லஞ்ச மந்திரிக்கு மரண தண்டனை அங்கு !
ஏன் கூடாது இங்கு …?
—
கீழே உள்ள புகைப்படம் –
உலகிலேயே மிக வேகமாக ஓடும் புல்லெட் ரெயில் !
உலகிலேயே அதிக தூரத்திற்கு,
அதிக வேகத்தில் செல்லும் சீன ரெயில்.
பீஜிங் – ஷாங்காய் நகரங்களை இணைக்கும் (1,318
கிலோமீட்டர் தூரம் ) சீனாவின் இந்த புல்லெட்
ட்ரெயினுக்கான வேலை துவங்கியது ஏப்ரல்18,
2008 அன்று.
இந்த அதிவேக ரெயில் சேவை பொது மக்களுக்காக
பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
ஜூன் 30,2011 அன்று.
அதாவது 3 வருடத்தில் முடிக்கப்பட்ட
உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான வேலை !!
இந்தப் பணி இவ்வளவு சீக்கிரமாகவும்,
இவ்வளவு பிரமாதமாகவும் நிறைவேறக் காரணமாக
இருந்தவர் சீன ரெயில்வே அமைச்சர் லியூ ஜிஜுன்
(Liu Zhijun ).
ஆனால் – இன்று அவர் மரணத்தை எதிர்நோக்கி
சீனச் சிறையில் நொந்து, வெந்து கொண்டிருக்கிறார் !
காரணம் –
2003 முதல் 2011 வரையுள்ள காலத்தில் –
ரெயில்வே அமைச்சராக பொறுப்பில் இருந்த
காலத்தில் – அவர் ஈடுபட்ட லஞ்ச ஊழல் விவகாரம்
வெளிவந்து, 2011-ல் அவருக்கு எதிரான லஞ்ச ஊழல்
புகார் குறித்த விவரங்கள் திரட்டப்பட ஆரம்பிக்கப்பட்டது.
2013 ஏப்ரலில், அவர் மீது நீதிமன்றத்தில்,
குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, வழக்கு துவங்கியது.
மூன்றே மாதங்களில் விசாரணை முடிவடைந்து
ஜூலை 8-ந்தேதி பீஜிங் நீதிமன்றத்தில்
தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தீர்ப்பு விவரம் –
1) அவரது சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக
பறிமுதல் செய்யப்படும் –
சொத்து விவரம் –
18 கார்கள், 250 flats,
தங்க, வைர நகைகள்,
ரொக்கம் (சுமார் 50 கோடி
அமெரிக்க டாலர், யூரோ, ஹாங்காங் டாலர் உட்பட)-
plus 18 mistresses ..!!!
2) முதல் 2 வருடங்களுக்கு கடுங்காவல் சிறை.
3) அதன்பின் மரண தண்டனை …
கடந்த 10 ஆண்டுகளில் சீன ரெயில்வேயின்
மிகப்பெரிய, அதிவேக வளர்ச்சிக்கான முழு முதல்
காரணமும் இந்த மனிதர் தான் !
இவ்வளவு அரிய சாதனைகளை நிகழ்த்திய
இந்த மனிதருக்கு, சீன அரசும், கட்சியும் –
எந்த கருணையையும் காட்டவில்லை.
லஞ்சம் வாங்கிய விஷயங்கள் வெளிவந்ததும்,
விசாரணை துவங்கி, வேகமாக வழக்கு நடந்து,
அதி விரைவில் அதிக பட்ச தண்டனையும்
அளிக்கப்பட்டு விட்டது.
நம் நாட்டில் –
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகின்ற நிலையில்,
எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்திருக்கின்ற
நிலையில் –
எதாவது ஒரே ஒரு அரசியல்வாதிக்காவது –
அய்யா – மரண தண்டனை வேண்டாம்,
குறைந்த பட்சம் கடுங்காவல் சிறைத்தண்டனையோ,
சொத்து பறிமுதலோ – நிகழ்ந்திருக்கின்றதா ?
அங்கு நிகழ்கிறது – இங்கு முடியவில்லை …
காரணம் என்ன ?






2) முதல் 2 வருடங்களுக்கு கடுங்காவல் சிறை.
3) அதன்பின் மரண தண்டனை …
இது தான் சரியான தண்டனை. உடனே சாகடிச்சா அது வெறுமனே உடம்போடு நொடிப்பொழுதியில் போய்விடும் என்று நினைக்கின்றார்களோ?
ஆனாலும் சீனாவில் அமெரிக்காவைப் போல மேல் மட்டத்தில் லஞ்சம் உண்டு என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். நிச்சயம் இதற்குப் பின்னால் வேறு ஏதோ நுண்ணரசியல் இருக்க வேண்டும்.
உண்மை ஜோதிஜி.
இதற்குப் பின்னால் வேறு நுண்ணரசியல்
இருக்கிறது என்பதும் உண்மை. அங்கும்
அதிகாரப் போட்டிகள் இருக்கவே செய்கின்றன.
ஆனால் இந்த அமைச்சர் தன் தவறை
ஓரளவு ஒப்புக்கொண்டு, அதற்கு வருத்தமும்
தெரிவித்திருக்கிறார் …!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அங்கே அவங்களுக்கு வெவரம் பத்தாது காவிரி சார்.
சொந்தமா ஒரு டிவி இருந்தா “ஐயோ கொல்றாங்களே” அப்படின்னு ஒரு நாடகம் போட்டிருக்கலாம். இல்லையா சீனாவின் பெருஞ்சுவரை கட்டிய பரம்பரையில் வந்தவரை இப்படி பண்ணீட்டாங்களேன்னு ஒரு ரயில் மறியல் அல்லது பேருந்து எரிப்பு அல்லது அட்லீஸ்ட் ஒரு பத்து பேர் தீக்குளிச்சா அந்த அரசாங்கம் இப்படி எல்லாம் பண்ணுமா? அவங்க இன்னும் வளரணும்.
நாமதான் அடுத்த வல்லரசாச்சே!
அப்படி பார்த்தால் ஒட்டு மொத்த கட்சிகளையே தூக்கில் போட வேண்டும், காந்தி கால காங்கிரஸ் உட்பட.
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?
என்கிற நோக்கு நம்முடையது.
தவிரவும், நமது மந்திரிகள் பலகீனமான ஹ்ருதயம்
கொண்டவர்கள். சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை
எதிர்கொள்ள நேரும் போதெல்லாம் “வலி” வந்துவிடுகிறது.
அவர் “போய் விட்டால்”, அவரது குடும்பத்தையும் சேர்த்த
சொத்தையும் நீதிமன்றங்களால் “காப்பாற்ற” முடியாது
என்கிற காரணத்தாலும்,
எந்த கட்சியிலும் ஆட்சியிலும் 100 சதவீத யோக்கியர்கள்
இல்லையென்கின்ற பேருண்மையின் காரணத்தாலும் நீங்கள்
“விரும்பும்” நடவடிக்கைகள் இங்கு எடுக்கப் படுவதில்லை.
தவிர்க்க முடியாத சூழலில் எதாவது நடவ்டிக்கை வந்தால்,
அது பழிவாங்கும் நடவடிக்கையாக சித்தரிக்கப்படும். கையும்
களவுமாக மாட்டிக் கொண்ட திருடனை காப்பாற்ற, வாய்தா
வாங்கும் திறன் பெற்ற வக்கீல்கள் நிறைய இருக்கிறார்கள்.
கிணற்றடி சொம்பை திருடும் நோக்கில் எடுக்கவில்லை;
கழுவ நீர் எடுக்கத்தான் எனது கட்சிக்காரர் எடுத்தார் என்பதாக
நீதியை நிலை நிறுத்த இவ்வொரு கட்சியிலும் சட்டப்பிரிவு
வேறு இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, திருவாளர் பொதுஜனமும்
வோட்டுக்கு ஆயிரம் எதிர்பார்க்கும் காலமாகி விட்டது.
இன்றைக்கு “எடுத்தால்” நாளைக்கு “கொடுக்கப் போகிறான்”
என்ற அசாத்தியமான நம்பிக்கையும் காரணம்.
நண்பர் வெங்கட்ரமணி,
பின்னூட்டம் பிரமாதம்.
முன்பெல்லாம் இங்கு வழக்கமாக இதே பாணியில்
பின்னூட்டம் போட்டுக்கொண்டிருந்த ஒரு நண்பரை
நீங்கள் நினைவுபடுத்துகிறீர்கள்.
மாறுபட்ட கருத்து இருந்தாலும் பரவாயில்லை –
தொடர்ந்து எழுதுங்கள்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Come on, does a person needs to buy 250 houses before corruption action is taken?
He must have got into political fight with some big politburo member and paid the price for it.
Corruption is very rampant in Chinese Government only thing they will not do anything to affect their own country unlike MMS or PC.