எங்கே போனார் ? எப்போது போனார் ? எப்போது திரும்ப வருவார் ? …

எங்கே போனார் ? –  தெரியாது.

எப்போது போனார் ? – போயாகி விட்டது.
அவ்வளவு  தான் தெரியும்.

வெளிநாட்டில்  யாரோ பார்த்து விட்டு டெல்லி
பத்திரிகையாளருக்கு  போன் செய்தபிறகு தான்
பொது மக்களுக்கு சொல்லப்பட்டது ?)

எப்போது வருவார் ? – வரும்போது வருவார் !

நாடு அமர்க்களப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரி
பாராளுமன்றம் முடக்கப்பட்டு இருக்கிறது.

பிரதம மந்திரியை விட உயரத்தில் இருப்பவர் –
பிரதமரே உத்திரவு கேட்கும் இடத்தில் இருப்பவர் –
திடீரென்று, வெளிப்படையாக பயணத்திட்டம் எதையும்
அறிவிக்காமல் – எங்கோ வெளிநாடு சென்று விட்டார்.

நிதானமாக – பத்திரிக்கையாளர்களுக்கு (வேறு விதத்தில்
செய்தி தெரிந்த பிறகு), மெடிகல் செக்கப்புக்காக
சென்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இப்போதும்
எங்கு சென்றார், எப்போது போனார், எப்போது திரும்புவார்
எதுவும் சொல்லப்படவில்லை.

அவர் வகிக்கும் பதவி –
பல சலுகைகளுக்கு வழி வகுக்கும் பதவி.
சென்றது அரசு பணத்திலா அல்லது சொந்த
செலவிலா ? – தெரியாது.

உடன் சென்றவர்கள் யார் யார்  ? – தெரியாது.
உறவினர்கள், கட்சிக்காரர்கள், உதவியாளர்கள் –
பாதுகாப்பு அதிகாரிகள் யாராவது கூடச் சென்று
இருக்கிறார்களா ? – தெரியாது.

கூடச்சென்றவர்களுக்கெல்லாம் எப்போது,
எப்படி விசா வாங்கப்பட்டது ? இந்தப் பயணம்
எப்போது திட்டமிடப்பட்டது ?– தெரியாது.

அவர்கள் அரசாங்க செலவில் விமானப் பயணம்
மேற்கொள்ளத் தகுதி உடையவர்களா ? – தெரியாது.

இந்த பயணச் செலவு எல்லாம் எந்த கணக்கில்
வரும் ? – தெரியாது.

(காந்தி கணக்கில் …?)

அவருக்கு என்ன வியாதி ? – தெரியாது.
குணமாகி விட்டதா இல்லையா ? – தெரியாது.

இது குறித்து ஏன் இவ்வளவு ரகசியம் ?  

– அடிமைகளுக்கு எவ்வளவு தெரிய வேண்டுமோ
அவ்வளவு தெரிந்தால் போதும் !

—————————————-

பின்சேர்ப்பு  –

இதைக் கண்ட பிறகாவது உறங்கிக் கொண்டிருக்கும்
நம் மக்கள் விழித்துக் கொள்வார்களா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to எங்கே போனார் ? எப்போது போனார் ? எப்போது திரும்ப வருவார் ? …

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள். ஆனால் என்ன, வாய்தான் கொஞ்சம் நீளம். (இப்போதோ கையும் நீளம்…. பதிவும் போட்டுவிடுகிறார்கள்!)

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    Very nice articulation,kavirimainthan.சபாஷ்!!
    உங்கள் அனுமதியுடன் ஒரே ஒரு வார்த்தை, கடைசி வரியில் சேர்க்கலாமா?

    //- அடிமைகளுக்கு எவ்வளவு தெரிய வேண்டுமோ
    அவ்வளவு தெரிந்தால் போதும் ! //

    இப்படி முடித்தால ஏதோ சோனியா காங்கிரஸ் உறுப்பினர்களை மட்டும் குறிப்பது போல உள்ளது.அப்போ நம்மைப்போன்ற சாதாரண குடிமக்களின் கதி??

    எனவே ,நான் சேர்ப்பது..

    அடிமைகளுக்கும்,அசடுகளுக்கும் எவ்வளவு தெரிய வேண்டுமோ
    அவ்வளவு தெரிந்தால் போதும் !

    நன்றி.

  3. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    சோனியா காந்தி தனது உடல்நிலை காரணமாக மெடிகல் செக்கப்புக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இந்த நிலையில் கருத்து ஏதும் சொல்வது முறையாக இருக்காது என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். எனவே
    அவர் திரும்ப வந்த பிறகு மருத்துவ சிகிச்சைக்காக சென்றாரா அல்லது பொதுக்காரியத்துக்காக போனாரா அல்லது
    சொந்தவேலை என்று கூறிவிட்டு ஊழல் நிறைந்த பொது சேவை செய்து விட்டு வந்தாரா என தெரிந்த பின்னர்
    விமர்சிப்பது பொருத்தமாக இருக்கும்.

    • Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

      நண்பரே,
      திரும்பி வந்தவுடன் அவர் உங்களிடம் இந்த விவரங்களை
      எல்லாம் சொல்லப்போகிறாரோ?
      கௌரவப்பட்ட மனிதர்களாக இருந்தால், பொது வாழ்க்கையில்
      ஈடுபட்டிருக்கும் ஒருவர் இந்த விவரங்களை தானாக
      முன்வந்து தெரிவித்திருக்க வேண்டாமா? போவதற்கு முன்பே,
      தன் பயணம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்க
      வேண்டாமா ?
      திரு. கண்பத் சொன்னது சரி தான். இந்த மாதிரி “அசடு”களையும் காவிரிமைந்தனின் கடைசி வரியில் சேர்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும்.

  4. chollukireen's avatar chollukireen சொல்கிறார்:

    சொல்லாமல் போவது ஸோனியாகாந்தியைத் தவிர யாரால் முடியும்.. பாவம்.
    கேன்ஸர் பேஷன்ட் இல்லையா. முன்பும் சொல்லாமல்ப் போய்தானெ சிகிச்சை நடந்தது. இப்படிதான் நினைத்துக் கொள்ள வேண்டும். அசடோ,சமத்தோ அப்புரம்
    பார்க்கலாம்.

  5. Srini's avatar Srini சொல்கிறார்:

    kaverimainthan sir,
    Did you read about the great thoriam robbery. internet-il padika padika migavum adhirchiyaga irukku…. miga viraivil, namadhu naatai kooru pootu vithuduvaanga pola irukka…

    http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=422057&catid=38

    regards
    Srini

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Dear Mr. Srini,

      You are absolutely right.
      We cannot just imagine what will be left after these people loot
      the Nation.and its rich minerals.

      I did not see this article earlier.
      Thanks your communication.

      With all best wishes,
      Kavirimainthan

  6. Ramesh's avatar Ramesh சொல்கிறார்:

    என்றாவது ஒரு நாள் மக்கள் விழித்துக்கொண்டு,
    இவர்களை பதவியிலிருந்து தூக்கி எறியும்போது,
    முதல் காரியமாக ஏர்போர்ட்டுகளை மூட வேண்டும்.

    இல்லையேல் இதே போல், யாருக்கும் தெரியாமல்,
    சொல்லாமல் கொள்ளாமல், நாட்டை விட்டு நிரந்தரமாக
    ஓடி விடுவார்கள்.

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      மேலே ரமேஷ் கூறியது போல் நாட்டை விட்டு ஓடத்தான் ராவுல் (Raul ), பியங்கா (Bianca ) என்ற உண்மையான பெயர்களை மறைத்து அடிமைகளுக்கு ஏற்ற வண்ணம் ராகுல் என்றும் பிரியங்கா என்ற புனை பெயர்களில் உலவி வருகிறார்களோ?!

  7. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    இங்கே இந்தியாவில்தானே புதைப்பாங்க? அப்போ நாடு 4/5 நாளைக்கு அல்லோகோலப்படும். அப்போ தெரிஞ்சிகிடலாம். Decency எல்லம் நாமதான் பாக்கனும். அவங்களுக்கு இல்லியே.

  8. Shakthi's avatar Shakthi சொல்கிறார்:

    To startwith, Congress party should be kicked out of power. All corrupt VIPs and politicians have been hiding behind Manmohan Singh’s clean image till now.
    But after the total exposure of the realities, Congress will now get rid of Manmohansingh and try to bring Rahul/Priyanka /Sonia gang.
    The only way for India’s improvement is to have in power,a committee of persons with honesty, integrity, welfare of the nation in mind and totally dedicated , and particularly, with no desire for personal gains

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.