தமிழ்நாட்டின் மொத்த மின் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய அளவிற்கு ஒரு நீர்மின் திட்டம் இருந்தால் ?… (கொ.த.கொ.வி.Part-3)

தமிழ்நாட்டின் மொத்த மின் தேவைகளையும்
நிறைவேற்றக்கூடிய அளவிற்கு ஒரு
நீர்மின் திட்டம் இருந்தால் ?…
(கொ.த.கொ.வி.Part-3)

———————-
தமிழ்நாட்டின் மொத்த அதிகபட்ச மின் தேவை
ஒரு நாளைக்கு 14,000 மெகா வாட். ஏகப்பட்ட
சிறிய மற்றும் நடுத்தர அனல், புனல், அணுமின்
நிலையங்கள் இருந்தும் நம்மால் இந்த தேவையை
பூர்த்தி செய்துக் கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், ஒரே ஒரு நீர்மின் நிலையம்
18,200 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி
செய்கிறது என்பதை
அறியும்போது எவ்வளவு வியப்பு ஏற்படுகிறது !

உலகிலேயே பெரிய நீர்மின் நிலையம் சீனாவில்
yanktse ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
Three Gorges dam –hydro electrical
power project. 32 பெரிய பெரிய டர்பைன்களைக்
கொண்டு செயல்படுகிறது இந்த ராட்சஸ நீர்மின்
உற்பத்தி நிலையம்.

மின் உற்பத்தியோடு மட்டும் அல்லாமல் யாங்க்ட்சே
ஆற்றின் கட்டுக்கடங்காத வெள்ளப்போக்கை கட்டுக்குள்
கொண்டுவந்து ஆண்டு தோறும் வெள்ளத்தினால்
நிகழ்ந்து வந்த ஏகப்பட்ட உயிர்ச்சேதங்களையும்,
பொருட்சேதங்களையும் கூட கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வந்து – விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும்
சிறந்த முறையில் பயன்படுகிறது இந்த அணை.

உலகின் மிகச்சிறந்த engineering-marvel-களில்
இதுவும் ஒன்றாகப் பேசப்படுகிறது.

இந்த அணை மற்றும் நீர்மின் நிலையத்தின்
பிரமிப்பூட்டும் சில அழகான புகைப்படங்கள் கீழே –

(புகைப்படங்களுடன் கூடிய தகவல் முடிவடைகிறது
நாளை விவாதத்திற்கான விஷயத்தை எடுத்துக்
கொள்ளலாமா … ?)

tg-1

tg-2

ttg-3

tg-4

tg-5

tg-6

tg-7

tg-8

tg-9

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தமிழ்நாட்டின் மொத்த மின் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய அளவிற்கு ஒரு நீர்மின் திட்டம் இருந்தால் ?… (கொ.த.கொ.வி.Part-3)

  1. balumahendran's avatar balumahendran சொல்கிறார்:

    கூந்தல் இருந்தால்தான் அள்ளி முடிய முடியும். இந்த ஆற்றைப் பற்றி விக்கியில் பார்த்தபோது அஃது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆறு எனத் தெரியவந்தது. நம்மூரில் உள்ள சின்னச்சின்ன ஆற்றுக்கெல்லாம் இந்த மாதிரிப் பெரிய hydro-electical project கொண்டுவர முடியாது.

    • Srinivasan C's avatar Srinivasan C சொல்கிறார்:

      ஆமாமா இருக்கின்ற கொஞ்சநஞ்ச கூந்தலையும் எப்படி பராமரித்துக்கொண்டிருக்கிறோம் என்றுதான் எல்லோருக்குமே தெரியுமே.

      இப்படியே சப்பகட்டு கட்டிகிட்டு நமக்கு நாமே சமாதானம் சொல்லிகிட்டு காலத்தை ஓட்டிகிட்டு இருந்தா பத்தாது. முடிந்த அளவு நாமும் (மக்களும்) ஒத்துழைக்க வேண்டும். இந்த தகவலுக்காக மட்டுமில்லை பொதுவாகவே சொல்கிறேன்.

      சற்றே சிந்தித்துப்பாருங்கள். நமது இந்தியா, தமிழ்நாடு, நாம் இருக்கும் இடம் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது. 5 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது

      பழக்க வழக்கங்கள்
      விலைவாசி
      ஊழல்
      வானிலை
      மனிதாபிமானம்
      சுத்தம்/குப்பை
      வருமானம்/வியாபாரம்

      ஆகிய எல்லாவற்றிலும் வேறுபடுத்திப்பாருங்கள்.

      இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் எப்படி இருக்கும்.

      சும்மா பொழுது கழிந்தால் போதுமா. நாம் எதற்காக பிறந்தோம். மற்றவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். எதை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். சற்றே சிந்தியுங்கள்.

    • Srinivasan C's avatar Srinivasan C சொல்கிறார்:

      எத்தனை ஊரில்/நாட்டில் நம் நாட்டில் இருந்தது போல் சித்தர்கள் இருந்தார்கள்?. விவசாயத்திற்கு பெயர்போன நாட்டில் தற்போது காய்கறிகளின் விலைவாசி என்ன? சுமார் கடந்த 5 வருடங்களில் மட்டும் விவசாய நிலங்கள் எத்தனை மடங்காக சுருங்கியதற்கு காரணம் என்ன? காரணம் மழை என்றால், அதற்கு காரணம் நீங்களும் நானும் தான். அதை காரணமாக வைத்தே ரியல் எஸ்டேட் வியாபாரம் படு ஜோராக நடந்து அதுவும் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என தெரிந்ததே.

      நம்மாளும் சிறுசிறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முடிந்தால் மற்றவர்க்கும் சொல்லவேண்டும்

      உதாரணத்திற்கு

      கூடிய மட்டும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை தவிர்க்கலாம்

      வீட்டுக்கழிவுகள் எல்லாவற்றையும் ஒரே குப்பைகளாக கொட்டாமல், தரம் பிரித்து கொட்டலாம். அதாவது காய்கறி குப்பைகளை முடிந்தால் அருகில் ஆடு மாடு வைத்திருப்பவர்களுக்கு கொடுத்து அல்லது வீட்டிற்கு முன்புறம்/பின்புறம் இதற்கென் இடம் அமைத்து மக்குமாறு செய்யலாம். சிலர் இதையே உரமாக்கி விற்கவும் செய்கின்றனர்.

      அரசாங்கம் உத்தரவு போட்டாலும் போடாவிட்டாலும் மழைநீர் வடிகால் நமக்கும் நம் தலைமுறைக்கும் அவசியம் என கருதி சொந்த வீட்டுக்காரர்கள் அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

      நான் வீட்டை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு, அதன் காரணமாக அந்த தெருவையே குப்பையாக்குபவர்களையும்

      குப்பைகளை கொண்டுபோய் சாக்கடையில் கொட்டும் மூடர்களையும் என்னவென்று சொல்வது. அவர்கள் படித்துதான் பயன் என்ன?

      அதேபோல் இக்காலத்து இளைஞர்களும் படு மோசம். அடுத்தவர்களை பயமுறுத்துவது போல் வண்டி ஓட்டுவதும், வாகனங்கள் வருவதை கவனிக்காமல் திருப்புவது என்று பலரின் சாபங்களை வாங்கிக்கட்டிக்கொள்கிறார்கள்.

      இப்படி சிறு சிறு நல்ல முயற்சிகள் மூலம் நம்மாளும் ஏதாவது செய்யமுடியும்.

      இதற்கும், “நான் மட்டும் இப்படி செய்தால், இதுபோல் பின்பற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா?” என்று எண்ணாமல் ஒவ்வொருவரும் பின்பற்றினால் நம் இருப்பிடம் எப்படி இருக்கும். சற்றே சிந்திப்பீர். செயல்படுவீர்

      • சிவானந்தம்'s avatar சிவானந்தம் சொல்கிறார்:

        ///நான் வீட்டை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு, அதன் காரணமாக அந்த தெருவையே குப்பையாக்குபவர்களையும்///

        சத்தியமான வார்த்தை. இந்தியா முட்டாள்களின் சொர்கமாக இருக்கிறது.

        கடைசி வரியில் நீங்கள் சொன்னதை எல்லோரும் பினபற்றினால் நிச்சயம் மாற்றம் வரும்.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        நண்பர் ஸ்ரீநிவாசன்,

        வருக நண்பரே. இந்த வலைத்தளத்தில்
        முதல் தடவையாக
        உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.
        நல்ல பின்னூட்டம்.

        இத்தகைய சிந்தனைகள் வர வேண்டும்,
        வளர வேண்டும் என்பது தான் என் விருப்பமும்.
        தனி மனிதன் திருந்தினால் தானே
        நாடு திருந்தும் ? நம் கடமையை நன்கு செய்வோம்.
        கூடவே, சமுதாயத்தை, சூழ்நிலையை சரி செய்ய
        நம்மால் இயன்ற வகையில் முயற்சிப்போம்.

        உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து
        பகிர்ந்து கொள்ளுங்கள்.

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

  2. Rajagopalan. R.'s avatar Rajagopalan. R. சொல்கிறார்:

    காவிரிமைந்தன்,

    அற்புதம்.
    மிகவும் உபயோகமான தகவல்களை
    சுவாரஸ்யமான விதத்தில் கொடுக்கிறீர்கள்.

    அடுத்த பகுதிக்காக ஆவலுடன்
    காத்திருக்கிறேன் (றோம்.)

  3. வெங்கட்டரமணி's avatar வெங்கட்டரமணி சொல்கிறார்:

    நம் நாட்டில் இது மாதிரியான புனல் மின்சார திட்டத்திற்கு
    வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் கிடக்கட்டும்.
    வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு துவக்கப்பட்ட பல திட்டங்களின்
    நிலை என்னவாக இருக்கிறது? எத்தனையோ திட்டங்கள்
    “அடிக்கல்”லோடும், அறிவிப்பு காகிதமாகவும், கைவசம் உள்ளது
    என்கிற வீர உரையோடும், போதுமான தொகை ஒதுக்கப்
    ப்டாமலும், திட்டத்திற்கான தொகை பகுதி பகுதியாக வேறு பல
    (உடனடி பலன் தரும்) திட்டங்களுக்கு திருப்பப்ப்ட்டும், எங்கள்
    ஆட்சியின் திட்டமல்ல; அவரது திட்டம் என்று கூறி கைவிடப்பட்ட
    திட்டங்கள் இப்படி பாதியில் பாழாய் நிற்பவை எத்தனை?
    மாநிலத்தில் தலை நகர மேம்பாட்டிற்காக மட்டுமே போடப்படும்
    திட்டங்களாவது முழுதுமாக நிறைவேற்றப்படுகிறதா என்றால
    அதுவும் கேள்விக்குறி தான்.
    உதகையில் நிறைவேற்றப்பட்ட “பைகாரா” திட்டத்தின் மூலமாக
    முழு அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறதா. இல்லையெனில்
    காரணம் என்ன? தேவையான அளவில் பராமரிப்பு இல்லாமல்
    போனதற்கு என்ன அல்லது யார் காரணம்?
    தெரு தெருவாய் கூட்டுவதில் பொது நலமுண்டு
    ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுய நலமுண்டு
    மக்கள் நலம் நலம் என்றே சொல்லுவார்-தம்
    மக்கள் நலமொன்றே தான் மனதில் கொள்ளுவார்… எங்கிற MGR
    படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது. நம் நாட்டு
    அரசியல்வாதிகளுக்கு “அது” ஒன்றைத் தவிர வேறேதுவும்
    தெரியாது. அதுதான் பிரச்சனை.

  4. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    wonderful thanks a lot

  5. separa's avatar separa சொல்கிறார்:

    சிங்கப்பூர் சீனா அளவிற்கு இந்தியா முன்னேறாத காரணம் குறித்து (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) முதலீட்டாளர்கள் ஒருமித்துச் சொல்லும் காரணம் கீழ்க்கண்டவையே.
    இந்தியாவில் ஒரு வலுவான, நிலையான, மானில அரசுகளுடன் இணக்கமான மத்திய அரசு இல்லை.
    தடையில்லா மின்சார உற்பத்தி, விநியோகம், குடிநீர், தரமான சாலை வசதிகள் என்பது போன்ற சிறப்பான கட்டமைப்புக்கள் அனைத்திந்திய அளவில் சீராக இல்லை.
    இந்திய வணிகம் சார்ந்த வழிமுறைகள் மற்றும் மத்திய மானில அரசுகளின் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் நம்பகமான ஒன்றாக இல்லை.
    இந்திய வரி விதிப்பு அதிகம் என்பதோடு அது கணக்கிடப்படும் முறைகள் குழப்பமாக இருக்கிறது.
    இந்திய தொழிலாளர்கள் – முதலீட்டாளர்கள் உறவு சீராக இருக்க உதவ வேண்டிய சட்டவிதிகள் மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. பெரும்பாலும் வாக்கு வங்கி காரணமாக, தொழிலாளர் கையே ஓங்கி நிற்கிறது. நியாயமான தொழில் முன்னேற்றம் சார்ந்த செயல்பாடுகளில்கூட, முதலீட்டாளர்கள் பெரும் எதிர்ப்பைச் சந்திக்கின்றனர்.
    இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய வலுவான கட்டுப்பாடற்ற காரணி (சிலசமயங்களில் முன் சொன்னவற்றில் உள்ள ஓட்டைகளை அறிந்து தப்பிக்க உதவினாலும், சமாளிக்க இயலாத அளவு) அனைத்து நிலைகளிலும் பரவி நிற்கும் நிர்வாக முறைகேடுகளும் அதன் விளைவான லஞ்சமும்.
    இவை சரிசெய்யப்படாதவரை இந்தியாவில் முதலீடு செய்வது ஆபத்தானது என்பது அவர்கள் கருத்து. பல இந்திய நிறுவனங்கள் கூட இப்பொழுது, வெளிநாடுகளில் முதலீடு செய்ய முயலுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.