கலைஞர் பற்றி சில சுவையான தகவல்கள்…!
தருவது துரைமுருகன் …!!

கலைஞருடன் நெருங்கிப் பழகுபவர் –
அவரைப்பற்றி அதிகம் தெரிந்தவர்களில்
ஒருவர் துரைமுருகன். அண்மையில், ஒரு பேட்டியில்
கலைஞர் பற்றி சில சுவையான தகவல்களைக்
கூறி இருக்கிறார் துரைமுருகன்.
அதை நீங்களும் படித்து ரசிக்க -கீழே –
——-
கேள்வி – சிம்பு-ஹன்சிகா காதல்,
நயன்தாரா-ஆர்யா காதல், அஞ்சலி கல்யாணம்னு
சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை நீங்க கவனிப்பீங்களா ?
துரைமுருகன் பதில் – “யார் பிரிஞ்சு,
யார் சேர்ந்தா நமக்கென்ன தம்பி !
நாங்களே ஒட்டிக்கிட்டும் வெட்டிக்கிட்டும் கிடக்கோம்.
அடுத்து எப்ப பிரியிறோம்- ஒட்டுறோம்னு எங்களுக்கே
தெரியலை. ஆனா – தலைவர் கலைஞர் கிட்ட கேளுங்க..
எல்லா செய்திகளையும் டாப் டு பாட்டம் புட்டுப் புட்டு
வெப்பாரு !”
கேள்வி – என்ன சொல்றீங்க… சினிமா கிசுகிசுக்களைக்
கூடப் படிச்சுடுவாரா ..?
பதில் –“ஒரு பிட் நியூஸ் கூட விட மாட்டார்.
எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுக்குவார். அவ்வளவு ஏன்,
கலைஞர் டி.வி.ல வர்ற எல்லா சீரியல்களையும் கூடப்
பார்ப்பார் !”
கேள்வி – அவ்வளவு வேலைகளுக்கு நடுவுல அவருக்கு
அதுக்கு எல்லாம் நேரம் இருக்கா ..?
பதில் – “தமிழ்நாட்டுல 24 மணி நேரமும் துடிப்போட
இருக்குற ஒரு மனுஷன்னா, அது தலைவர் கலைஞர் தான்.
அவர் பேனாவை மூடி வெச்சுட்டா, அந்தம்மாவுக்குப் பதில்
சொல்ல இங்கே ஆளே இல்லை. “கச்சத்தீவு விவகாரத்தில்
தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார்’னு
போற போக்குல அந்தம்மா கருத்து சொல்லிடுவாங்க.
உடனே பழைய சம்பவங்களை யோசிக்க ஆரம்பிச்சு,
‘சண்முகநாதன், கச்சத்தீவைப் பத்தி நாலைஞ்சு பேர்
பேசியிருப்பாங்க. பிறகு நான் பேசியிருப்பேன்.
1996 ஜனவரி மாசம் பாருங்க’ம்பார். தேடிப்பார்த்தா
செய்தி நச்சுனு நிக்கும். அவரோட மூளை கம்ப்யூட்டர்
மாதிரி. எப்ப எது தேவையோ, அதை பட்பட்னு
சொல்லிரும். அது பெரிய வரப்பிரசாதம்.
இந்த வயசுலயும் பிரஷர் இல்லை.
சுகர் கிடையாது.
தினமும் சாயங்காலம் ஒரு குலோப்ஜாமூன் சாப்பிடாம
இருக்க மாட்டார்.
நேத்து பாத்தேன். ‘கொஞ்சம் சோர்வா இருக்கு’ன்னு
சொல்லிட்டு படுத்துட்டார். ஆனா, அப்பவும் ஒரு
புத்தகத்தைப் படிச்சுக்கிட்டு இருந்தார். அது அவர்
எழுதின ‘சுருளிமலை’ புத்தகம்.
“நீங்க எழுதினதை –
இப்போ ஏன் படிச்சுட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டேன்.
‘இல்லைய்யா .. இதைத்தான் பாரதிராஜா
கலைஞர் டி.வி.ல தொடரா எடுக்கறார்.
நான் எழுதுன மாதிரி தான் எடுக்கிறாரா…
இல்லை மாத்தி எடுக்கிறாரான்னு
தெரிஞ்சுக்கத்தான் படிக்கிறேன்’னு சொன்னவர் –
“நான் எழுதுனதை ஒட்டித்தான்யா எடுத்திருக்கார்’னு
முடிச்சார். எதையோ ஒண்ணை எடுத்துட்டுப் போறார்னு
விட வேண்டியது தானே ? ஆனா, விட மாட்டார்.
அது தான் கலைஞர் !”



ஒரு வகையில் அந்த மனிதனின் சுறுசுறுப்பும் தமிழ் ஆர்வமும் மிக மிக பாராட்டக்குறியது. ஒரு நல்ல உதாரணம் அறிவை கூர்மையாக்க அவர். ஒரு தமிழனாக எனக்கு சந்தோசம் தான்.
விழலுக்கு இறைத்த நீர்.
//அவரோட மூளை கம்ப்யூட்டர்
மாதிரி. எப்ப எது தேவையோ, அதை பட்பட்னு
சொல்லிரும். அது பெரிய வரப்பிரசாதம்.//
வரப்பிரசாதம் தான் ;
தலை மட்டுமில்லை,உடல் முழுதும் மூளை தான்; ஆனால் அந்த மூளை எதற்கு பயன்பட்டது ?
முழுக்க முழுக்க குடும்பத்தின் நலனுக்காக.
மருமகன் மத்திய மந்திரி, மருமகனின் மகன் மத்திய மந்திரி,
மூத்த மகன் மத்திய மந்திரி, இளைய மகன் மாநிலத்தில் துணை முதல்மந்திரி,
பெண் பாராளுமன்ற உறுப்பினர், டிவி அதிபர்.
அத்தனை பேரையும் அரசியலில் உயர்த்தி விட ; அமைச்சராக்க ; குடும்பச்சொத்து மதிப்பை 100 கோடியைத் தாண்ட விட ; சொந்த நலனுக்காக தமிழர் நலனை
அடகு வைக்க ; ஈழத்தமிழர்கள் பூண்டோடு நாசமாக;
இவற்றிர்கெல்லாம் தானே பயன்பட்டது ?
90 வயதில் தினமும் குலாப்ஜாமூன் சாப்பிடாமல் விட மாட்டாராம். டிவியில் அத்தனை சீரியல்களையும் பார்ப்பாராம். சினிமா கிசுகிசுக்களை விடாமல் படிப்பாராம்.
வெட்கக்கேடு.
காவிரிமைந்தன் அவர்களே ஏதோ காரணத்திற்காக நீங்கள் சொல்லாமல் விட்டதை எல்லாம் நான் சொல்லி விட்டேன்.
நண்பர் ராஜகோபலன்,
இந்த எரிச்சல் வேறு யார் மூலமாவது
எப்படியும் பின்னூட்டங்களில்
வெளிப்படும் என்று நினைத்து தான் –
நான் விமரிசனம் செய்யாமலே தகவலை
வெளியிட்டேன்.
உங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
கங்கையிலோ காவிரியிலோ அதிக நீர் ஓடினால் சந்தோஷப்படலாம்..
கூவத்தில் ஓடி யாருக்கு என்ன பயன்?
dhinam oru gulabjamoon sapiduvathaal, indru muthal neer “gulabjamoon thathaa” endru anbodu azhaikka paduveeraka……. thanks to 23m pulikesi movie….
முதலமைச்சராக இருந்த போதே படங்களுக்குக் க்தை
வசனமெழுதியவர், அரசாட்சி கைவசமில்லாத போது
சீரியல் பார்ப்பதில் ஆச்சரியமென்ன?
இவர் “கலைகளில்” ஆர்வம் மிகக் கொண்டவர் என்பது
தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறிந்த செய்திதான். அதை
துரைமுருகன் உறுதி செய்திருக்கிறார்.
—
கூவத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடினாலும் நன்மை
இருக்கிறது. சிங்கார சென்னை திட்டத்தில், கூவம்
சுத்திகரிப்பும் ஒரு அங்கம்.
—-
சென்னையில் ஒடுவதுதான் கூவம் என கருத வேண்டாம்.
அது திருவள்ளூர் மாவட்டதில் தொடங்கி, விவசாயத்திற்கும்
இதர பயன்பாட்டிற்கும் வந்து பின்னர் சென்னை மாநகரை
அடைந்து வங்கத்தில் கலக்கிறது. தூய்மையாகவும் மிக்க
பயன்பாட்டிலும் இருந்ததை, சென்னைவாசிகள், தூர் எடுத்து
தூய்மையாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.
—
கா.மை ஒரு வேண்டுகோள்: முந்தைய இடுகைக்கு எனது
மறுமொழியை மீண்டுமொரு முறை பார்க்கவும். பின்னதாக
சொன்னது அனைத்தும் திருவாளர்.ஜோதிஜியின் கருத்துக்கு
கருத்து. வேறொன்றுமில்லை. மற்றபடி என் அறிவின்மையை
அல்லது புத்திசாலிதனத்தைக் காட்ட அமைந்ததில்லை.
எனக்கு ஒரு சந்தேகம்.
துக்ளக் ஆசிரியர் சோ தான் இங்கு வெங்கட்ரமணி என்ற புனைபெயரில் பின்னூட்டம் இடுகிராறாரா என்று!
:-))))
எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம்,
கண்பத் தான் வெங்கட்ரமணியா,
அல்லது வெங்கட்ரமணி தான் கண்பத்தா என்று ?
🙂 🙂 🙂
ha..haa..ha…
ஆஹா சரியான போட்டி… கண்டுபிடிப்பவருக்கு தக்க சன்மானம்னு அறிவிச்சுடுங்க காவிரி சார்.
நாய்கூடத்தான் ரொம்ப பிஸியாக இருக்கும், அதுக்காக….?!?!?
அதுக்கப்புறம் தமிழ் வளர்த்தார் வளர்த்தார்-னு சொல்றாங்களே
எனக்கு ஒண்ணு மட்டும் புரியவில்லை! இன்றுவரை மருத்துவத்துறையில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழில் வாதிட வாய்ப்பில்லை. தமிழில் பொறியியல் படிப்பவருக்கு எதிர்காலமில்லை.
சொல்வது மட்டும்
தமிழ் வாழ்க தமிழினம் வாழ்க
“நீடூடி வாழ்க” டமில் வாட்ச்மேன்!
தமிழையெல்லாம் வளர்க்கவில்லை. தமிழைக்
கொண்டு இவர்கள் வளர்ந்தனர். தமிழனுக்கு ஒரு
தனித்தன்மையுண்டு. அது: ”தம்” கட்டி எதுகை
மோனையில் சரியான இடத்தில் உவமைப்
பொருளை வைத்துப் பேசினால், அவரை மிக
உயர்வாக மதிப்பர். ஆயின், தமிழ் மட்டுமே
அறிந்து, தமிழ் மொழி வளர்ச்சிக்காக இருப்பவனை
உதாசீனப்படுத்துவர். தமிழ்த்தாய் வாழ்த்தென
திராவிட ஆட்சியாளர்களால் தெரிந்தெடுக்கப்ப்ட்ட
“நீராரும் கடலுடுத்த….” பாடலில் வரும் சொற்கள்
எல்லாம் சுத்தத் தமிழ்தானா? அல்லது
மணிப்ரவாளம் என்றறியப்படும் கலப்பா?
தன் வாழ்நாளில், தமிழ் மொழியை
அழகுற கையாண்ட பாரதிக்கு, திராவிட
பகுத்தறிவாளர்கள் செய்த மரியாதை என்ன?
அவன் பிராம்ணன் என்பதினாலேயே அவனக்குரிய
மரியாதை மறுக்கப்பட்டவன். இன்றைக்கு மொழி
ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிதும் உதவியாக
இருக்கும் அத்துனை பழந்தமிழ் இலக்கியங்களையும்
கொண்டு வந்து சேர்த்த “தமிழ்தாத்தா” உ.வே.சா
வுக்குத்தான் தமிழகத்தில் என்ன மரியாதை?
தமிழைத் தமிழாகவே பேசும், நெல்லை கண்ணன்,
தமிழருவி மணியன், குமரி அனந்தன் இவர்களுக்குத்
தான் கிடைத்த மரியாதை என்ன?
கருவாடு மீனாகாது; கறந்த பால் மடிபுகாது;
குடத்துத் தண்ணீர் கிணறாகது என்பதான “பஞ்ச்”
தமிழ் தெரிந்தவர்களைத் தான் பகுத்தறிவாளர்கள்
பெரிதும் போற்றுவர். மற்றோரை அவர்தம் குலம்
கோத்திரம் அறிந்து தூற்றுவர்.
தமிழகத்திலே, மதுரையிலே சொக்கநாதனை
தரிசிக்க, ”எல்லோரையும்” அழைத்துச் சென்ற
வைத்தியநாத அய்யருக்கு இங்கு என்ன
மரியாதை?
கேரளத்திலே, வைக்கத்திலே பெரியார் ஈ.வெ.ரா
வுக்கு திராவிடத் திலகம் வீரமணியால் சுமார் 12
ஆண்டுகளுக்கு முன், நிறுவப்பட்ட சிலைக்கும்
ஒரு மரியாதையும் இல்லை என்பது வேறு விஷயம்.
கர்னாடகத்தில், கேரளத்தில் பள்ளிகளில் ஹிந்தியும்
மற்ற மொழிகளும் பாடங்களாக இருந்தாலும்,
கன்னடத்திற்கும் மலையாளத்திற்கும் உள்ள
முக்கியத்துவம் போல், தமிழகத்திலே “தமிழுக்கு”
இருக்கிறதா? அங்கு மொழி வளர்ச்சி அறிஞர்களிடம்
உள்ளது போல் இங்கு உள்ளதா? பல்கலைக்
கழகங்களின் வேந்தர் பதவிகள் அரசியல்
பிழைப்போரிடம் போனது எவ்விதம்? பதில்
மரியாதையாக டாக்டர் பட்டங்களை அள்ளித்
தருகிறார்களே அது எப்படி? கலைஞரும் அம்மாவும்
குறைந்தது ஒரு டஜன் டாக்டர் பட்டங்களுக்குச்
சொந்தக்காரர்கள் தெரியுமா?
—
ஸ்ரீ ல ஸ்ரீ என்றால் லடசம் ஸ்ரீ என்று பொருள். அது
போல, டா டா டா டா என்று போட்டுக் கொள்ளாமல்
விட்டார்களே. (கேப்டனும் டாக்டர்தான்)
—–
ரொம்ப நாள் சந்தேகம். அறிந்தவர் சொன்னால்
மகிழ்வேன். முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்
மு.க அவர்களின் படைப்புகள் எவையாவது, தமிழறிந்த
எவராலாவது, ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்
பட்டுள்ளனவா?
//முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்
மு.க அவர்களின் படைப்புகள் எவையாவது, தமிழறிந்த
எவராலாவது, ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்
பட்டுள்ளனவா?//
தெரியவில்லை. ஆனால் ஒருவேளை இருப்பின் அதில் எதிர்மறை கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன் (ஒருவேளை ஆராய்ந்தவரின் மனதில் தோன்றியிருப்பினும் கூட!)
கரெக்டா ஸ்பீக்கிருக்கீங்க அஜீஸ். 🙂
இப்படித்தான் நான் உட்பட எல்லாரும் தமிழைப் ‘படுத்தறோம்’!!!
முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர்
மு.க அவர்களின் படைப்புகள் எவையாவது, தமிழறிந்த
எவராலாவது, ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்
பட்டுள்ளனவா?
இன்றைக்கெல்லாம் தமிழ் திரைப் படங்களில் நகைச்சுவை எனப்படும் பகுதி தனியாக ஒரு குழுவால் யோசித்து எழுதப்பட்டு அதை அப்போதைய மார்க்கெட் உள்ள நகைச்சுவை நடிகர் சிறந்த பாடி (Body) மொழியில் பேசி மக்களை சிரிக்க வைக்கிறார் என்று கேள்விப் பட்டேன். எனக்கென்னவோ தாத்தா இது போல ஒரு குழுவை வைத்து பிழைப்பை நடத்துகிறாரோ என்று கூட எனக்கொரு சந்தேகம் உண்டு. ஒன்றுமில்லாத எனக்கே மற்ற வேலைகள் செய்ய நேரம் கிடைப்பது அரிதாக இருக்கும் போது ஒரு முதல்வர் அதுவும் 90 வயதில் இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?
எனது பாட்டி ” ஐயா வயசுக்கேத்த பேச்சும் செயலும் இருந்தா தான் நாலு பேர் மதிப்பாங்க.” என்று நான் சிறுவனாக இருக்கும் போது கூறியது மேலே உள்ள உங்கள் பதிவை படிக்கும் போது நினைவுக்கு வருகிறது.
THERE MUST BE A TEAM ASSISTING KARUNA. NO DOUBT.
it must be some team work giving tips. but no use for the people