அதிசய ஆர்ஜுகான் …..
எனக்குப் பிடித்த நாடுகளில் அதி முக்கியமான
ஒன்று நார்வே. நார்வே நாட்டை எனக்குப் பிடிக்க
நிறைய காரணங்கள் இருக்கின்றன – பின்னால் சமயம்
வரும்போது சொல்கிறேன்.
இங்கு சொல்ல வந்தது ஒரே ஒரு வித்தியாசமான
நிகழ்வைப் பற்றி மட்டுமே.
ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த்
அற்புதமான ரசனைக்காரர். அவரது திரைப்படங்களில்,
உலகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள இயற்கையின்
அற்புதங்களை கொண்டுவந்து காட்டி பிரமிக்க வைப்பார்.
“கோ”படத்தைப் பார்த்தபோது, ஒரு பாடல் காட்சியில்
வந்த சில இடங்களைப் பார்த்தபோது பிரமித்துப் போனேன்.
நீண்ட நாட்களாக, அது எந்த இடம் என்று
தேடிக்கொண்டே இருந்தேன்.
இறுதியில்- வேறு ஒரு செய்தி சம்பந்தமான
புகைப்படங்களை தேடிக்கொண்டிருந்தபோது அதை
எதேச்சையாகக் கண்டு பிடித்து விட்டேன்.
முதலில் என்னைக் கவர்ந்த (கே.வி.ஆனந்த்
அறிமுகப்படுத்திய) நார்வே நாட்டின்
இயற்கைக் காட்சிகளில் சில –
அதன் பிறகு நான் சொல்ல வந்த செய்தி.

இது 10-15 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு
வித்தியாசமான நிகழ்வு. உங்களில் பலர் இந்த
செய்தியைக் கேள்விப்பட்டிருக்கலாம்.ஆனால்
இந்த புகைப்படங்களைப் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு.
நார்வே நாட்டில் ஆர்ஜூகான் என்கிற மிகச்சிறிய ஊர்.
மொத்த மக்கள்தொகையே சுமார் 3000 தான்.
நான்கு புறமும் உயரமான மலைச்சிகரங்களால்
சூழப்பட்டு, ஆழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்த இந்த
ஊரின் முக்கியமான குறை – பல நூற்றாண்டுகளாக
மக்கள் அனுபவித்து வந்த அவஸ்தை – நவம்பர் முதல்
மார்ச் வரையிலான 6 மாதங்களுக்கு அவர்கள்
இருக்கும் ஊரில் சூரிய வெளிச்சம் துளிக்கூடவராது.
பகலிலும் இருள் சூழ்ந்து காணப்படும் ! சூரிய வெளிச்சம்
வராததால், பலருக்கு விட்டமின் ‘டி’குறைபாடு வேறு.
பல ஆண்டுகளாக யோசித்து, இறுதியில் அதற்கு
ஒரு தீர்வைக் கண்டு பிடித்து விட்டனர் மக்கள்.
ஊரையொட்டிய மலையின் உச்சியில்,
சுமார் 1300 அடி உயரத்தில் –
ஒவ்வொன்றும் 183 சதுர அடி அளவுள்ள –
மூன்று மிகப்பெரிய ரசம்பூசப்பட்ட –
பிரதிபலிக்கும் கண்ணாடிகளை –
ஹெலிகாப்டர்களில் கொண்டு வந்து இறக்கி,
ஏற்கெனவே அமைக்கப்பட்ட மேடைகளில் நிலைநிறுத்தி
விட்டனர். இந்த கண்ணாடிகளை, சூரிய ஒளி வரும்
திசைக்கு ஏற்ப கம்ப்யூட்டர்களின் மூலம்
திருப்பிக் கொள்ள முடியும். இந்த இயக்கம் முற்றிலும்
சூரியஒளி மற்றும் காற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும்
மின்சக்தியால் செயல்படுகிறது.
இந்த ராட்சத கண்ணாடிகள் சூரிய ஒளியை குவித்து,
இந்த ஊரின் நடுவில் அமைந்துள்ள ஒரு மைதானத்தில்
குறிவைத்து பிரதிபலிக்கின்றன.
ஒரே சமயத்தில் சுமார் 1000 பேர் இங்கு கூடி,
இந்த சூரியவெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சென்றவாரம் முதல் முறையாக இது இயக்கத்திற்கு
வந்தபோது, அந்த ஊர் மக்கள் இந்த இடத்தில் கூடி,
ஆடிப்பாடி, விளையாடி கொண்டாடினர்.
நான் ரசித்த இந்த செய்தியையும், புகைப்படங்களையும்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி கீழே
பதிவிட்டிருக்கிறேன்.
உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களையும்,
குழந்தைகளையும், பெரியவர்களையும் கூட நீங்கள்
இந்த புகைப்படங்களைப் பார்க்கச் செய்யலாம்.
வருடத்தில் 10 மாதங்கள் தகிக்கும் வெய்யிலில்
வெந்து கொண்டிருக்கும் நம் மக்களுக்கு இது ஒரு
விந்தையான காட்சியாக இருக்கும் !

பின்குறிப்பு –
நார்வே நாட்டில் சுமார் 13,000 தமிழர்கள்
வசிப்பதாகத் தெரிகிறது. அவர்களில் சிலர் இந்த
‘விமரிசனம்’ வலைத்தளத்திற்கு அடிக்கடி விஜயம்
செய்வதையும் என்னால் dash-board மூலம்
அறிய முடிகிறது.
நார்வே தமிழர்கள் பற்றி, சில தகவல்களைத்
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அவர்கள் யாராவது என்னைத் தொடர்பு
கொண்டால் மகிழ்வேன் –
மெயில் விலாசம் –
kavirimainthan@gmail.com

















காவிரிமைந்தன்,
உங்கள் ரசனை அற்புதம்.
ராஜகோபாலன்.R.
இதற்க்கு இருவர் முக்கிய காரணமாக இருந்தனர். முதலாவது, சாம் எய்டு (sam eyde). இந்த நகரம் உருவாக காரணமானவர். 1902-இலேயே இப்படி ஒரு திட்டத்தை முன்வைத்தவர். அவர் ஆரம்பித்த கம்பெனி இந்த திட்டத்திற்கு ஒரு ஸ்பான்சர்.. இரண்டாவது, இந்த ஊரில் இருக்கும் மார்டின் அன்டேர்சன். அவர்தான் முன்னின்று இந்த திட்டத்தை வழி நடத்தியவர்.
ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறார்கள்.
என்சைக்ளோபீடியா போல இருப்பீங்க போல பந்து.
அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நார்வே பற்றிய வித்தியாசமான, அரிய தகவல்கள்.
அருமையான படங்கள். நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு காண்பிக்க வேண்டுகிறேன்.
நமது முகநூல் நண்பர் இல கோபால்சாமி பார்க்க வேண்டும்.
அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நார்வே பற்றிய வித்தியாசமான, அரிய தகவல்கள்.
அருமையான படங்கள். நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினருக்கு காண்பிக்க
வேண்டுகிறேன்.
நமது முகநூல் நண்பர் இல கோபால்சாமி பார்க்க வேண்டும்.
இப்போது தான் வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தேன் (?)
நார்வே மக்கள் தொடர்பு(தமிழர்கள்) கொள்கின்றார்களே என்று பார்க்கின்றேன்.
நல்ல சுவாரசியமான பதிவு.பெருமூச்சுதான் வருகிறது.
இயற்கை நமக்கு தந்த அருட்கொடைகளை மிகச்சரியாக பயன்படுத்தினால் விளையும் நன்மைகளை நன்றாக புரிந்துகொண்ட மக்கள் மற்றும் ஆட்சியர்கள்!
நமக்கு இதெல்லாம் ஒரு செய்திமட்டுமே!
இதிலிருந்தெல்லாம் நாம் பாடம் கற்றுக்கொள்ளவேமாட்டோம், சத்தியமாக.
நன்றி காவிரிமைந்தன் ஐயா!
அருமையான படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியைத்தந்தன.
இயற்கையை எவ்வாறு மனித குலம் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி வாழ முடியும் என நம்பிக்கை ஊட்டும் பதிவு.. படங்கள் மிக மிக அருமை. பதிவுக்கு நன்றி
interesting good team work
அருமையான பதிவு, நன்றி காவிரி மைந்தன் அவர்களுக்கு.
excellent posting,thanks a lot
மிக நல்ல பதிவு.
பாராட்டுக்கள்.
அரசியலுக்கு நடுவே இத்தகைய பதிவுகளையும்
அடிக்கடி தொடருங்கள். நன்றி.
ராமச்சந்திரன் பிரபு
pls open the suspense