நா.நா.பொருளாதார மேதைகள்-(part-2) (நா.நா = நாட்டை நாசமாக்கிய )

நா.நா.பொருளாதார மேதைகள்-(part-2)
(நா.நா = நாட்டை நாசமாக்கிய )

dragon-1

(முதலில் ஒரு சிறிய விளக்கம்.
இந்த இடுகைக்கான பல புள்ளி விவரங்களை நான்
பல வலைத்தளங்களிலிருந்து தேடி எடுத்தேன்.
அந்த தளங்கள் அனைத்திற்கும் முதற்கண்- வந்தனம்..!

ஒரு நண்பர் (!?) என்னை எசகு பிசகாகத் திட்டி,
என் email-IDக்கு (நல்ல வேளையாக) ஒரு மெயில்
அனுப்பி இருக்கிறார். இவ்வளவு பெரிய உலகப் பொருளாதார
மேதைகளை விமரிசனம் செய்ய உனக்கு என்ன தகுதி
இருக்கிறது ?- என்று கேட்டிருக்கிறார்..!
தகுதி என்று பார்த்தால் – நான் படித்த economics –
B.A.வரை தான். ஆனால் கல்லூரிக்கு வெளியே –
கடந்த 40 ஆண்டுகளாக –
இன்னமும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
நிறைய தேடித்தேடி படிக்கிறேன். பொருளாதாரம்
தெரிந்தவர்களிடம் நிறைய பேசிப் பேசி,விவாதித்து –
தெரிந்து கொள்கிறேன். நான் மேதை இல்லை.
ஆனால் பொருளாதாரத்தை புரிந்து
கொள்வதில் எனக்கு சிரமம் இல்லை…

இந்த நா.நா.மேதைகளுக்கு – தெரியாது என்றில்லை.
நிறையவே தெரியும்.நன்றாகவே தெரியும்!

ஆனால் தங்களுக்கு தெரிந்தது தான் final –
அதை விட, அதற்கு மேல் – வேறு ஒன்றுமில்லை
என்று நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.
யார் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் –
ஆலோசனை கூறும் மற்ற பொருளாதார நிபுணர்களை –
அவர்களும் உலகப்புகழ் பெற்றவர்களே யானாலும்,
ஏளனமாகப் பார்க்கிறார்கள் –அது தான் பிரச்சினை ..!)

————————-

சரி -இடுகைக்கு வருகிறேன் …

இப்போதைய பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்கள் –

நிலக்கரி இறக்குமதி –

உலகிலேயே 3வது பெரிய ரிசர்வை மண்ணுக்குள்
வைத்துக் கொண்டு, அதை வெளியே எடுக்காமல்
இறக்குமதியை அதிகரித்துக் கொண்டே போகிறோம்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் 10 பில்லியன்
டாலராக இருந்தது இப்போது 30 பில்லியன்
டாலர் அளவிற்கு நிலக்கரி இறக்குமதி அதிகரித்திருக்கிறது.
இது அந்நியச் செலாவணி இருப்பை பாதிக்கிறது.

நிலக்கரி இறக்குமதிக்கு அவசியம் என்ன ?
நாமே ஏன் உற்பத்தி செய்ய முடியவில்லை ?

ஒன்பது வருடங்களுக்கு முன்னரே நிலக்கரி சுரங்கம்
அமைத்து தோண்டி எடுக்க மத்திய காங்கிரஸ்
(கூட்டணி ?) அரசால் –

ஏகப்பட்ட பேருக்கு ( 165 பேருக்கு ? )free யாக Licence
கொடுக்கப்பட்டது.

யாருக்கு ?-
முக்காலே மூணு வீசம் காங்கிரஸ் அமைச்சர்களின்,
எம்.பி.க்களின் பினாமிகளுக்கு.
(நமது திமுக முன்னாள் மத்திய அமைச்சர்
..ரட்சகன் கூட அதில் ஒருவர் !!)

அவர்கள் லைசென்சுகளை வாங்கியது சுரங்கம் தோண்டி,
நிலக்கரி வியாபாரம் செய்வதற்காக அல்ல. பிற்காலத்தில்
நல்ல விலை வரும்போது அந்த லைசென்சை
அப்படியே விற்கவே !

எனவே சுரங்க லைசென்ஸ் வாங்கியவர்களில்
பெரும்பாலானவர்கள் 9 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும்
தோண்டவே ஆரம்பிக்கவில்லை !

எனவே அதிக அளவில்
இறக்குமதி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மேலும் – நாம் நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளான
மலேசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் – நம்மவர்களின்
பினாமிகள் நிறைய பேர் இருக்கிறார்களே – அவர்களுக்கு
பிழைப்பு நடக்க வேண்டாமா ?

அடுத்தது தங்கம் இறக்குமதி –

கடந்த பத்து ஆண்டுகளாக –எந்தவித கட்டுப்பாடும்
இல்லாமல் உலகச் சந்தையில் விற்கப்படும் தங்கத்தை
நம் நாட்டில் இறக்குமதி செய்ய அனுமதித்தார்கள்.
(பெரிய பெரிய தங்க வியாபாரிகள்எல்லாம்
யார் யாருக்குச் சொந்தம் என்று நெருங்கிப் பார்த்தால்
ஏன் என்பது புரியும்).

துவக்கம் முதலே இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில்
ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஆபரணங்களாக மீண்டும்
ஏற்றுமதி செய்பவர்களுக்கு மட்டுமே இறக்குமதி அனுமதி
கொடுக்கப்படும் என்று கட்டுப்பாடு விதித்திருந்தால்
இன்று இந்த நிலைமை வந்திருக்காது. இந்த தங்க
வியாபாரிகள் முக்காலே மூணு வீசம் பேர் – வரி மோசடி
செய்பவர்கள் -பொய்க் கணக்கு வைத்திருப்பவர்கள் –
இது அனுபவபூர்வமாக நீங்கள் கூட அறிந்த உண்மையே !

அடுத்தது பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி –

பெட்ரோல் இன்றியமையாத பொருள். இதன்
பயன்பாட்டிற்கு விதிக்கப்படும் எந்தவித கட்டுப்பாடும்
எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவிக்கும்.
மடத்தனமாக பெட்ரோலுக்கு ரேஷன் கொண்டு வந்தாலென்ன
என்று யோசிக்கும் ஒருவர் தான் இந்த துறைக்கு அமைச்சர்.

இதே ஆசாமி தான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் –
“இந்த நாடே எரிவாயுவிலும், எண்ணையிலும் தான்
மிதந்து கொண்டிருக்கிறது.ஆனால் நம்மால் தோண்டி
எடுக்கத்தான் முடியவில்லை – இறக்குமதியைக்
குறைத்தால் விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்
என்று என்னை பயமுறுத்துகிறார்கள்” என்று உளறினார்.

இருக்கின்ற வளங்களை எல்லாம் தோண்டி எடுக்கும்
உரிமையை, தனியார் துறையான அம்பானியிடம்
கொடுத்து விட்டு – அவர்கள் போடும் கண்டிஷன்களுக்கு
ஏற்ப இவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் உற்பத்தியாகும் பெட்ரோலுக்கு –
அமெரிக்க டாலரில் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
எண்ணை வளம் அனைத்தும் இந்த நாட்டினுடையது.
வளத்தை தோண்டி எடுக்கும் வேலையை
மட்டும் செய்யும் அந்த கம்பெனியிடம் ஏன் காசு கொடுத்து
பெட்ரோலை விலைக்கு வாங்க வேண்டும் ?

தோண்டி எடுத்து எங்களிடம் கொடு –
தோண்டுவதற்கான கூலியை
வாங்கிக் கொள் என்று தானே சொல்ல வேண்டும் ?
எப்படி சொல்வார்கள் – இவர்கள் வசிப்பிடம்,
கழிப்பிடம் எல்லாமே அவர்களின்
பாக்கெட்டுகள் தானே ? இவர்கள் தேர்தலில் செலவழிப்பது
அவர்களின் மூலதனம் தானே ?

டாலரில் இல்லாமல், ரூபாயை வாங்கிக் கொண்டே
நமக்கு பெட்ரோல் கொடுக்கத் தயாராக இருக்கும்
ஈரானிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை
நாம் தவிர்க்கிறோம். ஏன் ? அமெரிக்க அண்ணனுக்கு
ஈரானைக் கண்டால் ஆகாது. எனவே அண்ணன் நாம்
ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை தடுக்கிறான்.
கோழைகளான இவர்கள் கைகட்டி, வாய் பொத்தி
அமெரிக்க அண்ணன் சொல்வதைக் கேட்கிறார்கள்.
உள்நாட்டில் ஏராளமாக விளையும் கரும்பிலிருந்து
கிடைக்கும் எத்தனாலை பெட்ரோலுடன்
கலந்து பயன்படுத்தினால், பெட்ரோல் இறக்குமதியை
குறைக்கலாம். வாகனங்களின் எஞ்ஜினில் எத்தகைய
மாறுதலும் செய்யாமலே 15% வரை தாராளமாக கலக்கலாம்.
ஆனால் இதைச் செய்ய அரசிடமிருந்து எந்தவித
முயற்சியோ, ஊக்குவிப்போ இல்லை. காரணம் –

சரத் பவாரைக் கேட்டால் தான் தெரியும் !

அடுத்தது – மடை திறந்த வெள்ளம் போல் – இந்திய
துறைமுகங்களில் வந்திறங்கும் மிதமிஞ்சிய உபயோகப்
பொருட்களின் (consumer goods) இறக்குமதி.
கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட
பெட்ரோலியப் பொருள்களின் மொத்த மதிப்பு சுமார்
360 பில்லியன் டாலர். இதே காலகட்டத்தில் இங்கு
இறக்குமதியான consumer goodsன் மொத்த மதிப்பு
சுமார் 407 பில்லியன் டாலர். அதாவது பெட்ரோலை விட
consumer goods அதிகமாக இறக்குமதி
செய்யப்படுகிறது.

(மூல )கச்சாப் பொருட்களோ, இயந்திரங்களுக்கான
உதிரி பாகங்களோ -இறக்குமதியானால், அவை இந்த
நாட்டின் உற்பத்திப் பெருக்கத்திற்கு உதவும் –
மறுசுழற்சியில், நம் உழைப்பின் மதிப்பையும் சேர்த்து
(value addition ) அதிக மதிப்பிற்கு
ஏற்றுமதி செய்ய உதவும்.

மாறாக, நம் நாட்டிலேயே உற்பத்தியாகக் கூடிய
நேரடி உபயோகப்பொருட்களை ( kitchen items,
furnitures, toys, stationary items,
electronic gadgets etc.) வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்தால் என்ன ஆகும் ?

உள்நாட்டு உற்பத்தி அப்படியே முடங்கிப் போகும்.
அது தான் இப்போது நடக்கிறது -உள்நாட்டு உற்பத்திச் சரிவு.

முக்கியமாக சீனாவிலிருந்து, தேவையே இல்லாமல்,
கணக்கு வழக்கு இல்லாமல் consumer goods ஐ
இறக்குமதி செய்ததன் விளைவு இன்றைய தினம்
சீனாவுடனான நமது வர்த்தகப் பற்றாக்குறையின்
மதிப்பு 175 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி).
இதில் மூன்றில் ஒரு பகுதி கூட நாம் சீனாவிற்கு
ஏற்றுமதி செய்வதில்லை. ஏறிக்கொண்டே போகும்
இந்த கடன் என்று தீரும் …?

இத்தனைக்கும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும்
பொருட்கள் அனைத்துமே, மட்டமான, தரக்குறைவான,
மலிவான வீட்டு உபயோகப் பொருட்கள் தான்.

இதன் விளைவுகள் இந்த பொருளாதாரப் புலிகளுக்கு
தெரியாதா ? பின் ஏன் தொடர்கிறது ?
இதன் பின்னணியில் யார், எந்த தலைமை இருக்கிறதோ –
யார் கண்டது ?

அடுத்தது எந்தவித கட்டுப்பாடும் இல்லாத
வெளிநாட்டு முதலீடு –

நினைத்தால் உள்ளே வருகிறார்கள்.
நினைக்கும் முன்னரே
வெளியே போய் விடுகிறார்கள்.
ஏன் இதை இப்படியே
அனுமதிக்க வேண்டும் ?
அந்நிய முதலீடு நம் பங்கு மார்க்கெட்டில் நுழையும்போது
குறைந்த பட்ச கட்டுப்பாடுகளையாவது விதிக்கலாமே ?

அதே போல் -இந்திய தொழிலதிபர்கள் வெளிநாடுகளில்
முதலீடு செய்ய எந்தவித கட்டுப்பாடும் இல்லை.
இப்போதெல்லாம் வெளிநாட்டு கம்பெனிகளில் முதலீடு
செய்வது இந்திய முதலாளிகளின் fashion ஆகி விட்டது.
நம் நாட்டின் பொருளாதாரம் தள்ளாடும்போது
நம் நாட்டு முதலீடு வெளியே போக ஏன் அனுமதிக்க
வேண்டும்?
அடுத்த மிகப்பெரிய காரணம் –
மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும்
அளிக்கப்படும் “வரித் தள்ளுபடி” சலுகை!

இது பட்ஜெட்டில் முக்கியப்படுத்தி, வெளிப்படையாக
காட்டப்படுவதில்லை என்பதால் பலர் கவனிக்கவே
வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.ஆண்டுதோறும்
பட்ஜெட்டின் பிற்சேர்க்கையில் வருவாய் இழப்பு குறித்த
அறிக்கையில் மட்டுமே இது இடம்பெறுகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு அளித்த
வரி விலக்கு மட்டும் ரூ.30 லட்சம் கோடி அளவுக்குச்
சேர்ந்துள்ளது.(இத்தனையும் மத்திய அரசுக்கு
வர வேண்டிய வருவாயில் “நஷ்டம்” என்று
கணக்கிடப்படுகிறது -பின்னர்
“தள்ளுபடி”செய்யப்பட்டு விடும் ..!)

மத்திய அரசு 2006-07ல் சர்வதேச அளவில்
பொருளாதார நிலை தேக்கம் அடைந்திருப்பதால்,
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஊக்குவிப்பு
நடவடிக்கைகள் தேவை என்று காரணம் காட்டி
பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு (corporates)
“வரிச்சலுகை”கள் தர ஆரம்பித்தது.
அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் சர்வதேசப்
பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்டு நஷ்டம்
அடையாமல் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட
நடவடிக்கைதான் இது என்று மத்திய அரசு கூறியது.
இது குறுகிய காலத்திற்கு தான் – விரைவில் நிறுத்தப்பட்டு
விடும் என்றும் கூறியது.

புள்ளி விவரங்களை ஊன்றி கவனித்தால் –
உண்மையில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த
“வரிச்சலுகை” கால கட்டத்தில் அதிக லாபங்களை ஈட்டி
இருப்பது தெரிய வருகிறது.

அடிப்படை ஆண்டான 2005-06 உடன் ஒப்பிட்டால்
கடந்த 5 ஆண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள்
4.8 லட்சம் கோடி ரூபாய் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின்
பயன்கள் உற்பத்திப் பெருக்கத்துக்கு பயன்படுவதற்கு பதில்-
இந்த தொழில் நிறுவனங்களில் லாபக் கணக்கில்
போய்ச்சேர்ந்து விட்டன என்பது தான் உண்மை.
கார்பரேட் நிறுவனங்கள் – தாங்கள் பெற்ற இந்த
“பெரும் பேற்றிற்கு” காரணமானவர்களை
கண்டு கொள்ளாமலா இருந்திருக்கும் ?

அடுத்ததாக – சுங்கவரிக் குறைப்பு

2008-09 -ல் சுங்க வரி குறைக்கப்பட்டதன் மூலம்
இறக்குமதிப் பொருள்கள் மலிவான விலைக்கு கிடைக்கத்
துவங்கின.

கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதியான மூலதனப்
பொருள்களின் மதிப்பு 407 பில்லியன் டாலர்.
அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் இறக்குமதியான
மூலதனப் பொருட்களின் மொத்த மதிப்பு
180 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

இந்த சுங்க வரிக் குறைப்பின் பலன் யாருக்குப் போய்ச்
சேர்ந்தது என்பதை இந்த நா.நா. பொருளாதார
நிபுணர்கள் தான் விளக்க வேண்டும்.

நாட்டில் தொழில் உற்பத்திக்கு தேவையான பொருட்களுக்கு
மட்டும் (இறக்குமதி) சுங்க வரியைக் குறைத்தால் –
அது பொருளாதாரத்திற்கும், உள்நாட்டு வளர்ச்சிக்கும்
உதவும்.

ஆனால் – இவர்களின் உதவி consumer goods
இறக்குமதியாளர்களுக்கு போய்ச்சேர்ந்தது என்பது
தான் அதிர்ச்சியாக இருக்கிறது .
(அதிர்ச்சி நமக்கு தான் -நாம் இதை எதிர்பார்க்கவில்லை
என்பதால் !
இவர்களுக்கு அல்ல – இவர்கள் செய்ததே
இதை எதிர்பார்த்து தான் என்பதால் !)

அடுத்த காரணம் – இரும்புத்தாது ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

நமக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுத்தந்த மிக
முக்கியமான ஏற்றுமதிப் பொருள் இரும்புத் தாது.
கடந்த 3 ஆண்டுகளாக இரும்புத்தாது ஏற்றுமதியை
உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
காரணம் – ஊழல், வெளிப்படைத்தன்மை இன்மை,
முறையான கணக்குவழக்குகள் இல்லாமை,
அதிகார துஷ்பிரயோகம்.

இதில் ஏற்பட்ட கோளாறுகளை கண்டறிந்து,
களைந்து, மீண்டும் ஏற்றுமதிக்கு நீதிமன்றத்தின்
அனுமதியைப் பெறுவதில் மத்திய அரசு எந்தவித
அக்கரையையும் காட்டவில்லை. காரணம் –
யூகிக்க முடிவது தான். இனி எல்லாம் வெளிப்படையாக
நடைபெற வேண்டும் – மறைமுகமாக யாரும்
லாபம் பெற முடியாது.

முடிவுரை – இத்தனை பொருளாதார கேடுகளுக்கும்,
குழப்பங்களுக்கும் காரணம் அறியாமை அல்ல.
இவை தெரியாமல் செய்த தவறுகள் அல்ல.
மிகப்பெரிய, உலகப்புகழ் (!) பெற்ற
பொருளாதார மேதைகள் தான் இதை கடந்த
9 வருடங்களாக கையாண்டு வருகிறார்கள்.

இருந்தாலும் இன்று நிலைமை இவ்வளவு
சீர்கேடடைந்ததற்கு காரணம் … இதற்கு மேலும்
நான் என்ன சொல்ல…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to நா.நா.பொருளாதார மேதைகள்-(part-2) (நா.நா = நாட்டை நாசமாக்கிய )

  1. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    மன்னிக்கவும். இதற்காக நீங்கள் சோனியா அம்மனையும் மன்மோகன் சிங்கனையும், சிதம்பரம் அய்யனாரையும் மட்டுமே குறையாக சொன்னால் பக்தர்களுக்கு கோபம் வருமா வராதா? ஆட்டோ சங்கருக்கும் கஸாபுக்குமே ரசிகர் சங்கங்கள் வைத்தவர்கள் நாங்கள். மாபெரும் காந்தியின் கொள்கையில் அதாவது நல்லதை கேட்கமாட்டேன், நல்லதை பார்க்கமாட்டேன், நல்லதை பேசமாட்டேன் என்று புரிந்துகொண்டவர்கள் நாங்கள். எங்களிடமா உங்கள் கருத்துகளை திணிக்கமுடியும்?

  2. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    நடுவில் வாஜ்பாய் ஆட்சியின் போதும் பல தவறுகளுக்கு வாஜ்பாய் இடம் கொடுத்தார் (முரசொலி மாரனின் ஆதிக்கம்) என்பதாக சில விஷயங்களை கேள்விபட்டேன். De investment…etc etc… இன்றைய நிலைமைக்கு அவரும் ஒரு காரணம். அதை பற்றியும் கொஞ்சம் விசாரித்து விளக்குங்களேன்.

  3. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ஐயா, நீங்கள் கூறியிருப்பது அனைத்தும் முற்றிலும் உண்மையே. இதை மறுக்கும் அந்த தேசபக்தர்கள் விரிவாக தங்கள் வாதங்களை (விவரங்களுடன்) இங்கு வைப்பார்கள் என்றே நம்புகிறேன். தனி மடலில் வந்து முக்குபவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.

  4. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    “நிலக்கரியை விற்றால்தானே செலவு என்பதாக அர்த்தம். அது இன்னும் தோண்டியே எடுக்கப்படவில்லையே.. அப்புறம் என்ன?” – என்ற வரலாற்றில் பொன்னெழுத்தில் பொதிக்கப்பட வேண்டிய வாக்கியங்களை உதிர்த்தவர் நா.நா.பொ.மே-களில் ஒருவர்தான். முக்குபவர்கள் இந்த வாக்கியத்திற்கு முதலில் முக்குங்கள்.

  5. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ஆ..ஊ..ன்னா தகுதியைப் பத்தி பேச ஆரம்பிச்சிடுதுங்க சிலதுகள். சில விஷயங்களைப் பற்றிக் கேட்க தகுதி தேவையில்லை.. காமன்சென்ஸே போதுமானதுன்னு கூட அதுங்களுக்குத் தெரிவதில்லை. இன்னொன்று நீ என்ன சாதிச்சிட்டே.. கேள்வி மட்டும் கேட்கத் தெரியுதுன்னு ஒரு வாதம். அங்க விரும்பிப் போயி உட்கார்ந்தவன் அவன். அவனை நாமளா புடிச்சு தள்ளிவிட்டோம்??

  6. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    முன்பெல்லாம் உங்கள் பதிவு துணுக்கு செய்திகள் போல இருக்கும். வந்தவுடன் சுருட்டி சாப்பிட்டு விட்டு போய்க்கிட்டே இருக்கலாம். ஆனா வர வர கொடுக்கும் தகவல்கள் எழுதும்விதம் படிப்பவர்களுக்கு பிபி யை அதிகரிக்கச் செய்கின்றதே?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக ஜோதிஜி.

      சில தலைப்புகளில் எழுதும்போது
      நிறைய விவரங்களைத் தர நினைப்பதால்
      நீண்டு விடுகிறது.

      அயோக்கியத்தனங்களைக் காணும்போது எரிகிறது.
      ஆனால் என் வயது –
      எழுத்தைத் தவிர வேறெந்த விதத்திலும்
      கோபத்தைக் காட்ட முடியவில்லை !

      இளமையில் ஆக்கபூர்வமாக,
      இயன்ற வரை சமுதாயப் பணிகள் செய்தேன்.
      இப்போது – என்னால் முடிந்த பணி இது தான்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    மாற்றாக அதை செய்யலாம். இதை செய்யலாம். அப்படி
    செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம். இதையெல்லாம்
    யோசிக்காமல் கூட விட்டுவிட்டு, இப்படி செய்துவிட்டார்
    என்பது சுலபம்.
    அரசு எடுக்கின்ற சில பல முடிவுகள் policy framework-ன் படி
    அல்லது செயல் திட்டங்களின்படி செய்யப்படுகின்றன. அந்த
    செயல்திட்டங்கள் “எதன்” அடிப்படையில் அமைகின்றன என்பதில்
    தான் “விஷயம்” இருக்கிறது.
    அதெல்லாம் முழுமையாக தெரிய வேண்டுமானால் “இந்திய”
    அரசியல் குறிப்பாக கூட்டாட்சி தத்துவங்கள் எல்லாம்
    தெரிந்திருக்க வேண்டும். அது உள்ளூர் கல்லூரியில்
    பொருளாதாரம் படித்ததினாலோ, உலக அரங்கில் பிரசித்தி
    harvard, cambridge-இல் பன்னாட்டு பொருளாதாரம்
    மற்றும் நிர்வாகம் படித்ததினாலோ வந்துவிடாது.
    சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் (?) R K சண்முகம்
    செட்டியாரும், பின்னர் வந்த TTK-யும் பொருளாதார நிபுணர்கள்
    இல்லை. விவசாய புரட்சிக்கு காரணமான C சுப்ரமணியமும்
    வெண்மை புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியனும் விவசாயம்
    படித்தவ்ர்களில்லை.
    ஆனால், அன்றைய காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள்
    ‘இதனை இவன் செய்வான் என்றாய்ந்து
    அதனை அவன்கண் (விடல்)” விட்டவர்கள். இன்றைய தினம்
    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த சூத்திரமெல்லாம்
    தெரியாது. மாறாக மாநில அளவிலும், தேசிய அளவிலும்
    பலரையும் “திருப்தி” படுத்தும் விதமாகத்தான் அதிகாரம்
    பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அதனால் எதை செய்தால் CRITIC-ன்
    அல்லது எதிரியின் “வாயை” அடைகலாம் என்பதை நன்கறிந்து
    வைத்திருக்கிறார்கள்.
    —-
    திரு.ஜெகத்ரக்ஷகனுக்கு நேரிடையாக நிலக்கரி சுரங்கங்கள்
    அளிக்கப்படவில்லை. அதிகாரம் மிகக் கொண்ட அரசியல்வாதி
    அல்லது அலுவலர் ஒருவரின் உந்துதலால், புதுவை அரசின்
    PIPDIC நிறுவனம் முயன்று ஒதுக்கீடு பெற்றது. பின்னர், அது நிலக்கரி
    கொண்டு மின்சாரம் தயாரிப்பில் முன் அனுபவமே இல்லாத
    ரக்ஷகனின் நிறுவனத்தோடு “புரிந்துணர்வு” ஓப்பந்தம் செய்து
    கொண்டு உரிமை மாற்றம் நடந்தது. நிலக்கரி சுரங்க
    ஓதுக்கீடுகள் பலரின் முகத்தில் கரியை பூசிவிட்டதாலும், CAG
    PIPDIC-ரக்ஷகனின் ஒப்பந்தத்தை “கேள்வி” கேட்டதாலும்,
    எல்லாம் “ரத்தாகி”விட்டது.
    —-
    உங்களின் சொற் பிரயோகம் பல இடங்களில் அதீதமாக
    இருக்கிறது. தனிமனித துவேஷம் தெளிவாக தெரிகிறது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வெங்கட்ரமணி,

      நிறைய படிக்கிறீர்கள். நிறைய விஷயங்களை
      நினைவில் வைத்திருக்கிறீர்கள். உங்கள்
      பின்னூட்டங்களில் தெரிகிறது.

      ஆனால் – விதண்டாவாதமும் கூடவே தெரிகிறதே !

      உங்களின் கடந்த பின்னூட்டத்திலேயே
      (“ஒரு துரோகி -இன்னொரு துரோகியை காட்டிக்
      கொடுக்கிறார்” ) மனசாட்சி பற்றி
      ஒரு வினா எழுப்பி இருந்தேன். உங்களிடமிருந்து
      விளக்கம் ஏதும் இல்லை.

      இப்போது மீண்டும் –

      //உங்களின் சொற் பிரயோகம் பல இடங்களில் அதீதமாக
      இருக்கிறது. தனிமனித துவேஷம் தெளிவாக தெரிகிறது.//
      – என்று எழுதுகிறீர்கள்.

      நான் கதை எழுதவில்லை. அநியாயமாக யாரையும்
      குறை சொல்லியும் எழுதவில்லை.
      நிஜத்தில் நான் காணும் அக்கிரமங்களைப் பற்றி
      விமரிசனம் செய்கிறேன்.
      எனக்கு – எனக்கு மட்டுமென்ன –
      மனசாட்சி உள்ளவர்கள் எல்லாருக்குமே –
      கோபம் வரத்தான் செய்யும்.

      “பாதகம் செய்வோரைக் கண்டால் –
      மோதி மிதித்து விடு பாப்பா – அவர்
      முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா ” என்று
      முண்டாசுக் கவிஞன் சொன்னானே –

      அது -பாப்பாவுக்காக மட்டும் தானா ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

        அபயமளிக்க ஆளின்றி எதிரியின் கையி சிக்கியவர்களின்
        அலறல் எப்போதும் யாருடைய இதயத்தையும் பிசையத்
        தான் செய்யும். நானும் விதிவிலக்கல்ல.
        இலங்கையில் நடந்த போர் என்கிற விஷயத்திலும்,
        அங்கு அரசுக்கு (சிங்களருக்கு) எதிராக தமிழ் குழுக்கள்
        நடத்திய போரிலும், குழுக்களிடையே நடந்த போரிலும்
        உங்களுக்கு என நீங்கள் உருவாக்கி வைத்துக்
        கொண்டிருக்கும் “அபிப்ராயம்” எனதிலிருந்து முற்றிலும்
        மாறுபட்டது. அங்கு குழுக்களிடையே நடந்த “பெரிய”
        அண்ணன் யார் என்பது குறித்த சண்டையில், நிறைய
        இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்ப்ட்டு இருக்கின்றனர்.
        இளைஞர்களுக்கு நடந்த கொடூரம் — அவர்களைப் பிடித்துக்
        கட்டி விதைகளை நசுக்கிக் கொன்றிருக்கின்றனர். அந்த
        அப்பாவித் தமிழ் இளைஞர்கள் செய்த பாவம் தங்களுக்குள்
        அத்யாவ்சியங்களை (சோற்றையும் தண்ணீரையும்) பங்கிட்டுக்
        கொண்டதுதான். “பெரிய” அண்ணன் விவகாரமெல்லாம்
        அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் நினைத்திருந்தது
        “ஈழம்” அல்லது தங்களுக்கான் விடுதலை என்பதைத்தான்.
        குழுக்களுக்குள் வித்தியாசமின்றி எல்லோரும் இந்த
        அனியாயத்தை செய்திருக்கிறார்கள். அவ்விதம்
        உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இலங்கை அரசின்
        recordகளில் கூட இல்லை.
        பெரிய அண்ணன் யாரென்பது நிரூபணமாகிவிட்டதாலும்
        பிற குழுக்களின் தலைமைக்கு ஏற்பட்ட “கதி” யாரையும்
        அச்சுறுத்துவதாக அமைந்துவிட்ட காரணத்தாலும் என்
        போன்றோரின் பார்வை மாறுபட்டுவிட்டது.

        அன்றைய இலங்கைத் தமிழ் இளஞர்கள் போரிட ஆயத்தமான
        சமயம், வரதராஜபெருமள் அவரது குடும்பத்தின் sole breadwinner.
        எனவே, இதோ வந்துவிட்டேன் என்று ஆயுதமேந்தி போரிட
        வரவில்லை. சூழ்நிலையின் கட்டாயத்தின் பேரில்தான்
        வந்தார். அவருடைய இன்றைய நிலை என்ன? தமிழினத்
        தலைவர்களில் யாரேனும் ஒருவ்ருக்கு அவரது இருப்பிடம்
        தெரியுமா? அவர் செய்த பாபம்தான் என்ன?

        இரண்டு நாட்களுக்கு முன் ஹிந்துவில்
        (madras cafe) பற்றியது. ஐரோப்பிய நாடுகளில் இன்னமும்
        புலிகள் வலுவாக இருக்கிறார்கள் என்றும், தப்பு சரி என்கிற
        க்ருத்துரை சொல்லவே அஞ்சுகிறார்கள் என்றும் செய்தி
        வந்திருக்கிறது.
        —-
        இறுதி போர் என்று வந்துவிட்ட நிலையில், யாரேனும் ஒருவர்
        வென்றுதான் ஆக வேண்டும். ஒருவேளை, புலிகள் வென்று,
        ராஜபக்‌ஷே தோற்றிருந்தால், உங்கள் “கண்ணோட்டம்” இதே
        நிலையில்தான் இருக்குமா?
        —-
        நாற்பதாயிரம்தானா? லட்சம் கோடி என்றெல்லாம் “அவர்கள்”
        சொன்னது பொய்யுரையா? அல்லது “தமிழ்கத்து” தமிழர்களை
        உசுப்பிவிடவா?
        —-
        நேற்றைய செய்தித்தாளில், வடக்கு மாகாண முதல்வர்
        பதவிக்குப் போட்டியிடும் நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழக
        தலைவர்கள் “எதார்த்தம்” அறியாமல் பந்தாடிக் கொண்டு
        இருக்கிறார்கள் என்கிறார்.
        —-
        மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் தயாராகும் முன் “பயங்கொள்ளல் ஆகாது” என்று பாரதி எழுதியதை வாசித்த
        நினவிருக்கிறது.

        • ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

          இங்கு எல்லோருக்கும் ஒரே பிரச்சனை. வெளியே வெளிப்படையாகச் சொல்லவும் பயம். அதாவது பிரபாகரன் தான் மட்டும் என்பதற்காக மட்டுமே அனைவரையும் கொன்றழித்தார். சரி இருக்கட்டும்.

          பிரபாகரன் வருவதற்கு முன் உருவாதற்கு முன் இலங்கை அரசு கொன்றழித்தவர்களின் பட்டியலை எங்கே கொண்டு வைப்பது? அதை யாருக்கு பொறுப்பாக்குவது?

          ஆயுத வழி போராட்டம் அழிவை தந்தது? சரி. தந்தை செல்வா இனி தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று இறக்கும் போது சொல்லி விட்டுச் சென்றாரே? அவர் எந்த ஆயுதத்தை ஏந்தினார்? எதற்காக இப்படி நொந்து போய்ச் சொன்னார்?

          இன்னமும் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள்? ஐரோப்பிய தேசங்களில் பேசவே பயப்படுகின்றார்கள்,

          செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிக்கையை ஏன் அரசாங்கம் வெளியிட மறுக்கின்றது. கருத்துரிமை என்பதன் அளவுகோல் தான் என்ன?

          அவர்கள் ஜெயிக்கவே கூடாது என்பது தானே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும் போது அவர்கள் ஜெயித்தால் என்ன ஆகும் என்ற கேள்வி தான் இங்கே ஆச்சரியமாக இருக்கின்றது.

          காவிரி மைந்தன் அவர்களே பாரதி சொன்ன வார்த்தைகளைப் போல படித்த வேறொரு வாசகமும் இப்போது நினைவில் வந்து போகின்றது.

          வெற்றி பெற்றவர்களின் வார்த்தைகள் மத்தியில் தோற்றுப் போனவர்களின் வார்த்தைகள் கூட மற்றவர்களின் காதில் ஈனஸ்வரம் போலத்தான் கேட்கும்.
          கூன் குருடு செவிடாக பிறந்தால் தமிழர்களுடன் வாழ்வது சிறப்பாக இருக்கும்.

          • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

            வசதியாக பேசுவதும் எழுதுவதும் செளகர்யம்தான்.
            எப்போதும் எதார்த்தம் மாறாகத்தானிருக்கும். தமிழ்
            இளைஞர்கள் நோக்கில் நியாயம் இருக்கின்றது என்கிற
            காரணத்தினால்தான், இந்திய அரசும், MGR-உம்
            கருணாநிதியும் கோடிகளில் கொடுத்தும், பயிற்றுவித்தும்
            ”உதவி”னார்கள்.
            தமிழகத்திலே தொடக்கக் க்ல்வி ஆசிரியர் சங்கம்
            தொட்டு, IAS அதிகாரிகள் வரை mgr கலைஞர் பிரிவுகள்
            உள்ளடைப் போல ஈழத்துப் போராளிகளிலும் இவர்களின்
            ஆதரவு பெற்ற பிரிவுகள் இருந்தன. வழங்கினார்கள்;
            பெற்றர்கள். ஆயின், பல காரணங்களினால் “நன்றி”
            மறந்து போனார்கள்.
            அமைதிகாக்கும் படை புலிகள் ஒப்புதல் பெற்றே
            இலங்கைக்குப் போனது. அவர்கள் மீதே குற்றச்சாட்டுகள்
            வந்து, திருமிய பின்னர், கலைஞர், தமிழ் மக்களிடம்
            “பாராட்டு” பெறவே வரவேற்பை புறக்கணித்தார்.
            அப்போது எதிர்பார்த்த பாராட்டும் கிடைக்கவில்லை;
            இப்போது பழியும் வந்துவிட்டது.
            நன்றி மறந்த செயல்கள் விமரிசனத்திற்கு வரும்போது
            எல்லாம், அதைவிடுத்து வேறு நியாயங்கள் சொல்லப்
            படுகின்றன (உங்களைப் போன்றவர்களால்). உங்கள்
            பார்வைக்கு தீக்ஷித் துணை, எம் போன்றோருக்கு வேறு
            பலர் துணை.

            குற்றப்பத்திரிக்கை வெளிவந்துவிட்டது.
            காலம் கடந்து, பலமுறை கத்திரியை பார்த்துவிட்டு
            வந்ததினாலும், தமிழர்களுக்கு வேறு பல விஷயங்களில்
            கூடுதல் விருப்பம் வந்துவிட்டதாலும், “எடுபடவில்லை”.
            ஒரு வேளை திருப்பூருக்கு வரவேயில்லையோ?.

            ஒரு வேளை ராஜபக்‌ஷே தோற்று, பிரபாகர்ன் வெற்றி
            பெற்றிருந்தால், அவர்கள் தரப்பு இழப்புக்கும் உங்கள்
            மனசாட்சி இப்படி பேசியிருக்குமா என்பதுதான் கேள்வி.
            மனித அபிமானத்தின் பேரில் தான் பொதுவாக
            மனசாட்சி பேசும் உங்கள் மனசாட்சி மனிதனை இனம்
            பொழி கண்டுவிட்டுத்தான் பேசுமா என்ன?

          • ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

            நாங்கள் வென்று விட்டோம். தீவிரவாதத்திலிருந்து நாட்டை காப்பாற்றி விட்டேன் என்று மாமன்னர் கூறினாரே, அவரும் அவர் தொம்பியும் சேர்ந்து ஒன்றே ஒன்றை மட்டும் செய்யச் சொல்லுங்க பார்க்கலாம்.

            பிரபாகரன் இறந்த மரண அறிக்கையை இந்தியாவிடம் வழங்கச் சொல்லுங்க பார்க்கலாம்.

            அதன் பிறகு திருப்பூர் வாங்க.

  8. soundar's avatar soundar சொல்கிறார்:

    Excellent discussion

  9. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    பிரபாகரன் இறந்து போய்விட்டாரா என்ன? நம்ப முடியவில்லை.
    அவர் இருக்கிறார். வரவேண்டிய தருணத்தில் வந்திவிடுவார்
    என்றல்லவா அவரது தோழ்மைக் கருதும் தமிழினத் தலைவர்கள்
    சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் நம்பிக் கொண்டு
    இருக்கிறோம். நீங்கள் இப்படிச் சொன்னால் எப்படி அண்ணே?
    —–
    செட்டியார் வியாபாரம் மாதிரி (உளுந்து இருக்கா? உருண்டை
    வெல்லம் இருக்கு) எழுத ஆரம்பித்து விட்டீர்கள். என்னை
    விட்டுடுங்கோ.
    —-
    காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு போன் காலத்தில்
    embassy-க்குப் போய் விசா எடுக்குற வேலையெல்லாம்
    இல்லையாமே? டிக்கெட்டும் இவ்வளவு இல்லையாமே?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வெங்கட்ரமணி,

      இந்த வலைத்தளத்தில் எழுப்பப்படும் பிரச்சினைகள்
      குறித்து சிலருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது சகஜம்.

      அதை வெளிப்படையாகக் கூறி விவாதிக்க வேண்டும்.
      எழுப்பப்பட்ட பிரச்சினை குறித்து தங்கள் கருத்தைக்
      கூறினால் –
      ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவரவர் விருப்பம்.
      இந்த தளத்தில் பல நண்பர்களும் அதைத்தான்
      செய்கிறார்கள்.

      ஆனால் நீங்கள் ஏறுமாறாக எதையாவது ஆரம்பித்து விட்டு,
      மேற்கொண்டு தொடர இயலாத நிலையில் தந்திரமாக
      இன்னொன்றுக்கு jump செய்கிறீர்கள்.

      நேரிடையான விவாதத்திற்கு நீங்கள் தயாராக இல்லை.
      விதண்டாவாதம் செய்வதையே வாடிக்கையாகக்
      கொள்கிறீர்கள்.

      “வாதம்” – ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்
      செய்வது.
      “விதண்டாவாதம்” – நியாயம் இருக்கிறதோ இல்லையோ,
      தாங்கள் புத்திசாலிகள் என்பதை மட்டும் நிரூபிப்பதற்காக,
      வீம்புக்கு செய்யப்படுவது.

      நான் என் இடுகையில் விடுதலைப்புலிகளைப் பற்றிய
      பேச்சையே எடுக்கவில்லை. அப்பாவித் தமிழர்கள்
      ராஜபக்சே அரசால் கொல்லப்பட்டதையும், அதை
      சுப்ரமணியன் சுவாமி கொண்டாடிப் பேசியதையும்
      கண்டித்து தான் எழுதினேன்.

      நீங்களாகவே “எங்கெங்கோ” போனீர்கள்.
      “எதையெதையோ” எழுதினீர்கள்.

      இறுதியில் மீண்டும் நான் உங்களுக்கு எழுதினேன் –

      “புலிகள் பற்றிய விவாதத்தை விடுங்கள்.
      ஒரே ஒரு கேள்வி –
      40,000 அப்பாவிகளை நான்கு மணி நேரத்தில் கொன்ற
      ராஜபக்சே அரசின் செயல் உங்கள் மனதை கொஞ்சம் கூட
      பாதிக்கவில்லையா ? வருத்தமுறச் செய்யவில்லையா ?

      40,000 தமிழர்களைக் கொன்ற ஒரு நாளைக்
      கொண்டாட வேண்டும் என்று கூறிய ஒரு அயோக்கியனை
      கண்டிப்பது தவறு என்று நினைக்கிறீர்களா ?

      இதற்கும் நீங்கள் விதண்டாவாதம் தான் செய்வீர்கள்
      என்றால் –

      மனசாட்சி இல்லாத ஒருவரை
      சந்திக்க நேர்ந்தது (வலைத்தளத்தில் தான்) குறித்து வருந்துவதைத் தவிர
      நான் வேறேன்ன செய்ய முடியும் ?”

      -என்னுடைய இந்த பின்னூட்டத்திற்கு எந்தவிதத்திலும் respond பண்ணாமல்
      வழக்கம்போல்
      அடுத்த இடுகையின் பின்னூட்டத்திற்கு விதண்டாவாதம்
      செய்யப் போய் விட்டீர்கள்.

      மீண்டும் மீண்டும் சொல்கிறேன் –
      விடுதலைப் புலிகளைப் பற்றியும், அவர்களது
      செயல்பாடுகளைப்பற்றியும் பலருக்கும் மாறுபட்ட
      கருத்துக்கள் இருக்கலாம்.

      ஆனால் – இலங்கை அரசு, தமிழ் மக்களுக்குச் செய்த,
      இன்னமும் தொடர்ந்து செய்யும் கொடுமைகளுக்கு
      வக்காலத்து வாங்குபவர்கள் என்னைப் பொருத்த வரையில்
      “மனசாட்சி” இல்லாதவர்களே.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  10. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    KM’s blog today is only about the Indian economy today but somehow the thread got digressed to Sri Lankan issues. In my view, the economy is in ICU mainly because of poor governance in many areas. The reasons for this range from lack of strong leadership, about which Modi has highlighted yesterday, to coalition government at the center with consequent ‘coalition compulsions’. Political parties might have the power to choose their candidates but the people of India should have applied due diligence in electing the right persons. Let better sense prevail in future on who should represent the people.

  11. srini's avatar srini சொல்கிறார்:

    even the discussion here in this particular post reaffirms that we are all Indians. started with some topic, gained momentum with something else and forgot the issue.. Vadhra statement rings in my mind…” we are mango people in banana republic” – we have short term memory loss… GOD… please save this country, because basically we indians are all nice people irrespective of religion.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Friends –
      I agree – these remarks (last few pinnoottangal )
      are not relevant to this present topic.
      They are relevant to the earlier one with the
      heading “oru drogi innoru drogiyai kaatti kodukkirar” !

      But since Mr.Venkatramani has chosen to write on this column,
      naturally replies are following here.
      I was conscious about it –
      but helpless because of the
      heat generated by the pinnoottams.

      Anyway – thank you Srini for reminding
      the term “mango people in the banana republic”

      with all best wishes,
      Kavirimainthan

      • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

        Dear Mr. Kaa.mai,
        Have given only my view on the current topic. You have
        complimented me for that too and you have asked for my
        “reply” to your note on the previous topic. I hope that I have
        replied in clear sense for that.
        However, Mr.Jothiji have passed on certain comments and
        raised some points. Have replied to that also, in my own
        style. When he chose to raise some other points, I have
        posted my final comments on that. I sincerely felt that I
        have did no wrong on my own.
        I feel you have gone through the entire “pinnotoms” by me
        and posted some serious remarks/comments, which is
        unwarranted. Request you to go through all my comments
        and react.
        (As I was away, I could not able to write immly)
        regards

  12. எஸ்.சம்பத்'s avatar எஸ்.சம்பத் சொல்கிறார்:

    //“வாதம்” – ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்
    செய்வது.
    “விதண்டாவாதம்” – நியாயம் இருக்கிறதோ இல்லையோ,
    தாங்கள் புத்திசாலிகள் என்பதை மட்டும் நிரூபிப்பதற்காக,
    வீம்புக்கு செய்யப்படுவது.//
    இதெல்லாம் நம்ம அதியமான் அவர்கள்தான் செய்வார்.

    அடுத்து நண்பர் ஜோதிஜி அறிமுகப்படுத்தும் தளங்கள் அனைத்துமே சிறப்புதான். இன்று சோனியா, துக்ளக் மேட்டரில் உள்ளே புகுந்து பார்த்ததில் மன்மோகன்+அலுவாலியா+சீனாதானா சீர்திருத்தங்கள் குறித்து நன்றாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. இனி தொடருகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.