ப.சி. பிரதமர் ஆவாரா ? ராகுலையும்
திருமதி சோனியாவையும் கேட்கச் சொல்கிறார்….!!

அமெரிக்கா புறப்படும் வேளையில் –
நிதானமாகவே – நல்ல மூடில்,
நல்ல யோசனைக்குப் பிறகு –
ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு
ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் திரு ப.சிதம்பரம்.
பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் –
நரேந்திர மோடி ஒன்றும் பெரிய
தலைவர் அல்ல – அவர் வெறும் மீடியாவால்
உருவாக்கப்பட்ட தலைவர் என்று கூறுகிறார்.
வாஜ்பாயையே தோற்கடித்த காங்கிரசுக்கு
மோடி ஒரு சவாலே அல்ல என்கிறார்.
அடுத்து எதிர்காலத்தில் ப.சிதம்பரம் பிரதமர்
ஆவாரா என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது –
எனது கட்சி, அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான்
(கவனிக்கவும் – அடுத்த பிரதமர் அல்ல –
அடுத்த தலைவர்…!) என்று உறுதியாக
அறிவித்து விட்டது. இளைஞர்களிடம் அதிகாரத்தை
ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே
நான் கருதுகிறேன்.
அடுத்ததாகக் கேட்கப்பட்ட கேள்வி –
ஒரு வேளை ராகுல் காந்தியும் – தன் அன்னை
சோனியா காந்தியைப் போல திரைக்குப் பின்
செயல்படவே விரும்பினால் –
(அதாவது பிரதமராக அல்லாமல் –
கட்சித் தலைவராக )
நீங்கள் பிரதமர் பொறுப்பை மகிழ்வுடன்
ஏற்றுக் கொள்வீர்களா ?
ப.சி. அவர்களின் பதில் –
உங்கள் கேள்வியில் ஏகப்பட்ட “ஒருவேளை”கள்
இருக்கின்றன. நீங்கள் இந்த கேள்வியை
உங்கள் கேள்வியிலேயே அடங்கியுள்ள ராகுல்
மற்றும் திருமதி சோனியா ஆகியோரிடம் தான்
கேட்க வேண்டும்.
மீண்டும் அடுத்த கேள்வி –
உங்களுக்கு பிரதமர் பதவி அளிக்கப்படுமேயானால்
நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று
சொல்கிறீர்களா ?
இதற்கு -சுற்றி வளைத்து – சொல்லப்பட்ட பதில் –
பயணம் செய்வதிலும், படிப்பதிலும்,
எழுதுவதிலும் நேரத்தை செலவிட
நான் முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன் …!
(அதாவது திருமதி சோனியாவைப் போல் –
அடுத்து ராகுல் காந்தியும் பிரதமர் பதவியை
ஏற்காமல் கட்சித் தலைவராகவே இருக்க
பிரியப்பட்டால் –
தான் அடுத்த ‘மன்மோகன் சிங்’ காக
இருக்க எந்தவித ஆட்சேபணையும் இல்லை
என்று மறைமுகமாகக் கூறுகிறார்…!
அநேகமாக -இந்த பேட்டியைப் படித்த பிறகு
ராகுல் காந்தியே கூட –
பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வது நல்லதா அல்லது
பிரதமரை “நான்சென்ஸ்”என்று சொல்லும் பதவியை
வைத்துக் கொள்வது நல்லதா ?
எது பெட்டர் ?
இதுவா -அதுவா ? என்று யோசிக்க ஆரம்பிக்கலாம்..!)



நமது எதிர் காலம் ராகுலின் கையில் என்பதை எண்ணிப் பார்க்கவே …..ஐயோ ஐயோ .
ஆண்டவா ஆண்டவா …
பரமசிவம்
ivar seitha ore saadhanai, avaradhu thoguthiyil ATM open seithathu thaan….eera kayiyal kaakai kooda oota maatar…. avvalavu nalla manithar….tamilgathil soththu vaanguvathai vitu vitu harayana rajasthannil poi vaangu giraar… BITS, Pilani sellum vazhiyellam ivarudaya nilam thaan…
paramasivam thaan naatai ivargalidamirundhu kaapatra vendumm
ராகு காலத்தையும், எமகண்டத்தையும் கேட்பது
இருக்கட்டும்.
முதலில் சுதர்சன நாச்சியப்பனின் உள்குத்து வேலைகளையும் மீறி
சிவகங்கையில் சீட்டு கிடைக்க வேண்டும்.
சொல்லாமல் அடிக்கும் எதிரி கலைஞரின்
சகுனி வலையை மீறி ஜெயிக்க வேண்டும்.
சொல்லி அடிக்கும் எதிரி அதிமுக பலத்தை மீறி
ஜெயிக்க வேண்டும். போன தடவை மாதிரி
இந்த தேர்தலில் ‘கவுண்டிங்’ உதவி வேறு கிடைக்காது.
இதை எல்லாம் மீறி பார்லிமெண்ட் போனால்,
எதிர்க்கட்சி வரிசையில் தான் உட்கார வேண்டும்.
ராகு காலம் அல்லது எமகண்டம் மனசு வைத்தால்
எதிர்க்கட்சித் தலைவர் ஆகலாம்.
அதிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு கேபினட் அந்தஸ்து
உண்டு என்பதால் ஏகப்பட்ட உள்கட்சி போட்டிகளை
சமாளிக்க வேண்டும். இருந்தாலும், நம்ம ஊர்
ஆசாமி ‘வேட்டி கட்டிய தமிழன்’ என்பதால்
பெஸ்ட் ஆப் லக் சொல்லவே விரும்புகிறேன்.
//‘வேட்டி கட்டிய தமிழன்’ என்பதால்
பெஸ்ட் ஆப் லக் சொல்லவே விரும்புகிறேன்.//
‘வேட்டி கட்டிய தமிழன்’ (அது யாராக இருந்தாலும்) தன் வேட்டியைப் பிறர் உருவினாலும் காசு பார்ப்பதிலேயே கண்ணாக இருப்பான் என்பது தான் இன்றைய வேதனையான உண்மை.
// BITS, Pilani sellum vazhiyellam ivarudaya nilam thaan…//
Dear, he is not a fool. With Japanese investment, there is going to be a high speed freeway connecting Delhi to Mumbai. And once implemented, think of the land value cost; it may multiply in the order of 5X or 10X.
Ordinary folks like us deposit money in fixed deposits, PF, post office ceritificates and count the pennies from interest thinking that it is a safe investment with high returns. Little we realize that even the peak rate of interest 9.5% (less TDS) is all eaten up by inflation and what we have at hand is money that list it’s value over a period of time.
Political class are very smart in sourcing investment fund from other parties (all of us know who they are!) and invest them in assets that create such 5X,10X returns in a decade max. What P.C may have done is what Devegowda did in mysore connecting NICE road and devanahalli in bangalore.
ப.சி. க்கே பசிக்க ஆரம்பிக்கிறது. பசிக்குதுன்னு சொன்னாதானே சோறு வேணும்னு தெரியும் .