துக்ளக் ஆசிரியர் “சோ” செய்வது மனசாட்சி இல்லாத – வக்கீலின் வெறும் வறட்டு வாதம்…

துக்ளக் ஆசிரியர் “சோ” செய்வது மனசாட்சி
இல்லாத – வக்கீலின் வெறும் வறட்டு வாதம்…
தமிழ் நாட்டுக்கு 3 பேர். ஹிந்து ராம், டாக்டர் சுப்ரமணியன்
சுவாமி, துக்ளக் “சோ”.இவர்கள் 3 பேருமே எப்போதும்
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாகவே பேசுபவர்கள்.
இதில் முதல் இரண்டு பேரும் ராஜபக்சேவுக்கு
சொந்த முறையில் நெருக்கமானவர்கள்.அந்த நெருக்கத்தின்
மூலம் பல ஆதாயங்களையும் பெறுபவர்கள்.

ஆனால் ஆசிரியர் சோவை இவர்களுடன் சேர்க்க முடியாது.
அவர் தனிப்பட்ட முறையில் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்
அல்ல. ஆதாயம் பெறுபவரும் அல்ல.

cho

– பல ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப்புலிகள்
ஆயுதமேந்தி -தீவிரமாக இயங்கி வந்த நிலையில்,
அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை “சோ” கொண்டிருந்தது புரிந்து கொள்ளக்கூடியதே.

ஆனால் – விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டு விட்ட இன்றைய நிலையிலும்,
யதார்த்தத்திற்கு மாற அவரது ஈகோ இடம் கொடுக்க மாட்டேனென்கிறது போலும். மனசாட்சியை ஒதுக்கி வைத்து விட்டு, தான் எடுத்துக் கொண்ட வழக்குக்கு சாதகமாகவே வறட்டுத்தனமான வாதாடும் ஒரு வக்கீலைப் போலவே பேசிக்கொண்டிருக்கிறார்.

லட்சக்கணக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்டு விட்ட
நிலையிலும், 90,000 பெண்கள் விதவைகளாக்கப்பட்டு வீடிழந்து, பிழைக்கும் வழி தெரியாமல் பாதுகாப்பற்ற
நிலையில் அநாதரவாக நிற்கும் இன்றைய
நிலையிலும் –
திரும்பத் திரும்ப வறட்டுத்தனமாக வாதம் செய்து கொண்டு,
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், கொலைகார ராஜபக்சே
அரசுக்கு சாதகமாகவே பேசிக்கொண்டிருக்கிறார்.

இன்றைய தினம் வெளிவந்துள்ள இந்த வார “துக்ளக்”
இதழில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று
தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி தீவிரமாக
எதிர்க் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதற்காகவென்றே எழுதியுள்ள தலையங்கத்தில் -அவர்
கூறும் சில கருத்துக்களும், அதுகுறித்த நமது மறுப்புகளும்
கீழே –
———–
துக்ளக் –

“விடுதலைப்புலிகளை ஒடுக்கியபோது, நிகழ்ந்த (போரில்)
மோதல்களில் இலங்கை எல்லா மனித உரிமைகளையும் மீறியது. அப்போது நடந்த கொடூர நிகழ்ச்சிகளின் காரணமாக
இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு ‘போர்க் குற்றவாளி’.
சர்வதேச நீதிமன்றத்தின் அவர் விசாரிக்கப்பட வேண்டும்.
இப்போதும் கூட இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
இந்த காரணங்களினால்,இலங்கையில் நடைபெறுகின்ற
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்திற்கு
இந்தியாவின் சார்பில் யாரும் போகக்கூடாது” என்று
தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கடும் ஆட்சேபத்தை
எழுப்பியுள்ளன.

விடுதலைப்புலிகள் நிகழ்த்திய மோதல்களில் தமிழர்களை,
தமிழ்ச்சிறுவர்களை, கேடயமாகப் பயன்படுத்தினர். அங்கு
நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி இங்கு யாரும்
பேசவில்லை என்றாலும், இந்த காரணத்தால தான்
இலங்கை ராணுவம் பல சிவிலியன்களை கொல்ல நேர்ந்தது
என்பது மறுக்க முடியாதது. மோதல் முடிந்த பிறகும்
ராணுவத்தினரின் அத்துமீறல்கள் நடந்திருந்தால் –
அவை விசாரணைக்கும் தகுந்த நடவடிக்கைக்கும் உரியவை.

நாம் – விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழித்து ஒழிக்க்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசே கூறிக்கொள்ளும்போது, யாரைப் போய்
அவர்கள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி கேட்க
வேண்டுமென்று சோ விரும்புகிறார் ?

மேலும், இது எந்த விதத்தில் இலங்கையின் அரசு
தரப்பிலான பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் ?
பெண்களின் மீதும், குழந்தைகளின் மீதும், ஆஸ்பத்திரிகளின்
மீதும் கூட கொத்து கொத்தாக விமானத்திலிருந்து
குண்டு போட்ட கயமையை எந்த விதத்தில் நியாயப்படுத்த
முடியும் ? போர் அரங்கில் செஞ்சிலுவைச் சங்கத்தைக்கூட செயல்படுத்த விடாமல் துரத்தியதை சோ நியாயப்படுத்த முடியுமா ?

போர் முடிந்த பிறகும், தமிழர்களுக்கு இத்தனை இழப்புகள்
ஏற்பட்ட பிறகும், நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும்,
இன்னமும் தமிழ்ப்பகுதிகளில் சகஜ நிலை ஏற்படவில்லையே.
குடியிருப்புகளிடையே இரவு பகலாக ராணுவம் நடமாடுகிறதே.
கல்யாணம், காதுகுத்து சடங்குகளுக்கு கூட ராணுவத்தினரின்
அனுமதியோடு, அவர்களின் கண்காணிப்பிற்கிடையே தானே
நடத்த வேண்டி இருக்கிறது ? தமிழர்களின் குடியிருப்பு
மற்றும் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதே !

போர் முடிந்தாகி விட்டது என்றால் ராணுவம் பேரக்ஸுக்கு
திரும்புவது தானே உலக வழக்கம். அதையும் மீறி
இங்கு மட்டும் இன்னும் சிவிலியன்களை ராணுவத்தின்
கண்காணிப்பில் வைத்திருப்பது ஏன் ?

ஆதரவற்ற பெண்கள் ராணுவத்தின் மிருக இச்சைக்கு
பலியாவதும், ஆண்கள் கடத்தப்படுவதும் இன்றும்
நடக்கிறதே. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட காணாமற்
போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறதே !

இலங்கையில் போர் முடிந்த பிறகும், தமிழர் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன; போர்க் குற்றங்களுக்கு உரிய விசாரணைகள் நடைபெறவில்லை.
குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்று
வெளிப்படையாகவே குற்றம் சாட்டி –
கனடா நாட்டு பிரதமர் காமன்வெல்த் மாநாட்டை
புறக்கணித்திருக்கிறார்.
இன்று மொரீஷியஸ் நாட்டின் பிரதமரும் இதே
காரணங்களுக்காக மாநாட்டை புறக்கணிப்பதாக
அறிவித்திருக்கிறார்.
பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் காமன்வெல்த்
மாநாட்டில் இந்த பிரச்சினைகளை எழுப்புவோம் என்று
வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில்
நவீ பிள்ளை ஏற்கெனவே இதே குற்றச்சாட்டுகளை
முன் வைத்திருக்கிறார்.

இத்தனைக்கும் பிறகு இன்னமும் அதென்ன –
“அத்துமீறல்கள் நடந்திருந்தால் விசாரணைக்
குரியவை ” என்று சப்பைக்கட்டு ?

இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி வெளிப்படையாக
இந்தியா இதுவரை பேசி இருக்கிறதா ?
——–
துக்ளக்-
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
“இந்தியப் பிரதமர் காமன்வெல்த் கூட்டத்தில் கலந்து
கொள்ள வேண்டும். அவர் யாழ்ப்பாணத்திற்கும் வர
வேண்டும்” என்று அழைத்திருக்கிறார். தமிழ் மாகாண
முதலமைச்சரே இப்படிக் கூறியுள்ளபோது, இந்தியா
இந்த காமன்வெல்த் கூட்டத்தை புறக்கணிக்கத் தேவையில்லை.

நாம் –
சல்மான் குர்ஷித்தோ, நாரயணசாமியோ இப்படி
சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஆனால் சோ
இப்படி பொய் பேசக்கூடாது.

விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு
வர வேண்டும் என்று தான் அழைப்பு விடுத்தார்.
காமன்வெல்த் கூட்டத்திற்கு வரும்போது வாருங்கள்
என்றோ, காமன்வெல்த் கூட்டத்திற்கு வருகை தாருங்கள் என்றோ கூறவில்லை. அந்த அழைப்பு “யாழ்ப்பாணத்திற்கும்” அல்ல. “யாழ்ப்பாணத்திற்கு” தான்.

————
சோ –
இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது நடக்க இந்திய இலங்கை
உறவு சீராக இருப்பது அவசியம். அந்த மாதிரி ஒரு
சூழ்நிலை புறக்கணிப்பால் ஏற்பட்டு விடக்கூடாது.

ஏன் ? மாநாட்டிற்கு போகவில்லை என்றால்
இனிமேல் நம்முடன் பேச மாட்டோம் என்று இலங்கை
பேச மறுத்து விடுமா ? மறுக்க முடியுமா ?
மறுத்தால் – பணிய வைக்க வழிகள் இல்லையா ?
யாருக்கு பூச்சாண்டி காட்டுகிறார்கள் ?

இந்தியா – இலங்கையை “நட்பு நாடு” என்று பாசத்தோடும்
நேசத்தோடும் அழைத்துக் கொண்டிருக்கிறபோதே –
ராஜபக்சே இந்தியாவிற்கு எதிராக சீனாவோடும்,
பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலவிக்க்கொண்டிருக்கிறாரே –
அதைத் தடுக்க முடிந்ததா இந்த தொடைநடுங்கிகளால் ?

—————

இவை எல்லாவற்றையும் விட-

நாள்தோறும் தமிழக மீனவர்களை அடித்து உதைத்து,
துன்புறுத்தி, துப்பாக்கியால் சுட்டு, வலைகளை அறுத்து, படகுகளையும் மீனவர்களையும் சிறைப்பிடித்து அட்டகாசம்
செய்யும் ராஜபக்சே அரசை வெளிப்படையாகக் கண்டித்து
இந்திய அரசு ஒரு வார்த்தை சொன்னதுண்டா இதுவரை ?

மேலும் – அதென்ன தமிழக மீனவர்கள் ?
அவர்கள் இந்திய மீனவர்கள் இல்லையா ?
வெளிநாட்டினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டால்
பதிலடி கொடுக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு
இல்லையா ?

ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை
இலங்கை தொடர்ந்து மறுத்தால், கச்சத்தீவு ஒப்பந்தத்தை
ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று
ஒரு பேச்சுக்காகவாவது இந்திய மந்தி ரிகள் சொல்லி
இருக்கிறார்களா ?

காமன்வெல்த் கூட்டத்தை இந்தியா பகிஷ்கரிக்க
இந்திய(தமிழக்) மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும்
ஒரு காரணம் மட்டுமே கூட போதுமே !

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to துக்ளக் ஆசிரியர் “சோ” செய்வது மனசாட்சி இல்லாத – வக்கீலின் வெறும் வறட்டு வாதம்…

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்பமுடியுமா?
    ego மிகவும் தவறான பாதைக்கே நம்மை அழைத்துச்செல்லும் என்பதற்கு இவர் ஒரு சரியான உதாரணம்.
    போருக்கும் இன அழிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள விரும்பாதவர்.

  2. ராமச்சந்திரன் பிரபு's avatar ராமச்சந்திரன் பிரபு சொல்கிறார்:

    திரு.காவிரிமைந்தன்,

    திரு சோ அவர்கள் ஒன்று உண்மை நிலையை உணரவில்லை-
    அல்லது வேண்டுமென்றெ ஈகோ காரணமாக பிடிவாதமாக தன் நிலையிலேயே நிற்கிறார்.

    வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தங்களது
    நிலையை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
    இன்றைய ஆன்லைன் உதயனில் வந்துள்ள செய்தியை
    இத்துடன் தந்துள்ளேன். தயவுசெய்து இதனை பதிப்பியுங்கள்.

    //கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும்

    15ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாக உள்ள பொதுநலவாய

    தலைவர்கள் மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து

    கொள்ளாது.

    எனினும் எமக்கான அழைப்புக் கிடைத்தாலும்

    கிடைக்காது விட்டாலும் கூட பொதுநலவாய மாநாட்டில் கலந்து

    கொள்வதில்லை என கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே

    அதனடிப்படையிலேயே நாம் செயற்படவுள்ளோம் என்றார்.//

    //அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம்

    முடிவடைந்து 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மக்களுக்கு

    தீர்வு கிடைக்கவில்லை. அத்துடன் பயங்கரவாதம் நாட்டில்

    அழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில்

    இராணுவத்தினருடைய பிரசன்னம் வடக்கில் அவசியமற்றது.

    எனவே இவர்களது பிரசன்னத்தினால் சிவில் வாழ்க்கை

    பாதிக்கப்படுகின்றது எனவே அவர்களை அரசாங்கம் மீள

    எடுக்கவேண்டும்.

    குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகள் தற்போது

    இடிக்கப்பட்டு வருகின்றது. அதனை நாம் ஜனாதிபதிவரை

    அறிவித்துள்ளோம். நாம் தற்போது நாம் போராடிக்

    கொண்டிருப்பது சாதாரணமானவர்களுடன் அல்ல

    இராணுவத்தினருடனேயே. எனவே படிப்படியாக எமது

    நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    எமது நாடு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நிலையிலும் அன்று தொடரக்கம்

    இன்று வரை தமிழ் மக்கள் அடக்கப்பட்டுக் கொண்டே

    வருகின்றனர் எனவே உள்நாட்டில் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு

    காணமுடியாத சூழலில் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை

    சர்வதேச நாடுகளிடம் கூறிக்கொண்டிருக்கின்றோம். அதன்படி

    கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில்

    கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள வெளிநாட்டு

    இராஜதந்திரிகளிடம் எமது பிரச்சினைகளை

    தெளிவுபடுத்தியுள்ளோம்.//

    http://onlineuthayan.com/News_More.php?

    id=864552442213605440#sthash.CD6zqmBq.dpuf

    நன்றி.

    ராமச்சந்திரன் பிரபு

  3. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    இவர் எழுதியவை எனக்கு எந்த விதத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இதை வெறும் வக்கீலின் வறட்டு பிடிவாதமாக மட்டும் கருத முடியவில்லை. பயம் கலந்த உள்நோக்கம் இருப்பதாகவே படுகிறது. என்னுடைய நண்பர் வட்டத்தில் தவறாது துக்ளக் படித்து இவர் எழுதியவற்றை வேத வாக்காக கொண்டு விவாதிக்கும் ஒரு கூட்டம் உண்டு. அடுத்த சில நாட்களுக்கு அவர்களுடன் மல்லுகட்ட உங்கள் கட்டுரை மிகவும் பயன்படும் என்பதால் உங்களுக்கு மிக்க நன்றிகள்.

  4. Paramasivam's avatar Paramasivam சொல்கிறார்:

    சோ அவர்களுக்கு channel4 பற்றி தெரியும், பார்த்திருப்பார் என நினைக்கிறேன் . இருப்பினும் இவ்வாறு கூறினால் ………..

  5. BC's avatar BC சொல்கிறார்:

    சோ அவர்களுக்கு channel4 பற்றி தெரியும் பார்த்திருப்பார் என நினைக்கிறேன் . இருப்பினும் இவ்வாறு கூறினால் ………..

    channel4 காட்டபட்ட காணொளி போலி அல்லது உண்மை என்பதிற்கு அப்பால் இது மாதிரியான பாலியல் வன் கொடுமைகள் பல தமிழ்நாட்டிலேயே நிறைய பொலிஸ்சாரினால் மேற்கொள்ளபட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிலரிடமே தமிழ்நாட்டு பொலிஸ் பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளனர். இப்படி உண்மை நிலைமை இருக்க channel 4 வைத்து நாடகமாடவோ,தூண்டி விட்டு அரசியல் செய்யவோ சோ போன்ற நேர்மையார்களால் இயலாது.

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      ஆக நீங்கள் சொல்ல வருவது போர்குற்றம், இன அழிப்பு போன்றவற்றுக்காக இலங்கை அதிபரை சர்வ தேச நீதி மன்றத்தில் நிறுத்துவதாயின், அதே போன்ற குற்றங்களுக்காக தமிழக காவல் துறையின் பொறுப்பாளர் என்ற வகையில் தமிழக முதல்வரையும் சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும். (I guess Mr Venkatramani’s legacy lives on… (To be taken as a compliment))

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        நண்பர்களே,

        நமது மௌன சிங் விடுத்திருக்க வேண்டிய
        அறிக்கைக்கு பதிலாக –

        இன்றைய தினம் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில்
        பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் அவர்கள் விடுத்துள்ள
        ஒரு அறிக்கையின் சில பகுதிகளை (கீழே) படித்தாவது
        திருப்திப் பட்டுக்கொள்வோம் –

        பிரிட்டிஷ் பிரதமரின் அறிக்கையிலிருந்து
        சில பகுதிகள் –

        And together we must say clearly to
        the government of Sri Lanka —
        our hosts — that

        there must be
        accountability for the past and
        respect for human rights today.

        There are those who have asked
        whether it is right to go to Sri Lanka
        for this summit

        given the current situation.
        By going to Colombo
        i believe we have an opportunity
        to raise our concerns
        clearly and directly —

        and to focus the eyes of the world
        on Sri Lanka.

        Four years on from the end of the

        civil war and defeat of the ‘Tamil Tigers’,

        a brutal terrorist organisation, there has

        been nowhere near enough improvement.

        We need to see more progress:
        genuine freedom of expression and
        a free media, an end to the intimidation
        of journalists and

        human rights defenders,
        action to stamp out torture, demilitarisation of the north and

        reconciliation between communities.

        And of course we need to see a
        thorough investigation into alleged
        war crimes, and

        if it does not happen rapidly,
        an international independent
        investigation will be needed.
        This won’t always make for

        easy conversations, but

        diplomacy isn’t

        about ducking difficult decisions.
        We will only protect the values
        that are precious to us
        if we take action when they are at stake.

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

      • BC's avatar BC சொல்கிறார்:

        தமிழக காவல் துறையின் பொறுப்பாளர் என்ற வகையில் தமிழக முதல்வரையும் சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும். அப்படி நான் சொல்ல வரவில்லை. தமிழ்நாட்டிலேயே பொலிஸ்சாரினால் பல பாலியல் வன் கொடுமைகள் மேற்கொள்ளபட்டுள்ளன. ஆனால் நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். அதை இலங்கையர் ஆகிய நாம் விளங்கி கொள்கிறோம் ஏனெனில் உங்களுக்கு எப்போதுமே இலங்கை தமிழர்கள் மீது மட்டுமே அக்கறை .ஆனால் இலங்கையில் இருந்து வந்த அகதி தமிழ் பெண்கள் மீதும் தமிழ்நாட்டு பொலிஸ் பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளனர்.அதையும் நீங்கள் கண்டு கொள்வது இல்லை. ஆனால் channel 4 படம் காட்ட அந்த பெண்ணின் படத்தை பெரிதாக கலர் கலராக தமிழ்நாடு தெரு சுவர்களில் ஒட்டி இலங்கையில் தமிழ் பெண் பாலியல் கொடுமை என்று அரசியல் செய்கிறீர்கள்.

        • சாந்தன்'s avatar சாந்தன் சொல்கிறார்:

          தங்கை கற்பழிக்கப்பட்டதை தட்டிக்கேட்டவனை எனது அக்கா கற்பழிக்கப்பட்டபோது நீ கேட்கவில்லை இப்போ வந்துவிட்டாயா எனக் கேட்கும் ‘வக்கில்லாத’ அண்ணன் ஒருவரைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த அண்ணனை ’ஈன்றபொழுதில் பெரிதுவந்து’ பெற்ற ஆத்தாளைப் பார்த்திருக்கிறீர்களா? அவனின் அப்பன் எப்படி இருப்பான் என நினைத்ததுண்டா?
          இவற்றுக்கெல்லாம் உதாரணம் BC !

          தமிழ்நாட்டில் நடந்த ஒரு குற்றச்செயலை இன அழிப்புடன் ஒப்பிடும் அறிவிஜீவி, கற்பழிப்பையும் கொலையையும் வீடியோ எடுத்து களிப்புறும் ஆமியை தமிழ்நாட்டு குற்ரவாளியுடன் ஒப்பிடும் கயமைத்தனம், உலகின் போர்க்குற்ர விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யலாம் என கிடைக்கும் வழிகளிலெல்லாம் விவாதப்பொருளையே திசைதிருப்பும் கள்ளம் எல்லாம் ஒன்று சேர ’ஈன்றபொழுதில் பெரிதுவந்து’ பெற்ற மகான் இவர்.
          இவரின் மகளுக்கு இந்நிலை வரக்கூடாது!

        • சாந்தன்'s avatar சாந்தன் சொல்கிறார்:

          இவரைப்போன்றோர் இன்று யாழ்ப்பாணத்தில் ஒரேமாதிரி அச்சிட்ட போஸ்ரருகளுடன் நின்று பிரித்தானிய காலனித்துவ கால குற்ரங்களை விசாரணை செய்ய வேண்டும் எனக் கோசம் போட்டதையும் சாதாரண தமிழ்மக்களின் குரல்களையும் ஒலிபரப்புச் செய்கிறார் கேளுங்கள்.

          சுட்டி ….

          • BC's avatar BC சொல்கிறார்:

            திருவாளர் சாந்தன் என்பவரின் கூட்டம் அமெரிக்காவில் இலங்கை தமிழர் பிணங்களையும் பாதிக்கபட்ட பெண்கள் படத்தையும் காட்டி பிழைத்து கோடிக்கணக்காக டொலர் சம்பாதித்து கோடீசுவரர்கள் ஆகிய கூட்டம்.இன்று முன்பு போல் டொலர் சுருட்ட முடியவில்லையே என்ற விரக்தியில் திருவாளர் சாந்தன் அவர்கள் இருக்கிறார்.

          • சாந்தன்'s avatar சாந்தன் சொல்கிறார்:

            //…திருவாளர் சாந்தன் என்பவரின் கூட்டம் அமெரிக்காவில் இலங்கை தமிழர் பிணங்களையும் பாதிக்கபட்ட பெண்கள் படத்தையும் காட்டி பிழைத்து கோடிக்கணக்காக டொலர் சம்பாதித்து கோடீசுவரர்கள் ஆகிய கூட்டம்….//

            “…மனசாட்சி இல்லாத – வக்கீலின் வெறும் வறட்டு வாதம்” எனும் தலைப்புக்கு சரியான பின்னூட்டம் இட்டுள்ளார் BC!!!
            கேட்ட கேள்விக்கோ அன்றி சொன்ன கருத்துகளுக்கோ பதில் இல்லை. சும்மா கோடிக்கனக்கான….அமெரிக்க….டொலர் எனும் கயமைத்தன..கள்ளத்தனம் கொண்ட திசைதிருப்பல் கதை அளப்புகள் மட்டுமே இவர்களால் முடியும்!!!!

  6. தமிழ்ச்செல்வன்'s avatar தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

    சோ .. எப்போதும் அப்படித்தான்.

  7. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    Dear sir,
    i am sure that its because of you only.. he behave like this.

    u know that he is cunning fellow.. then why u buy his book and fund him ?

    all tamils like this only… even if they spit tamil fund them.

    if all tamil stop buying hindu, tuklak, dinamalam. .. same day they change thier voice and attitudue.

    becuase money is god for them. they bend before us and beg us.

    its thier character . they bend before rulers for thousand of years. and prise ruler as Lord Vishnu.

    simple rule is.. Lord Vishnu haves lakshmi.. enjoys her… in other words.. those who have laksmi.. is lord.. when lakshmi wont see them .. they beg u..

    dont buy any such stuff .. and if u like to do good to tamil.. spread this message and ask them to stop by all anti tamil books ,, of course then your dream…

    may not in today but tomorrorw things will change .
    will happend …

  8. ssk's avatar ssk சொல்கிறார்:

    இவர்களுக்குகெல்லாம் எதோ வேண்டி உள்ளது ? அது என்ன ? தமிழரை யார் இழிவு செய்தாலும் அதுவே வேண்டும். அதை செய்த ராஜபக்சே என்ற ஈன பிறவியை உயர்த்தி கொண்டே இருப்பார்கள். வேறு எங்கேனும் எது நடந்தாலும் இதே கொள்கை தான் ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.