டெஹல்காவில் 2 முறை கற்பழிப்பு முயற்சி –
எங்கே போயினர் அந்த அம்மணிகள் …?
டெஹல்கா நாளிதழின் நிர்வாகி –
தருண் தேஜ்பால் என்கிற பொறுக்கி என்ன செய்தான்
என்கிற விவரம் அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும்
மட்டுமே முழுவதுமாக தெரியும்.
ஆனால் – தனக்கு அடுத்த இடத்தில் நிர்வாகியாக இருக்கும்
திருமதி ஷோமா சவுத்திரிக்கு இந்த பொறுக்கி எழுதியுள்ள
மெயிலில் –
சம்பந்தப்பட்ட பெண் நிருபருக்கு –
தவறான மதிப்பீடு காரணமாகவும்,
நிலைமையை சரிவரப் புரிந்து கொள்ளத் தவறியதாலும்,
தான் ஏற்படுத்திய சங்கடத்திற்கு –
அந்தப் பெண்ணிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு
கேட்டு விட்டதாகவும்,
அதனை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும்,
மன்னிப்பு கேட்டு விட்டால் மட்டும்
போதாது என்று தன் மனசாட்சியும், தான் கடைபிடிக்கும்
“உயர்ந்த கொள்கைகளும்” இடம் கொடுக்காததால் –
பத்திரிகை ஆசிரியர் பதவியிலிருந்தும் –
6 மாத காலத்திற்கு (மட்டும்) விலகிக் கொள்வதாகவும்
எழுதி இருக்கிறான்.
மேனேஜிங் டைரெக்டர் ஷோமா சவுத்திரியும்
(இவரும் ஒரு பெண் ….!) இதை வரவேற்று,
ஏற்றுக்கொள்வதாக டெஹல்கா ஊழியர்கள் அனைவருக்கும்
இன்னொரு மெயிலின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
இது டெஹல்கா நிறுவனத்தின் உள்விவகாரம் என்றும்
விஷயம் இத்துடன் முடிவடைகிறது என்றும் கூறி
இருக்கிறார்.
இந்த பொறுக்கி காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமாக
இருப்பதால் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பாமல்
பார்த்துக் கொள்வது அவரது பொறுப்பாக இருக்கிறது.
ஆனால் அவ்வளவு சாதாரண விஷயமா இது ?
நிறைய விவரங்கள் இன்னும் மீடியாவில் வரவில்லை.
நிதானமாக, தடுப்பதற்குண்டான முயற்சிகளையும்
மீறி வெளி வரக்கூடும்.
இப்போதைக்கு –
என் டெல்லி நண்பர்கள் மூலம் அறிந்த விவரங்கள் –
அண்மையில் கோவா வில் நடைபெற்ற
“Think festival” நிகழ்வில் கலந்து கொள்ள
சென்றிருந்தபோது, தன் பத்திரிகையில் பணி புரியும்
அந்தப் இளம் பெண்ணின் உடைகளை உருவி,
அவரது சம்மதமின்றி –
அவரை கட்டித்தழுவ முயற்சித்திருக்கிறான்.
ஒரு முறை அல்ல – இரண்டு முறைகள்.
இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில்.
இதை அந்தப் பெண் தனது மேல் அதிகாரிக்கு
புகார் செய்த பிறகு தான் இந்த விவகாரமே வெளிவருகிறது.
“that what I did was was a bad
lapse of judgment”
என்று இவன் கூறுவதன் உண்மை அர்த்தம்
என்னவாகிறது பாருங்கள் –
“ஒத்துக் கொள்வாள் என்று தவறாக எடை
போட்டு செய்து விட்டேன்”
இது திருமதி ஷோமா சவுத்திரி சொல்வது போல் –
டெஹல்கா நிறுவனத்தின் உள்விவகாரமா ?
முதலாவதாக, கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டவன்
தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள முடியுமா ?
அதுவும், தன் சொந்த கம்பெனியிலிருந்து 6 மாதம்
விலகி ஓய்வில் இருக்கிறேன் என்று ஒருவன் சொல்வது
ஒரு தண்டனையா ?
பாதிக்கப்பட்ட பெண், இவன் சொல்வது போல் மன்னிப்பை
ஏற்றுக் கொள்வதுடன் விடவில்லை. இதற்குறிய
சட்டங்களின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
டெஹல்கா நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதை இதுவரை நிர்வாகம் மறைத்தே செயல்படுகிறது.
பெண்கள் பணி புரியும் தொழில் நிறுவனங்களில்,
sexual harrassment against women committee
என்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இத்தகைய புகார்களை
விசாரித்து தகுந்த மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட
வேண்டும் என்பது சட்டம்.
இத்தகைய கமிட்டியே இந்த நிறுவனத்தில்
அமைக்கப்படவில்லை. இதுவே ஒரு சட்ட மீறல்.
6 மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு போக –
இந்த பொறுக்கி செய்தது சாதாரண தவறு அல்ல.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் –
கற்பழிப்பு முயற்சி என்றால் IPC sections
354A, 354B and 354D மற்றும் கற்பழிப்பு
என்றால் 375 and 376 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு,
(ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகள் )
கைது செய்யப்பட்டு “உள்ளே” தள்ளப்பட வேண்டும்.
ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளருக்கு நிகழ்ந்துள்ள
இவ்வளவு பெரிய கொடுமைக்கு எதிராக மகளிர் நல
வாரியத்திலிருந்து யாரும் இன்னும்
குரல் எழுப்பாதது ஏன் ?
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு பெண்ணுக்கு
அவரது தந்தையே கேட்டுக்கொண்டதன் பேரில்
(அந்தப் பெண்ணும் இதை ஏற்றுக் கொண்ட பிறகு)
அவரது டெலிபோன் உரையாடலை கண்காணித்து,
பாதுகாப்பு கொடுத்த விவகாரத்தை
“emergency press meeting” கூப்பிட்டு
குஜராத்தில் பெண்களுக்கு தனியாக நடமாட சுதந்திரம்
இல்லையா ? அவரது தந்தையே கேட்டுக்கொண்டாலும் கூட
மேஜரான அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை
போலீஸ் எப்படி பின் தொடர்ந்து பார்க்கலாம் ?
என்றெல்லாம் கூக்குரலிட்ட மகளிர் காங்கிரஸ் தலைமையும்,
பொழுது போகாத அந்த பெண் அமைச்சர்களும் இப்போது
போனது எங்கே ?
விஷயத்தை பெரிதாக்க விடாமல் அப்படியே
புதைப்பது எப்படி என்று ரகசியக் கூட்டம்
போட்டு ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்களா ?




இந்த விவகாரம் எவ்வாறு நமது ஜனநாயக காவலர்களான ND TV, Times and Headlines Today Puthia Thalamurai, மற்றும் The Hindu, TOI and Hindustan Times அறிய முடியாமல் போயிற்று. Cobra Post என்ன ஆனார்? நமது இந்தியா வின் ஜனநாயகம் வாழ்க.
முன்னதாக எழுதியபோது, வெளியில் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்ததால், சில விஷயங்களைச் சரியாகச் சொல்ல முடியாமல் போயிற்று.
உண்மையில் சம்பந்தப்பட்ட பெண், எழுத்துருவில்
தன் கம்பெனி நிர்வாகத்திற்கு முழு விவரங்களையும் கூறி
விசாரணையும், மேல் நடவடிக்கையும் கோரி புகார்
கொடுத்திருக்கிறார்.
புகாரில் என்ன விவரங்கள் இருந்தன என்பதை, டெஹல்கா
நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. இந்த புகார்
வந்த பிறகு தான், தருண் தேஜ்பால் 6 மாதங்களுக்கு
பதவியை விட்டு விலகுவதான “பரிகாரம்” செய்ய
முன் வந்திருக்கிறார். அடுத்த நிர்வாகியான ஷோமா சவுத்ரிக்கு இது பதவி உயர்விற்கான வாய்ப்பை அளிப்பதால்,
இது டெஹல்காவின் உள்விவகாரம் -இத்தோடு கதை
முடிந்தது என்று அறிக்கை விட்டு விட்டு கடையை மூடப்
பார்த்திருக்கிறார்.
அந்தப் பெண், தன் புகாரில், தேஜ்பால் தன் தந்தையுடன்
பணி புரிந்தவர், தந்தையின் நண்பர், தன் தந்தையைப்
போன்ற அவர், தன் சம்மதமின்மையைத் தெரிவித்த
பின்னரும் கூட மீண்டும் இந்த செயலில் ஈடுபட்டது தனக்கு
மிகுந்த அருவருப்பையும், மனஉளைச்சலையும் கொடுக்கிறது
என்றும், தேஜ்பால் கூறியுள்ளது போல் – தான்
மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, புகாரை முடித்து வைக்க
ஒத்துக் கொள்ளவில்லை என்றும், தன் புகாரின் மீது
கண்டிப்பாக மேல் நடவடிக்கை தேவை என்றும் கூறி
இருக்கிறார்.
இப்போது – அனைத்து டெல்லி தொலைக்காட்சிகளும்
விழித்துக் கொண்டு விட்டன. தீவிரமான விவாதங்கள்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த களேபரத்தில், இன்னொரு முக்கியமான விஷயத்தை
சொல்ல நினைத்ததையும் தவற விட்டு விட்டேன்.
பங்களூரு ஏடிஎம் மில் மகள் பிறந்த நாள் செலவிற்காக
பணம் எடுக்க வந்த பெண்மணிக்கு நிகழ்ந்த கொடுமையைப்
பற்றி இதுவரை –
அந்த ஏடிஎம் வங்கியின் நிர்வாகமோ,
கர்நாடக காங்கிரஸ் அரசோ,
வாய் கிழியப் பேசிய மகளிர் காங்கிரஸ் மேலிடமோ,
தேசிய மகளிர் நல வாரியமோ –
யாருமே மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.
அரசுடைமையாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும்
நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தானே வருகின்றன ?
நிதியமைச்சரும் வாயைத் திறக்கவில்லை.
இந்த பெண்மணிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு –
காங்கிரஸ் “அன்னை”யும் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.
நம் வலைத்தளத்தின் சார்பாக அந்த பெண்மணிக்கு
நம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.
அவர் விரைவில் உடல் நலம் பெற்று, நல்லபடியாக
வீடு திரும்ப வேண்டுவோம்.
அவருக்கு ஏற்பட்ட கொடுமையின் விளைவாகவாவது,
இந்த விஷயத்தில் எதாவது முன்னேற்றம் ஏற்படட்டும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
sir
pichu odhari pizhindu kaya pottu vittirgal pongal…
vazthukal
srini
நன்றி ஸ்ரீநி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்பர் காவிரி மைந்தன்..
மீண்டும் உங்கள் விடா முயற்சிக்கும் கடும் உழைப்பிற்கும் நன்றி.வாழ்த்துக்கள்.
எனக்கு ஒரு சந்தேகம்.இதைப்பற்றி ஏன் அந்த பெண் போலீசில் புகார் செய்யவில்லை?அவ்வாறு செய்யப்படாத நிலையில் இது ஒரு உள் விவகாரம் தானே?சமீபத்தில் கேரளாவில் ஒரு நடிகையை ஒரு MP துர்நடத்தை செய்து அது போலீசில் புகார் செய்யப்பட்டு எல்லா அமைப்புக்களும் கொதித்து எழுந்த பின் அந்த நடிகையே அதை திரும்பப்பெற்று எல்லார் முகத்திலும் கரியை பூசவில்லையா?
அதே போல பெங்களூரில் நடந்துள்ளது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினை.இதற்கும்
அந்த வங்கி நிறுவனம் என்ன செய்ய முடியும்?(தருமபுரி பஸ் எரிப்பில் நம் அம்மா வருத்தம் தெரிவித்தாரா என்ன?”)
அய்யா உள்விவகாரமும் இல்லை வெளிவிவகாரமும் இல்லை.. விசாகா கமிட்டி சொல்வது என்னவென்றால் suo moto வாகவே நீதி மன்றம் இதை விசாரிக்கலாம்.. யாரும் புகாரே தெரிவிக்க வேண்டியதில்லை என்கிறது..
கண்பத்,
வழுக்கி விட்டீர்களே..!
நீங்களா இப்படி ..?
1)பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி
செய்வதற்காக வந்தது தானே harrassment of
women at work place சட்டம். இதன் விதிகளின்படி
10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் இடங்களில்
நிரந்தரமான விசாரணைக்குழு (கமிட்டி) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதும், இது குறித்து
வரும் புகார்களை அந்த கமிட்டி விசாரிக்க வேண்டும்
என்பதும் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி
கட்டாயம் ஆயிற்றே. அதெப்படி டெஹல்கா முதலாளி
தனக்குத் தானே 6 மாத லீவு விட்டுக்கொண்டு கதையை
முடிக்கலாம் ?
2) சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் அளிக்க
வேண்டிய அவசியமே இல்லை.சுப்ரீம் கோர்ட் – விசாகா guidelines-படி, போலீசோ, நீதிமன்றமோ –
suo moto -தானாகவே
முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கலாம்.
3)பெங்களூரு வில் நடந்தது சட்ட ஒழுங்கு பிரச்சினை
மட்டும் தானா ?
ஏடிஎம் களில் ஒரு நபர் உள்ளே இருக்கும்போது அடுத்த
நபர் நுழைய முடியாதபடி பாதுகாப்பு கதவு அமைக்கப்பட
வேண்டுமென்பது விதி. நமது ஏடிஎம் கார்டை நுழைத்தால்
தான் கதவு திறந்து கொள்ள வேண்டும். அதே போல்
உள்ளே நுழைந்தவுடன் தானாகவே லாக் ஆக வேண்டும்.
மீண்டும் உள்ளேயிருந்து கதவைத் திறக்க, அதற்கான
உள் பட்டனை அழுத்தினால் தான் கதவு திறக்கும்..
4) ஏடிஎம் -முக்கு -செக்யூரிடி -காவல் ஏற்பாடு
பண்ணுவது சம்பந்தப்பட்ட வங்கியின் பொறுப்பு
இல்லையா ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மன்னிக்கவும் கா.மை.எனக்கு இந்த சட்டங்களை பற்றி தெரியாது.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
வங்கி விவரத்தில் நான் சொல்ல வந்தது..எந்த ஆட்சியிலும்,எந்த மாநிலத்திலும்,எந்த வங்கி ATM அறையிலும்,இந்த கொடூர செயல் நடந்திருக்கலாம்.அந்த லட்சணத்தில்தான் நாடு இப்பொழுது உள்ளது என்பதையே.
நமக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கண்டமே!
http://www.luckylookonline.com/2013/11/idol-journalist.html#comment-form
TARUN TEJPAUL IS AN ARDENT CONGRESS SUPPORTER.
LIKE ABISHEK SINGH MANVI, HE IS HAVING EVERY RIGHT TO DEAL WITH LADIES.
I HOPE CONGRESS WILL APPOINT HIM AS SPOKESPERSON AS HE IS NOW FULLY ELIGIBLE.
PLEASE READ YUVAKRISHNA’BLOG. HE IS FULLY SUPPORTING TARUN TEJPAL. IN HIS OPINION, SHE MAY BA CHEAP GIRL.