திருமதி சோனியா super P.M. என்பது சரியா ? உண்மையை உறுதி செய்யும் RTI தகவல்கள் !

பொதுவாக, மன்மோகன் சிங் பிரதமர் ஆனதிலிருந்தே –
பிரதமருக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, உண்மை
அதிகாரங்கள் அனைத்தும் திருமதி சோனியா காந்தியிடம்
சென்று விட்டபடியால் அவர் தான் super P.M. என்று
பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் -ஏன் ஆளும்கட்சியும்
கூடத்தான் – கூறி வருகின்றன.

வெளியிலிருந்து பார்க்கும் நம் அனைவருக்குமே மன்மோகன்
சிங் ஒரு செயல்படாத சிங்கம் என்றும் ஆட்சியானாலும் சரி,
கட்சியானாலும் சரி – சகல அதிகாரங்களுக்கும் சொந்தமானவர்
அன்னை ஒருவரே என்பது தெரியும் தான். ஆனால் இதை
உறுதிப்படுத்த  ஆவணங்கள் எதாவது உண்டா ?

இப்போது கிடைத்து விட்டது. எகனாமிக்ஸ் டைம்ஸ் ஆங்கில
இதழ், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று
வெளியிட்டிருக்கும் சில தகவல்கள் -திருமதி சோனியா
super P.M.தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
அன்றாட அரசாங்க அலுவல்களிலும், கேபினட் முடிவுகளிலும்
கூட – பிரதமரையும், மற்ற அமைச்சர்களையும் வெளியில்
இருந்து கொண்டே – அரசாங்கத்தில் எந்த பதவியும்
வகிக்காமலே – தான் சொல்கின்றபடியே ஆட வைக்கும்
அவரது அசாத்திய திறமையும் வழக்கமும் –
இந்த தகவல்களின் மூலம் வெளிப்படுகிறது.

NAC (National Advisory Council) என்பது
திருமதி சோனியா காந்தி, தனக்கு வேண்டிய சிலரை  
ஆலோசகர்களாக சேர்த்துக் கொண்டு அவர்கள்
துணையோடு, தான் நினைக்கும் விஷயங்களை,
சட்ட வடிவத்தில் கொண்டு வரவும், மத்திய அரசை
(பிரதமரும், மத்திய அமைச்சர்களும் உட்பட )
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உருவாக்கியிருக்கும்
ஒரு கிச்சன் கேபினட்.

கடந்த இரண்டு வருடங்களில் (2010 மற்றும் 2011)
திருமதி சோனியா காந்தி பிரதமர் ம.மோ.சிங்கிற்கு
25 கடிதங்களும், மற்ற அமைச்சர்களுக்கு (நேரடியாக்)
17 கடிதங்களும் எழுதி இருப்பது இந்த தகவல்களின்
மூலம் தெரிய வந்துள்ளது.
அத்தனையும் – அரசாங்கம் எந்த வழியில் செல்ல வேண்டும்-
எந்தெந்த சட்டங்களை இயற்ற வேண்டும் என்பது குறித்தவை.
பல மாதிரி மசோதாக்களும் (சட்ட வடிவங்கள்) அவரால்
தயாரித்து அனுப்பப்பட்டு, இத்தனை நாட்களுக்குள்
அவை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் (?)
கூறும் குறிப்பு நோட்ஸ்களுடன் அனுப்பப்பட்டு உள்ளன.

இந்த எதிர்பார்ப்புகளை(!) புரிந்து கொள்ளாததால்
ஒரு முட்டாள் மந்திரி பதவியை விட்டு தூக்கி எறியப்பட்டது
இப்போது தெரிய வந்துள்ளது.

திருமதி சோனியாவின் NACயிடமிருந்து வரும் கடிதங்களில் –

“ஆலோசனை கூறப்படுகிறது “ என்றால்
“உத்திரவு இடப்படுகிறது” என்றும்,

“எதிர்பார்க்கப்படுகிறது” என்றால்
“உடனே செய்ய வேண்டும்”  
என்றும் புரிந்து கொள்ளாத ஒருவர் எப்படி
மத்திய மந்திரியாக நீடிக்க முடியும் ?

பிப்ரவரி 2011ல் மத்திய அரசின் – மலைவாசிகள்
சம்பந்தப்பட்ட துறைக்கு (Minister for Tribal
Affairs ) அமைச்சராக இருந்த
காந்திலால் புரியா- விற்கு
திருமதி சோனியாவிடமிருந்து ஒரு கடிதம் (நேரிடையாக
தான் ) வந்திருக்கிறது. Forest Rights Act,
என்கிற சட்டத்திற்கு, இன்னென்ன மாதிரி
சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறி.

அப்பாவி மனிதர் – இந்த மாதிரி சட்டதிருத்தம் எல்லாம்
செய்ய தனக்கு அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ என்கிற
தயக்கத்திலேயே இரண்டு மாதங்களை ஓட்டி விட்டார்.

இன்னும் ஏன் சட்டதிருத்தம் வரவில்லை என்று கேட்டு
NAC Secretariate -லிருந்து -இன்னும் ஒரு
ரிமைண்டர் வந்திருக்கிறது. தன் இலாகா
சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.
அவர்கள் – இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல்
இந்த சட்ட திருத்தங்களைக் கொண்டு வருவதில் உள்ள
சில சிக்கல்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.
அமைச்சரும் உடனடியாக இந்த திருத்தங்களை கொண்டு
வருவது சிரமம் என்று NACக்கு பதில் எழுதி விட்டார்.
பாவம் இந்தக் கடிதம் தான் தன் அரசியல் வாழ்வுக்கு
எமனாகப் போகிறது  என்பதை உணராமலே …!  

விளைவு ….?

அடுத்த மாதமே நிகழ்ந்த மந்திரிசபை மாற்றத்தில்,
முன்கூட்டியே  தகவல் எதுவும் கொடுக்கப்படாமலே –
அமைச்சர் காந்திலால் புரியா- ஆர்டினரி புரியா
ஆக்கப்பட்டு விட்டார் !

அவர் இடத்தில் – சொன்னதைச் செய்யும் மந்திரி வேலைக்கு
கிஷோர் சந்த்ர தியோ என்பவர் நியமிக்கப்பட்டு,
ஒரு மாதத்திற்குள் குறிப்பிட்ட சட்ட திருத்த மசோதா
பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது !

இப்பேற்பட்ட super boss-க்கு கீழே  
8 ஆண்டுகளாக ஒருவர் பிரதமர் பதவியில்
தொடர்கிறார் என்றால்
அவர் எப்பேற்பட்ட ஆளாக இருக்க வேண்டும் ?
அவரைப் போய் “அப்பாவி” “ஒன்றும் தெரியாதவர்”
என்று சொல்லலாமா ?

இங்கு விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் கேட்கிற
மாதிரி ஒரு கேள்வி வருகிறது – முடிந்தால் பதில்
சொல்லுங்கள் பார்க்கலாம் !

இப்பேற்பட்ட boss-க்கு கீழே 8 ஆண்டுகளாகத்
தொடர்ந்து தாக்குப் பிடித்து பணி புரியும் மன்மோகன்
சிங் கில்லாடியா ?

அல்லது –

தான் சொன்னபடி எல்லாம் தலையாட்டும் ஒரு பிரதமரை
கண்டு பிடித்து தொடர்ந்து 8 ஆண்டுகளாக அவரைத்
தப்பி ஓட விடாமல், தக்க வைத்துக்கொண்டிருக்கும்
திருமதி சோனியா கெட்டிக்காரரா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to திருமதி சோனியா super P.M. என்பது சரியா ? உண்மையை உறுதி செய்யும் RTI தகவல்கள் !

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    விக்கிரமாதித்தன் சொல்கிறான்:

    கேளாய் வேதாளமே!

    மன்மோகன் சிங் ஒரு அரசியல்வாதியே அல்ல ;இந்த நிமிடம் பிரதமர் பதவி இழந்தாலும் அவர் 120 கோடி இந்தியர்களில் தானும் ஒருவராக கலந்து மக்கள் மனதிலிருந்து மறைந்தும் விடுவார்.எனவே அவர் செய்வது கில்லாடித்தனமே இல்லை.

    சோனியா இந்திய நாட்டு பிரஜையே இல்லை.ஏதேனும் ஆபத்து என்றால், அடுத்த நொடி, குடும்பம் குட்டி, மூட்டை முடிச்சோடு, நாட்டை விட்டே ஓடி விடுவார்.
    எனவே அவர் செய்வதும் கில்லாடித்தனமே இல்லை.

    ஆனால் இந்த இரண்டு காகிதப்புலிகளை முன்னிருத்தி,சரியாக பயன்படுத்தி,ஒரு பத்து ஆண்டுகள் எல்லா துறையிலும் கொள்ளை அடித்து தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பல தலை முறைகளுக்கு சொத்து சேர்த்து,தன் குட்டெல்லாம் வெளிப்பட்டு ,மாநிலதேர்தலில் மாபெரும் தோல்வி அடைந்த பிறகும்,இந்த புலிகளை மீண்டும் வரும் மத்திய தேர்தலில் ஜெயிக்க வைக்க திட்டமிடும் அந்த முதியவனே….

    கில்லாடிகளுக்கெல்லாம் கில்லாடி..

  2. siva's avatar siva சொல்கிறார்:

    Thiru Ganpat avargale
    Meendum ungal pinnottam oru azhamana sinthanai udayathu endru nirubithu vitteergal.
    Aanal innondrai ingu pathivu seithaga vendum. Avar than namathu chettiyar avargal vilayadum vilayattu. Asthivaramey marinalum ivar sambathippathai yaralum nirutha mudiyathu. Yenenil ivar irukkum idamey asthivarathirku keezhey than.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மிக்க நன்றி திரு.சிவா.
    நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
    சோனியா மற்றும் மன்மோகன் எனும் இரண்டு விறகை எரியவிட்டு,
    சிதம்பரம்,கருணா,சரத்பவார்,பிரணாப்,மமதா,முலாயம்,ஆகியோர்
    முதல் வட்டத்திலும்,முகேஷ் அம்பானி,அனில் அம்பானி,ரத்தன் டாட்டா,குமாரமங்கலம் பிர்லா,சுனில் மிட்டல்,KP சிங் ஆகியோர் இரண்டாவது வட்டத்திலும்,குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.ராகுல்,பிரியங்கா,ராபர்ட் வாத்ரா ஆகியோர் சமையல் செய்துகொண்டிருக்கின்றனர்.

  4. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    அருமையான இரு கேள்விகளை கேட்டுள்ளார் நமது கா மை ஐயா. எப்போதும் போல் மதி நுட்பமும் சொல் நுட்பமும் ஒருங்கே சேர்த்து சிந்திக்க வைத்துள்ளார் நண்பர் கண்பத்.

    இவர்கள் அடியொற்றி நானும் சிந்திக்க முற்படுகிறேன். பொதுவாக எந்த சுயநல நோக்கமும் இன்றி யாரும் அரசியல் பண்ணுவது கிடையாது. உதாரணமாக முதியவர் இழந்துவிட்ட தமிழர் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் அதே வேளை அன்னையின் சினத்துக்கும் ஆட் பட கூடாது. அதனால் ஈழ தமிழர் வாழ்வுரிமை பற்றி பேசுகிறார். ஆனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தோ மனித உரிமைகள் மீறல் குறித்தோ வாயே திறக்க மாட்டார். இவர் மட்டுமல்ல திருமாவளவனோ கிருஷ்ணசாமியோ அவர்களுக்கு அடுத்த கட்ட தலைவர்களை பிடித்து தொங்குவதும், ஜெயலலிதா நரேந்திர மோடியை சாகோதரராக ஏற்று புழங்காகிதம் அடைவதும் ‘சமயத்துக்கு உதவும்’ எனும் சுய நலமே. அதே வகையில் ராஜீவ் காந்தி போபர்ஸில் ஆரம்பித்து குவிக்க ஆரம்பித்த கொள்ளை சொத்துக்களை பாதுகாக்கவும் தொடர்ந்து பன்மடங்காக்குவதர்க்கும் குடும்ப உறப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு முகம் கொடுக்க சுத்தமான மண்ணின் மைந்தர் வேண்டும். அப்படி முன் நிறுத்த ஒரு மண்ணாங்கட்டி சிங் கிடைத்திருப்பது அவர் பாக்கியமே. அதே வேளை அவரை திறமையாக பயன் படுத்துவதால் அன்னை கில்லாடியே.

    இப்போது எனது ஐயப்பாடு என்ன வென்றால், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற படிப்பாளி; ஐ நா வர்த்தக மாநாட்டில் பணி புரிந்தவர். ரிசேர்வ் பாங் கவர்னராக இருந்தவர். மேலும் பல கூறிக்கொண்டே போகலாம். இப்படி பட்டவருக்கு ஏன் இந்த நாய் பொழைப்பு? இன்று ஒரு சிறு பிள்ளை கூட இவர் கையாலாகதவர் என்று சொல்லும் அளவுக்கு பிழைப்பு நாறிபோயும், இன்னும் தன்மானம் இழந்து பிரதமராக இவரை நீடிக்க வைத்திருப்பது எது? அப்படி என்ன தான் இவர் குடும்பி அன்னை கையில் சிக்கி உள்ளது? அப்படி என்னதான் இவர் அன்னைக்கு கடமை பட்டிருக்கிறார்? எங்கயோ இடிக்கிற மாதிரி இல்லை? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

    • ரமேஷ்'s avatar ரமேஷ் சொல்கிறார்:

      எழில் அவர்கள் சொல்வது மிகவும் சரி.
      பல சமயங்களில்அந்த சிங் திரு திருவென்று முழிப்பதைப்
      பார்த்தால் ஏதோ வெளியில் சொல்ல முடியாத தப்பைப்
      பண்ணி விட்டு மாட்டிக்கொண்டிருப்பதைப் போல் தான்
      தோன்றுகிறது. அப்படி என்ன தான் செய்திருப்பார் ?
      அய்யோ – யாராவது கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்.
      கண்பத் சார் நீங்களாவது எதாவது சொல்லுங்களேன்.

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        நண்பர்கள் எழிலிற்கும்,ரமேஷிற்கும் என் அன்பும் நன்றியும்…

        மிகவும் சிக்கலான புதிரை முன் வைத்துள்ளீர்கள்.

        நானும் சிறிது சிந்திக்கிறேன்.

        மன்மோகன் சிங் அறிவிலும் நேர்மையிலும் யாருக்கும் சந்தேகம் வராது.
        ஆனாலும் அவர் நடந்துகொள்ளும் விதம், இந்த இரண்டு குணங்களையும் சந்தேகிக்க வைக்கிறது.

        ஒருவேளை இப்படி இருந்தால்???

        2004 ஆம் ஆண்டு காங்கிரசிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.மன்மோகன் சிங் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
        சோனியா பிரதமராகி விடுவார்.தானே நிதிமந்திரி.
        முன்பு நரசிம்மராவ் நடந்துகொண்டதைப்போல இவரும்
        தனக்கு முழு சுதந்திரம் கொடுத்து தன்னை பாதுகாப்பார்.
        தான் எந்தவித இடையூறுமின்றி தன் நவீன பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.

        ஆனால் சோனியாவின் திட்டமோ வேறு.அவர் மன்மோகனையே பிரதமராக இருக்கும்படி பணிக்கிறார்.அப்பொழுதும் இவர் நம்பிக்கை இழக்கவில்லை சோனியாவின் சுய ரூபம் அவருக்கு தெரியாது.

        மன்மோகன் பிரதமராகி சில மாதங்களில்,எல்லா அமைச்சர்களும்,கூட்டணி கட்சித்தலைவர்களும் சோனியாவை உண்மையான தலைவியாக ஏற்று தங்கள் மனம் போனபடி ஊழலில் ஈடுபடுகின்றனர்.அதிர்ச்சியடைந்த மன்மோகன் இதை சோனியா கவனத்திற்கு கொண்டு செல்ல, அதைவிட பெரிய அதிர்ச்சி!! இதையெல்லாம் “கண்டுகொள்ளாதீர்கள்” என சோனியா ஆணையிடுகிறார்.

        தான் எத்தனை பெரிய சதியில் சிக்கி உள்ளோம் என இவருக்குப்புரிகிறது.
        இதை நேரடியாக எதிர்க்க இவரிடம் ஆற்றலும் சக்தியும் இல்லை.
        மெளனமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டால்,அதை நிரப்ப பிரணாபோ,சிதம்பரமோ காத்துள்ளனர்.ஊழல முன்னை விட தீவிரமாக வளரும்.

        உடம்பில் சக்தியும் இல்லை.வில் அம்பு,துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் இல்லை.கையில் சிறிது வெண்ணை மட்டும் உள்ளது கொக்கையும் பிடிக்கவேண்டும் என்ற ஒரு வேடனின் பரிதாப நிலைமைக்கு தள்ளப்படுகிறார் மன்மோகன். திட்டமிட்டு செயல்படுகிறார்.

        சுதந்திர இந்தியாவின் மிக பெரிய ஊழலின் அத்தனை ஆதாரமும் சுப்பிரமணிய சாமி எனும் ஒரு முன்னாள் MP/ தைரியசாலியிடம் “எப்படியோ” சிக்குகிறது.மனுஷன் புகுந்து விளையாடுகிறார்.ஏற்கனவே மன்மோகன் டம்மி என அறியப்பட்டதால் அத்தனை அழுத்தமும் சோனியாவிற்கே போகிறது.சம்பந்தப்பட்ட அமைச்சர் கைது செய்யப்படுகிறார்.காங்கிரஸ் சந்தி சிரிக்கிறது.

        இது அடங்குவதற்குள் நிலக்கரி ஊழல தலையெடுக்கிறது.மக்களுக்கு காங் மேல் உள்ள வெறுப்பு கூடுகிறது.எல்லா குற்றசாட்டுகளுக்கும்
        “திரு திரு” என முழிக்கும் பிரதமரைப்பார்த்து இன்னும் வெறி ஏற்படுகிறது.சோனியாவிற்கோ திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.

        வேடன் ஒருவழியாக கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அதை கிட்டத்தட்ட பிடித்தும் விட்டான் என்றே தோன்றுகிறது.

        பின் குறிப்பு:இது அருமையான கருத்து என்றோ,அல்லது இதை விட அபத்தம் இருக்க முடியாது என்றோ எழுதப்போகும் இரு கட்சி நண்பர்களுக்கும் என் advance மனமார்ந்த நன்றி.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்பர் கண்பத்,

          இந்த மாதிரி வெவ்வெறு கோணங்களில் வித்தியாசமான
          கருத்துக்கள் இங்கு வெளிவர வேண்டும் என்பது தான்
          என் விருப்பம். மக்கள் திறந்த மனதோடு எல்லா
          கருத்துக்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
          அப்போது தான் அவர்களுக்கு உண்மை எதுவாக இருக்கும்
          என்பது புரிய வரும். தங்களுக்கு புரியும் உண்மையான
          செய்திகளை அவர்கள் அதிக பட்ச நண்பர்களிடையே
          எடுத்துச் செல்ல வேண்டும். public opinion என்பது
          இப்படி உருவாவது தான்.

          நன்றி கண்பத். உங்கள் கருத்துக்களை எப்போதும்
          இதே போல் முழு சுதந்திரத்துடன் இங்கு எழுதுங்கள்.

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

        • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

          அருமையான சிந்தனை நண்பர் கண்பத். ஒருவரின் சுய விருப்பு வெறுப்புகேட்ப கருத்துகள் எழலாமே தவிர நீங்கள் கூறியதில் ‘logical flaw ‘ சுத்தமாக கிடையாது. நீங்கள் கூறியது போல் இருக்குமாயின் உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி.

          எனது பயம் எல்லாம் ஒரு வேளை அன்னைக்கும் சிங்க்கும் ஒரு எஜமானன் இருந்து இவர்கள் குடும்பி அவன் கையில் இருந்தால்… பொருளாதார தாரலமயமாக்கள், அந்நிய முதலீடு, ஆயுத கொளவனவு போன்றவை எல்லாம் அவன் சொற்படி இவர்கள் நிறை வேற்றும கைபொம்மைகளாக இருப்பார்களானால்…

          உங்கள் பின்குறிப்பு தான் எனது பின் குறிப்பும்!

          • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

            “ஒருவரின் சுய விருப்பு வெறுப்புகேட்ப…” என்று மேலே இருப்பதை “படிப்போரின் சுய விருப்பு வெறுப்புகேட்ப…” என்று மாற்றி படிக்கவும்.

          • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

            நன்றி நண்பர் எழில்..மிக ஆபத்தான ,கேவலமான, தேசவிரோதமான முன்னோடியை காங்,உருவாக்கி உள்ளது.எங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு எங்களை ஆட்சியில் அமர்த்தினால் நீங்கள் செய்யும் எந்த குற்றங்களையும் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம் என்பதுதான் அது.இதற்குபெயர்தான் காங்.brand கூட்டணி தர்மம்.
            இதற்கு ஏற்கனவே கருணா,பவார்,முலாயம்,மமதா ஆகியோர் கூட்டு சேர்ந்தாய் விட்டது.கூடிய விரைவில் நிதீஷ் மற்றும் ஜகன்மோகன் ரெட்டியையும் விலைக்கு வாங்கிவிடுவர்.பிஜேபி இப்போழுதிலிருந்தே முயன்றால்தான் இந்த ராட்சச கூட்டணியை வெல்ல முடியும்.

  5. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    பல கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் NAC-க்கு CMP
    (Common Minimum Programme) என்றொரு அக்கா உண்டு.
    இவற்றுக்கெல்லாம் தலைமை அன்னையார்.
    ஆட்சிக்குத் தலைமை சிங்.

    இந்த ஆட்சியில் திட்டங்கள் எல்லாம் CMP-க்கு (அதாவது
    இதனால் இவருக்கு அதனால் அவருக்கு இவற்றால் நமக்கு
    என்கிற பரந்த விரிந்த நோக்கத்திற்கு) உட்பட்டுதான்
    தீட்டப்படுகின்றன. இத்திட்டங்க்களை நடைமுறை படுத்தவும்,
    தனிப்பட்ட அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்ளவும்தான்
    இந்த NAC.

    தனிப்பட்ட அபிலஷைகள் ஆனதால் அதற்கு கொஞ்சம்
    தீவிரம் தேவைப்படுகிறது. இப்போதைய அமைப்பில்,
    தீவிரத்தை அன்னையாரைத் தவிர வேறு யாராலும் செலுத்த
    முடியாது.

    இதை அக்கட்சியின் முன்னணி தலைவர்களும். கூட்டணியின்
    மூத்த தலைவர்களும், “அன்னையின் ஆலோசனையின் பேரிலும்,
    வழிகாட்டுதலின்படியும் ஆட்சி நடைபெறுவதாக” பெரிய
    மனதுடன் பலமுறை பல சந்தர்ப்பங்களில் ஒத்துக் கொண்டு
    இருக்கிறார்கள்.

    தனது கேபினெட்டில் யார் மந்திரியாக இருக்க வேண்டும்
    என்பதையோ, இந்த கட்சிக்கு இன்ன துறை என்பதையோ
    கூட இன்றைய பிரதமரால் தீர்மானிக்க முடியாது.
    இதெல்லாம் உலகறிந்த ரகஸ்யம்.

    எனவே தான் மாநில தலைவர்கள் ஆனாலும், வெளி நாட்டு
    பிரதிநிதிகள் ஆனாலும், டெல்லிக்குப் போனால் அன்னையை
    சந்திப்பதையும், கோரிக்கையை அவரிடம் சமர்பிப்பதையும்
    வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவரும், சுயமரியாதை
    பாசறையில் பயின்று பட்டம் பெற்றரும் கூட, டெல்லி போனால்
    அன்னையை சந்தித்து “கை”க்கூப்பிவிட்டு வரத் தவறுவதில்லை.

  6. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் எனவே அவர் பிரதமர் ஆவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால்
    பிரதமர் ஆகாமலே பிரதமர் ஆக செயல் படுவதற்கு தோதான நபர் எதை சொன்னாலும் கேட்டு செயல் பட தகுதியானவர் மன்மோகன் சிங் மட்டுமே. சிதம்பரத்துக்கு முக்கிய துறைகள் கொடுப்பதற்கு காரணம் ராஜீவ் காந்திக்கு நண்பராகவும் அவர்காலத்தில் அமைச்சராகவும் இருந்தவர். மேலும் தனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுப்பதாலும் அவரை தனது டீமில் சேர்த்துள்ளார். ராஜாவின் மீதான வழக்கு தொடர்பாக சிதம்பரவும் உள்ளே போயிருக்க வேண்டும். ஆனால் போகமாட்டார். ஏனென்றால் சோனியாவின் தயவு உள்ளது. போபார்ஸ் ஊழல், வெளிநாட்டில் கருப்புப்பணம் பதுக்கல் என்று என்னதான் கூச்சலிட்டாலும் அவரை யாராலும்
    ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் மந்திரி சபையில் இருக்கும் அனைவரும் கட்சி பேதமில்லாமல் ஊழல்வாதிகள். காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி நடந்து விட்டால்
    அனைவரும் வீட்டுக்கு போக வேண்டும். அடுத்த தேர்தலில் வருவோம் என யாருக்கும் நம்பிக்கையில்லை.
    இந்த சூட்சுமத்தை தெரிந்து கூட்டணி கட்சிக்காரர்கள் உட்பட அனைவரையும் அடுத்த தேர்தல் வரை ஆட்டுவிக்கும் சர்வ வல்லமை படைத்தவர் சோனியா காந்தி மட்டுமே என்பதை எதிர் காலம் நிரூபிக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.