“ஹிந்து”வின் அபத்தமான தேர்தல்
கருத்துக் கணிப்பு …
“ஹிந்து” நாளிதழில் – வரவிருக்கும்
பாராளுமன்றத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பை
வரிசையாக மாநிலம் மாநிலமாக வெளியிட்டு
வருகிறார்கள். எல்லா மாநிலங்களும்
முடிந்ததும், அகில இந்திய அளவில் முடிவுகள் வரும் !
CNN-IBN தொலைக்காட்சியுடன் “ஹிந்து” நாளிதழ்
இணைந்து நடத்திய survey இது. இன்றைய தினம்
தமிழ் நாட்டைக் குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ளன.
விவரங்கள் கீழே –

இந்த கருத்துக் கணிப்புகளை அபத்தம் என்று
சொல்வதா இல்லை வெறும் பரபரப்புக்காக முனையப்பட்ட
அரைவேக்காட்டுத்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை.
ஹிந்து நாளிதழும் சரி,
CNN-IBN தொலைக்காட்சியும் சரி – நடுநிலையான
ஊடகங்கள் அல்ல. முதலில் -இவர்களால் கருத்துக்
கணிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்கள்
எத்தகையவர்களாக இருப்பார்கள் என்பது யோசிக்கப்பட
வேண்டிய விஷயம்.
இந்த கருத்துக் கணிப்பு முக்கியமான
சில விஷயங்களை –
தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கக்கூடிய அளவிற்கு
முக்கியமான சில விஷயங்களை, கருத்தில் -கணக்கில்
கொள்ளாமலே -நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது
அவர்கள் அறிக்கையிலிருந்தே தெரிகிறது.
1) தனித்தனியாக கட்சிகள் போட்டியிடுவதாக இருந்தால்
வரக்கூடிய முடிவுகளுக்கும் – கூட்டணி சேர்ந்து போட்டி
இட்டால் வரக்கூடிய முடிவுகளுக்கும் மிகப்பெரிய
வித்தியாசம் இருக்கும். அதிலும் யார், யாருடன் கூட்டு
சேருகிறார்கள் என்பது முக்கியம். இந்த முக்கியமான
விஷயம் அலசப்படவே இல்லை.
2) மிகப்பெரிய அபத்தம் – காங்கிரஸ் கட்சிக்கு சென்ற
தேர்தலை விட இப்போது வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது
என்பது. 2009-ல் 15% ஆக இருந்தது இப்போது 18%
ஆக உயர்ந்து விட்டதாம் ! தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு
ஒற்றை இலக்கத்தில் தான் வாக்கு வங்கி இருக்க முடியும்
என்பதே உண்மை. இவர்கள் கொடுத்திருக்கும் கணிப்பை –
காங்கிரஸ்காரர்கள் கூட நம்ப மாட்டார்கள் !!
3) இன்னொரு காமெடி பிஜெபி க்கு 2009-ல் 2% ஆக
இருந்த வாக்கு வங்கி இப்போது 10% ஆக கூடி விட்டது
என்பது. நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு
அதிகரித்தால், தமிழ் நாட்டிலும் படித்த, நடுத்தர
இளைஞர்களிடையே அவருக்கு ஆதரவு கூடும் என்பது
உண்மையே. ஆனால் பிஜேபி தமிழ் நாட்டில்
ஜெயிக்கிற கட்சி இல்லை என்பதாலும்,
நரேந்திர மோடி பிரதமராக வர, ஜெ. உதவுவார்
என்பதாலும் அந்த ஆதரவு அதிமுக வுக்கான வாக்குகளாகவே
மாறிப் போகும் என்பதே நிதரிசனம். தமிழ் நாட்டிலுள்ள
பிஜேபி தலைவர்கள், ஜெ. அவர்களை மதிப்பதில்லை
என்பதால் – விஜய்காந்துடன் கூட்டு சேர்ந்தால் ஓரளவு
மரியாதையுடன் சில சீட்டுகளும் கிடைக்கும் என்று
நினைப்பதால், அவர்களுக்கு மட்டும் இந்த கணிப்பு
முடிவுகள் இனிக்கும் என்று சொல்லலாம் !
4) விஜயகாந்தின் தேமுதிக வும் சரி. டாக்டர் ராமதாசின்
பாமக வும் சரி – தனியாக தேர்தலில் நின்றால்,
ரிசல்ட் வேறு மாதிரி இருக்கும். அவர்கள் யாருடனாவது
கூட்டு சேர்ந்தால் – ரிசல்ட் வேறு மாதிரியாகத் தான்
இருக்கும்.
5) இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் சேர்த்து
ஒரு கண்டிப்பான வாக்கு வங்கி இருக்கத்தான் செய்கிறது.
எனவே, அவர்கள் யாருடன் சேருகிறார்கள் என்பதும்
முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
6) திமுக வும், காங்கிரசும் – பாராளுமன்ற தேர்தலில்
கூட்டு வைக்கும் என்பது நிச்சயம்.
இரண்டு கட்சிகளுக்குமே –
இது விருப்பமாக இல்லா விட்டாலும் –
தவிர்க்க முடியாத தேவை.
எனவே ரிசல்டைப் பற்றி தீர்மானிக்கும்
போது – இதை நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள
வேண்டும். கருத்துக் கணிப்பில் அது செய்யப்படவில்லை.
7) இந்த இரண்டு கட்சிகளுடன், விஜய்காந்தின் தேமுதிக வும்
சேர்ந்தால் – அது தேர்தலில் குறிப்பிடத்தக்க விளைவை
நிச்சயம் ஏற்படுத்தும். அதுவும் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படவில்லை.
இப்படி – முக்கியமான பல விஷயங்களை அலசாமலே –
வெளியிடப்பட்டிருக்கும் இந்த கருத்துக் கணிப்புகளை
என்னவென்று சொல்லலாம் ..?
நண்பர்களே – இந்த கருத்து கணிப்புகள் குறித்த
உங்கள் கருத்துக்களையும்
பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.



பணம் கொடுத்தால் ஊடகங்கள் தமக்குத் தாமே கருத்துக் கணிப்புக்கள் எழுதி வெளியிடும் மோசமான சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. 15 % வாக்கு வங்கி இருந்தால் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 16 % வாக்கு வங்கியுள்ள திமுகவின் அளவுக்கு தொகுதிகளைப் பெறுமா? எ
yes it is absurd
உண்மை தான் இது “ஹிந்து”வின் அபத்தமான தேர்தல்
கருத்துக் கணிப்பு. காலை news paper பார்தவுடன் மனதில் உண்டனது. நீங்கள் சொல்வது மிக சரியானது.
IBN நிருபர்கள் இந்து அலுவலகத்தினுள்ளேயே வாக்கெடுப்பு நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது.
Both Congress& BJP will loose it’s election deposit money in Tamilnadu:No survey required!
ஹிந்து கருத்துக் கணிப்பு ஏறக்குய ஒரு வாரமாக
தொடராக வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம்
வந்த பகுதியில், தென்னிந்திய நிலவரம் குறித்து
வந்திருந்தது.
அதன் உட்பகுதியிலேயே பல விஷயங்கள் சொல்லப்
பட்டிருக்கிறது. குறிப்பாக ….. two factors — the sample
(786) size, whi is proportionately less than the State
electorate and
As much 18 per cent of respondents fall under
“undecided” category — are to be kept in mind while
analyzing the estimated vote share of the parties
என்றும்.
…it is still early days. alliances between parties will
be crucial to the outcome in 2014. A lot will depend
on alliance arithmetic and which and how many
parties the AIADMK and DMK tie-up with in the
run up… என்றும்
BJP (10 per cent)-க்கும் Congress (18 per cent)க்கும்
வந்த்குள்ள உயர் மதிப்பிலான வாக்குகள் does not look
realistic என்றும் the opinion poll does not throw any
light on possible factors for the enhanced strength
of Congress in TN என்றும் இருக்கிறது.
இதே செய்தித்தாளில், திரு. சோவின் (எதிர்) கருத்தாக
any attempt to gauge the mood of the voters is
“an exercise in futility ” என்றும்
திமுக-வின் (திருமதி.கனிமொழி) கருத்தாக, …. the
opinion poll was on an hypothetical situation” என்றும்
வந்திருக்கிறது.
தவிர, பத்திரிக்கைகள் எந்த விஷயத்தையும் area specific
நோக்கில் தலைப்பிட்டு, முக்கியமான விஷயங்களை உள்ளே
வைத்தும் வெளியிடுவதில் வியப்பில்லை. புரிந்து கொள்ளுவது
வாசகன் பாடு.
ஆகவே, ஹிந்துவில் வந்திருக்கும் செய்தியின் மீதான
விமர்சனம் சரியல்ல என்றே தோன்றுகிறது (எனக்கு).
நண்பரே,
யார் – யாருடன் கூட்டு சேருவார்கள் என்பதை
துளிக்கூட கணிக்க முடியாத நிலையில் –
காங்கிரசுக்கு இத்தனை, பாஜகவுக்கு இத்தனை,
திமுகவுக்கு இத்தனை,
அதிமுகவுக்கு இத்தனை என்று சீட் கணித்து
சொல்வது அபத்தம் இல்லாமல் வேறென்ன ?
முக்கியமாக காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு 15%
என்று சொல்வது உச்சகட்ட அபத்தமான கற்பனை !
ஒவ்வொரு கட்சிக்கும் உண்டான –
வெறும் ஆதரவு சதவீதத்தை மட்டும் சொல்லி விட்டு –
போய்க்கொண்டே இருந்தாலாவது ஓரளவு
நேர்மையாக இருக்கும்.
மேலும் – தேமுதிக, பாமக, , இடது மற்றும்
வலது கம்யூனிஸ்டுகள், மதிமுக ஆகிய கட்சிகளின்
ஆதரவு சதவீதத்தையும் கொடுத்திருந்தால் தான் கணிப்பு
முயற்சி ஓரளவாவது முழுமை பெறும்.
அவை இல்லாத நிலையில் இது அரைவேக்காடு இல்லையா ?
இந்தியா முழுவதும் சர்வே நிகழ்த்தப்பட்டாலும் –
தமிழ்நாட்டின் பதிப்புகளில், தமிழ்நாட்டின் நிலையை
முக்கியமாக பிரதிபலிக்கும் தலைப்புச் செய்தியாக
அவற்றை வெளியிடும்போது –
அவை நியாயமான முயற்சியாக
இருக்க வேண்டாமா ?
என் பார்வையில் –
இவை உண்மையில் opinion poll அல்ல.
An attempt to put their own opinion
on the readers.
யோசியுங்கள் …
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அபத்தமென்று நீங்கள் சொல்வதை அந்த பத்திரிக்கையே
பட்டியலிட்ட பின்னர்….
பத்திரிக்கைகள் (தினத்தந்தி உட்பட) ஊருக்கு ஊர் செய்தியின்
தலைப்பையும், அதற்கான முக்கியத்துவத்தையும் கூட்டி குறைத்து
தான் வெளியிடும். பத்திரிக்கைக்கு எழுதுபவர்கள் முக்கியமாக
மூன்று W-க்களுக்கும், சமயத்தில் ஒரு H-க்கும் பதிலுரைக்கும்
வண்ணமாகத்தான் எழுதுவார்கள். அதுதான் பால பாடம். ஹிந்துவில்
வந்துள்ள செய்திக்கட்டுரையில் (?) நீங்கள் கோரும் பலவற்றுக்கும்
பதிலுள்ளது.
திமுக-வின் வோட்டு பங்கு 25 சதவீதத்திலிருந்து 16 ஸ்தவீதமாக
குறைந்துள்ளது, அதிமுக்கிய விஷயங்க்களில் அக்கட்சியின்
நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் கேள்விக்குரியதாக இருக்கிறது,
கடந்த ஆட்சியைக் காட்டிலும் இப்போதைய ஜெயலலிதாவின்
ஆட்சி அதிக அங்கீகாரம் பெற்றுள்ளது, பத்தில் நான்கு பேர் திமுக
மத்திய அரசிலிருந்து வெளியேறியதை “நாடகமாக” பார்க்கிறார்கள்,
பரம்பரையாக திமுக-வுக்கு ஓட்டளிக்கும் நபர்களும் “அவ்விதமே”
எண்ணுகிறார்கள்,
இன்றைய ஜெயலலிதாவின் ஆட்சி மத்தியில் ஆளும் யுபிஎ இரண்டைக்
காட்டிலும் “சிறந்தது” என மக்ககள் கருதுகிறார்கள்,
கருணாநிதியின் ஆட்சியை விட ஜெயலலிதாவின் ஆட்சி பன்மடங்கு
மக்கள் மதிப்பைப் பெற்றுள்ளது அதன் பொருட்டு திமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளது, அதிமுக தென் மற்றும் வட மத்திய மாவட்டங்களில்
செல்வாக்குப் பெற்றும் காங்கிரஸ் மேல் வடக்கு மற்றும் மேற்கு
மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றும் இருக்கிறது,
பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் களத்தில் உள்ளதைக் கட்டிலும்
அதிகமாக இருக்கிறது என்றுவிட்டு, அதை UNREALISTIC என்றே
குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸின் “தனிப்பட்ட” செல்வாக்கு என்ன என்பதை ஏறக்குறைய
25 ஆண்டுகளுக்கும் மேலாக “அளவிடப் படவில்லை” என்றும்
சொல்லியிருக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பத்து சவீதமாக இருந்த தேமுதிக
வின் ஓட்டு சதவீதம் இப்போது ஏழு சதமாக குறைந்துள்ளதாகவும் அந்த
செய்தியில் உள்ளது. கம்யூனிஸ்டுகள், சிறுத்தை, மதிமுக, செந்தமிழன்
மற்றும் மருத்துவர் இவர்களின் ஓட்டு சதவீதம் சொல்லப்படவில்லை.
இவர்கள் நடத்திய கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 786 பேர்களில்
ஒருவரும் இவர்களுக்கு “ஆதரவு” அளிக்கவில்லை அல்லது அந்த ஆதரவு
“சொல்லிக் கொள்ளும் வண்ணம் இல்லை” என்பதாக கொள்ள வேண்டும்.
அந்த செய்தியிலேயே அவர்களே ஒத்துக் கொண்டுள்ள விஷயங்களைச்
சொல்லி, அதை அரை வேக்காடு என்பது சரியாகப் படவில்லை (எனக்கு)
அவ்வளவே. மற்றபடி ஹிந்துவில் வந்துவிட்டதால் அத்தனையும்
உண்மையென்று நம்பவில்லை.