கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் – கொஞ்சம் விவாதமும் …

கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் –
கொஞ்சம் விவாதமும் …
இந்த இடுகையில் விவாதத்திற்கான பொருளை
எடுத்துக் கொள்ளும் முன்னர், சில தகவல்களை
நாம் பார்ப்பது அவசியம்.

எனவே – முதலில் தகவல்கள்

—————-
உலகின் மிகப்பெரிய மூன்று மேம்பாலங்கள்
( நீளத்திலும், உயரத்திலும் ) பற்றிய தகவல்கள்
கீழே –
1) Danyang–Kunshan Grand Bridge –
உலகிலேயே மிக நீளமான பிரிட்ஜ் இது.
இதன் நீளம் 164.8 கிலோ மீட்டர் (சென்னையிலிருந்து-
விழுப்புரத்திற்கு செல்லும் தூரத்தை விடவும் சிறிது அதிகம் !)

2006-ல் கட்டுமானப்பணி துவக்கப்பட்டு நான்கே
ஆண்டுகளில் -2010-ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டு
விட்டது. இதற்கான செலவு – 8.5 பில்லியன்
அமெரிக்க டாலர்கள். இந்த பாலம் கட்டும் வேலையில்
சுமார் 10,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் பிரமிப்பூட்டும் சில புகைப்படங்கள் கீழே –

danyan kunshan bridge-1

danyan kunshan bridge-2

danyan kunshan bridge-3

danyan kunshan-4

danyan

2)Tianjin Grand Bridge –

உலகின் இரண்டாவது மிக நீளமான பாலம் இது.
இதன் நீளம் 113.7 கிலோ மீட்டர்.
2006 -ல் துவக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி,
நான்கே ஆண்டுகளில், அதாவது 2010-ல்
முடிவடைந்து விட்டது.
இதன் கண்கவர் புகைப்படங்கள் சில கீழே –

Tianjin-Grand-Bridge.(second)-1

Tianjin-Grand-Bridge.(second)-2

3)Weinan Weihe Grand Bridge –

உலகின் மூன்றாவது மிக நீளமான பாலம் இது.
இதன் நீளம் 79.7 கிலோ மீட்டர்.
2008-ல் இது கட்டி முடிக்கப்பட்டபோது, இது தான்
உலகின் மிக நீண்ட பாலமாக இருந்தது.
இதற்குப் பிறகு மேலே உள்ள 2 பாலங்களும்
கட்டப்பட்டதால், இது 3வது பெரிய பாலமாகி விட்டது.
இந்த ஒரே மேம்பாலம் பல ஆறுகளையும்,
வெய் நதியை இரண்டு முறையும் கடந்து செல்கிறது.
இதன் அற்புதமான புகைப்படங்கள் சில கீழே –

 

Weinan Weihe Grand Bridge -2

Weinan Weihe Grand Bridge -3

γεφυρες (6)

γεφυρες (24)

(இன்னும் இருக்கிறது – தொடர்வோம் !)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் – கொஞ்சம் விவாதமும் …

  1. வியக்க வைக்கிறது…!

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நம்ம கத்திப்பாரா பாலம் கூட இதே காலக்கட்டத்தில்தான் கட்டப்பட்டது.

  3. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    great,wonders,pls continue

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.