புஸ்வாணமா ரெய்டு ?
“நேற்றிரவு கூட்டணியை விட்டு வெளியேறினோம்.
இன்று காலை ரெய்டு ! இந்த உருட்டல், மிரட்டல்கள்
எல்லாவற்றிற்கும் நாங்கள் பயந்தவர்கள் அல்ல.
சட்டப்படி சந்திப்போம்”
தொலைக்காட்சியில் செய்தி, பேட்டியை பார்த்தவுடன்
நமக்கு கூட கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
இவ்வளவு வெளிப்படையாகவா பயமுறுத்துவார்கள் ?
அதுவும் இவ்வளவு சீக்கிரமாக –
இன்னும் முறிவு உறுதிப்படாத நிலையில் –
இன்னும் பகை முற்றாத நிலையில் ?
மூத்த மத்திய அமைச்சர் வெளிப்படையாக ரெய்டை
கண்டித்துப் பேசிய பின் -என்ன தான் பின்னணி
என்று தேடினால் –
ரெய்டு பாதியிலேயே புஸ்வாணமாக்கப்பட்டதால்
ஏற்பட்ட கடுப்போ என்னவோ – பின்னணி விவரங்கள்
மறைமுகமாக வெளியிடப்பட்டு விட்டன.
என்ன பின்னணி ?
வெளிநாட்டுக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய
சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஏற்கெனவேயே
வெளிநாட்டிலேயே விலைக்கு வாங்கப்பட்டு,
சில நாட்கள் பயன்படுத்தி விட்டு, பின்னர் சொந்த
உபயோகத்திற்காக என்று இந்தியாவிற்கு கொண்டு
வரப்படுவது ஒரு முறை – இதில் இறக்குமதி வரி
குறைவு. ஆனால், இவற்றை இந்தியாவில்
மறுவிற்பனை செய்ய கட்டுப்பாடுகள் உண்டு.எனவே,
இந்த வகையில்,பெரும்பாலும் உரிமையாளர் பெயரை
உடனடியாக சட்டப்படி மாற்றாமலே விற்று விடுகிறார்கள்.
சில காலங்கள் கழித்து – பெயர் மாறுதல் நிகழும்.
நேரடியாக வெளிநாட்டிலிருந்து புத்தம் புதிதாக
இறக்குமதி செய்வது இன்னொறு முறை. இதில்
எக்கச்சக்கமான வரி விதிப்புகள் – கட்டுப்பாடுகள்.
விலை அதிகம்.
வயிற்றெரிச்சல்கார (!) வட இந்திய தொழிலதிபர் ஒருவர்
நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார்.
இந்தியாவில் நிறைய
வெளிநாட்டுக் கார்கள் முறைகேடான வழியில் இறக்குமதி
செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை
அரசாங்கம் பறிமுதல் செய்து, முறைகேட்டில்
ஈடுப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று.
இதன் பேரில் மத்திய அரசு தீவிரமாக விசாரணையை
மேற்கொண்டிருந்திருக்கிறது. இந்தியா முழுவதும்
பெரு நகரங்களில் சல்லடை போட்டு, இத்தகைய கார்களையும்,
அவற்றின் தற்போதைய சொந்தக்காரர்களையும் –
கண்டுபிடிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் மட்டும் 30க்கும் மேற்பட்ட கார்களின்
பட்டியல் கிடைத்திருக்கிறது. இதில் சில அரசியல்
பிரமுகர்களும், திரை பிரமுகர்களும், தொழிலதிபர்களும்
உள்ளடங்கி இருக்கிறார்கள். தலைவரின் பேரனும்
அதில் ஒருவர் என்றும் தெரிந்திருக்கிறது.
இந்த பின்னணிகள் எல்லாம் ஏற்கெனவே முடிந்து,
கூட்டணி சம்பந்தமுடையதாயிற்றே என்பதால் –
மேல் நடவடிக்கை –
ஸ்லோ மோஷனில் போய்க்கொண்டிருந்திருக்கிறது.
கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம் என்று
சொன்னதும், ஏற்கெனவே கடுப்பில் இருந்த
அவசரக்கார சாமி – புதுச்சேரி சாமி தான் -புத்திசாலித்தனமாக
ரீ-ஆக்ட் செய்வதாக நினைத்துக் கொண்டு “கோ அஹெட்”
கொடுத்து விட்டு பின்னர் எல்லாரிடமும் வாங்கிக்
கட்டிக் கொண்டிருக்கிறது !!
என்ன தான் அசட்டுத்தனமாக –
ரெய்டு விஷயத்தில் அவசரப்பட்டாலும், இப்போது
பின்னணியை “கசிய”ச்செய்து –
“ஈழப்பிரச்சினைக்காக, ரெய்டையும்
எதிர்கொண்டவர்கள் நாங்கள்”
என்று சம்பந்தப்பட்டவர்கள் மார்தட்டிக்
கொள்ள முடியாமல் செய்ததற்காக – புதுச்சேரி சாமியை
பாராட்டாமல் இருக்க முடியவில்லை !!




புதிய தகவல்கள் ஆச்சரியமூட்டுகின்றன…
//“ஈழப்பிரச்சினைக்காக, ரெய்டையும் எதிர்கொண்டவர்கள் நாங்கள்”
ஆமா, ஆமா. சொல்வாங்க. ’ஈழப் பிரச்சனைக்காக பாத்ரூம் “கூட” போனவர்கள் நாங்கள்னு கூடச் சொல்வாங்க. அதையும் சிலபேர் நம்பி தமிழீனத் தலைவர், மன்னிக்கவும் தமிழீழத் தலைவர் வாழ்கனு கூக்குரலிடுவாங்க.கொஞ்சம் கூட மனசாட்சி இருக்காதா இவர்களுக்கு? பிள்ளையையும் கொன்று விட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறார்களே மகா பாவிகள்.
jumbo buswanam
ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்
katchi,kolgai enra peyaril adikkum day light robbery.Law makers are Law breakers.