கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் –
கொஞ்சம் விவாதமும் …(part -2)
———
கடந்த 10 ஆண்டுகளில் சைனா திட்டமிட்டு,
மொத்தம் சுமார் 1,20,000 ( ஒரு லட்சத்து
இருபதாயிரம் ) கிலோ மீட்டர் தூரத்திற்கு
கிட்டத்தட்ட அந்நாட்டின் அனைத்து முக்கிய
நீர்வளங்களையும் இணைத்து நீர்வழிச்சாலைகளை
உருவாக்கி இருக்கிறது. இதை பெரும் அளவில்
உள்நாட்டு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு
பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த நீர்வழிச்சாலைகளின் மூலம் கடந்த
ஒரு ஆண்டில் மட்டும் எடுத்துச்செல்லப்பட்டுள்ள
சரக்குப் போக்குவரத்தின் அளவு
2,126.3 billion tons/km.
அதே போல் இதை பயன்படுத்தி நிகழ்ந்துள்ள
உள்நாட்டு போக்குவரத்து பயணிகள் பயன்பாடு –
10.73 billion persons/km.
சாம்பிளுக்காக – சீன நீர்வழிச்சாலைகள் சிலவற்றின்
புகைப்படங்கள் கீழே –
(இன்னும் இருக்கிறது – தொடர்வோம் !)














நாமளும் தான் கூவத்துல கொட்டிக்கிட்டு இருக்கோமே!
Bangio Dam was broken and 1,74,000 People were killed. Due to making new Dam , between 2004 to 2008, there are 8 crore people have been moved.
சைனா ஆரம்ப முதலே ஒரு கட்டுப்பாடான (சர்வாதிகாரம் என்றும் சொல்லலாம்) நாடு அவர்களின் நல்ல காலம் லஞ்சம்,ஊழல் என்றெல்லாம் இருந்தாலும், தலைவர்கள் நம்மவர்கள் அளவு அதீத சுயநலம் கொண்டவர்கள் அல்ல.ஆளவும் தெரிந்தவர்கள் நாடு நலம் பெற பல நல்ல திட்டங்கள் தீட்டி, நிறைவேற்றியுள்ளனர் எதிர்க் கட்சிகள் என்று குறிப்பிட்டுச் சொல்ல எவருமில்லை. அங்கு தனிமனித சுதந்திரம் என்பதெல்லாம் கனவு எந்த திட்டத்திற்கும் அது எத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும் எதிர்த்துக் கேட்க நாதியில்லை (சுருங்கச் சொன்னால், மோடியின் குஜராத் போல) பின் முன்னேற்றத்திற்கு தடை என்ன? நம் நாட்டில் நல்ல திட்டங்கள் தப்பித் தவறி உருவாக்கப்பட்டாலும் யாராவது ஒருவர் எதாவது காரணம் காட்டி எதிர்க்கின்றனர்.