ஒரு துரோகி -இன்னொரு துரோகியை காட்டிக் கொடுக்கிறார் …

ஒரு துரோகி -இன்னொரு துரோகியை
காட்டிக் கொடுக்கிறார் …
இன்று வெளியாகியுள்ள செய்தி –

இலங்கை அரசின் அழைப்பின் பேரில் –

‘போருக்குப் பிந்திய சிறிலங்கா –
சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்‘

என்கிற பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில்
கலந்து கொள்ள இலங்கை சென்றிருக்கும்
சுப்ரமணியன் சுவாமி அந்த கருத்தரங்கில் பேசியதாக
வெளியாகி இருக்கும் தகவல்கள் –

———————-

“ஜனநாயக நாடு ஒன்று வெளிநாட்டு உதவிகளின்றி
தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று வழிகாட்டிய
நாடு சிறிலங்கா.

இதற்காக பிராந்திய நாடுகள் சிறிலங்காவுக்கு
நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளன.

இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும்
அளவுக்கு சிறிலங்கா இராணுவம் திறமையானதாக
மாறியுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து
வெளியாகும் செய்திகளை பார்க்கும் போது,
முழு இந்தியாவும் சிறிலங்காவை எதிர்ப்பதான
உணர்வு ஏற்படலாம். ஆனால், உண்மையான
நிலைமை அதுவல்ல.

மே மாதம் 19ம் நாளை தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட
வெற்றி நாளாக அனைவரும் கொண்டாட வேண்டும்.

சிறிலங்கா போரில் வெற்றி பெறுவதற்கு இந்தியா
மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்தன.

இதற்கென இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்தி
ஒத்துழைப்பை பெறுவதற்காக, இருதரப்பிலும்
தலா மூவரைக் கொண்டதாக – ஆறு பேர் கொண்ட
குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு மிகவும் இரகசியமான முறையில் போர்
உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது உடனுக்குடன்
தீர்மானங்களை எடுத்து அவற்றை வெற்றிகரமாக
நிறைவேற்றியது.

தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வரான கருணாநிதிக்கு
போரின் முன்னேற்றம் பற்றி அடிக்கடி எடுத்துக் கூறப்பட்டது.

பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்படுவது
கூட கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது.

கருணாநிதி மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்து
இந்த விடயத்தில் தலையிடவில்லை.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடும்
என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.”

———————–

செருப்படி வாங்கத் தேவையான தகுதிகளை
உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சுவாமி.

இவரை பாஜக வில் இணைத்துக் கொண்டது அந்த கட்சி செய்த
மிகப்பெரிய தவறு. உடனடியாக
இவரை பாஜக விலிருந்து தூக்கி எறிவது
அந்தக் கட்சிக்கு நல்லது -நாட்டுக்கும் நல்லது.

வெளிநாட்டு உதவிகளின்றி தீவிரவாதத்தை தோற்கடிக்க
முடியும் என்று வழிகாட்டிய நாடு சிறிலங்கா”

என்று சொல்லி விட்டு அதே கூட்டத்தில்

“சிறிலங்கா போரில் வெற்றி பெறுவதற்கு இந்தியா
மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்தன”

என்று முரண்பாடாகப் பேசும் இந்த நபர் பேசுவது
யாருடைய நலத்திற்காக… ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to ஒரு துரோகி -இன்னொரு துரோகியை காட்டிக் கொடுக்கிறார் …

  1. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    உங்கள் எழுத்தை வாசித்த வரையிலும் நீங்கள் எழுத்தில் கொந்தளித்து நான் பார்த்தது இல்லை. உங்களை அறியாமல் கொந்தளித்து இந்த பதிவு போல பார்த்ததே இல்லை.

  2. VIYASAN's avatar VIYASAN சொல்கிறார்:

    இந்தியாவில் அடுத்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கலாம் என்பதால் சிங்கள அரசு சுவாமியை வளைத்துப் போட்டு விட்டது. அவரும் அதற்கேற்றவாறு தனது கட்சியுடன் பாஜகவில் சங்கமமாகி விட்டார். அதனால் பா ஜ க கட்சியினாலோ அல்லது அவர்கள் ஆட்சி அமைத்தாலோ எந்த நன்மையையும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை, மேலும் அழிவு தான் ஏற்படும். 😦

  3. M V MOOVENDAN's avatar M V MOOVENDAN சொல்கிறார்:

    How dare these fellows are speaking in support of gruesome genocide perpetrated against Tamil Race with the collusion of betrayers like Karunanidhi .And Tamil race is no more now in reality as it is splintered into small groups on caste lines.This has emboldened this foreign fellow subramanian samy to speak out in praise of srilanka in massacre of Tamil race..

  4. நாராயணன்'s avatar நாராயணன் சொல்கிறார்:

    இந்த ஆள் ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி.
    BJP வில் மந்திரிப்பதவி பெறுவதற்காக சேர்ந்திருக்கிறான். இவனைச் சேர்த்துக் கொண்டதற்காக BJP மிகவும்
    வருத்தப்பட நேரிடும். தமிழக BJP தலைவர்கள்
    உடனடியாக தேசியத்தலைமையை alert செய்ய வேண்டும்.
    இந்த ஆசாமியை வெளியே துரத்த வேண்டும்.

    நாராயணன்

  5. Vinoth's avatar Vinoth சொல்கிறார்:

    உலகிலேயே.. மினிஸ்டரி ஆப் டிஸ் இன்வட்மெண்டை கண்டுபிச்ச…

    சவப்பெட்டிலும் ஊழல் செய்த பிஜிபிக்கு சரியான சோடி தான் சு. சாமி…

    என்ன அரை சதம் ஒரு சதம் உண்மைகளை வாய்தவறி கொட்டீட்டர்.. அவ்வளவுதான்…

    காமை… இதுக்கே டென்சன் ஆனா எப்படி…

    என் நண்பர் ஒருத்தர் பட்ட மேற்படிப்பு, பிஹெடி பண்ணி கல்லூரி விரிவுரையாளர் வேலைக்கு த்குதி பெற்றிருக்கிறார். அவரின் தந்தை மொழி போராட தியாகி. , கழகத்தின் தீவிர தொண்டர்.

    கடந்த கழக ஆட்சியில் மந்திகளை நேரில் சந்தித்து.. குடும்ப நிலை பற்றி சொல்லி வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யசொன்னபோது …அப்ப்போத்தான் கல்விதுறை என்ற ஒரே துறையை பள்ளிகல்வி, கல்லூரிகல்வின்னு 2 துறையாக்கினாங்க..

    இப்ப அந்த போஸ்டு 8ல முதல்-10ல வரை போகுது. பணம் கொண்டுவாங்க பார்க்கலாம்னுடாங்க.. .

    தியாகிக்கு வார்டு கவுண்சிலர் சீட்டு கொடுக்க குட தயாரில்லை. காரனம் நீங்களே விஜயகாந்த் பதிவுல சொன்னதுதான்.. பணம் இருந்தாதான் எல்லம் காசே தான் கடவுளடா..

    ஓட்டுசீட்டுன்ன இன்னதுன்னு தெரியாம திரும்பி நிக்க வைத்து குண்டியில் குத்தினாலும் சரி… செத்தாலும் இந்த கை.. சூரியனை தவிர வேறு எதற்கும் குத்தாத்னு சொல்லுறவங்க கழக கண்மணீகள்…

    இதேபோல் எல்லா கட்சியிலும் இருக்கங்க.. அப்புரம் தலைவர்கள் எப்படி மக்களை மதிப்பாங்க?

    யார் எத்தனை லட்சம் கொடுத்தாலும் வாங்கிகொண்டு அத்தனைபேரும் சுயேட்சை வேட்பாளை ஜெயிக்கவைத்து கட்சி வேட்பாளர்களை ஒருமுறை ஓட்டண்டியாக்கிவிட்டால் போதும்..

    பணம் இருந்தால் போதும்கிற மமதை அடங்கும். பணத்துகான தேவை குறையும்போது ஊழல் குறைந்துதான் ஆக வேண்டும்..

    தானக நாம் விரும்பும் தேசம் வருவது நம் கையில் இருக்கிறது..குறிப்பாக ஓட்டுசீட்டில் இருக்கிறது..

    சாதி மதம் பணம் பார்க்காம் ஒட்டளிக்க மக்கள் தயாரா?

    அப்போது இப்படிபட்ட துரோகிகள் இருக்கும் இடம் புல் முளைத்திருக்கும்.

  6. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    ‘டீ பார்டி’ வைத்து ஆட்சியை கவிழ்த்தவனையே கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொண்டது பாஜக வின் மானம் கெட்ட பொழைப்பு. அதை ஒரு புறம் வைத்தாலும் இங்கிருக்கும் தமிழக பாஜக வினருக்கு கொஞ்சமேனும் சூடு சொரணை இருந்தால் கட்சி தலைமையிடம் பேசி இந்த ஆளை கட்சியை விட்டு வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டும்.ஏற்கனவே பாஜக வின் சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேவை சொந்த தொகுதிக்கு கூடி வந்து ‘அடிக்கல்’ நாட்டு விழா என்ற பெயரில் கூத்தடித்தார். இப்போது இது. ஒன்று மட்டும் உறுதி… ஈழ தமிழர்களும், நமது மீனவ தோழர்களுக்கும் இலங்கையிடம் இருந்து விடிவு என்பது எமது இந்த ஜென்மத்தில் நடக்காது. காரணம் பாஜக ஆட்சி அமைப்பின் சுஷ்மாவோ இல்லை சு சுவாமியோ தான் வெளியுறவு, உள்துறை, பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சரவையில் இருக்க போகிறார்கள். அப்புறமென்ன?!

  7. Jana Seelan's avatar Jana Seelan சொல்கிறார்:

    இவன் உலகறிந்த ஒரு அரசியல் கோமாளி. அதனை உறுதிப்படுத்தி உள்ளான். கொலைவெறியருக்கு துணைபோவதன் மூலம் இவர்களும் குற்றவாளிகளாகின்றனர்.

  8. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    பதிவிலும் இங்குள்ள சில பின்னூட்டங்களிலும் பிஜேபி ஆதரவு தெரிகிறது. அதைப் பற்றி நமக்கு கருத்தொன்றுமில்லை. ஆனால் சுப்பிணியைச் சேர்த்துக்கொண்டதால் பிஜெபியின் “புனிதம்” கெட்டுவிட்டதைப் போன்ற தோற்றம் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருச்சாளிக் கூட்டத்தில் மற்றுமொரு பெருச்சாளி போய்ச் சேர்ந்ததில் என்ன தவறென ஒன்றும் புரியவில்லை.

    பதிவின் செய்திக்கு வருகிறேன். பிஜெபியின் கண்ணசைவின்றி சுப்புணி இப்படிப் பேசியிருக்க வாய்ப்பில்லை. காங்கிற்கும், பிஜெபிக்கும் தொழில்துறைகளில் ரகசிய உடன்பாடு இருப்பதைப் போல அரசியலிலும் உண்டு.

  9. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    விமரிசனம் சுப்பிரமணிய ஸ்வாமி பேசியதாக வந்த செய்தியின்பால
    அமைந்ததாக் தெரியவில்லை. ஏன் உங்களுக்கு அவர் மேல் இத்தனை
    வனமம்?
    A COIN HAS TWO SIDES என்பார்களே அது போல் அரசியல்வாதிகளுக்கும்
    பன் முகங்கள் உண்டு. இலங்கைத் தமிழர் பிரச்சனைக் குறித்தான எந்த
    பேச்சிலும், (யாருடைய பேசிசிலும்) பிரபாகரனின் செயல்பாடுகளுக்கு
    எதிர் கருத்து இருக்க்க் கூடாது என்க் கருதுகிறீர்களா?
    தன் காலத்திலேயே ஈழம் மலர்ந்துவிடும். நாம் தனிக்காட்டு ராஜாவாக
    ஆளலாமென்கிற அசாத்தியமான அல்லது அபரிமிதமான ஆசையின்
    பொருட்டுத் தானே இவர் மற்ற போராட்டக் குழுக்களை “இல்லாமல்
    செய்தார்”. தனக்குப் பின் (ஈழப்)போரினை முன்னெடுத்துச் செல்ல
    ”உரிய” நபர்கள் வேண்டும் என்று கூட சிந்திக்காமல் எத்தனை பேரை
    அழித்தார்? கருணாவை அழித்து விட துணிந்தாரே ஏன்?. பலமுறை
    முயன்றும் இயலாமல், கருணா இலங்கை அரசோடு இனைந்தாரே.
    எல்லாம் மறந்து போய்விட்டதா? பிரபாகரனை அவரது இயக்கத்தை
    யாரும் அனுகவே முடியாத பெரும் சக்தியாக காட்டிக் கொண்டு
    இருந்தவர்கள் சொன்னதை (மட்டும்) முழுமையாக நம்பிவிட்டீர்களோ
    என எண்ணத் தோன்றுகிறது.
    ”ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்று ஒரு புத்தகம் இருக்கிறது.
    எழுதியவர் பெயர்.சி.புஸ்பராஜா. அவர். போராட்டத்தின் தொடக்கக்
    காலம் முதல் நேரடி பங்களிப்பு செய்த அனுபவஸ்தர். ஏறக்குறைய
    போராட்டத்தில் பங்களிப்பு செய்த எல்லா குழுக்களிலும், LTTE உட்பட,
    பங்கு பெற்று இருக்கிறார். அப்புத்தகத்தில் பல உண்மைகளைப் போட்டு
    உடைத்திருக்கிறார். பலவற்றை நீங்கள் நம்பவும் மறுப்பீர்கள். கிடைத்தால்
    வாசித்துப் பார்க்கவும்.

    • BC's avatar BC சொல்கிறார்:

      புலிகளின் தலைமையகத்தை கொண்ட புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்ற முயற்சிக்கும் செய்திகள் வந்த போது, பிரபாகரன் தமிழ்நாட்டு நக்கீரனில் கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றுவது என்பது பகல் கனவு என்று அறிவித்தார். இலங்கை ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றிய பின் தமிழ்நாட்டில் உள்ள புலி ஆதரவாளர்களால் செய்தி தெரிவிக்கபட்டது “புலிகளுக்கு கிளிநொச்சியை பிடிக்காமல் கைவிட்டு சென்று விட்டார்கள் அதன் பின் இலங்கை ராணுவம் கிளிநொச்சிக்குள் வர முடிந்தது, ஆனாலும் மிக பெரிய ஒரு தாக்குதலுக்கு புலிகள் தயாராகிறார்கள்” இப்படி எல்லாம் பிரபாகரன், புலிகள் பற்றி கற்பனைகளை நம்பியவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வெங்கட்ரமணி,

      ஒரு மிகப்பெரிய சுதந்திரப் போராட்டத்தை
      உணரக்கூடிய மனோ நிலையில் நீங்கள்
      இல்லை என்பது புரிகிறது.
      நீங்கள் பகத் சிங்கையும் ஏற்க மாட்டீர்கள் –
      வாஞ்சிநாதனையும் ஏற்க மாட்டீர்கள்.
      ஏன் -நேதாஜியைக் கூட ஏற்க மாட்டீர்கள்.

      இப்போதைக்கு, ஜெயித்தவர்கள்
      பேசுகிறார்கள் – பேசட்டும்.

      ஆனால் சக்கரம் சுழன்று கொண்டே தான் இருக்கும்.
      காலம் மாறும்.
      காட்சிகளும் மாறும்.

      இது குறித்து மீண்டும் தொடக்கம் முதல்
      விவாதிக்க – இப்போதைக்கு நான் விரும்பவில்லை.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

        காலச்சக்கரம் சுழன்று கொண்டுதானிருக்கிறது. அதன்
        பொருட்டே இரவும் பகலும். காட்சிகள் மாற அல்லது மாறியதாய்த்
        தோன்ற வாய்ப்பிருக்கிறது. காலம் மாறாது. அது கிடக்கட்டும்.
        வாஞ்சிநாதன் ஆஷ்துரையைச் சுட்டானா? அல்லது அவனது
        துப்பாக்கிக்கு தோட்டா செய்து தந்த சக போராளியைக் கொன்றானா?
        இந்திய சுதந்திர போராட்டத்தில் என் பாதை வேறு என்பதை
        பகிரங்கமாக சொல்லிவிட்டு இந்திய தேசிய நாணுவத்தை நிறுவிய
        நேதாஜி, போரிட்டது காந்தியுடனா? ஆங்கிலேயருடனா?
        பகத்சிங் ச்ண்டையிட்டது அண்டை வீட்டுக்காரனுடனா அல்லது
        ஆங்கிலேயருடனா? நான் படித்த வரலாற்றில் வேறு மாதிரி
        உள்ளது. நீங்கள் அறிந்த “உண்மையை” சொல்லுவீர்களா?

        நண்பர் ராமேஸ்வரம் போய்விட்டு வந்திருந்தார். தீர்த்த யாத்திரைக்
        குறித்து பேசிக் கொண்டிருந்தேன். காளையார்கோவில், சிவகங்கை
        எல்லாம் போய்விட்டு வந்ததாக சொன்னார். அவருக்கு ஒரு வருத்தம்.
        சிவகங்கை முழுவது சுற்றியும் , குளத்தருகே அமர்ந்த வண்ணம்
        அருளும் சின்னஞ்சிறு பெண்னைக் காணமுடியவில்லை என்று.
        சிவகங்கைக் குளத்தருகே அருளும் சின்னஞ்சிறு பெண், சிதம்பரத்தில்
        இருக்கிறாள் என்றேன். அதுதானே என் மாமியார் வீடு என்றார்.
        சிரித்துவிட்டு வந்தேன். (பிர்சாதத்தை வாங்கிக் கொண்டுதான்)

    • ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

      பிரபாகரன் குறித்து பேசுபவர்கள் ஒன்று தங்களை காந்தியாக கற்பனை செய்து கொள்பவர்கள். கொலை செய்தார் மற்றவர்களை அழித்தார் என்று சொல்பவர்களுக்கு கடந்த 30 வருட ஈழப் போராட்டத்தின் முழுமையான வரலாறு தெரிந்து இருக்கும் என்றா நம்புகின்றீர்கள். போகிற போக்கில் படித்ததை வைத்து பொங்குபவர்கள்.

      ஈழப்போராட்டம் நடப்பதற்கு முன் நடந்து முடிந்த பிறகு இலங்கை என்ற நாட்டிற்கு ஏன் இத்தனை நாடுகள் ஆதரித்தது? ஏன் ஈழப்போராட்டம் தோற்றது? இந்தியா ஏன் கொலைகார பாவத்தை சுமந்தது நிற்கின்றது? என்ன ஆதாயம் பெற்றது என்பதை படித்து தெரிந்து கொண்டு பிறகு பொங்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

      படிக்க நேரமில்லை என்பவர்கள் எப்போதும் போல அமைதியாக இருந்து விடுவது உத்தமம்.

      http://deviyar-illam.blogspot.in/2011/06/blog-post_30.html#comment-form

      • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

        ஈழப் போராட்டம் குறித்ததான, சான்றுகளுடன் கூடியதான,
        ஆதாரப் பூர்வமான, சார்பற்ற எந்த பதிவுகளும் இல்லை.
        குறிப்பாக தமிழில் இன்னமும் வரவில்லை என்பதை
        அறிவீர்களா? காரணம் என்ன? தெரிந்தால் சொல்லுங்கள்.
        செல்வனாயகம், வன்னியசிங்கம், அமிர்தலிங்கம், சாம்
        தமிபிமுத்து, சபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன்
        பிரபாகரன், வரதராஜபெருமாள், மங்கையற்கரசி போன்றோரில்
        யாரேனும் எதேனும் எழுதி வைத்து இருக்கிறார்களா?
        உளவுப்பிரிவு தளபதி பொட்டுஅம்மனாவது ஏதேனும் எழுதி
        விட்டுப் போயிருக்கிறாரா? அல்லது கருணா (நிதி இல்லை) தான்
        சொல்லியிருக்கிறாரா?
        அதையெல்லாம் படித்துவிட்டுத்தான் கருத்துரை எழுதுகிறீர்களா
        அல்லது நீங்கள் நம்பும் தமிழினத் தலைவர்கள் சொல்வதைக் கேட்டு
        நம்பி எழுதுகிறீர்களா?
        ஆயுதம் தாங்கிய போராட்டம் வலுப் பெற்ற நிலையில் அதில்
        பெரும் பங்காற்றிய பலரும் “உண்மையை” ஏன் எழுத
        முற்படவில்லை? ஈழப் போராட்டம் பெரிய வரலாற்று நிகழ்வு
        என்பது உண்மையானால், அதற்குண்டான சான்றுகளை
        சார்பற்ற நிலையில் அல்லது நோக்கில் பதியாமல் இருப்பது
        யாருடைய குற்றம்?
        “உண்மை” நிலையைச் சொல்லும் புத்தகம் இருந்தால்
        சொல்லுங்கள். “வாங்கி”ப் படித்துவிட்டு, கருத்து எழுதுகிறேன்.
        —–
        கடந்த ஞாயிறன்று நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன். நிறைய
        பந்துகள் அறுபட்டுக் கிடந்தது. விசாரித்தேன். நண்பரின் மகனுக்கு
        விஞ்ஞான அறிவு “அதிகம்” என்றும், வீசும் பந்து மேலெழ
        உள் உள்ள காற்றுதான் காரணம் என்பதை (ஆசிரியர் உதவியால்)
        தெரிந்து கொண்ட பையன், காற்றைக் கண்டறிய அறுத்துப்
        பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றார். நண்பருக்கு மகிழ்ச்சியோ
        இல்லையோ தெரியவில்லை. நண்பர் பந்து வாங்காதிருப்பது
        மிகவும் நன்று என்று நினைத்தும் சொல்லாமல் திரும்பினேன்.

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      வெங்கட்ரமணி அவர்கள் புஷ்பராஜாவை ஒரு நடுநிலையான புனிதராக பிரதிபலித்து எழுதியிருப்பது அவரின் அறியாமையை காட்டுகிறது. புஷ்பராஜா ஆரம்ப கால போராளிகளில் ஒருவர் என்பதில் உண்மை ஆனால் 1993 வரை வெளிநாட்டின் EPRLF பிரதிநிதி என்பதை மறக்க கூடாது. EPRLF என்பது EROS எனும் இயக்கத்தில் இருந்து பிரிந்து பத்மநாபா, டக்லஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமா சந்திரன் மற்றும் வரதராஜ பெருமாள் போன்றோரால் உருவாக்கப்பட்டது. தமிழர்களுக்கு எதிராக இந்திய அமைதிப்படை (IPKF ) இயங்கியபோது அவர்களுடன் சேர்ந்து இயங்கிய கூடத்தில் தான் புஷ்பராஜா இருந்தார். மேற்கொண்டு புஷ்பராஜா, EPRLF, புஷ்பராஜாவின் நண்பர் டக்லஸ் தேவானந்தா பற்றி நிறைய எழுதலாம் ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லை.

      ஆனால் நான் கூற விரும்புவது ஒன்று தான். புஷபராஜாவின் புத்தகத்தில் EPRLF தவறு செய்திருக்கிறார்கள் என்று பொதுவாக கூறப்படிருக்குமே தவிர இந்திய இராணுவத்தின் நிழலில் அவர்கள் செய்த அட்டூழியங்களை எழுதியிருக்க மாட்டார். நூற்றுக்கு மேற்பட்ட ஏழை அப்பாவி சிறுவர்களை பலவந்தமாக பிடித்து போய் போர் பயிற்சி கொடுத்ததும், மறுத்தோர் சித்திரவதை செய்யப்பட்டதும், பிள்ளைகளை காணாது பெற்றோர் ஊர் ஊராக அலைந்ததும் புத்தகத்தில் இல்லை. அதன் பின் IPKF வெளியேறிய போது வரதராஜ பெருமாளையும் இன்னும் சிலரையும் தவிர மற்ற அனைவரையும் (சிறவர்கள் உட்பட) அம்போ என விட்டு விட்டு ஓடியதையும் எழுதியிருக்க மாட்டார், மேலும் புஷ்பராஜா, பத்மநாபாவை (தன் முதல் தலைவர்) புத்தகத்தில் அதிகமாகவே தூக்கி வைத்து எழுதியிருப்பார்.

      இவற்றை எல்லாம் நான் விபரிப்பது புஷ்பராஜாவை தவறாக சொல்வதற்கு இல்லை. ஆனால் அவரை நடுநிலையான உத்தம எழுத்தாளர் எனபது போல் வெங்கட்ரமணி குறிப்பிடுவதால் தான். அது தவிர போராளி குழுக்களுக்குள் யுத்தம் நிகழவும் கருணாவை கைகூலியாக்க காரணமான RAW இன் உள்ளடிவேலைகள் தெரியாமல், கருணாநிதியை போல் வெங்கட்ரமணி அவர்களும் கேள்வி கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது.

      நீங்கள் இந்த புத்தகத்தை நடுநிலையான புத்தகம் என்பதை விடுத்து யாழ்ப்பாண பேராசிரியர்கள் நால்வர் எழுதிய ‘The Broken Palmyra ‘ , அருளர் அவர்கள் எழுதிய ‘லங்கா ராணி’ போன்ற புத்தகங்களையும் படியுங்கள். புஷ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ பல நிகழ்வுகளின் பதிவானாலும் அது நீங்கள் சொல்வது முழுதான சார்பற்ற புத்தகம் இல்லை.

      • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

        அவகாசம் இருந்தால், புத்தகமும் கையிலிருந்தால் மேற்படி
        புத்தகத்தை இன்னொரு முறை வாசிக்கவும். பத்மனாபா இந்த
        புஸ்பராஜாவின் முதல் தலைவர் இல்லை. அவ்வாறு குறிப்பிட
        படவுமில்லை.
        எழுதியவரே இது முழுமையான வரலாறு இல்லை
        என்று ஒப்புகையிட்ட பின்னர், அவற்றை முழுமையான
        உண்மை என கருத அவசியமில்லை (எனக்கு).

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்பர் வெங்கட்ரமணி,

          அடுத்த பக்கத்தின் நியாயத்தை ஏற்றுக்கொள்ள உங்கள்
          ஈகோ தயாராக இல்லை. இதற்கு மேல் இதைப்பற்றி
          விவாதம் செய்வதில் பலன் எதுவும் கிட்டப்போவதில்லை –

          சரி – புலிகள் பற்றிய விவாதத்தை விடுங்கள்.

          ஒரே ஒரு கேள்வி –

          40,000 அப்பாவிகளை நான்கு மணி நேரத்தில் கொன்ற
          ராஜபக்சே அரசின் செயல் உங்கள் மனதை கொஞ்சம் கூட
          பாதிக்கவில்லையா ? வருத்தமுறச் செய்யவில்லையா ?

          40,000 தமிழர்களைக் கொன்ற ஒரு நாளைக்
          கொண்டாட வேண்டும் என்று கூறிய ஒரு அயோக்கியனை
          கண்டிப்பது தவறு என்று நினைக்கிறீர்களா ?

          இதற்கும் நீங்கள் விதண்டாவாதம் தான் செய்வீர்கள்
          என்றால் –

          மனசாட்சி இல்லாத ஒருவரை
          சந்திக்க நேர்ந்தது (வலைத்தளத்தில் தான்) குறித்து வருந்துவதைத் தவிர
          நான் வேறேன்ன செய்ய முடியும் ?

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

  10. Prabhu's avatar Prabhu சொல்கிறார்:

    Somebody has remarked a “a coin has two sides,” but this deplorable coin has many, many sides that are highly questionable.

  11. dhinakaran's avatar dhinakaran சொல்கிறார்:

    திரு சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு இந்தியாவின் தேசியக்கட்சிகள் ராஜபக்சேவுக்கு எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளன என்பதை வெளிக்காட்டுகிறது ……இந்தக்கட்சிகள் ‘சோரம் போகப்போவது யாரு’ என்று போட்டி வைக்கும்போதெல்லாம் கலந்து கொண்டு ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி வெல்வதுதான் உச்சக்கட்ட சோகம்.
    தன்னுடைய சீரழிவைத்தானே கொண்டாடிக்கொள்வதில் தமிழர்கள் தனிச்சிறப்பானவர்கள்தான்

  12. VIYASAN's avatar VIYASAN சொல்கிறார்:

    //தன்னுடைய சீரழிவைத்தானே கொண்டாடிக்கொள்வதில் தமிழர்கள் தனிச்சிறப்பானவர்கள்தான்//
    ஏனென்றால் தமிழர்கள் மத்தியில் சோற்றுக்கு சோரம் போகிறவர்கள் நிறைய பேர் உண்டு, அது தான் தமிழினத்தின் சாபக்கேடு. 😦

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.