80 வயதிலும் இப்படி ஆசையா …?
————
இந்த இடுகைக்கு முதலில்
நான் யோசித்த தலைப்புகள்-
“இதற்குத் தானே ஆசைப்பட்டீர்கள் மிஸ்டர் சிங் ?”
“இதற்கு ஆசைப்பட்டு தானா –
அத்தனையும் செய்தீர்கள் மிஸ்டர் சிங் ..?”
“ஒன்பதரை ஆண்டுகளில் என்னவெல்லாம்
பார்த்தீர்கள் மிஸ்டர் சிங் ..?”
“ஆறு மாதத்திற்கு – தேர்தலுக்கு -பிறகு
எந்த நாடு மிஸ்டர் சிங் …?”
மேலே இருப்பது நம் உலகம் சுற்றும் வாலிபர் தான்.
அவரது லேட்டஸ்ட் விஜயம் இந்தோனேஷியா
கடலுக்கு அப்பாலிருக்கும் “ப்ருனே தீவு”.
கையைப்பிடித்துக் கொண்டிருப்பது உலகிலேயே
பெரிய பணக்காரரான –ப்ருனே சுல்தானின்
21வதோ 22வதோ –
மனைவி அல்லது துணைவி.
போன வாரம் அவர் இருந்தது அமெரிக்காவில்.
அடுத்த மாதம் இருக்கப்போவது ரஷ்யாவில்.
ராகுல் காந்தியின் கீழ் பணி புரியத்தயாராக
இருக்கிறேன் என்று சொல்லியும் “நான்சென்ஸ்”என்று
சொல்லி விட்டாரே – பதவியை ராஜினாமா செய்வீர்களா
என்று கேட்டதற்கு –
நான் ஊர் திரும்பிய பிறகு ராகுல்ஜி’யிடம்
எதனால் அப்படிக் கூறினீர்கள் என்று கேட்டு தெரிந்து
கொள்வேன். ஆனால் –ராஜினாமா என்கிற பேச்சுக்கே
இடமில்லை என்று கூறியதன் காரணம் –
பின்னணி என்ன என்று இப்போது இன்னும்
நன்றாகவே புரிகிறது !
கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் இவர் இன்னும்
சுற்றாத/பார்க்காத இடம் அனேகமாக –
அண்டார்டிக்,
ஆர்டிக் துருவங்களும்,
சஹாரா, தார் போன்ற பாலைவனங்களும்,
அமேசான் போன்ற காடுகளும் மட்டும் தான் ..
என்று தோன்றுகிறது !
ஒவ்வொரு தடவையும் இவர் போவது தனியாகவா ?
மனைவி, நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய
நண்பர்கள், பிரதமர் அலுவலக அதிகாரிகள்,
சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் –
செக்யூரிடி, பத்திரிகை/தொலைக்காட்சி துறைகளைச்
சேர்ந்த வேண்டப்பட்டவர்கள் –
(அமெரிக்க பயணத்தில் கூடச்சென்றவர்களில்
சிலரில் – பர்கா தத், சித்தார்த் வரதராஜன் …
ஆகியோரும் அடங்குவர் !! )
-அத்தனை பேருக்கும் பயணம், நட்சத்திர ஓட்டல்களில்
தங்கல், உணவு, போக்குவரத்து, ஊர்சுற்றிப்பார்க்க
வசதி எல்லா செலவுகளும் ….
ஒவ்வொரு பயணத்திற்கும் வித்தியாசமான உடைகள் வேறு –
இந்த வயதில் இப்படி ஒரு கலர் செலக் ஷன் ..!
இந்த உடை நிச்சயம் ரெடிமேடாக கிடைக்காது.
இந்த பயணத்திற்கு முன்னரே இதற்காக
துணி செல்க்ட் செய்து,
தையல்காரருக்கு அளவு கொடுத்து,
ட்ரயல் பார்த்து –
அப்பப்பா – ஒவ்வொரு பயணத்திற்கும்
எவ்வளவு வேலை … !
இவருடைய ஆசைகளை நிறைவேற்ற இந்த நாடு
மிக அதிகமாகவே விலை கொடுத்து விட்டது …
ஆதர்ஷ்,
காமன்வெல்த் கேம்ஸ்,
2 ஜி,
ஹெலிகாப்டர்,
நிலக்கரி சுரங்கங்கள் – etc. etc….
வீரன் பகத் சிங் பிறந்த அதே மண்ணில் தான்
இப்படியும் ஒருவர் பிறந்திருக்கிறார் !
நாடு எக்கேடு கெட்டால் என்ன …
பெரியவர் ஆசைகள் அனைத்தும்
அடுத்த 6 மாதத்திற்குள் நிறைவேறினால் சரி !





ஊமை ஊரை கெடுக்கும்!
பெருச்சாளி வீட்டை கெடுக்கும்.
காங்.நாட்டை கெடுக்கும்.
மஞ்ச கலரு ஜிங்கிசாங், பச்ச கலரு ஜிங்கிசாங்
காடு வா வா ங்குது – நாடு போ போ ங்குது.
இதுக்கு கலர் கலரா சட்டை எதுக்கு ? அதுவும் சர்க்கார் பணத்துல தானே ? புடுங்கணும்,
கோட்டு, சட்டை எல்லாத்தையும் புடுங்கணும். 10 வருஷமா
இவுரு ஜாலியா சுத்தணும்கறதுக்காக அத்தனை பேரையும் கொள்ளை அடிக்க விட்டாரு இல்லையா ? இவுருக்கு பென்ஷனே குடுக்க கூடாது. காவிரிமைந்தன் இன்னும் ஸ்ட்ராங்கா எழுதணும்.,
வாலு போச்சு கத்தி வந்தது.. டும் டும் டும்
கண்பத்,
வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் நாடு இது –
sorry -வந்தவரை எல்லாம் வரவேற்கும்
வலைத்தளம் இது. இதை மட்டும் வரவேற்க
மாட்டோமா என்ன ?
“வால்” ஆனாலும் சரி, “கத்தி”யாக இருந்தாலும் சரி.
இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும் சரி.
எதையும் தாங்கும் இதயம் தான் நமக்கு உண்டே !
என்ன – சுவையாகவும், தொடர்புள்ளதாகவும்
இருந்தால் சரி..!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
//ஒவ்வொரு பயணத்திற்கும் வித்தியாசமான உடைகள் வேறு –
இந்த வயதில் இப்படி ஒரு கலர் செலக் ஷன் ..!
இந்த உடை நிச்சயம் ரெடிமேடாக கிடைக்காது.
இந்த பயணத்திற்கு முன்னரே இதற்காக
துணி செல்க்ட் செய்து,
தையல்காரருக்கு அளவு கொடுத்து,
ட்ரயல் பார்த்து –
அப்பப்பா – ஒவ்வொரு பயணத்திற்கும்
எவ்வளவு வேலை … !//
That is the ASEAN tradition. Every visiting head of state even the Chinese, US premiers wear such exotic costume of the host nation. India being trading partner and had been invited for this conference, i don’t see anything wrong in his costume. But it is just about that. It is not an endorsement of மண்ணு மோகன் சிங்.