இந்த கொள்ளைக் கூட்டம் மஹாத்மா காந்தியைக் கூட விசாரணைக்கு கூப்பிடும்…..

.

நினைத்தது தான் நடக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிக்க முன்னாள் பிரதமர்
அடல்பிஹாரி வாஜ்பாயை கூப்பிட வேண்டுமாம்.
காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர், ஜூனியர் அடிவருடி
மணீஷ் திவாரி இன்று JPC-யில் டிமாண்ட் செய்கிறார்.

இந்த திருட்டு பூனைகளை விட்டால் மஹாத்மா காந்தியைக்கூட
விசாரணைக்கு அழைப்பார்கள்.

அன்றே டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொன்னர்.
ஆளும் தலைமைக்கு போக வேண்டிய பங்கை
(18,000+18,000) ராஜா செலுத்தி, அது சகோதரிகளால்
துபாய் வழியாக வெளிநாட்டுக்கும் கொண்டு போகப்பட்டு
விட்டது என்று.  தலைமைக்கு கப்பம் கட்டியாகி விட்டது
என்னும்போதே அப்புறம் விசாரணை எல்லாம் ஜுஜுபி  தானே !

JPCயில் விவாதிக்கிறோம் என்று சொல்லி மாதக்கணக்கில்
இழுத்தடிக்கிறார்கள். முடிவில், முடிவில்லாமல் முடிப்பதற்காக,
இப்போது வீண் வம்பாக, வாஜ்பாயை விசாரிக்க வேண்டும்,
செத்துப்போன ப்ரவீண் மஹாஜனை கூப்பிட வேண்டும்
என்றெல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்.

இனி 2ஜி வழக்கு – போபர்ஸ் போன அதே வழி தான் !
காமன்வெல்த் கேம்ஸ் ஊழல் – சுரேஷ் கல்மாடியை –
கடந்த வாரம், சிபிஐ குற்றம் எதுவும் காண முடியாதவர்
என்று சொல்லி – FIR லிருந்து விடுவித்து விட்டது.

மும்பை கார்கில் –ஆதர்ஷ்  கட்டிட ஊழல் ஆவணங்கள்
எல்லாம் தீ விபத்தில் எரிந்தாகி விட்டது.

அடுத்து பாக்கி இருப்பது, இப்போது அமர்க்களப்படும்
கோல்கேட் – நிலக்கரி ஊழல் !
குற்றம் கண்டு பிடித்து ரிப்போர்ட் கொடுத்திருப்பது –
அரசியல் சட்டப்படி
இதற்கென அமைக்கப்பட்டுள்ள அமைப்பான Comtroller
and Auditor General of India.
இன்றைய நிலக்கரி அமைச்சர் ஜெய்ஸ்வாலும்,
திரு திரு நாராயணசுவாமியும் CAG  தன் வரம்பு மீறி
செயல்படுகிறார்  என்று சொல்லி தீர்ப்பே கூறி விட்டார்கள்.

CAG என்ன சொல்கிறார் -?
(சுருக்கமாக) –

2004 முதல் இன்று வரை ஏலம் விடாமல்,
எந்தவித நெறிமுறைகளையும் கடைப்பிடிக்காமல்,
தங்களது சொந்த ஸ்க்ரீனிங் கமிட்டி மூலம்,
மன்மோகன் சிங்/திருமதி சோனியா காந்தி  கூட்டம்,
தங்களுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம்
தானமாகக் கொடுத்த நிலக்கரி சுரங்கங்களின்
எண்ணிக்கை – 142.

இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு –
அந்த தனியார் முதலாளிகள் அடித்த கொள்ளையின்
மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து எண்பத்து ஆறாயிரம் கோடி !

இனி  உடனடியாகச் செய்ய வேண்டியது –

Foreign Investment Promotion Board –
செயல்படுவது போல் ஒற்றை சாளர முறையில் அனைத்து
லைசென்சுகளும் வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட
வேண்டும்.

உடனடியாக – நிலக்கரி சுரங்கங்களை  ஏல முறையில்
ஒதுக்கப்படும் முறை  துவங்கப்பட வேண்டும்.

ஒதுக்கப்பட்ட சுரங்கங்களிலிருந்து விதிமுறைப்படி
தனியார் கம்பெனிகள் செயல்படுகின்றனவா என்று
கண்காணிக்க வேண்டும்.

உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி ஒழுங்காக நாட்டின்
மின் உற்பத்தி நிலையங்களுக்கும், மற்ற நேர்மையான
தேவைகளுக்கும் கிடைக்கின்றதா என்பதை
அரசு நிறுவனமான Coal India Limited மூலம்
உறுதி செய்ய வேண்டும்.

இதைப் பற்றி யாரும் பேச மாட்டேனென்கிறார்கள்.

-இத்தனை ஊழல்களுக்கு அப்புறமும்,
இவ்வளவு அமர்க்களங்களுக்குப் பிறகும், திருமதி சோனியா
காந்தியின் ஆட்சி தொடர்வது  எப்படி என்று அதிசயமாகத்
தோன்றலாம்.

தான் மட்டும் வைத்துக் கொண்டால் தானே தவறு.
எல்லாருக்கும் பிரித்துக் கொடுத்தால் …?
எல்லாருக்கும் சம்பாதிக்க சமவாய்ப்பு கொடுத்தால் ….?
கம்பெனி தொடர்வதைத் தானே பங்காளிகள் விரும்புவார்கள் ?
பங்காளிகள் யார் –
லாலு பிரசாத் யாதவ்,
முலாயம் சிங் யாதவ்,
குமாரி மாயாவதி,
மம்தா தீதி (இவர்  மட்டும் அவ்வப்போது பங்கைப் பிரி-
நான் போகிறேன் என்று சொல்லிக்கொண்டே ஆட்டத்தை
தொடர்வார் !)

2014 தேர்தல் வந்தாலும் இவர்கள் போவார்கள் என்று
தோன்றவில்லை. அணுகுண்டு போட்ட பிறகு கூட
கரப்பான் பூச்சி மட்டும் அழியாமல் இருந்ததாம் !
அது போல் – எத்தனை ஊழல்கள் வெளிவந்தாலும்,
இவர்களை பதவியிலிருந்து அகற்றுவது
அவ்வளவு சுலபமான காரியமாகத் தெரியவில்லை !!

இந்த இடுகையை நான் சரியாக எழுதி முடிக்கவில்லை.
இன்று அவசரமாக எழுத வேண்டும் என்று தோன்றியது –
எழுதி விட்டேன். பின்னர் சமயம் வரும் –
விவரமாகத் தொடரலாம்.

பின்குறிப்பு –
மறந்து விட்டேன் ! இந்த நிலக்கரி கொள்ளையில்
அதிக லாபம் பெற்ற தனியார் முதலாளிகளில் சிலர் –
அனில் அம்பானி,
ரத்தன் டாட்டா,
ஜிண்டால் ……..
அடுத்த தேர்தலை இவர்கள் கவனித்துக் கொள்ள
மாட்டார்களா என்ன ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இந்த கொள்ளைக் கூட்டம் மஹாத்மா காந்தியைக் கூட விசாரணைக்கு கூப்பிடும்…..

  1. siva's avatar siva சொல்கிறார்:

    இது என்ன என் வீட்ல நானே திருடுற மாதிரி பெரிய அநியாயமா இருக்கு. இதை விட ஒரு நல்ல முறை இருக்கு. பேசாம இந்தியாவை அப்படியே ஆ பிரிச்சு எங்க நெறைய காசு வருதோ அந்த நாட்டுக்கு மொத்தமா இருக்குற மக்களோட வித்துடலாம். “ஒரு படத்துல மதன்பாப் ௨௦௦ ரூபாய் காச குடுத்துட்டு நா என்ன இளிச்ச வாயநானு சொல்லி இன்னொரு ஜாடியையும் உடைப்பார்” அந்த மாதிரி. இந்த நாட்ட காப்பாத்த இனிமே இருக்கும் ஒரே அஸ்திரம் தற்கொலை படை தான்.
    திருட்டு பசங்க

  2. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    பெரிய அளவில் ஒரு ஊழல் கண்டுபிடிக்க படுகிறது. கடுமையான நடவடிக்கை எடுப்பதாக எடுப்பதுபோல் காண்பிக்க படுகிறது. சிறிது நாட்களில் அதைவிட பெரிய ஊழல் வெளிவரும்போது முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் மிஸ்டர் பொது ஜனத்தால் மறக்கப்பட்டு விடும். அல்லது அரசியல் வாதியால் மறைக்கப்பட்டு விடும்.. இதுவும் அடுத்த ஊழல் வெளிவரும்போது மறைந்து விடும். அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டம் வருமா என கூற முடியாது. தேர்தல் நேரத்தில் ஒட்டு போடுபவர்களுக்கு

    கொடுக்க வேண்டியதை கொடுத்து ஒட்டுக்கள் பெற பலமான முயற்சிகள் நடக்கும். பொதுமக்களிடையே புரட்சி வெடித்தால் அரசு அலுவலகங்களில் மின்கசிவினால் தீ பிடித்தாலும் சரி அல்லது சாம தான பேத தண்டங்கள் பிரயோகித்தாலும் சரி இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வந்த காரணத்தால் அடுத்த தேர்தலில் அம்போவான கதை மீண்டும் நடக்கும்.

  3. ரமேஷ்'s avatar ரமேஷ் சொல்கிறார்:

    இது ஒரு பெரிய திருட்டுக் கூட்டம்-கூட்டணி.
    எதற்கு வெட்கப்படாது.
    எதற்கும் பயப்படாது.
    மானம் ரோசம் எதுவும் கிடையாது.
    திருடி, கையும் களவுமாக மாட்டிய பிறகு
    வீர வசனம் பேசும். ஏர்போர்ட்டில் தாரை தம்பட்டை
    வரவேற்பு கொடுக்கும்.
    இதை மனிதர்களால் எதுவும் செய்ய முடியாது.
    இயற்கையாகப் பார்த்து செய்தால் தான் உண்டு.

    தயாநிதி இன்னும் கைது செய்யப்படவே இல்லை.
    இதுவரை வழக்கும் இல்லை.
    ராஜா, கனிமொழி வெளியே வந்தாயிற்று.
    பாவம் சாதிக் பாஷா போனதோடு சரி.
    எப்படி செத்தார் என்று கூடத் தெரியவில்லை.
    எல்லாவற்றையும் அமுக்கி விடுவார்கள்.
    மூடி மறைத்து விடுவார்கள்.
    கொலைபாதகர்கள்.
    இவர்கள் எல்லாம் இப்படியே இருந்தால் மக்களுக்கு
    தெய்வ நம்பிக்கையே போய் விடும்.

  4. Prakash's avatar Prakash சொல்கிறார்:

    லட்சம் கோடிகளைத் தின்றாலும்
    லட்சம் உயிர்களைக் கொன்றாலும்
    வீராதி வீரர்கள் வாழ்ந்த இந்நாட்டில்
    மௌனமான இன்றைய தலைமுறையில்
    நானும்!!!

  5. Prabhu's avatar Prabhu சொல்கிறார்:

    குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும் –

    சீரியஸ் செய்திக்கு இடையே இப்போது
    வந்துள்ள ஒரு காமெடி செய்தி –

    “என் மீது குறைசொல்வோர் ஈழத் தமிழருக்காக
    உண்ணாவிரதம் இருந்து செத்து போயிருக்கலாமே:
    கருணாநிதி ..!

    நான் கிழிக்கலை. .நீங்க ஏன் சாகலை .. ?

    என் மீது புகார்க் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்திலே
    உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி
    நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது
    என்ன செய்து கிழித்தீர்கள்? சாகும் வரை உண்ணா
    விரதம் என்று அறிவித்து விட்டு இலங்கைத்
    தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே?
    நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?
    என்று கூறியுள்ளார் கருணாநிதி.

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    சபாஷ் அருண் ஜெட்லி! ப.சி யின் முட்டாள் வாதத்தை உடைத்து சுக்கு நூறாக்கியதற்கு..,
    காவிரிமைந்தன் மற்றும் உள்ள நண்பர்களே,
    இன்று தினமலர் செய்தியை கீழே கொடுத்துள்ளேன்:இதை படித்தால் நீங்களும் மகிழ்வீர்கள்
    quote
    “சிதம்பரம் அறிக்கை வேடிக்கையானது என ஜெட்லி பாய்ச்சல்”
    “”நிலக்கரி சுரங்க ஊழலில், அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டம் இல்லை என, சிதம்பரம் கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிலக்கரி சுரங்க ஒப்பந்தம், கையெழுத்தான மறுகணமே, முழு உரிமையும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கே உரியதாகிவிடும். மக்களை ஏமாற்றும் விதமாக, பொய்யான வலுவற்ற வாதங்களை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வைக்கிறது; அதை ஏற்க முடியாது,” என, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    நிலக்கரி சுரங்கங்களை ஏலத்திற்கு விடாமல், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதன் விளைவாக, அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையால், கடந்த ஒரு வாரமாக, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை ஸ்தம்பிக்க வைத்துவிட்டன. இதையடுத்து, நேற்று முன்தினம், டில்லியில் நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம், “”நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், எந்தவொரு நஷ்டமும் ஏற்படவில்லை. நிலக்கரி இன்னும் மண்ணிலேயே தான் இருக்கிறது. தோண்டி எடுக்கப்படாத நிலக்கரியை, கணக்கில் வைத்து நஷ்டம் என்று கூறுவது பொறுத்தமற்றது,” என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களைச் சந்தித்த, பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது:
    முட்டாளாக்குவதா?
    “நிலக்கரி மண்ணிலேயே தான் உள்ளது. வெட்டி எடுக்கப்படவே இல்லை. எனவே, ஒரு பைசா கூட அரசுக்கு நஷ்டம் இல்லை’ என, நிதியமைச்சர் கூறுகிறார். நிலக்கரி சுரங்கங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த, ஒப்பந்தம் போட்ட மறுநிமிடமே, அந்த சுரங்கத்தின் மீதான உரிமையை அரசாங்கம் இழந்து விடுகிறது. எந்த சம்பந்தமும் அரசாங்கத்திற்கு இல்லை. சுரங்கத்தின் ஒட்டு மொத்த உரிமையாளராக தனியார் நிறுவனம் ஆகிவிடுகிறது. இந்த ரீதியில், 142 நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்களை பெற்றுள்ளன. அப்படியெனில், நிதியமைச்சரின் கூற்றுப்படியே வைத்து பார்த்தாலும், அரசாங்கத்திற்கு வர வேண்டிய, உத்தேசமான வருமானம் வராமல் கிடக்கிறது என்பது தானே நிஜம். இந்த வருமானம், அரசாங்கத்திற்கு வரவில்லை எனில், அது நஷ்டம் இல்லையா. ஆக, “தோண்டாத சுரங்கத்தை கணக்கு காட்டி நஷ்டம் அடைந்து விட்டதாகக் கூறுவது தவறு’ என, அரசு சொல்லுமேயானால், அது முழுக்க முழுக்க ஏமாற்று நாடகம்; மக்களை முட்டாளாக்கும் செயல்.
    சொத்து மதிப்பு கூடும்:
    பார்லிமென்டில், இதற்காக விவாதம் நடத்த வேண்டுமெனக் கூறுவதும், ஏமாற்று வேலை. எப்போது அரசாங்கத்தின் கையில் இருந்த சுரங்கம், தனியார் நிறுவனத்திற்கு போய் விடுகிறதோ, அப்போதிருந்தே அந்த நிறுவனத்தின்சொத்து மதிப்புகள் கூடிவிடும். அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, பல மடங்கு அதிகரிக்கும். இதெல்லாமே, அந்த நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் கிடைத்ததால் மட்டுமே நடக்கின்றன. இவையெல்லாம், சிதம்பரம் போன்றவர்களுக்கு தெரியாதது அல்ல. தெரிந்தும் தெரியாதது போல மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இந்த ஏமாற்று வித்தைக்கு பா.ஜ., துணை போகாது. நிலக்கரி ஊழல் விவகாரத்தில், அரசை எதிர்ப்பதில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. ஒற்றுமையாகவே இருக்கிறோம். அதுமட்டுமல்ல. அரசாங்கத்தின் பணத்தைக் கொள்ளையடிக்கும், பேரம் பேசும் வேலைகளும் நடக்கின்றன. இவை அனைத்தையும், எந்த கட்சியுமே ஆதரிக்கவில்லை. எல்லா கட்சிகளுமே, இவ்விஷயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை எல்லா கட்சிகளுமே உணர்ந்தும் உள்ளன.
    கபட நாடகம்:
    இவ்விஷயத்தில், ரொம்பவும் பாதிக்கப்படப் போகும் கட்சிகள் என்று பார்த்தால், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி தான். காரணம், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அரசின் கபட நாடகம் எடுபடாது. மக்களின் வரிப்பணம், கொள்ளை போவதை எதிர்த்து நிற்க வேண்டிய கடமை, அந்த கட்சிகளுக்கும் உள்ளது. அந்த கடமையை நிறைவேற்றும் பொறுப்பை, அந்த கட்சிகள் தட்டிக் கழித்துவிட முடியாது. பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் தான், ஏல முறையை தடுத்தது என, விமர்சனம் வைக்கப்படுகிறது. பெரிய கனிம வளமான நிலக்கரி என்பது, மத்திய அரசுக்கு சொந்தமானது. இதை ஏன் மத்திய அரசு உணரவில்லை. அப்படியே எடுத்துக் கொண்டாலும் கூட, ஆறு ஆண்டுகள் வரைக்குமா காலம் கடத்துவது. பிரச்னையை திசை திருப்பப் பார்க்கும், இது போன்ற வாதங்களை யாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
    கொத்து சாவியை பாதுகாப்பாரா?:
    ஜெட்லி கூறியதாவது: அமைச்சர் சிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் இருந்து, திருட்டுத்தனமாக ஒருவர் பணத்தை எடுத்து, தன் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறார் என, வைத்துக் கொள்வோம். அந்த பணத்தை அந்த ஆள் பயன்படுத்தாமல், அப்படியே வைத்திருக்கிறார் என்பதற்காகவே, சிதம்பரத்திற்கு நஷ்டமில்லை என்று ஆகிவிடுமா. எப்போது சிதம்பரத்தின் கணக்கில் இருந்து, பணம் கள்ளத்தனமாக எடுக்கப்பட்டதோ, அப்போதே சிதம்பரத்தின் பணம் களவு போனது போனது தானே. இந்த அடிப்படை உண்மை கூட புரியாமல் உள்ளார் சிதம்பரம். இவரெல்லாம் எப்படி, நாட்டு மக்களின் ஒட்டு மொத்த வரிப்பணத்தையே கட்டிக் காக்கும் காவலனாக இருக்கப்போகிறார் என்பது புரியவில்லை. இவ்வாறு ஜெட்லி கூறினார்.
    – நமது டில்லி நிருபர் –
    unquote
    நாம் எடுக்கவேண்டிய உறுதிமொழி..
    “ஏன் ஓட்டை கழுதைக்கு ஒட்டுப்போட்டாலும்,காங்கிரசிற்கு போடமாட்டேன்.”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.