சிவகங்கை தொகுதி M.P.ஆற்றும்
பணிகள் … !!
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்
தன் தொகுதி மக்களுக்கோ, தமிழ் நாட்டிற்கோ
எதுவுமே செய்வதில்லை என்று குறைப்படும்
மக்கள் அவரது இந்த வளர்ச்சிப் பணிகளைக்
கண்ட பிறகாவது –
தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்களா ?
(இதைத்தவிர “ஹிந்து” நாளிதழிற்கு கால்+கால்
= அரை பக்கம் விளம்பரம் வரும்படி ..!)
(மற்ற நாளிதழ்களை நான் இன்னும் பார்க்கவில்லை !!)





எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து கொண்டு இருக்கின்றது.
எது நடக்க இருக்கினற்தோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
http://deviyar-illam.blogspot.in/2013/07/blog-post_1276.html
உங்கள் கருத்தறிய ஆவல்
ஜோதிஜி,
“நடக்கப்போவது நன்றாகவே நடக்கும் ” –
கீதை தான் நம்பிக்கை கொடுக்கிறது.
ஆனால் நடப்பு – நம்பிக்கை கொடுக்கவில்லையே !
பேச்சில்,குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லையே !
மேற்படி சிவகங்கை வங்கிக்கிளை திறப்பு விழாவில்
தலைவர் பேசி இருக்கிறார் –
“மக்கள் கடன் வாங்கவே பயப்படுகிறார்கள்.
துணிந்து நிறைய கடன் வாங்க வேண்டும்.
அப்போது தான் பொருளாதாரம் வளரும் –
வங்கிகளும் வளரும் !”(???)
“இன்னும் 8000 வங்கிக்கிளைகள் துவக்கப்பட
இருக்கின்றன. இதன் மூலம் 50,000 பேருக்கு
வேலை கிடைக்கும் !”
“பிரேசில், அர்ஜென்டினா, இந்தோனேஷியா,
கொரியா போன்ற நாடுகள் நம்மை விட
பொருளாதாரத்தில் இன்னும் பின் தங்கி இருக்கின்றன !”
“உலக நாடுகள் அனைத்துமே பொருளாதார
வீழ்ச்சி அடைந்துள்ளன. இதில் நாம் மட்டும்
விதிவிலக்காக இருக்க முடியுமா ?”
நம்புவோம் எதிர்காலத்தை –
நம்பிக்கை தானே உலகம் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
தெலுங்கானா மாநிலம் அடுத்த வாரம் உதயமாகும் அறிகுறி தெரிகிறது. காங்கிரஸ் தெலுங்கானா ஆதரவாளர்கள் கேட்ட 10 மாவட்டங்களுக்கும் மேலாக ராயலசீமை பகுதியிலிருந்து 2 மாவட்டங்களைப் பிய்த்தெடுத்து தெலுங்கானாவில் ஒட்ட வைக்கப் பார்க்கிறார்கள்.
அதன் repercussion வங்காளத்தில் கோர்க்காலாந்து கோரிக்கையில் எதிரொலிக்கிறது. அதே போல் நம்மூரிலும் தென்தமிழ்நாடு, மேற்குத்தமிழ்நாடு கோரிக்கைகள் எழும் என நினைக்கிறீர்களா?
நண்பரே,
பா.ம.க. ஒரு வேளை இத்தகைய கோரிக்கையை
முன் வைக்கலாம். வேறு எந்த கட்சியும் இத்தகைய
கோரிக்கைகளை முன்வைக்கும்/ஆதரிக்கும் என்று தோன்றவில்லை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்