படைப்பின் அற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -(1)

 

படைப்பின் அற்புதங்கள் –
புகைப்படத் தொகுப்பு -(1)

 

உலகின் வித்தியாசமான பகுதிகளில் சுற்றி வர  வேண்டும்.
கலாச்சாரம், பண்பாடு, இனம், மொழி,தட்பவெட்பம்
இவைகளால் மாறுபட்ட மக்களோடு பழக வேண்டும்.

 

-இளைஞனாக இருந்தபோதிலிருந்தே என் விருப்பம் இது  !

 

இந்தியாவிற்குள், பல மாநிலங்களிலும்   என்னால் முடிந்த வரை
சுற்றிப்பார்த்தேன்.
இன்னமும் சுற்ற விருப்பம் இருக்கிறது !
ஓரளவு  வாய்ப்பும் இருக்கிறது !

 

ஆனால் – வெளிநாடுகளைப் பொறுத்த வரை –
சிங்கப்பூர் மட்டும் தான் போய் வர முடிந்தது.
வயதையும், நிதிவசதிகளையும் பார்த்தால் –
இனி வெளிநாட்டுப் பயணங்களுக்கு  வாய்ப்பு இல்லை !

 

எனவே – வித்தியாசமான இடங்களை எல்லாம்
இயன்ற வரை வலைத்தளங்களில் தேடிப் பார்க்கத்
துவங்கினேன். மீண்டும்மீண்டும் பார்க்கத் தூண்டும்
சில புகைப்படங்களைப் பார்த்தபோது  
அவற்றை பின்னரும் மீண்டும்
பார்ப்பதற்காக – நகல் எடுத்து சேமித்து வைக்கத்  துவங்கினேன்.
பின்னர் தோன்றியது –  நம்மையொத்த ரசனை உடைய
வலைத்தள நண்பர்களுக்காக இதை நம்
வலையிலேயே பதிந்து வைத்தால் என்ன என்று!

 

விளைவு – இன்றைய பதிவு-
அற்புதமான இடங்களின் புகைப்படத்
தொகுப்பு-1.
சீரியஸான இடுகைகளுக்கிடையே இனி
அடிக்கடி இத்தகைய புகைப்படத் தொகுப்புகளையும் பதிவதாக உத்தேசம்.

 

என்னையொத்த ரசனை உடைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள்
பார்வையில் படும் இது போன்ற, ரசிக்கத்தக்க நல்ல புகைப்படங்களை
எனது  kavirimainthan@gmail.com  என்கிற
விலாசத்திற்கு  அனுப்பி வையுங்களேன்.
அவற்றைத் தொகுத்து அவ்வப்போது உங்கள்
பெயரையும் நன்றியுடன்  சேர்த்து இதே வலைத்தளத்தில்
வெளியிடுகிறேன் !

 

The world’s highest chained carousel, located in Vienna, the height of 117 meters

 

draft-1-a

 

Thor’s Well – “the gates of the dungeon.” CapePerpetua, Oregon.   At moderate tide and strong surf, flowing water creates a fantastic landscape

 

draft-1-b

 

Emerald Lake in the crater of an extinct volcano. Tongariro National Park – NewZealand

 

draft-1-c

 

Restaurant on a cliff on the east coast of Zanzibar. Depending on the tide the restaurant can be reached both on foot and by boat.

 

draft-1-d

 

Office of Selgas Cano in Madrid

 

draft-1-e

 

Desert with Phacelia (Scorpion Weed). Flowering once in several years.

 

draft-1-f

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to படைப்பின் அற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -(1)

  1. srini's avatar srini சொல்கிறார்:

    Dear Sir,

    to store and share photos, pintrest upayoga padithi parungalen…. u will like it.

  2. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    Good work Nandri, Thodarattum umadhu pani

  3. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    அலுவலகப் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள், சமூகத் தாக்குதல்கள் என்று பல்வேறு டென்ஷனுடனும் மன அழுத்தத்துடனும் தடுமாறிக்கொகொண்டிருக்கும் எம்மைப் போன்றவர்களை இனியதொரு புத்துலகுக்கு அழைத்துச் சென்றமைக்கு (செல்லப் போவதற்கும்) மிக்க நன்றி காவிரி மைந்தன்.

    தொடருங்கள்.

  4. johan paris's avatar johan paris சொல்கிறார்:

    உலகின் வித்தியாசமான பகுதிகளில் சுற்றி வர வேண்டும்.
    கலாச்சாரம், பண்பாடு, இனம், மொழி,தட்பவெட்பம்
    இவைகளால் மாறுபட்ட மக்களோடு பழக வேண்டும்.

    -இளைஞனாக இருந்தபோதிலிருந்தே என் விருப்பமும் இதே !

    வயதையும், நிதிவசதிகளையும் பார்த்தால் –
    இனி வெளிநாட்டுப் பயணங்களுக்கு வாய்ப்பு இல்லை –

    அதனால் அடியேனும் மாறுபட்ட உலகையும், அதிலுள்ள ஜீவராசிகளையும் தொலைக்காட்சி , படம் எனவே பார்த்து ரசிக்கிறேன். நசனல் ஜீயோகிரவி, டிஸ்கவரிக்கும், மிக நேர்த்தியான புகைப்படக் கருவிகளை இவர்களுக்காகத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.