பாவம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி …

அவர் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வரப்போகிறது
என்பது அவருக்கு தெரிய வருவதற்குள் மற்றவர்களுக்கு
தெரிந்திருக்கிறது !

என்ன தீர்ப்பு வரும் ? – என்று மற்றவர்களுக்கு
வேண்டுமானால் சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் –
சிலருக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இல்லாவிடில், தீர்ப்பு வரும் முன்னரே,
அசாத்திய தன்னம்பிக்கையுடன் –
(நிலக்கரி ஊழல் பற்றி விவாதிக்க -)
இன்று பகல் 12 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு
(press meeting) ஏற்பாடு செய்யப்பட்டிருக்காதே !
தீர்ப்பு வேறு மாதிரி கூட இருக்கலாம் என்று துளியாவது
சந்தேகப்பட்டிருந்தால் -இந்த மீட்டிங் ஏற்பாடு செய்ய
எப்படி துணிச்சல் வரும் ?

பாவம் டாக்டர் சுவாமி.  இந்த வயதிலும்,
அசராமல், கோர்ட் கோர்ட்டாக ஏறி இறங்கி வருகிறார்.
நீதி தேவதையின் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார் !

தீர்ப்பு வந்த பிறகு இன்று காலை கோர்ட் வாசலில் –
பத்த்ரிகையாளர்களிடம் கூறுகிறார் –

“நான் கேட்காத விஷயத்திற்கு தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே !
கூட்டு சதியைப் பற்றி இந்த நீதிமன்றத்தில் நான் பேசவே
இல்லையே – நான் பேசியது எல்லாம் நாட்டிற்கு ஏற்பட்ட
பெருத்த இழப்பைப் பற்றித்தான். அதைப்பற்றிய எதுவுமே
தீர்ப்பில் இல்லையே –  நீதிமன்றம் என்னை
முழுதுமாக பேச அனுமதிக்கவே இல்லை. (வேண்டியதை
எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுக்கும்படி கூறப்பட்டார் !).
எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. நிச்சயம்
மறு பரிசீலனைக்கு மனுச் செய்வேன்.”

ஒரு தத்துவம் உண்டு.
“எதிர்பார்ப்புகளே – ஏமாற்றத்திற்கு வழி கோலுகின்றன”
– என்று.
எதிர்பார்த்தால் தானே ஏமாற்றம் ?
இவற்றின் லட்சணம் எல்லாம் எப்படி இருக்கும் என்று
ஏற்கெனவே பலமுறை பார்த்து முடித்து விட்டோமே !

பதவி அதிகாரம் மிரட்டுகிறது.
பண பலம் பேயாக அலைகிறது.
மீடியாக்கள் அத்தனையையும் விலைபேசியாகி விட்டது.
டெல்லி சேனல்கள் செய்நன்றி மறவாமல் தம்
கடமையை  ஆவேசத்துடன் செய்கின்றன.

விழித்துக் கொள்வதோ, தொடர்ந்து தூங்குவதோ –
மக்கள் கையில் தான் இருக்கிறது !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பாவம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி …

  1. samy sathi's avatar samy sathi சொல்கிறார்:

    nothing to say. you already mentioned it. samy.

  2. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    சாமிக்கு ஏற்பட்டது வெற்றியா தோல்வியா? அவர் நம்பிக்கை இழக்கவில்லை. மறு பரிசீலனைக்கு மனு செய்வேன்
    என்று கூறியுள்ளார். அதேநேரத்தில் வேறொன்றும் கவனத்தில் கொள்ளவேண்டும். நீதியை விலைக்கு வாங்கிய
    வகையில் ஜாமீன் கொடுத்தமைக்கு ஒரு நீதிபதியும் கைது செய்யப்பட்டுள்ளார். நீதியா அநீதியா? வெல்லபோவது
    எது?

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //“நான் கேட்காத விஷயத்திற்கு தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே !//
    இந்த லட்சணத்தில்தான் இன்றைய தீர்ப்புகள் உள்ளன. எனவேதான் பலர் நீதிமன்றங்களுக்கு செல்லவே அஞ்சுகின்றனர். பலரும் இதனையே சாக்காக வைத்துக்கொண்டு தவறுகளை தாராளமாகவும் செய்கின்றனர்.
    நீதி தேவதை என்றுதான் கண்திறப்பாளோ?

  4. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    “தப்பினார்!” *2ஜி வழக்கு விசாரணையில் இருந்து ப.சிதம்பரம்
    *சுப்ரீம் கோர்ட்டில் சாமி தொடர்ந்த வழக்கு தள்ளூபடி
    என “தினமலர்” செய்தி வெளியிட்டுள்ளது.

    சாமியின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவுமில்லை. எனவே,
    வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என செய்தி சொன்னாலும்,
    “தலைப்பு” வேறொன்றை சொல்லுகிறது.

    காலம்தான் பதில் சொல்ல வேண்டும். குருவாயூருக்குப் போய்
    தரிசனமெல்லாம் செய்தாலும், அவருக்கு “மூடநம்பிக்கைகள்”
    கிடையாது. ஆனால் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு
    நம்பிக்கை இருக்கிறது. பதில் வரும்.

    • ரமேஷ்'s avatar ரமேஷ் சொல்கிறார்:

      “சாமி” டாக்டர் சுவாமிக்கு உதவ முடியுமா ?
      இன்று வெளிவந்துள்ள செய்தி இதற்கு பதில் கூறுகிறது.

      “ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனக்கு நெருக்கடிகள் அதிகமானபோது,
      குடும்பத்தோடு கோயில் கோயிலாக போய் சாமி கும்பிட்டார்
      அமைச்சர் ப.சி. இப்போது மீண்டும் ஸ்பெக்ட்ரம் விவகாரம்
      உச்சத்திற்கு வருவதை அடுத்து அவரது குடும்பத்தினர்
      கோயில், சிறப்பு யாகம் என்று மீண்டும் ஆரம்பித்து விட்டனர்.
      காரைக்குடி அருகில் உள்ள மானகிரியில் ப.சி.யின் பண்ணை
      வீடு இருக்கிறது. இங்கு ஆகஸ்ட் 22ந்தேதி மாலை தொடங்கிய
      யாகம் மறுநாள் வியாழன் மாலை வரை தொடர்ந்தது.(தீர்ப்பு
      வந்தது வெள்ளி காலையில் !)

      செப்டம்பரில் மத்திய அமைச்சரவை மாற்றம் வரப்போகிறது.
      மன்மோகன் சிங் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி
      பிரதமர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக சோனியாவிடம்
      சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலை
      வந்தால், (அடுத்த தேர்தல் வரும் வரை) தனக்கு பிரதமர்
      ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம் என கணக்குப் போடுகிறார்
      ப.சி. அந்த கணக்கு கைகூடி வருவதற்காகவே மானகிரியில்
      சிறப்பு யாகம் நடக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.