சற்குருவும், துர்குருவும்
இந்த இடுகையில் நான் அளிக்கும் விவரங்கள்
பல நாள் உழைப்பில், பல்வேறு இடங்களிலிருந்து
சேகரிக்கப்பட்டவை.சில இடங்களுக்கு நான் நேரில்
சென்றேன். இதில் சம்பந்தப்பட்ட,
அனுபவப்பட்ட பலரிடம் பேசினேன்.
இந்த நபர் மீதோ, இவர் நடத்தும் நிறுவனத்தின்
மீதோ தனிப்பட்ட முறையில் எனக்கு
எந்த விரோதமுமில்லை.
நான் எந்தக் கட்சியையோ, அமைப்பையோ,
சார்ந்தவனும் இல்லை.
இந்த வலைத்தளைத்தை நான் துவக்கியதே –
என் மனசாட்சிக்கு சரி என்று தோன்றுவதை
எல்லாம் வெளிப்படையாக கூற ஒரு அமைப்பு
(forum) தேவை என்பதால் தான்.
போலி என்றும் மோசடி என்றும், தவறு என்றும்
எனக்குப் புரிவதை வெளிப்படுத்த
வேண்டியது என் கடமை என்று நான் நினைக்கிறேன்.
அதைத்தான் செய்து கொண்டும் இருக்கிறேன்.
நான் எழுத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
சக்தியுடையவர்கள், விரும்பினால் இதை
அடுத்த கட்டத்திற்கும் மேற்கொண்டு
எடுத்துச் செல்லலாம்.
இந்த நபரின் தீவிரமான பக்தர்களோ,
ஆதரவாளர்களோ –
இந்தக் கட்டுரையின் மூலம் தங்கள்
நிலையிலிருந்து நிச்சயம் மாறப்போவதில்லை.
அதையும் நான் உணர்கிறேன்.
ஆனால் என்னவென்று அறிய வேண்டும்
என்கிற ஒரு ஆர்வத்தினால் மட்டும் உள்ளே
சென்றவர்கள் – உண்மை
அறிந்தால் வெளி வரக்கூடும்.
ஆனால் -புதிதாக யாராவது ஒருவராவது ஏமாறுவதை
இந்த இடுகையால் தடுக்க முடிந்தால் – அதுவே
எனக்கு மகிழ்வு தரப்போதுமானது.
இவரை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில்
பல ஆண்டுகளாக இவரை
நெருங்கி கவனித்த ஆர்வலர்கள் சிலர் கூறிய
கருத்துக்கள் கீழே –
“இருபது வருடங்களுக்கு முன் முதன் முதலில்
அவர் எனக்கு அறிமுகமானது சஹஜஸ்திதி யோகா
என்னும் யோகாசனத்தை கற்றுக்கொடுக்கும்
மாஸ்டராக. பங்களூர் ரெஸ்டாரண்ட் ஒன்றில்
கோழி இறைச்சி சாப்பிட்டுக்கொண்டிருந்த
அதே ஜக்கி தான் இவர் என்பதை நினைத்துப்
பார்க்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. “
“தன் மனைவி விஜியின் கொலை அல்லது
தற்கொலைக்கு காரணமாக இருந்தவர் என்று
10 -12 வருடங்களுக்கு முன் இவர் மீது
போடப்பட்டு இருந்த வழக்கு எப்படி
முடிக்கப்பட்டது என்றே வெளியில்
தெரியவில்லையே “
“இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில்,தப்பித்தவறி யாராவது
கேள்வி கேட்டு விட்டால், கேள்வி கேட்டவரை அதே
நிகழ்ச்சியிலேயே அவமானப்படுத்தாமல் விடமாட்டார்.
மூர்க்கமான (arrogance), குதர்க்கமான
பதில்கள் தான் வரும்.ஏன் தான் கேட்டோமோ என்று
கேட்டவர் நொந்துக்கொள்ளவும், அடுத்தவர் யாரும்
கேள்வி கேட்கத் துணியாமல் இருக்கவும் தான்
இத்தகைய பதில்கள் என்பது எனக்கு புரிந்தது.”
“தமிழக முதல்வருக்கும் அவரது மகள்
கனிமொழிக்கும் இவர் மிக நெருக்கமானவர் என்பது
அநேகருக்குத் தெரியாது.
ஆனால் இவரது இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சிக்கு,
அவர்களது நட்பு மட்டும் காரணமில்லை.”
“ஆரம்பத்தில், இவர் மிகப்பெரிய பகுத்தறிவாளர்
போலவே பேசுவார்.அறிவுக்கு ஒவ்வாத எந்த
விஷயங்களையும் தன்னால் ஏற்க முடியாதென்றே
கூறுவார். பழகப்பழக,சீடர்களை/பக்தர்களை,
தான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு
தயார் செய்து விட்டு -பிறகு பிள்ளையார், சிவன்,
பார்வதி, விஷ்ணு என்று புராணங்களை அவிழ்த்து
விடுவார். ஒரு கட்டத்தில் தானும் சிவனும்
வேறு வேறு அல்ல என்று அவர் கூறியதைக்கேட்டு
பிரமித்துப் போய் விட்டேன்.”
“குரு என்றால் சரி – புரிகிறது. அது என்ன
“சற்குரு”(நல்ல குரு !) –
நல்ல கத்திரி, நல்ல வெண்டை
என மார்க்கெட்டில் கூவி விற்பதைப் போல ?”
“சற்குரு,துர்குரு என்று யாராவது தரம் பிரிப்பார்களா?
தன்னைத்தானே “சற்குரு” என்று பட்டம்
சூடிக்கொள்வதற்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையே
காரணம்.”
“வன விலங்குகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள
விரும்பிய ஒரு அமைப்புக்கு சுற்றுப்புற சூழல்
பாதிக்கப்படும் என்று காரணம் கூறி சிறிய அளவிலான
இடம் கூடத்தர மறுத்த அரசாங்கம்
ஆயிரக்கணக்கான பசுமரங்களை வெட்டிச்சாய்த்து
நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஹால்களும், குடியிருப்பு
பகுதிகளும், விருந்தினர் விடுதிகளுமாக
கான்க்ரீட் காடுகளாக இந்த ஆசிரமம் அமைய
வெள்ளியங்கிரி மலைக்காட்டில் அனுமதி கொடுத்தது
எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது.”
“ஆசிரமத்திற்கு போகும் வழியிலும், உள்ளேயும்
ஆயிரக்கணக்கான மின் விளக்குகளும்,
எக்கச்சக்கமான டெசிபல் ஒலிகளுடன் ஒலிபெருக்கிகளை
அமைத்து நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளும் சூழ்நிலையை
மாசுபடுத்துவது அரசுக்கு தெரியவில்லையா ?”
“வருடந்தோரும் சிவராத்திரி அன்று இங்கு நடக்கும்
நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வருவதும்,
வனத்தை மாசுபடுத்தும் வகையில் அவை பெட்ரோல்,
டீசல் புகையை வெளியிடுவதும் எப்படி பொறுத்துக்
கொள்ளப்படுகிறது ?”
“லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடுவதாக போலியாக
மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களைச் செய்வதும்,
வெள்ளியங்கிரி மலையை சுத்தப்படுத்துவதாக வரும்
பக்தர்களுக்கு குப்பை பை கொடுப்பதும் எந்த அளவிற்கு
இவர் செயலை நியாயப்படுத்தும் ?”
இனி முக்கியமான ஒரு விஷயத்திற்கு வருகிறேன்.
குமுதம் பத்திரிகை எதைச் செய்தாலும் அதில் ஒரு
வியாபார நோக்கு நிச்சயமாக இருக்கும். அது
வியாபாரம், விளம்பரம் என்பது வெளியே தெரியாத
அளவிற்கு சூட்சுமமாகச் செய்வார்கள் !
நித்யானந்தாவை நம்பி பல தமிழர்கள் மோசம்
போனதற்கு குமுதமும் ஒரு முக்கிய காரணம்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் இதில் ப்ரியா
கல்யாணராமன் என்பவர் ( பெண் பெயரில் எழுதும்
ஆண் தான் ) எழுதும் ஆன்மிகத் தொடர் ஒன்றை
“சம்போ சிவ சம்போ” என்ற பெயரில் ஆரம்பித்தனர்.
(அது இன்னும் தொடர்கிறது )
கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து சூடேற்றி –
கைலாஷ் மானசரோவர் போய் வந்தவர்கள் உயிரோடு
சொர்க்கத்திற்கு போய் வந்ததற்கு சமம் என்கிற
அளவிற்கு உசுப்பிவிட ஆரம்பித்தார்கள். பிறகு –
அப்படிப் போவதாக இருந்தாலும் “சற்குரு”வுடன்
செல்பவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குப் போக
முடியும் என்கிற அளவிற்கு எழுத ஆரம்பித்தார்கள்.
அவர்கள் குறி எல்லாம், நடுத்தர மற்றும் பணக்கார
குடிம்பத்தைச் சேர்ந்த, நடுத்தர வயதுடைய மற்றும்
முதியவர்கள் தான். அவர்களிடம் பணம் பறிக்க
இவர்கள் கையாளும் நடைமுறைகள் – அடேயப்பா
தேர்ந்த வியாபாரிகளுக்கு கூட கை வராது.
ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை என்கிற மக்களின்
நம்பிக்கையை மிகப்பெரிய பலவீனமாக மாற்றி
பணம் பண்ணும் அற்பப் பதர்கள் இவர்கள்.
இவர்களை விட, வெளிப்படையாக சாராயம்,
விபச்சாரம், சூதாட்டம் என்று பணம் சம்பாதிப்பவர்கள்
எவ்வளவோ மேல்.
இவர்களது சாமர்த்தியம் –
இதை விவரமாகச் சொன்னால் தான் இவர்களை
நம்பி ஏமாறுபவர்களுக்குப் புரியும் என்பதால்,
இந்த இடுகை சிறிது நீளுகிறது.
–தொடர்கிறேன்.
(first Posted on ஏப்ரல் 7, 2010 in vimarisanam blog by kavirimainthan )



அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். உங்கள் புகழ் திருப்பூர் வரை பரவி உள்ளது. உண்மையை உரக்கச் சொல்லுபவர். உங்களுக்கு தொடர்பு உண்டா? என்னிடம் நண்பர்கள் கேட்கும் அளவிற்கு.
ஜோதிஜி,
உங்கள் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.
உங்கள் ஒருவரைத் தான் எனக்கு திருப்பூரில்
தெரியும் என்று தான் நான் நினைத்துக்
கொண்டிருக்கிறேன் !
என்னை அறிந்த மற்ற நண்பர்களும் அங்கு
இருக்கிறார்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சியான
செய்தி தான்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இவருக்கு ஆரம்ப காலத்தில் கட்டுரைகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தது இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ் + பாலகிருஷ்ணன்) சுபாக்கள் இவரை “வாசுதேவ்” என்றுதான் அப்போது கூப்பிடுவர். வசுதேவ் சுபாவின் வீட்டிற்கே வருவார். சாப்பிடுவார். தங்குவார்.
பின்னர் படிப்படியாக தன்னை விரிவுபடுத்திக் கொண்ட ஜகதீஷ் எனும் வாசுதேவ் தியானப் பயிற்சிகளை மகேஷ்யோகியிடம் கற்றுக் கொண்டு அதை இங்கே “விநியோகம்” செய்ய ஆரம்பித்தார். அனுராதா ரமணனின் உடல் நோய் குணமாகியது. படிப்படியாக எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் இவரது ஆசிரமத்துக்கு வந்து பயிற்சி பெற்று அது விரிவடையவும், பெருகவும் காரணமாகினர்.
தற்போது வாசுதேவ் ஸற்குருவாக உயர்ந்திருக்கிறார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். . ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறார் என நினைக்கிறேன்.
ஸற்குரு, தன் மனைவியின் விருப்பப்படி மோட்சம் அளித்ததாக அவரது ‘தன் வரலாறு’ சொல்கிறது.
ஸ்ர்குருவைப் பழிப்பதன் மூலம் உமக்கு பாவம் வந்து சேரும் என்கிறார் என் ஸற்குரு நண்பர்.
வாழ்க ஸ்ர்குறு புகழ். ஓங்குக த்யாண மையல்கள்.
வாத்தியார் இருக்கிறார். “நல்ல வாத்தியாரும்” இருக்கிறார் அல்லவா?
அது போலவே, “குரு” வும் “சத் குருவும்” இருக்கிறார்கள். (சற்குரு அல்ல
என்றே எண்ணுகிறேன்.)
“கு” என்றால் “இருள்” என்றும் “ரு” என்றால் “ஒளி” என்றும், இதன்
அடிப்படையில் குரு என்றால் “அக” இருளைக் களைபவர் என பொருள்
(என்பது மிக சாதாரண விளக்கம்). “சத் குரு” என்றால் “உண்மை குரு”.
அதாவது பேருண்மைக் குறித்தான “தெளிவாக அறிந்து, பிறருக்கு
(வேண்டுவோருக்கு) அறியச் செய்பவர் என்று பொருள்.
சமஸ்க்ருதம் “தமிழைப்” போலவே “எழுத்துக்கு எழுத்து” பொருள் உள்ள
மொழி. பண்டிதர்களே அறிவர். (என்னைப் போல?!) பலரும் தினசரிகளோடு
இணைத்து வழங்கப்படும் “ஆன்மீக மலர்” துணைக் கொண்டு “பொருள்”
கொள்பவர்கள். எனவே, out of context ஆகும் வாய்ப்பு அதிகம்.
இந்துமத குருமார்கள், சுருதி ஸ்ம்ருதி புராணம், வேதம் மற்றும் அதன்
“இறுதியான” (?) உப நிஷத்துக்களைக் கற்று தெளிந்து, கற்பிப்பவர்கள்.
அவர்களில் பலரும் “சந்நியாசிகள்”, உண்மையான “துறவு நெறியில்”
வாழ்ந்து வருபவர்கள். அவர்களை அந்நெறியில் “நாட்டமுள்ளவர்களே”
அறிவர். தன்னைத்தானே “விளம்பரப் படுத்திக் கொள்ளமாட்டார்கள்.
இவர்களுக்கெல்லாம் ஒரு குரு இருக்கிறார். அவர் தென்முகக் கடவுளான
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி. இவரது உபதேசம் தான் (மிகவும் பிரபலமான)
தத் த்வ மஸி (தத்துவமசி அல்ல) இதன் பொருள் அந்த பேரூண்மை
நீயே என்பதாகும்.
இவர்களின் மாணவர்கள் மேற்படி விஷயங்களில் “பயிற்றுவிக்கப்”
படுகிறார்கள்.ஆனால், (தங்கள்) விமர்சனத்திற்கு வந்துள்ளவர் அவ்வகையைச்
சார்ந்தவர் அல்ல.
வாத்தியார்-நல்ல வாத்தியார் வரிசையில், சரக்கு மாஸ்டர், டீ மாஸ்டர்,
புரோட்டா மாஸ்டர், கராத்தே மாஸ்டர் மற்றும் யோகா மாஸ்டர்.முற்றினால்
குரு சற்குரு.அன்பின் மிகுதியால் அல்ல; அன்பர்கள் உள் நோக்கோடு
அளிக்கும் (விளிக்கும் சொல்லே) பட்டமே இந்த சற்குரு. (கவியரசுக்கு
மேலே கவிபேரரசு, சுப்பர் ஸ்டாருக்கு மேலே சுப்ரீம் ஸ்டார் போல).
ஜோஸ்யம் பார்ப்பவன் கூட “ப்ரம்மஸ்ரீ” எனப் போட்டுக் கொள்வதில்லையா?
“சகஜஸ்திதி” யோகாவை இவர் வர்த்தகமாக “அறிமுக”ப் படுத்திய போது,
(15 நாள் பயிற்சிக்கு) அதற்கான நன்கொடை (விலை) ரூபாய் 500. இப்போது,
பயிற்சி காலம் சுருங்கிவிட்ட போதும், விலை ரூபாய் ஆயிரம். ஆச்சர்யம்
ஈன்னவென்றால், ஊர் ஊராக நடக்கும் பயிற்சி (விழாக்)களில் கலந்து கொள்ள
விழையும் தனி நபருக்கு sponsor செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள்.
நிற்க. “சகஜஸ்திதி” யோகாவின் அடிப்படை “இந்த நொடிக்குள்
இருப்பது”. காலம் உருண்டோடிய நிலையில், பயிற்சிக்கு விழையும் அன்பர்கள்
மட்டும் தான் “இ நொ”க்குள். பயிற்சியாளர்களும், அவர்களது சற்குருவும்
எதிர்காலத்தையும் தாண்டிய வளமைக்கு வாழ்கிறார்கள்.
நண்பர் அழகேசன்,
நண்பர் வெங்கட்ரமணி,
இதற்காகத் தான் பின்னூட்டங்கள் நிறைய வர வேண்டும்
என்று ஆசைப்படுகிறேன்.
எனக்குத் தெரியாத பல விஷயங்களும்
பின்னூட்டங்கள் மூலம் கிடைக்கின்றன.
-நன்றி.
வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
காவிரிமைந்தன் சார்
சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றது. ஆனால் சொல்ல பயமாகவும் இருக்கின்றது. ”அடியாள்” கூட்டத்தின் மகிமை அப்படி.
பிங்குபாக்: சற்குருவும்……….. துர்குருவும்…… | rathnavelnatarajan
அருமை. நிறைய எழுதுங்கள்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
வாழ்த்துகள்.
In Hinduism there is no need for middle man between God and common man. In other religion there are messengers.
Any guru or teacher who gets closer to power or money have always abused their position and paid dearly for it – Kanchi Jeyandrar, Nithya, Madurai Adeenum, now this fellow.
He is safeguarding MK”s huge M’.
நண்பர் கா.மை.அவர்களுக்கு,
வணக்கம்.சற்று தாமதமாக பதிலை அளிப்பதற்கு மன்னிக்கவும்.நான் வெளியூர் எங்கும் செல்லவில்லை.சில மாதங்களாக நான் அவ்வளவாக வலைத்தளத்தில் எழுதுவது இல்லை.எல்லாரும் சந்தோஷமாக இருப்பது போல தெரிகிறது.நாம் எதற்கு மெனக்கெட்டு அவர்கள் கஷ்டங்களை நினைவு படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் ஒரு காரணம்.IPL போட்டிக்கு நுழைவு சீட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.எனவே நம் நாடு எழை நாடல்ல.ஜக்கி போன்ற குருமார்கள் ஆன்மீகத்தை பரப்புகிறார்கள்.எனவே தர்மம் செழிக்கும்.அரசே இட்லி தோசை விற்கிறது.அதுவும் கிட்டத்தட்ட இலவசமாக ..எனவே நல்லாட்சி நடை பெறுகிறது.மீண்டும் சோனியா,மன்மோகன் ஜோடிதான் நாட்டை ஆளும் என காங்.முடிவு செய்தாகி விட்டது.எனவே எதிர்காலமும் நிம்மதியாகி விட்டது.விஸ்வரூபம் 2 கோச்சடையான் .வெளிவரும் தேதி முடிவாகி விட்டன .
இப்படி ஒரு ராம ராஜ்ஜியம் நடக்கும் நாட்டில் அனைவரும் ஆனந்த பைரவி பாட நாம் ஏன் முகாரி பாடவேண்டும் என்ற ஒரு எண்ணமும் காரணம்
.ஆறாயிரம் ஆண்டுகள் நம் முன்னோர்கள் சேர்த்த பெருமையை,புகழை,நற்பெயரை ஒரு அறுபது ஆண்டுகளில் அழித்து சாதனை படைத்துள்ளோம்.குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் என்ன ஆகும் என, நம் கையில் ஜனநாயகத்தை எடுத்து நிரூபித்து விட்டோம்.இனியும் என்ன சாதனை செய்ய வேண்டும்?
குருடர்கள் உலகில் கண்கள் இருப்பது மிக தொல்லை என உணர்ந்து அவ்வப்பொழுது மட்டும் கண்களைத்திறக்கிறேன்.
மிக்க நன்றி.
கண்பத்,
திரும்பவும் “பார்ம்”க்கு வந்து விட்டீர்கள் பார்த்தீர்களா !
இதைத்தானே வேண்டுகிறேன் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Nirvanamaka(naked) yirukkum ooril kovanam kattiavan mad man
இவரெல்லாம் சற்குருவா? [பெரும் பொய்யர்]
நான் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருவான்மியூரில் ஈஷா யோகா தியான பயிற்சிக்கு எங்கள் நிறுவனத்திலிருக்கும் அனைவரும் சென்றோம். ஒரு வார பயிற்சிக்கு மொத்தமாக முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தனர். அதை உருப்படியாக ஏதேனும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காகவாவது உதவி செய்திருக்கலாம். தவறி விட்டனர். தியான வகுப்பின் கடைசி நாளன்று, பூசை இருப்பதாகவும் அதற்கென ஆளொக்கொரு வெந்நிற ஆடை, பழங்கள், பூக்கள் என வாங்கி வரச் சொல்லியிருந்தனர். மேல்தட்டு மக்களுக்கான இப்படிப் பட்ட மனம் மயக்கி பணம் பிடுங்கும் நிகழ்ச்சிகளில் நம்பிக்கையில்லாத நானும் என் நண்பனும் மட்டும் வெறும் கையுடன் சென்றிருந்தோம். அன்றைய நாள் நான் கண்டது பெரும் அதிர்ச்சி. இராமலிங்க அடிகளார் வழியில் ஒரு விளக்கேறி அதில் ஒளி வடிவில் இறைவனைப் பூசித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். நடந்ததோ, ஜக்கி வாசுதேவ் அவரின் படத்திற்கு மாலையிட்டு வணங்கிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக அவர் படத்திற்கு மண்டியிட்டு வணங்கி பிரசாதங்களை வாங்கினர். வரிசையில் என் இருக்கையும் வந்தது, விருப்பமில்லை எனக் கூறினேன். நிறைய கண்கள் முறைத்துப் பார்த்தன. விரைந்து சென்று வணங்குமாறு கட்டளைகள் பறந்தது. சென்றேன், நல்ல ஒரு ஆப்பிள் பழத்தை பெற்றுக் கொண்டு கண்ணை மூடிப் பிரார்த்தித்தேன். “இறைவா இவர்கள் தான் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள், இப்பாவிகளை மன்னியும்.”
ஐயா
இவர்கள் அறியாமல் செய்யவில்லை. அறிந்தே தான் இந்தப் பாவத்தைச் செய்கின்றனர். ’குருவை’ இறைவனாக வழிபட இந்துமதம் அனுமதிக்கிறதுதான். ஆனால் இதுமாதிரி ’ஷோக்’ ஆசாமிகளை அல்ல. இந்த மாதிரி ஆட்களைத் தேடிப் போகின்றவர்கள், வழிபாடு செய்பவர்கள் ஆன்மீகம் என்றால் என்ன, குருத்துவம் என்றால் என்ன என்பது பற்றிய அடிப்படைப் புரிதலோ, தெளிவோ உணர்வோ இல்லாதவர்கள். ஒருவிதத்தில் சொல்லப் போனால் மந்தை ஆடுகள். இல்லை, இல்லை பலி ஆடுகள்.
கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். விரைவில் நல்லது நடக்கும்.
oru kolaikaranai vananguvathu(worship) india vil than nadakkum
vai vittu,manam vittu silavatrai sollamudivathillai,bayam (fear)
போலி தகவல்கள் நீங்கள் சொல்லுவது ஆதாரம் இல்லை
நீங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. இக்கட்டுரையில் இருக்கும் அனைத்து தகவல்களின் நம்பகத்தன்மை அவரவர் நிலை சார்ந்ததே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. யோகா நல்ல கலை. ஆன்மிக வியாபரம் போல் அனைத்திலும் போலி ஊடாடுவதில் இன்னும் சந்தேகமிருக்கிறதா என்ன?
That is correct,Potruvor potrattum ,go ahead but be careful abt ;M power
cvs