“ராஜபக்சே-ராம்” இலங்கை குடியுரிமை பெற்று இலங்கையிலேயே குடியேறலாமே …

இவரை இனியும்”இந்து” ராம் என்று அழைக்க எனக்கு
மனமில்லை. ராஜபக்சேயின் தாசானுதாசனாக இருக்கும்
இவரை “ராஜபக்சே ராம்” என்றழைப்பதே நலம்.

“மன்மோகன் சிங் ஒரு முதுகெலும்பில்லாத கோழை”
என்று இன்று ஒரு தொலைக்காட்சிக்களித்த பேட்டியில்
கூறுகிறார் ராம். ரொம்ப சரி.  ஆனால் இதை எப்போது
கூறி இருக்க வேண்டும் ?  

மே 2009ல் லட்சக்கணக்கில் தமிழர்கள்
அழிக்க்கப்படுவதற்கு காரணமாக இருந்தபோது
கூறி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.

“அன்னை” காலால் இட்ட உத்திரவை தலைமேல் தாங்கி
ரத, கஜ, துரக பதாகைகள் அனைத்தையும் (இந்திய
தரப்பிலிருந்து அனைத்து உதவியையும்) அளித்து,
இந்திய தளபதிகளை இலங்கை ராணுவத்துடன் உடனமர்த்தி
அப்பாவிகளான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்,
நோயாளிகள் அத்தனை பேர் மீதும் கொத்து கொத்தாக
குண்டுகளைப் போட்டு அழித்தபோது கூறி இருந்தால் –
பாராட்டி இருக்கலாம்.

போர் முடிந்து 3 வருடங்கள் கடந்தும், இன்னும்
மறுவாழ்வுப் பணிகளைச் செய்யாமல் இழுத்தடிக்கும்
இரக்கமற்ற ராஜபக்சே அரசை கண்டிக்காமல் இருப்பதற்காக
கூறி இருந்தால் – பாராட்டலாம்.

50,000 வீடுகளைக் கட்டித் தருவதாக வாக்களித்து
இன்னும் 1000 வீடுகள் கூட முடிக்காத இயலாமைக்காக
கூறி இருந்தால் – பாராட்டலாம்.

100 அடிக்கு ஒரு ராணுவ சிப்பாய் என்கிற விகிதத்தில்,
தமிழர் பகுதி முழுவதையும் ராணுவத்தால் நிரப்பி,
கோயிலுக்குப் போக, திருவிழா கொண்டாட, முடியெடுக்க,
குழந்தைகளுக்கு காது குத்த, திருமணம் முடிக்க  அனைத்திற்கும்
அந்த ராணுவத்தினரிடம் முன் அனுமதி பெற வேண்டும்
என்கிற அழுத்தத்தில் தமிழரை வைத்திருக்கும் ராஜபக்சேயை
கண்டிக்காமல் இருப்பதற்காக கூறி இருந்தால் – பாராட்டலாம்.

13வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை இன்னமும்
அமுலுக்குக் கொண்டு வராமல் இருக்கும் ராஜபக்சே அரசை
கண்டிக்காமல் இருப்பதற்காக கூறி இருந்தால் – பாராட்டலாம்.

வயிற்றுப் பிழைப்புக்காக, மீன்பிடிக்க வரும்
தமிழக மீனவர்களை –
திருப்பித் தாக்க வழி இல்லாதவர்கள் என்கிற தைரியத்தில் –
என்ன செய்தாலும் டில்லி அரசு கண்டு கொள்ளாது
என்கிற தைரியத்தில் –
அன்றாடும் வதைத்துக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசை
கண்டிக்கவில்லை என்பதற்காக கூறி இருந்தால்– பாராட்டலாம்.

இன்று இந்த “ராம்” மன்மோகன் சிங்கை முதுகெலும்பில்லாத
கோழை என்று கடுங்கோபத்துடன் டிவியில் கூறுவது
எதற்காக தெரியுமா ?

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில்/இந்தியாவில்
பயிற்சி அளிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும்
தமிழ் நாடு அரசை –

மாநில அரசிடம் கலந்து ஆலோசியாமல்,
முன் அனுமதி பெறாமல், தமிழ்நாட்டில் கால்பந்து
போட்டிகளில் விளையாடி  பயிற்சி பெற  வந்த இலங்கை
அணியினரை திருப்பி அனுப்பிய  தமிழ் நாடு அரசை –

கண்டித்து அடக்கி வைக்க துப்பில்லை என்று
மத்திய அரசை இப்படித் தாக்குகிறார் “ராஜபக்சே”ராம்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி
மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கும் தீர்மானத்தை
கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் –
மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின்
உணர்வுகளைக் கிளறும் வகையில் மத்திய அரசு
செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் ?

நிகழ்வுகளை – ராஜபக்சேயின் கோணத்திலிருந்து பார்த்து,
அதற்கேற்றாற்போல் விமரிசனம் செய்யும் “ராம்”
ராஜபக்சேயிடன் தான் வாங்கிய கூலிக்கு வேண்டுமானால்
நியாயம் செய்திருக்கலாம். ஆனால் – பிறந்து, வளர்ந்து,
படித்து, ஆளாகி, தொழில் செய்து, 65 வருடங்கள்
அவருக்கு இடம் கொடுத்த தமிழ் நாட்டிற்கு –
இந்த மக்களுக்கு – அவர் செய்வது
பச்சை துரோகம்.   

தமிழ்நாட்டில் தொடர்ந்து
வசித்துக் கொண்டு தன் துரோகத்தை தொடர்வதை விட,
தன் நண்பர், எஜமான் – ராஜபக்சேயிடம் கேட்டு விண்ணப்பித்து
இலங்கை குடியுரிமை பெற்று – அங்கேயே சென்று
தங்கி விடுவது நம் எரிச்சலையாவது குறைக்கும்.

—————

தமிழக பிஜேபி நண்பர்களுக்கு –

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மக்களின் உள்ளங்களில்
இடம் பெற வேண்டும் என்று நீங்கள், கௌரவமான
முறையில், நியாயமான, பொதுக் காரணங்களுக்காக
போராடி வருவது மக்களின் கவனத்தை ஈர்க்கவே செய்கிறது.

ஆனால் – பிஜேபி யின் மத்திய தலைமை செயலாற்றும்
விதம் உங்களுக்கே திருப்தி அளிக்கிறதா ?

தமிழ் மக்களின் எந்த கோரிக்கையையாவது பிஜேபி
தலைமை இதுவரை பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறி போராடி
இருக்கிறதா ? தமிழ் நாட்டின் பிரச்சினைகளை விவாதத்திற்கு
கொண்டு வந்திருக்கிறதா ?

சரி -மத்திய பிரதேசத்தில் ஆள்வது பிஜேபி தானே ?
அங்கு நடக்கும் பல்கலைக்கழக  விழாவிற்கு
கொலைகார ராஜபட்சேயை அழைக்க எப்படி
முடிவெடுக்கப்பட்டது?

கடுமையான எதிர்ப்பு கிளம்பியவுடன் இன்று
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் – நான் காரணமில்லை என்று கூறி
ஒதுங்கப் பார்க்கிறார்.

சரி இவர் கூப்பிடவில்லை என்றே வைத்துக்
கொள்வோம். யார் கூப்பிட ஏற்பாடு செய்திருந்தாலும்,
இவர் அதை எதிர்த்திருக்க வேண்டாமா ? தமிழ் நாடும்
பாரதத்தின் ஒரு அங்கம் தானே. 7 கோடி தமிழ் மக்களின்
உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத, அறிந்து கொள்ளாத
ஒருவர் எப்படி பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக
இருக்க முடியும் ? நாளை ஆட்சிக்கு வர வேண்டும் என்று
ஆசைப்படும் தலைவர்கள்,  நாட்டின் அனைத்து பகுதி
மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து வைத்திருக்க வேண்டாமா?

ஒரு வேளை தலைவர்கள் அலட்சியமாக இருந்தாலும்,
தலைவர்களுக்கு இந்தியா என்றால் 4-5 வட மாநிலங்கள்
மட்டும் தான் நினைவிற்கு வரும் என்றாலும் –

தமிழகத்தில் காலூன்ற விரும்பும் நீங்களாவது உங்கள்
தலைவர்களுக்கு இந்த விஷயங்களைப்பற்றி எல்லாம்
எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டாமா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

24 Responses to “ராஜபக்சே-ராம்” இலங்கை குடியுரிமை பெற்று இலங்கையிலேயே குடியேறலாமே …

  1. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    எனது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்ததை தங்கள் பதிவில் பார்க்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
    சுஷ்மா நாடாளுமன்ற குழுவுக்கு தலைமை தாங்கி இலங்கை அனுப்ப காங்கிரஸ் கட்சியே ஆர்வமாக இருந்த போது ஓர் பொறி தட்டியது. பின் சென்று வந்து விடுத்த ‘ஏனோ தானோ’ அறிக்கை சந்தேகத்தை வலுவடைய செய்தது. இப்போது உறுதியாகி விட்டது.

    ரொமேஷ் பண்டாரி முதலாக ,ராஜபக்சே ராம், வழியாக சுஷ்மா வரை எப்படி தான் சிங்களவன் மடக்கி போடுறானோ?! (T R பாலு ராஜபக்சேவை கட்டி தழுவியும் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை என்று கேள்வி)

  2. rajanat's avatar rajanat சொல்கிறார்:

    என்.ராம் நீண்ட பாரம்பரியமான இந்து பத்திரிகையில் பணி புரிந்தவர் என்ற முறையிலும்,போபர்ஸ் என்ற ஊழல் சொல்லை அறிமுகப்படுத்தியவர் என்ற முறையிலும்,துவக்க கால விடுதலைப்புலிகளின் போராட்டம் இந்தியாவின் நலனுக்கு நல்லது என்ற சார்பு நிலையில் நின்றவர்.விடுதலைப்புலிகளின் தனித்துவமும்,போராட குணமும் வலுவடைந்ததும்,ராஜிவ் காந்தியின் மரணம் போன்றவற்றால் தன்னை மாற்றிக்கொண்டு இலங்கைக்கு ஜால்ரா போடுகிறேன் என்று அவரே ஒரு பேட்டியில் சொல்கிறார்.ஜீரோ மரண கோத்தபய வாக்குமூலத்தை அதெல்லாம் கிடையாது சில எக்ஸஸ் நடந்திருக்குது என்றும் ராஜபக்சே சீனாவுடன் நெருக்கம் காட்டுவதை உணர்ந்து பக்சே விடுதலைப்புலிகளுக்குப் பின் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார் என்று முந்தா நாள் ஞானோதயம் வந்த மாதிரியும் பேட்டி கொடுக்கிறார்.

    என்.ராம் போன்றவர்கள் இருப்பதால்தான் இவர்கள் எந்த முகமூடி போடுகிறார்கள் என்பதை உணர முடிகிறது.

  3. todayandme's avatar todayandme சொல்கிறார்:

    இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒவ்வொரு நிமிடமும் செத்துப் பிழைக்கும் – பிழைத்தும் சாகும் அப்பாவித் தமிழக மீனவர்களை மறந்துவிட்டிர்களே காவிரிமைந்தன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மன்னிக்கவும் நண்பரே.
      எழுத ஆரம்பித்தபோது நினைவில் இருந்தது –

      எப்படியோ – எழுதும்போது விடுபட்டு விட்டது.
      இப்போது சரி செய்து விட்டேன்.
      மிக்க நன்றி – உங்கள் நினைவு கூறலுக்கு.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    TamilWeek, Nov 27 – Dec 3, 2005

    N. Ram:

    First Indian National to get
    “Sri Lanka Rathna” award

    TRUE EXTRACT
    This decisive shift in Indian policy also took on an anti – tiger veneer after the Rajiv
    Gandhi assassination. Once it was established that the LTTE was responsible for
    the killing the Hindu along with many other Indian media became stridently critical
    of the LTTE. This perspective gathered momentum over the years as LTTE
    conduct deteriorated into extremism bordering on neo – fascism. Being privy to a
    lot of in depth information about the LTTE compared to other Indian media the
    journal has been firmly opposed to tiger antics on a principled basis. This position
    manifests itself very clearly.

    Most of the pro – tiger elements in Tamil Nadu have a background of Dravidian
    nationalist ideology. A crucial component of this ideology is its pronounced anti –
    Brahminism. As N. Ram is from a Vaishnavite Iyengar Brahmin family which
    incidently owns the “Hindu” Group of publications the pro – tiger lobby accusations
    are casteist and charge him of being anti – Tamil.The “Hindu” is derisively referred
    to as the “Mahavishnu of Mount Road”.

    The LTTE lobby loves to attack the “Hindu” and N. Ram as causes for its abysmal
    failure in hoodwinking the Indian establishment. I too have been attacked for this
    “Hindu” connection. I was the Frontline correspondent in Colombo from 1985 to
    1987 and the Hindu correspondent from 1986 to 1987. Nowadays I contribute
    articles to Frontline infrequently. Because of this the tiger lobby attacks me too as
    an Indian or Brahmin stooge something which tickles my fancy often.

    One is for his solidarity and support when I was arrested by Sri Lankan authorities
    in 1987 for alleged links with the LTTE. The flimsy basis was an interview I
    obtained with then deputy – leader of LTTE Gopalswamy Mahendrarajah alias
    Mahathaya. The interview was published in “the Island” and not “The Hindu”.
    When Neelan Tiruchelvam informed Ram of the arrest he took up the issue
    though he was advised by many to “keep out” since it was not directly connected
    to “The Hindu”. But Ram undertook a special trip to Colombo to meet with JR
    Jayewardene and urge my release. He also published the “Mhathaya” interview in
    “the Hindu” threby incurring displeasure in sections of South Block

    “The Hindu” from its vantage point in Chennai will no doubt be monitoring and
    reporting developments. Wise counsel is necessary to ease tensions and restore
    sanity. “The Hindu” group carrying much credibility on Sri Lanka can make a
    positive contribution in this. Narasimhan Ram will be taking a personal interest in
    all this. After all he is now an honoured “non – citizen” of the Island being a “Sri
    Lanka Rathna”.

    Current TamilWeek

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      Mr. Potti,
      It would have been nice if you had mentioned who wrote the above article. The Article was written by D. B. S. Jeyaraj a Sri Lankan born Canada based Journalist. Jeyaraj has history exactly like N Ram. He was supportive of the Tamil struggle earlier and later he was suspected to be in Sri Lanka government payroll although he crossed the floor much later than Ram. Good evidence for it was, Jeyaraj used to contribute articles to The Hindu and Frontline. When Ram crossed the floor, Jeyaraj was reportedly sacked from ‘The Hindu’ as he was still very critical about Indian Peace Keeping Force in his articles. But few years later Jeyaraj articles started appearing in The Hindu as he was now critical about LTTE and soft on Sri Lankan Government. Therefore it is not surprising that Jeyaraj praises Ram in the article and if you look carefully, the article it says about the interview with Mathaya. Remember, it was reported Mathaya was the first guy RAW managed to split from Prabaharan long before Karuna to destabalise LTTE.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் பத்மனாபன் போத்தி,

      நீங்கள் எந்த கண்ணோட்டத்தில் இதை இட்டிருக்கிறீர்களோ –
      தெரியவில்லை. ஆனால் -இந்த இடத்தில் நீங்கள் இட்டிருக்கும்
      திரு DBS ஜெயராஜின் கட்டுரைப் பகுதி இந்த இடுகையின் மூலக் கருத்துக்கு துணை புரிவதாக இல்லை.

      இருந்தாலும், “ராம்” எதனால், எந்த அளவிற்கு, யாரால் –
      பாராட்டப்படுகிறார் என்பதை அவரை
      சரியாக அறியாத சிலர் புரிந்து கொள்ள இது உதவலாம் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        கா மை ஐயா,
        திரு போத்தி அவர்கள், இலங்கையின் மிக உயரிய விருதான ‘ஸ்ரீ லங்கா ரத்னா’ விருது ராம் சிங்கள அரசுக்கு செய்த சேவைக்காக ராஜபக்சேவால் 2005 இல் வழங்க பட்ட செய்தியை சொல்வதற்காக மேற்கோள் கட்டியுள்ள கட்டுரையாக இருக்கலாம் என்று கருதுகிறேன். என்ன அவர் எடுத்து கொண்ட கட்டுரையின் எழுத்தாளரின் பின் புலமும் அந்த கட்டுரையின் உள்நோக்கமும் உங்கள் பதிவுக்கு சற்றும் சம்பத்தமில்லாமல் இருப்பதனால் குழப்பமாய் இருக்கிறது என்று நம்புகிறேன். மேற்கொண்டு திரு போத்தி அவர்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்.

  5. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    தங்களின் இந்த இடுகை முற்றிலும் தமிழன், தமிழ்ச்சாதி
    என்கிற உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாகவே கருத
    வேண்டியுள்ளது.

    தமிழ் நாட்டில் இருந்து கொண்டு ராஜபக்சேவை ஆதரிக்க
    கூடாதென்றால், இங்கிருந்து கொண்டு (இலங்கைத்)
    தமிழர்களை மட்டும் ஆதரிக்கலாமா? என்ன லாஜிக்?

    இலங்கையில் வாழும் தமிழர்களின் இன்றைய அவல
    நிலைக்கு முழு முதல் காரணம் விடுதலைப் புலிகள் என
    நான் கருதுகிறேன். எனவே, அவர்களுக்கு எதிரான ராஜபக்சேவின்
    நடவடிக்கையை நான் ஆதரிக்கின்றேன் என சொல்லுகின்ற
    மனத்துணிவாவது ஹிந்து ராமிடம் இருக்கின்றது.

    ஆடைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் …… என்கிற
    சொல்வடைக்கொப்ப விடுதலைப் புலிகளால் தமிழ் மண்ணில்
    நடத்தப்பட்டராஜிவ் படுகொலை நியாயம் தான். கடைசி வரை
    அந்தக் காரியத்திற்காக கிஞ்சித்தும் வருந்தாத தலைமை புலியின்
    ஆண்மையும் ஆளுமையும் போற்றிக் கொண்டாட வேண்டிய
    ஒன்று. அவர் தன் சொந்த இலாபத்திற்காக தன் சொந்த சகோதரர்களை
    இன்றைய இழி நிலைக்குத் தள்ளியது சரிதான் என சொல்லிக்
    கொள்ளும் துணிவு, தமிழகத்திலே இப்போது கூப்பாடு போடும்
    “தலைவர்களுக்கு” இருக்கிறதா?

    இவர்களின் இலங்கை அரசுக்கு எதிரான கூக்குரல்களால்
    இந்த மூன்றாண்டுகளில் கண்டதுதான் என்ன? செந்தமிழன்
    சீமான், ராமதாசரால் கைவிடப்பட்ட வேல்முருகன் போன்றோர்
    தமிழர் நலனுக்காக இதுகாறும் செய்தது என்ன? இனி செய்யப்
    போவதுதான் என்ன? இவர்களுக்கு இவ்விஷயத்தில் திடீர் அக்கறை
    வந்தது எப்படி? ஏன் இவர்கள் போகுமிடமெல்லாம் காங்கிரஸை
    அதன் தலைமையை மட்டும் குறி வைத்து தாக்கி பேசிவருகிறார்கள்?
    அமீரும், பாரதிராசாவும், சேரனும், சத்தியராசுவும், மணிவண்ணனும்
    இன்ன பிறரும் சீமானை விட்டு விலக காரணம் என்ன? யாரேனும்
    அறிவீர்களா?

    ஒன்றைச் சொல்லிக் கொள்ள விழகிறேன். எந்த இரண்டு
    மனிதர்களும் ஒரு விஷயத்தை ஒரே நோக்கில் காண மாட்டார்கள்.
    இருவர் கையாளும் விதமும் கூட வேறுபட்டதாகத் தானிருக்கும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மன்னிக்கவும் நண்பர் வெங்கட்ரமணி –

      நீங்கள் விவரம் தெரியாதவர் என்றால் உங்களிடம்
      விவரமாக எடுத்துச் சொல்லலாம். உங்களுக்கு
      விவரங்கள் அனைத்தும் தெரிந்திருக்கிறது.
      இருந்தாலும் – இது நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு
      என்பது புரிகிறது.

      இந்த நிலையில் எந்த விவாதமும் பயனற்றதே !

      ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்ள
      விரும்புகிறேன். அன்றிலிருந்து (திருமதி இந்திரா காந்தியின்
      காலத்திலிருந்து) இன்று வரை (திருமதி சோனியா காந்தியின்
      காலம் வரை ) இந்திய அரசு முழுக்க முழுக்க சுயநல
      நோக்குடனேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையை
      கையாண்டிருக்கிறது.

      தமிழர்கள் என்று அல்ல – உலகில் மனசாட்சியுள்ள எந்த
      மனிதராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

      இந்த கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம் –
      அது உங்கள் உரிமை.

      ஆனால் இது என் கருத்து -இன்றைய தினம் காங்கிரஸ்
      தலைமையை ஆதரிக்கிற எவரும் உண்மையைக் காண மறுக்கிற
      சுயநலவாதிகளாகவோ அல்லது ஒரே பரம்பரையின் கீழ்
      சேவகம் செய்ய விரும்புகின்ற அடிமைகளாகவோ தான் இருக்க
      முடியும்.
      120 கோடி இந்தியர்களில், கட்சிக்கு தலைமை ஏற்க
      தகுதியுள்ள ஒரு இந்தியனைக் கூட அவர்களால் அடையாளம்
      காண முடியவில்லை என்பது எவ்வளவு அவமானகரமான
      விஷயம் ? நான் கொத்தடிமையாகத்தான் இருக்க
      விரும்புகிறேன் என்று ஒருவர் தீர்மானித்து விட்டால்
      யார் தான் அதை மாற்ற முடியும் ?

      பெரும்பாலான மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதால் இந்த
      அவமானம் தொடர்கிறது. தொடரட்டும் – எவ்வளவு காலம்
      தொடர்கிறதோ -தொடரட்டும் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        //120 கோடி இந்தியர்களில், கட்சிக்கு தலைமை ஏற்க
        தகுதியுள்ள ஒரு இந்தியனைக் கூட அவர்களால் அடையாளம்
        காண முடியவில்லை என்பது எவ்வளவு அவமானகரமான
        விஷயம் ? //
        இதற்கே மனம் நொந்தால் எப்படி சாரே?
        நாளையே நம் ராகுகாலம் கட்சிதலைமையை ஏற்று பாரத நாட்டை வலி நடத்தும்போது, அவர் நோய் நொடி மற்றும் எந்த ஆபத்தும் இன்றி நீண்ட காலம் வாழ நாம் எல்லாம் பிரார்த்தனைபுரிய நேரிடுமே! பின்ன சும்மாவா?தப்பித்தவறி ஒன்று கிடக்க ஒன்று ஆனால்,இந்தியாவின் எழுதப்படாத அரசியல் நிர்ணய சட்டப்படி, ஒரு கொலம்பியா நாட்டு பெண்மணி அல்லவோ நம் தலைவலி ஆவார்கள்!!
        மாஃபியா போயி ட்ரக் (Drug) வந்தது டும்!.டும்!! டும்!!! என்று நாம் பள்ளு பாட வேண்டியிருக்குமே!
        என்ன! ஒரே நன்மை….
        வரும் சந்ததியினர் ,லீ குவான் யூ போல திறன் மிக்க மன்மோகன் சிங் ஆட்சி முடிந்ததும் ராகுல் காலம் பொறுப்பேற்றார்.என சொல்வார்கள்!
        (என்னது மன்மோகன் சிங் ஆவது,லீ குவான் யூ போல திறன் மிக்கவராவது
        என குழம்பி விட்டீர்களா?;நான் ராகுகால ஆட்சியை அனுபவிக்கப்போகிறவர்கள் அப்படி சொல்வார்கள் என சொன்னேன்!)

    • reader's avatar reader சொல்கிறார்:

      //ஆடைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் …… என்கிற
      சொல்வடைக்கொப்ப விடுதலைப் புலிகளால் தமிழ் மண்ணில்
      நடத்தப்பட்டராஜிவ் படுகொலை நியாயம் தான். கடைசி வரை
      அந்தக் காரியத்திற்காக கிஞ்சித்தும் வருந்தாத தலைமை புலியின்
      ஆண்மையும் ஆளுமையும் போற்றிக் கொண்டாட வேண்டிய
      ஒன்று. //

      வெங்கட்ரமணி அய்யா,

      புலிகள் ஏன் ராஜிவைக் கொல்ல வேண்டும்?
      ராஜிவ் அவர்களை பாராட்டி, சீராட்டியிருந்தால் அவரைக் கொல்வதால் புலிகளுக்கு என்ன பயன்?
      புலிகள் முட்டாள்கள் என்று நிறுவுகிறீர்களா?

      இந்தியா (இந்திய அரசு, அதிகாரவர்க்கம்) உண்மையிலேயே ஈழமக்களின் பால் பரிதாபம் கொண்டிருந்ததாக நம்புகிறீர்களா?

      வங்காளப் போரையும், ஈழப் போராளிகளுக்கான ஆயுதப் பயிற்சிகளையும் ஒன்றாக எண்ணுகிறீர்களா?

      தங்களின் பார்வைக்கு,

      http://viruvirupu.com/category/7-eelam-war/3-ltte-and-delhi/

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      “தமிழ் நாட்டில் இருந்து கொண்டு ராஜபக்சேவை ஆதரிக்க கூடாதென்றால், இங்கிருந்து கொண்டு (இலங்கைத்) தமிழர்களை மட்டும் ஆதரிக்கலாமா? என்ன லாஜிக்?”

      இதுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

      பாகிஸ்தானில் அல்லல் படும் இந்துக்களை ஆதரிக்க வேண்டும் என்றால் நாம் தீவிர வாத அமைப்புக்களான லக்ஷர், அல் முஜஹீத், ஜெயீஷ் இ முகம்மது போன்ற அமைப்புக்களையும் ஆதரிக்க தான் வேண்டுமா? இது தானே நீங்கள் கூற வாரும் லாஜிக்.

      யாரிடம் நியாயம் இருக்கிறது என்று பிரித்தறிய உங்களுக்கு தெரியாதா?

      இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் என்பது மேலை நாட்டு காலனிகளாக நான் இருந்த போதும் அவர்கள் விட்டு சென்றபோதும் உருவானது. தமிழர் என்பதான உறவு தமிழ் உருவான காலத்தில் இருந்தே இருக்கிறது. எனவே தமிழருக்கு ஒரு அல்லல் ஏற்படும் போது அதை தட்டி கேட்பதற்கு தமிழர்கள் அன்றி யார் இருக்கிறார்கள்? அதில் என்ன தப்பு!

  6. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து உலகின் பல நாடுகளில்
    “தமிழர்களும்” இந்தியர்களும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
    பல நாடுகளில் அவர்கள் மிக கௌரவமான பதவிகளில் கூட,
    ஏன் சில நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் கூட, இருந்திருக்கிறார்கள். .
    அங்கெல்லாம் பிரச்சனைகள் விளையும் போதெல்லாம், a person of indian
    origin அல்லது an indian ethnic community என்கிற referrence கொடுக்கப்பட்ட
    (சிறு) செய்தியாக வந்ததோடு சரி. நான் அறிந்த சமீபத்திய நிகழ்வு
    fiji islands.

    ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்கள் சார்ந்த அரசியல்,
    பொருளாதார, சமூக பிரச்சனைகள் எல்லாம் இங்குள்ள தமிழர்களை
    (என்னையும் தான்) பாதித்தது. தகவல் தொடர்பு சாதனங்கள் பெரிய
    அளவில் இல்லாத காலத்தில் “அவர்கள் பட்ட பாடுகள்” குறித்த
    கவலையடையாதவர், அன்றைய தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லை
    என்றே கூறலாம். அவர்களை துயர் சூழ்ந்த போதெல்லாம்,
    எம் ஜி ஆரும் கலைஞரும், இந்திராவும் மட்டுமல்ல சாதாரணமானவனும்
    கூட உண்டியலில் தனது பங்களிப்பை சேர்த்து இருக்கிறார்கள்.

    அவ்விதம் இருந்த support base காணாமல் போனது எவ்விதம்?
    இப்போதெல்லாம் “சுத்தமான” திராவிட தலைவர்கள் பாடும்
    “பிலாக்கனம்” தமிழர்கள் காதில் விழாமலே போகிறதே அது ஏன்? ஈழத்
    தமிழர்களின் ஆதரவு கூட்டங்கள் தலைவர்களால் “மட்டுமே” நிறைந்து
    வழிகிறதே அது ஏன்? கவனிக்க: தமிழ் நாட்டையும், தமிழர்களையும்
    “சுத்தமான” தமிழ்ப்பற்று மிக்க திராவிடர்கள் தான் ஆண்டு வருகிறார்கள்.
    இந்த திராவிட தலைவர்கள் சமயத்திற்கு தக்கவாறு ஒரு நிலைப்பாட்டை
    எடுத்து வருகிறார்களே அது ஏன்?

    கனடாவில் புலம் பெயர்ந்த ஒரு இலங்கை தமிழ்ப் பெண்னின்
    திருமணத்தை சமீபத்தில், நண்பர் ஒருவர் முன்னின்று “இங்கு” நடத்தி
    வைத்தார். மணமகனும் இலங்கைத் தமிழன் தான். இருவரும் எனக்கு
    நட்பும் இல்லை; சொந்தமும் இல்லை. ஆனாலும் போயிருந்தேன்.
    இருவர் முகத்திலும், “கொஞ்சமும்” சந்தோஷம் இல்லை. உறவென
    வந்தவர் மொத்தம் பத்து பேர். திரும்பி வீடு வந்து அழுதேன். எங்கோ
    எப்படியோ நடந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு “இவ்விதம்” நடந்தது
    குறித்து நான் அறிந்த பலரிடமும் சொல்லி சொல்லி…. இன்னமும்
    மாளவில்லை.

    இம்மாதிரியான சம்பவங்களுக்கெல்லாம் ராஜபக்சே மட்டும்தான்
    காரணமா?

    • ரமேஷ்'s avatar ரமேஷ் சொல்கிறார்:

      காவிரிமைந்தன் அய்யா,

      ராஜராஜ சோழன் காலத்திற்கும் முன்னர் இருந்தே ஈழத்தில்
      வாழ்ந்து வந்த தமிழர்களையும் – ஆங்கிலேயர் காலத்தில் பணி ஒப்பந்தத்தில் பல நாடுகளுக்கும் சென்ற இந்தியர்களையும் பிரித்து அறியத் தெரியாத அறிவில்லாத, தெளிவில்லாத
      கபோதிகளுக்கு நீங்கள் என்ன சொன்னாலும் மண்டையில்
      ஏறப்போவதில்லை.
      இத்தாலிய அன்னையின் பக்தர் இவர். ஒருவேளை எதாவது
      வட்ட, மாவட்ட அவதாரமாகக் கூட இருக்கலாம்.
      இல்லை ராமின் உறவினராகக் கூட இருக்கலாம்.
      அத்தனை பேரும் மடையர்கள் இவர் ஒருத்தர் தான் யோசிக்கத்
      தெரிந்த அடிவருடியா ?
      இவரைப் போன்ற ஆட்களை எல்லாம் தயவுசெய்து என்கரேஜ்
      செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் வெங்கட்ரமணி –

    உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பும் குழப்பமும் ?
    நீங்கள் எந்த கருத்தை வலியுறுத்த விரும்புகிறீர்கள் ?

    கீழ்க்கண்ட செயல்களில் எதாவது ஒன்றையாவது
    உங்களால் நியாயப்படுத்த முடியுமா ?
    (இங்கு எல்டிடியை குறிப்பிட்டு திசை திருப்பாதீர்கள் )

    2009ஆம் ஆண்டில் இலங்கை அரசு தமிழ் சிவிலியன்களை
    க்ளஸ்டர் குண்டுகளைப் போட்டு கூட்டம் கூட்டமாக
    அழித்தது ?

    மருத்துவ மனைகளின் மீதும், பள்ளிக்கூடங்களின் மீதும்
    குண்டு போட்டது ?

    அங்கங்கள் சிதறி,குண்டுகாயம் பட்டு உயிருக்குப்
    போராடிக் கொண்டிருந்த பெண்களுக்கும், சிறுவர்களுக்கும்,
    முதியோர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தது ?

    3 லட்சம் மக்களை ஒன்றரை வருடத்துக்கும் மேலாக
    முள்வேலி முகாமில் அடைத்து வைத்தது ?

    13 வயது பெண்களை எல்லாம் சிங்கள சிப்பாய்கள்
    வல்லுறவு கொண்டு கர்ப்பமாக்கியது ?

    தமிழர் குடியிருந்த இடங்களில் எல்லாம் ராணுவ முகாம்களை
    அமைத்து, அவர்கள் குடியிருப்பை ஆக்கிரமித்துக் கொண்டது ?

    பெஸ்ட் ஜர்னலிஸ்ட் என்று உங்களால் வக்காலத்து வாங்கப்படும்
    “ராம்” இவற்றில் எதையாவது கண்டித்து இதுவரை ஒரு வார்த்தை
    எழுதி இருக்கிறாரா ?

    நான் ஏற்கெனவே கூறி விட்டேன் –
    வாதத்திற்கு நான் எப்போதுமே வரவேற்பு தருவேன்.
    ஆனால் நீங்கள் செய்வது வாதம் அல்ல விதண்டாவாதம்.

    எனவே விதண்டாவாதத்தில் என் நேரத்தை வீணடிக்க
    நான் தயாரில்லை.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      நண்பர் காவிரிமைந்தன்,

      ஒரு விதத்தில் பார்த்தால் ஈழப்ப்ரச்சினைக்கு, பல ஈழத்தமிழர் விடுதலை அமைப்புகளும், முக்கியமாக பிரபாகரனும், ஒரு காரணம் என்றே தோன்றுகிறது.

      நீங்களே சொல்லுங்கள் நியாயத்தை!இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் சிங்களவர்கள் அங்கு வாழும் தமிழ் இனத்தை தங்கள் விரோதிகளாகவே பார்த்து இன்னலும் விளைவித்து
      வருகின்றனர்.அவ்வப்போது இனக்கலவரங்களையும் தூண்டிவிட்டு தமிழர்களைப்படுகொலையும் செய்து வருகின்றனர்.1958,1973,1983 ஆகிய ஆண்டுகளில் இப்படிப்பட்ட கொடிய கலவரங்கள் நடந்துள்ளன என்பதும வரலாறு.

      ஈழத்தமிழர்கள் இதைப்பொறுத்துக்கொண்டும்,சகித்துக்கொண்டும் இருந்திருந்தால் (நாம் நாற்பது ஆண்டுகளாக
      காங்கிரசையும்,கழகங்களையும் சகித்துக்கொண்டிருப்பதுபோல), இந்நேரம் ஒரு ஈழத்தமிழன் இருந்திருப்பானா அல்லது ஈழப்ப்ரசினைதான் இருந்திருக்குமா?அப்படி இல்லையே அவர்கள் !!
      தங்களுக்கென்று அமைப்புகளை ஏற்படுத்தி சிங்களவர்களுடன் “தேவையில்லாமல்”சண்டையிட்டார்களே!

      பிரபாகரன் என்ற ஒரு புரட்சிக்காரன் ஒரு கால் நூறாண்டுகளுக்கு அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தானே!அதனால் தானே நம் ராஜீவ் அவர்களை (தமிழர்களை)ஒரேடியாக அழித்து சிங்களவர்களை காப்பாற்ற நம் ராணுவத்தை அனுப்ப வேண்டியிருந்தது.

      சரி! போனது போகட்டும்! ஒருவழியாக பிரபாகரனை கொன்றாகி விட்டது இனி தமிழ் இனத்தை அழிக்க ஆரம்பிக்கலாம் என ராஜா பக்சே கம்பெனியார் நிம்மதியாக தங்கள் வேலையை துவங்க ,மீண்டும் இங்குஉள்ள வைகோ,நெடுமாறன்,சீமான் போன்றோர் அதை எதிர்க்கிறார்களே ! என்ன திமிர்!இவர்களை சும்மா விடலாமா??

      அதனால்தான் ஹிந்து ராம்,சோ போன்றவர்கள் கொதித்து எழுந்து ராஜா பக்சேக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சற்றும் மதிக்காமல் நமக்கு காவிரி நீர் கொடுக்காத கர்நாடக அரசை ஒரு வார்த்தை கேட்க துப்பில்லாத இவர்களும்,தமிழக கோமாளிக்கட்சியினரும்(அதாவது காங்) ராஜபக்சேயை யாராவது எதிர்த்தால் உடனே தங்கள் வீரத்தைக்காண்பிக்கிறார்கள்.
      “தமிழர்களை பழிப்பவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என கூவித்திரியும் நம் இனத்தலைவரும் ,இது பற்றி கேட்டால்,இந்த பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன்னமே தன் தாயார் மறைந்து விட்டார்.எனவே அவர் தடுக்காததால் தானும் (ஒன்றும் செய்யாமல்)விட்டு விட்டதாக சொல்கிறார்.

      முடிவாக ஒன்று,சிங்கள ராணுவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழர் குடியிருப்பில் நிகழ்த்திய கொடுமையை ஒளிநாடாவாயிலாக பார்த்து விட்டும் மனம் உருகி நிலை மாறாதவர்கள் ராஜபக்செயைவிட மோசமானவர்கள்.

      நன்றி.

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        இது தான் ஐயா கண்பத் சார் ஸ்பெஷல்! 99 % மக்கள் உணர்ச்சி வசப்படும் போது, நிதானமாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உண்மைகளை எழுத உங்களால் மட்டுமே முடியும். உங்கள் எழுத்துக்கு என்றும் நான் பரம ரசிகன். வாழ்க!

        • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

          மிக்க நன்றி எழில்..
          நம் அனைவருடைய சீற்றத்தின் அளவும் ஒன்றுதான்;என்ன, அவரவர் சக்திக்கு ஏற்ப அதை வெளிப்படுத்தும் முறையில்தான் வேறுபாடு உள்ளது.நீங்கள் பாறையை வெறும் கையால் உடைத்து அதை வெளிப்படுத்துகிறீர்கள்.நான் அதையே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி வெளிப்படுத்துகிறேன். 🙂

  8. BC's avatar BC சொல்கிறார்:

    Sir வெங்கட்ரமணி,
    தெளிவான கருத்துக்கள்.

  9. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    எனது பின்னூட்டத்தில் ஓரிடத்திலும் இலங்கைப் போர்
    அத்துமீறல்கள் நியாயம் தான். ராஜபக்சே நியாய தர்மப்படி தான்
    நடந்து கொண்டார் என்று பதியவே இல்லை.

    சேனல் 4 war crime video-வை subscribe செய்து பார்த்துவிட்டு மனம்
    நொந்த கோடான கோடி பேர்களில் நானும் ஒருவன்.

    உங்கள் அனைவருக்கும் இவ்விஷயத்தில் ஒரு கருத்து வைத்துக்
    கொள்ள எந்த அளவு சுதந்திரம் உள்ளதோ, மாற்றுக் கருத்து
    வைத்திருக்கவும் அதே அளவு சுதந்திரம் இருக்கிறது என்பதே
    என் வாதம். அதன் பொருட்டு எழுதியதில், விடுதலை புலிகள்,
    ராஜிவ் படுகொலை தவிர்க்க முடியாததாகி விட்டது.

    தா.பாண்டியன் முணைந்து ஈழத் தமிழருக்காக பேசிவருவதால்
    போரில் சீன பங்களிப்பு இல்லை என்றாகி விடுமா? cluster குண்டுகள்
    எங்கிருந்து வந்தன?

    தமிழகத்திலே பொதுவாக மக்கள் மத்தியில் நிலவும் அசட்டையான
    போக்கிற்கு என்ன காரணம்?

    தமிழ் பகுத்தறிவு பாடங்களை தெளிவுற படித்தவர்களிடமிருந்து
    social media வில் கூட எதிர் கருத்து கொண்டவர்கள் குறித்து (கபோதி)
    நல்ல விமர்சனங்கள் வருகிறது. மகிழ்ச்சியளிக்கிறது.

  10. BC's avatar BC சொல்கிறார்:

    Sir வெங்கட்ரமணி,
    //உங்கள் அனைவருக்கும் இவ்விஷயத்தில் ஒரு கருத்து வைத்துக்
    கொள்ள எந்த அளவு சுதந்திரம் உள்ளதோ, மாற்றுக் கருத்து
    வைத்திருக்கவும் அதே அளவு சுதந்திரம் இருக்கிறது என்பதே
    என் வாதம்//
    தனக்கு எதிராக மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்கள் கொல்லபடுவார்கள். இதுவே புலியின் நிலைபாடு. புலியின் ஆதரவாளர்களும் மாற்றுக் கருத்துகளை சகிக்க முடியாதவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
    //அத்துமீறல்கள் நியாயம் தான். ராஜபக்சே நியாய தர்மப்படி தான் நடந்து கொண்டார் என்று பதியவே இல்லை.//
    ஆனால் ஒரு கொடூர பயங்கரவாத இயக்கமான புலிகளின் செயல்பாடுகளை தமிழ்நாட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள் ஆதரித்தே வந்தனர்.

  11. BC's avatar BC சொல்கிறார்:

    புலிகள் அனுமதித்த மாற்றுக் கருத்து வைத்திருக்கும் சுதந்திரம் வெளிநாடுகளிலேயே எந்தளவுக்கு இருந்தது என்பதற்க்கு ஒருசான்று
    புலிகளால் படு கொலை செய்யபட்ட த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அ.
    அமிர்தலிங்கம் அவர்களது இரங்கல் கூட்டம் ரொரன்டோ-கனடாவில் நடைபெற்றபோது அக் கூட்டம் புலிகளினால் குழப்பப்பட்டது. “எனக்கு பேசுவதற்குதான் உரிமை இல்லை அழுவதற்காவது உரிமை தாருங்கள்” என அங்கு சட்டத்தரணி கரிகாலன் அழுது வேண்டினார்.புலிகள் அழிகபட்டதினால் இன்று இலங்கையிலேய அமிர்தலிங்கம் அவர்களது இரங்கல் கூட்டம் நடத்தபடுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.