ரெய்ட் -ல் கிடைப்பது என்ன …?

ரெய்ட் -ல் கிடைப்பது என்ன …?

volcona eruption
செய்தி, தொலைக்காட்சி ஊடகங்களில் அடிக்கடி
பரபரப்பான தகவல்கள் வெளியாவதைப் பார்க்கிறோம்.

Raid by Income Tax Department
Raid by Enforcement Directorate,
Raid by CBI – என்றெல்லாம் !

அனேகமாக பல நேரங்களில் – பரபரப்பாக –
ரெய்டு நடந்ததாகவும்,
ரெய்டு நடந்து கொண்டிருப்பதாகவும் –
மட்டும் தான் செய்திகள் வெளியாகின்றனவே தவிர,
அந்த ரெய்டின் பலனாக கிடைத்தது என்ன,
பிடிபட்டது என்ன,
என்கிற தகவல் வெளிவருவதே இல்லை.
ரெய்டு நடந்தது என்கிற தகவலுடன் முடிந்தது சமாச்சாரம் !!

அதிசயமாக – அண்மையில் ஒரு செய்தி
வெளிவந்திருக்கிறது.

அண்மைக் காலங்களில் சில குறிப்பிட்ட நிறுவனங்களில்
நிகழ்ந்த ரெய்டுகளில் கிடைத்த விவரங்கள் (மட்டும் )
வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி –

1)சென்னை,ஜிஜி ஹாஸ்பிடல் (செயற்கை கருத்தரிப்பு
மையம் – ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் –
அவர்களுடையது …? )
சுமார் 70 கோடி ரூபாய் வருமானம் மறைக்கப்பட்டது
கண்டுபிடிக்கப்பட்ட வகையில் மத்திய அரசுக்கு
சுமார் 20 கோடி ரூபாய் வருமான வரியாகக் கிடைத்தது..

2) -(பாரி வள்ளல் !) டாக்டர் பச்சமுத்து குடும்பத்தினரின்
(புதிய தலைமுறை தொலைக்காட்சி, இந்திய
ஜனநாயக கட்சி எல்லாம் நினைவிற்கு வரும் !)
எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் – மறைக்கப்பட்ட
வருமானம் சுமார் 200 கோடி ரூபாய் கண்டு பிடிக்கப்பட்ட
வகையில் அரசுக்கு சுமார் 70 கோடி வருமான வரியாகக்
கிடைத்தது…
3)பிரபல நகை நிறுவனம் ஜிஆர்டி தரப்பில்
மறைக்கப்பட்ட வருமானம் சுமார் 235 கோடி ரூபாய்
கண்டு பிடிக்கப்பட்ட வகையில்
அரசுக்கு கிடைக்கும் வருமான வரி சுமார் 80 கோடி …

4)பிரபல லயன் டேட்ஸ் – நிறுவனத்தில் முறைகேடாக
வைக்கப்பட்டிருந்த கணக்கு வழக்குகள் மூலம்
மறைக்கப்பட்ட வருமானம் சுமார் 35 கோடி
கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம்
அரசுக்கு வரக்கூடிய வருமான வரி சுமார் 15 கோடி….

இது குறித்து சில கேள்விகள் எழுகின்றன –

1) இவ்வாறு மறைக்கப்பட்ட வருமானம் கண்டுபிடிக்கப்
படும்போது – அந்த வருமானத்திற்குரிய சாதாரண
வருமான வரி விகிதமான 30 % வருமான வரி
விதிப்பதோடு விஷயம் முடிந்து விடுகிறதா ?

வருமானத்தை மறைத்ததற்காக தண்டனையோ,
அபராதமோ எதுவும் கிடையாதா ?
அப்படி தண்டனை எதுவும் கிடையாதென்றால் –
இது மற்றவர்களையும் இதே போல் செய்யத் தூண்டாதா ?

மறைக்க முயற்சி செய்வோம் – மாட்டிக் கொண்டால்
எப்படியும் கட்ட வேண்டிய வரியைத்தான்
கட்டப்போகிறோம். கண்டு பிடிக்கப்படவில்லையென்றால்
கிடைத்த வரையில் லாபம் தானே –
என்று எண்ணத் தோன்றாதா ?

2) இப்போது வெளியிடப்பட்டிருப்பது போல் –
(இப்போதும் நேரிடையான அதிகாரபூர்வமான
அறிவிப்பு எதுவும் இல்லை – அதிகாரபூரவமற்ற
செய்தியாகத் தான் வெளியிடப்பட்டிருக்கிறது )

ரெய்டு நடக்கும் ஒவ்வொரு முறையும் –
கிடைக்கும் தடயங்கள், ரொக்கம், நகை,
ஆவணங்கள் ஆகியவை பற்றிய தகவல்களை
அதிகாரபூர்வமாக சம்பந்தப்பட்ட
இலாகாக்கள் வெளியிட்டால் என்ன ?

அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்படாததால் –
மக்களையும், அரசையும் ஏமாற்றிய,
திருட்டுத்தனம் பண்ணிய “போலி”கள் கூட,
கூலாக, “எல்லாம் அரசியல் விரோதம் காரணமாக
நடத்தப்பட்டவை – ரெய்டு நடத்தியது தான் மிச்சம்.
ஒன்றும் கிடைக்கவில்லை ” என்று ஜம்பமாக
வெளியில் கூறிக்கொள்கின்றன.
அரசியலையே சுத்தம் செய்வதற்காக புதியதாகப்
புறப்பட்டவர்கள் கூட செய்யும் மோசடிகள் எல்லாம்
வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டாமா ?

தமிழ் நாட்டில் மட்டுமே – கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில்
இவற்றைத் தவிர வேறு நிறைய இடங்களில் ரெய்டுகள்
நடந்தன. ஒவ்வொரு முறையும் ரெய்டு நடந்து,
உரிய பரிசீலனைகள் எல்லாம் முடிந்த பிறகு,
சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக – அதிகாரபூர்வமாக
அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டால் –
அநாவசியமான வதந்திகளைத் தவிர்க்கலாமே.

ஜனநாயகம் வளர்ச்சி பெறவும்,
பல பெரிய மனிதர்களின் உண்மை முகங்களை
மக்கள் தெரிந்து கொள்ளவும் இவை உதவுமே !
செய்வார்களா …?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ரெய்ட் -ல் கிடைப்பது என்ன …?

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ///வருமானத்தை மறைத்ததற்காக தண்டனையோ,
    அபராதமோ எதுவும் கிடையாதா ?
    அப்படி தண்டனை எதுவும் கிடையாதென்றால் –
    இது மற்றவர்களையும் இதே போல் செய்யத் தூண்டாதா ?///

    மிக மிக அருமையான கேள்வி. பதில் அளிப்பார்கள் என நம்புவோமாக.

  2. Thiruvengadam's avatar Thiruvengadam சொல்கிறார்:

    The answers are available in to day`s Express daily.Officials satisfied with collection of revenue. Furtherance will be stopped by their Boss whom we have elected. Politicians will show their FIGHTINGS before us,but when they met with a common problem all will join hands to make it nullified viz Their refusal to come under RTI Act. At the same time for any Representations causing expenditures will be rejected for paucity of funds, but all will join hands to RAISE their Benefits (Salary & Other allowances) without any debates.

  3. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    ஒன் வேயில ஏண்டா வந்தே?

    தெரியாதுங்கய்யா. ஊருக்குப் புதுசு.

    ஐம்பது ரூபா ஃபைன் கட்டு. இல்ல
    வண்டிய வுட்டுட்டு போ. கோர்ட்டுல
    போய் வாங்கிக்க.

    இல்லிங்க ஐயா (அய்யாவா?). இங்கயே
    கட்டிடறேன்.

    சரி கொண்டா.
    —-
    குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னர்
    தண்டனையா? வேண்டுமென்று இத்தனை
    பணத்தை மறைப்பேனா ஸார். ஆடிட்டர்
    வேற வேலையா இருக்கறதுனால காலத்துல
    ரிட்டன் ஃபைல் பண்ண முடியல.
    வரி எத்தனையோ சொல்லுங்க கட்டிடறேன்.

    சரி போங்க.
    —-
    அந்த வகையில் தான் இந்த வரி வசூல்.

    அது சரி. சொல்லாலே சொன்னது பாதி.
    சொல்லாமல் விட்டது மீதி… என்பது மாதிரி
    ரெய்டில் வந்த தொகை இது. ரெய்டிலும்
    கணக்கில் வாராத தொகை எத்தனையோ?

    திரு.பாரிவள்ளல் இரண்டாண்டுகளுக்கு முன்னர்
    அவரது கட்சி மாநாடு ஒன்றை நெல்லையிலோ மதுரையிலோ
    நடத்தினார். அதுபற்றி எந்த பத்திரிக்கையிலும் பெரிதாக
    செய்தி வரவில்லை. தந்தியிலும் மலரிலும் விளம்பரம் வந்த
    காரணத்தினால் கொஞ்சம் எழுதினார்கள். ஆனால்,
    சென்னை முழுவதும் “மாநாடு பிரமாண்ட வெற்றி” என்பதாக
    நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

    அவரது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இப்போது படமெல்லாம்
    தயாரிக்கிறார். வெளியிடுகிறார். தெரியுமா உங்களுக்கு?

    பிரபலமான சுபநிதி கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டா
    சீட்டுகளுக்கு “நேர்முகம்” நடக்கும் விதத்தை மாணவர்கள்
    இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஸ்டார் விஜய்யில் விவரித்தனர்.
    மார்டன் தியேட்டர் ஜெய்சங்கர் படக் காட்சிகள் தோற்றுவிடும்
    போங்கள்.

    பல பிரபல நிறுவனங்களில் வெளியில் தெரியாமல் பல
    பிரபலங்களும் வெளியாட்களும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.
    அவர்கள் பெரும்பாலும் அரசியல் பின்புலமுடைவர்கள் என்று
    சொல்லப்படுகிறது.

    எல்லாம் கிடக்கட்டும். பணத்தை எண்ணி எண்ணி இவர்களுக்கு
    அலுக்காதா? விரல்கள் தேயாதா?

  4. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    அம்மாவிடம் இத்தனை செருப்பு, இத்தனை புடவை இத்தனை அட்டியானம் என பல விஷயங்கல் மிகவும் துல்லியமாக வெளியிடப்பட்டன. என்ன பிரயோஜனம்? மீண்டும் வாய்தா…
    மீண்டும் ஆட்சி…
    மீண்டும் மீண்டும் வாய்தா…
    மீண்டும் மீண்டும் ஆட்சி…
    உங்களின் CAPTION தான் ஞாபகம் வருது சார்.
    “இன்றில்லாவிட்டாலும் நாளயாவது மாறுமல்லவா?”
    நம்பிக்கைதான் வாழ்க்கை.

  5. DeathBirthRaceR's avatar visujjm சொல்கிறார்:

    sir plz come FB i already friend request send 2 U………..
    U R News Very Fire My Youth Generation
    இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா Maathuvaanga but Ungalai pondravargalin anubavam oru Undhusakthi adharkku…..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      thank you friend.

      I am posting my articles in facebook.
      But – beyond that I am unable to be active there
      as I am concentrating in other areas.

      with all best wishes,
      Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.