்டே தேஜ்பால் செய்திருந்தால், பின் ஏன் அவன் 6 மாதம் விடுமோய் மற்றும் மன்னிப்பு கோரினான். உறுதியான கோவை போலிஸ் நடவடிக்கை தான் அப்பெண்ணுக்கு நீதி வழங்கும்.
கோவா போலிஸ் என்பதற்கு பதில் கோவை போலீஸ் என வந்து விட்டது. Goa Police என படிக்க வேண்டுகிறேன்
There was a debate on this topic in Timesnow tv channel on 22nd late evening. Vinod Mehta and one more person from Singapore were defending or trying to defend this dog from the beginning of the discussion. How many of you have watched Vinod Mehta talking in TV debates. I feel most of the time he is drunk and not able to speak properly. I don’t know why he is called regulalrly for discussion. he couldn’t hold is hand steadily for few seconds. that was his condition yesterday. and finally Vinod Mehta uttered a gem of speech – he said – all this is happening is very common in journalism and only a very few come out openly and it was bad luck of tejpal that he got caught in to this…
what to say more…. stinking smell among this group….I switched off the tv, but couldn’t sleep for some time…
http://www.timesnow.tv/Debate-Tehelka-coverup-crumbles—1/videoshow/4442237.cms
Sanjay roy and vinod trying to defend…
Yes Srini.
I too watched the debate.
I agree with you with regarad to Vinod Mehta.
He is always like this.
with best wishes,
kavirimainthan