“கோப்ரா போஸ்ட்” பெண் பற்றிய புகார்கள் ..
மோடி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ...
—
இரண்டு நாட்களாக டில்லி தொலைக்காட்சிகளில்
பரபரப்பாக பேசப்படும் “கோப்ரா போஸ்ட்” இணைய
தளத்தில் வந்துள்ள – ஒரு பெண் பின் தொடரப்பட்டது
பற்றிய – செய்திகளை பலரும் பார்த்திருக்கலாம்.
பார்க்காதவர்களுக்காகவும், இந்த இடுகைக்கான
அறிமுகத்திற்காகவும், சுருக்கமாக அந்த செய்தி கீழே –
கோப்ரா போஸ்ட் என்கிற இணய தளப் பத்திரிக்கையில்
மூன்று நாட்களுக்கு முன்னதாக, 15/11/2013 அன்று,
“நாங்கள் கீழே கொடுத்துள்ள செய்தி உண்மையானது தானா
என்பதை எங்களால் உறுதி செய்ய முடியாது” என்கிற
எச்சரிக்கையுடன் ஒரு புனைவு வந்தது.
அதன் சாராம்சம் இது தான் –
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்களூரிலிருந்து
அஹமதாபாத் வந்திருந்த ஒரு இளம்பெண், அவருக்குத்
தெரியாமல், குஜராத் போலீசால் வேவு பார்க்கப்பட்டார்.
அவரது போன் ஒட்டுக்கேட்கப்பட்டது. அவர் தங்கியிருந்த
ஓட்டலிலும், அவர் சென்று வந்த இடங்களிலும்,
ரகசிய போலீசார் அவரைப் பின்தொடர்ந்து கண்காணித்தனர்.
அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும், அவரிடம்
பேசுகின்ற, பழகுகின்ற நபர்கள் பற்றிய விவரங்கள்,
அவர் செல்கின்ற இடங்கள், நேரங்கள் – அனைத்தும்
கண்காணிக்கப்பட்டு, உடனுக்குடனாக அப்போதைய
குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா வுக்கு
தெரிவிக்கப்பட்டது. குஜராத் முதலமைச்சர் நரேந்திர
மோடியின் உத்தரவின் பேரில், உள்துறை அமைச்சர்
அமீத் ஷா இந்த சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டார்.
இந்த தகவலை வெளியிட்டவர் யார் ?
அந்த சமயத்தில் குஜராத்தில், அஹமதாபாதில்,
எஸ்.பி. அந்தஸ்தில் –
போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றியவரும், பிற்பாடு
இர்ஷத்ஜஹான் வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டு,
சிறையில் இருந்து, சிபிஐ யின் treatment(!)க்குப்
பிறகு ஜாமீனில் விடப்பட்டவருமான ஜி.எல்.சிங்கால்.
இவர் தான் அமீத் ஷா வின் உத்திரவுப்படி மேற்படி உளவு
வேலையை மேற்கொண்ட போலீஸ் அதிகாரி.
மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரம் என்ன ?
மேற்படி போலீஸ் அதிகாரி ஜி.எல்.சிங்கால் -தனக்கும்,
உள்துறை அமைச்சர் அமீத் ஷா விற்கும் இடையே
நடைபெற்ற உரையாடல்கள் அடங்கிய பென்-டிரைவை
சிபிஐ யிடம் கொடுத்து, மேற்படி தகவல்களையும்
அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார்.
எப்போது ?
சிறையிலிருந்த ஜி.எல்.சிங்கால் சிபிஐ யிடம் மேற்குறித்த
தகவல்களைக் கூறியவுடன், மே 2013 கடைசி வாரத்தில்
ஜாமீனில் விடப்பட்டிருக்கிறார். அதன் பிறகு இரண்டு
வாரங்களுக்குள்ளாக, ஜூன்9, 2013 அன்று மேற்படி
உரையாடல்கள் அடங்கிய பென்-டிரைவை சிங்கால்
சிபிஐ யிடம் சமர்ப்பித்திருக்கிறார்.
ஆக மொத்தம், இது சிபிஐ க்கும், சிங்காலுக்கும் இடையே
நடந்த விவகாரம்.
மூன்று நாட்களுக்கு முன்னர், கோப்ரா போஸ்ட்
இத்தனை தகவல்களையும் தனது இணைய தளத்தில்
வெளியிட்டிருக்கிறது.
இதனையடுத்து, பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங்
இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் – “அந்த
குறிப்பிடப்பட்ட பெண்ணின் தந்தை,
குஜராத் முதல்வர் மோடியின் நீண்ட நாளைய
குடும்ப நண்பர் என்றும், அஹமதாபாதிற்கு தனியாக
வந்த அந்த பெண்ணுக்கு, அவருக்குத் தெரிந்த சில
நபர்களாலேயே ஆபத்து நேரக்கூடிய வாய்ப்பு இருப்பதால்,
தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி –அந்த பெண்ணின் தந்தை
மோடியிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் தான் அந்த
ஏற்பாடு செய்யப்பட்டது” என்று கூறினார்.
இதை அந்த பெண்ணின் தந்தையும் உறுதி செய்திருக்கிறார்.
2009-ல் தன் மனைவி உடல்நிலை சரியில்லாமல்,
அஹமதாபாதில் ஒரு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்
பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனித்துக்
கொள்வதற்காக, பங்களூரிலிருந்து வந்த தன் மகள்
சில வாரங்கள் ஒரு ஓட்டலில் தங்கி இருக்க வேண்டி
இருந்தது. இரவு நேரங்களில் கூட மருத்துவமனைக்கு
தனியாகச் சென்று வர வேண்டிய சூழ்நிலையில் இருந்தாள்.
மோடி தன் நீண்ட நாள் குடும்ப நண்பர் என்கிற் முறையில்
அவரிடம் தன் மகளின் பாதுகாப்புக்கு உதவி செய்யுமாறு
தான் தான் கேட்டுக்கொண்டதாக அவர் கூறி இருக்கிறார்.
அதற்குள்ளாக- காங்கிரஸ் கட்சியின் பெண் அமைச்சர்கள்
திருமதி ஜெயந்தி நடராஜனும், கிரிஜா வியாஸ்,
ரீட்டா பஹுகுணா ஆகியோரும் அவசரமாக ஒரு எமர்ஜன்சி
பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தனர்.
“நரேந்திர மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு எந்த
சுதந்திரமும் இல்லை. தனியாக நடமாட முடியவில்லை.
இளம்பெண்களின் போன்களை ஒட்டுக்கேட்கிறார்கள்.
24 மணிநேரமும் ஒரு பெண்ணின் செயல்களை
போலீஸ் ஒற்றர்களை வைத்து மோடி உளவு பார்க்கிறார்.
ஒரு இளம் பெண் யாருடன் வெளியில் போகிறார்,
யாரைச் சந்திக்கிறார், யாருடன் பேசுகிறார் – அவரது
படுக்கை அறை, பாத்ரூம் கூட அவர்களின் பார்வையிலிருந்து
தப்பவில்லை” என்கிற அளவில் தாக்குதல்.
“அந்த இளம்பெண்ணின் போன் உரையாடல்களை
ஒட்டுக்கேட்கும் அதிகாரத்தை இவர்களுக்கு எந்த சட்டம்
கொடுக்கிறது ? மோடி எல்லா சட்டங்களையும் மீறி
எதேச்சாதிகாரமாக நினைத்ததை எல்லாம் செய்கிறார்”.
“உடனடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரை வைத்து
முழு அளவில் விசாரணை நடத்தி அனைத்து விவரங்களையும்
வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான
தண்டனை அளிக்க வேண்டும்.”
“பெண்கள் அனைவரும் கிளர்ந்து எழ வேண்டிய
விஷயம் இது. நாட்டிலுள்ள அனைத்து மகளிர்
அமைப்புகளும் தீவிர போராட்டத்தில் இறங்க வேண்டும்.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் நிலையிலிருந்து
பாஜக அகற்றும் வரை போராட வேண்டும்”
-இது காங்கிரஸின்
மேற்படி மகளிர்கள் அடங்கிய
அணியின் டிமாண்ட்.
(குறிப்பு – குற்றச்செயல் நிகழக்கூடும் என்கிற நிலையில்
டெலிபோன் செய்திகளை இடைமறித்து ஒட்டுக்கேட்க
சட்டம் போலீசை அனுமதிக்கிறது – அந்த மாதிரியான
தருணங்களில் அந்த செயல் சட்ட மீறல் அல்ல.
kidnapping, ransom, blackmailing போன்ற
நிகழ்வுகளில் போலீஸ் குறுக்கிட்டு ஒட்டுக்கேட்பதையும்
செயல்படுவதையும் நடைமுறையில் பார்த்திருக்கலாம் !
ஒரு வேளை இந்தப் பெண் கடத்தப்பட்டு இருந்தால் ..?
மேலும், ஒட்டுக்கேட்டதோ, வேவு பார்த்ததோ –
சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்புக்காக, அதுவும் அவரது
குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி தான் என்று
வரும்போது – இதை சட்டவிரோதம் என்று
எப்படி சொல்வது ?)
மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி இன்னும் ஒரு படி
மேலே போய் –
“நரேந்திர மோடியின் செயல்கள் ஒருவரின்
படுக்கை அறைக்குள் எட்டிப்பார்ப்பது போன்றது.
தங்கள் மனைவி மற்றும் பெண்கள் இத்தகைய
நடவடிக்கைகளுக்கு உட்பட இந்த நாட்டு மக்கள்
ஓட்டுப் போடப்போகிறார்களா ?”
என்கிற அளவிற்கு போய் விட்டார்.
(ஏற்கெனவேயே –
அமெரிக்கர்கள் கடந்த 10 வருடங்களாக நம்
படுக்கையறையில்( மணீஷின் படுக்கையறையையும்
சேர்த்து தான் ! ) நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு
தானிருக்கிறார்கள் என்பதையும்,
அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேச வக்கில்லாத
அரசாங்கத்தின் பிரதிநிதி தான் மணீஷ் என்பதையும்
அவர் மறந்தாலும், நாம் மறக்க முடியாதே !)
இதற்கு பதிலளிக்கும்போது, பாஜகவின்
மீனாட்சி லேகி கேட்டார் –
“பெண்ணின் தந்தைக்கும், கணவனுக்கும்,
சகோதரனுக்கும் உள்ளதைவிட ஜெயந்தி நடராஜனுக்கு
இதில் அதிக அக்கரை ஏற்பட்டது எப்படி ?
இதில் தங்கள் உரிமை மீறப்பட்டதாக யாராவது புகார்
கொடுக்க வேண்டுமென்றால் – அது அந்தப் பெண்ணாக
மட்டும் தான் இருக்க முடியும். அந்தப் பெண்ணே
தன் தந்தை செய்தது தன் பாதுகாப்பிற்காகவே என்று
கூறி விட்டார். இதற்கு மேல் அந்தப் பெண்ணின்
தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிட காங்கிரஸ் கட்சிக்கு
என்ன உரிமை இருக்கிறது ?” என்று கேட்டார்.
இங்கே சில விஷயங்கள் யோசிக்கப்பட வேண்டிய
நிலையில் இருக்கின்றன.
-“கோப்ரா போஸ்ட்” இணைய தளத்தின் தரம் என்ன ?
இந்த புனைவை அது வெளியிடுவதன் பின்னணி என்ன ?
காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும் அதற்கும் உள்ள
தொடர்பு என்ன ?
– 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தொலைபேசி
உரையாடல்களை அந்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.சிங்கால்
ஏன் பதிவு செய்திருந்தார் ? 4 வருடங்களாக அவற்றை
எங்கே பாதுகாத்து வைத்திருந்தார் ?
அவரது அலுவலகத்திலா? வீட்டிலா ?
– 4 ஆண்டுகளுக்கு முன்னதான அந்தப் பதிவுகளை
பத்திரமாகப் பாதுகாத்து, 2013 ஆம் ஆண்டு,
சிபிஐ அவரை வெளியில் விட்டவுடன், கொண்டு போய்
கொடுத்ததன் பின்னணி என்ன ? சிபிஐ க்கும் அவருக்குமான
understanding என்ன ?
– அவர் கைதாகி உள்ளே போன வழக்கிற்கும் இந்த
உரையாடல்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில்
இதை கொண்டு போய் சிபிஐ யிடம் கொடுக்க வேண்டிய
அவசியம் என்ன ?
சிபிஐ யிடம் அவர் கொடுத்த பென்-டிரைவின் பிரதி
அவரிடமும், சிபிஐ யிடமும் மட்டுமே இருக்கும்.
எனவே கோப்ரா போஸ்ட்டுக்கு இந்த இருவரில்
ஒருவரிடமிருந்து மட்டுமே அது கிடைத்திருக்கிறது.
இந்த தகவல் வெளிவருவதால் ஆதாயம்
பெறக்கூடியவர்கள் யார் ?
காங்கிரஸ் தலைமை மட்டும் தானே ?
யார் சொன்னால் சிபிஐ கேட்கும் ?
அப்படியானால் –
இந்த புனைவு வெளிவரக் காரணம் காங்கிரஸ் கட்சியாகத்
தானே இருக்க முடியும் ?
நரேந்திர மோடியின் மீது காங்கிரஸ் கட்சி வரிசையாக
-character assasination -தாக்குதல்களைத்
தொடுத்திருப்பது புரிகிறது.
வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களை
சந்திக்கும் முன்னரே –
நரேந்திர மோடியை களத்திலிருந்து
அப்புறப் படுத்தும் முயற்சியில்,
அதுவும் சிபிஐ துணையுடன்,
காங்கிரஸ் கட்சி படுதீவிரமாக ஈடுபட்டிருப்பது
கண்கூடாகவே தெரிகிறது !



CBI உதவியுடன் இனி வரும் நான்கு மாதங்களுக்கு காங்கிரசு அரசு என்னன்ன உபாயங்கள் கடைப்பிடிக்க உள்ளதோ. வெட்கம், வெட்கம். மீனாட்சி லகே இது குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக அறிகிறேன். ஆனாலும் நமது அரசியல் ஏன் இவ்வாறு தரம் தாழ்ந்து ஆளும் கட்சியால் கொண்டு செல்லப் படுகிறது
இதில் தவறென்ன இருக்கிறது ?
இவர் மட்டும் அல்ல. வேறு எந்த தந்தை கேட்டிருந்தாலும் இந்த உதவி போலீஸ் மூலம் கிடைத்திருக்கும். உதவி கேட்டவர் முதல்வர் மோடிக்கு தெரிந்த நண்பராக இருந்ததால் கூடுதல் அக்கரை எடுத்துக் கொண்டு செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் பெரிது படுத்த இதில் தவறேதும் இல்லை. தவறான நோக்கத்துடன் போலீஸ் இந்த காரியத்தை செய்திருந்தால் தான் தவறு.
காங்கிரஸ் கட்சி தேர்தல் வருவதற்குள் இன்னும் இதுபோல நிறைய கதைகளை உருவாக்கும்.
Definitely it is wrong. If you really want to help you should give her enough protection but snooping should have been avoided.
Dear KM Sir,
If you observe the happenings in the political scenario in the last few months. One thing is very sure. Anything that congress does – giving statements, passing bills, taking actions, or not taking action anything they say or do in any topic any problem or issue- It is not helping them and it turns against them. You take any issue – it turns out against congress or scores negative points. This is because we don’t have a strong leader , a decisive leader, someone who is assertive and affirmative and a quick decision maker. and that’s where Modi fills in the space. I think we should give a chance to him. if BJP gets 200+ seats on its own, then next 1 decade is for BJP.
Regards
Srini
சில கேள்விகள்
செய்தியின் நம்பகத்தன்மை ஒரு புறம் இருக்கட்டும்.
ஒரு முதல்வர், தனிப்பட்ட நபருக்காக அரசு துறையை பயன்படுத்தியது சரியா ?
தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் என்று கவனம் செலுத்தினால், இது எல்லா மட்டத்திலும் சலுகைகளாக பரவிடுமே ?
இம்மாதிரியான விசயங்களுக்கு தனியார் துப்பறியும் நிறுவனம் நிறைய உள்ளதே.
Every one is part of public she have posiblities to get direct help so that she got it.
Every one have rights to get protection from govt in critical situation.
dirty politics