எத்தனை பெரியவர் நீங்கள் ? – இதைப் பார்த்து விட்டு சொல்லுங்கள் பார்ப்போம்… !!

எத்தனை பெரியவர் நீங்கள் ?
-இதைப் பார்த்து விட்டு சொல்லுங்கள் பார்ப்போம்… !!

இந்த முதல்  இரண்டு படங்களில்  நமது சூரிய குடும்பத்தில் இருக்கும்
ஒன்பது கிரகங்களை  அளவை அடிப்படையாகக் கொண்டு
வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் படத்தில் –     பூமியை முதன்மையப்படுத்தி,   அதை விடச்சிறிய
வீனஸ்,மார்ஸ், மெர்குரி, ப்ளூட்டோ ஆகிய கிரகங்களின்
அளவு துல்லியமாகக் காட்டப்படுகிறது.

அடுத்து இந்த 2வது படத்தில் பூமி – சூரிய குடும்பத்திலுள்ள –
அதைவிட பெரிய கிரகங்களான,
ஜூபிடர், சாடர்ன்,யுரேனஸ்  மற்றும் நெப்டியூன் கிரகங்களுடன்
ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது. இந்த கிரகங்களுடன் ஒப்பிடும்போது
பூமி எவ்வளவு சிறியதாகி விட்டது என்பதை உணரலாம்.
பூமியை விடப் பெரிய கிரகமான ஜூபிடர் – 1400 பூமிகளைக்
கொள்ளும் அளவிற்கு பெரியதாம்.


அடுத்து இந்த 3வது படத்தில் –

சூரியனை மையமாக வைத்து, அதைவிடச்சிறிய
கிரகங்களான ஜூபிடர், சாடர்ன்,யுரேனஸ்,நெப்டியூன் ஆகியவை
சூரியனுடன் ஒப்பிடும்போது எவ்வளவு சிறியவை ஆகிவிட்டன
என்பதைக் காட்டுகிறது. பூமியுடன் ஒப்பிடும்போது அவ்வளவு
பெரியதாக தோன்றிய ஜூபிடர் இங்கே எப்படியாகி விட்டது !
சூரியனுக்குள் 980 ஜூபிடர்கள்  கொள்ளுமாம் !

அப்படியானால் சூரியனில் எவ்வளவு பூமி உருண்டைகள்
கொள்ளும் ?
சிம்பிள் – 1400 x 980 = 13,72,000
இங்கிருந்து பார்த்தால் ஆரஞ்சு பழம் போல் தோன்றுகிற
சூரியனில் 13,72,000 பூமிகள் கொள்ளும் என்றால் –
சூரியன் பூமியை விட எவ்வளவு பெரியது ?

(அடுத்த படத்தில் – சூரியனுக்கே ஜுஜுபி -)

அடுத்து இந்த 4வது படத்தில் –

இங்கு நாம் பார்ப்பது சூரிய குடும்பத்தைத் தாண்டி,
நமக்குப் பரிச்சயம் இல்லாத –  சூரியனை விட பலமடங்கு
பெரிய கிரகங்களான –
ஆர்க்டரஸ்,  போலக்ஸ், ஸர்டஸ்  ஆகியவை.
இங்கு சூரியனே பொடிசாகி விட்டதைப் பாருங்கள் !
பூமி என்ன   பூமியை விட 1400 மடங்கு பெரிய ஜுபிடருக்கு
கீழே உள்ள எல்லா கிரகங்களும் காணாமல் போய் விட்டன !       
அந்த அளவிற்கு compare பண்ண முடியாத நிலை.

அடுத்து  இந்த 5வது படத்தில் –

ஆண்டேர்ஸ், பெடல்க்யூஸ், அல்டெபரான், ரிஜெல்,
– இதை எல்லாம் நாம் எப்போதாவது கேள்விப்பட்டது
உண்டா ?

சூரியனுக்கு அப்பால் இன்னும் இவ்வளவு கிரகங்கள் !
இந்த படத்தில் சூரியனுடைய அளவு ஒரு புள்ளி அளவே தான்!

இப்போது  3வது படத்தில்  சூரியனுடைய அளவையும்
இந்த படத்தில் சூரியனுடைய நிலையையும் பாருங்கள்.
சூரியனே புள்ளியளவு தான் என்றால் – அதைவிட சிறிய
கிரகங்கள்  எப்படி இருக்கும் …..?

மேலே மிகப்பெரியதாகக் காணப்படும் ஆண்டேர்ஸ் –
ஒளிரக்கூடிய நட்சத்திரங்களில் 15வது.

இதுவே பூமியிலிருந்து 1000 ஒளி வருடங்களுக்கு
அப்பால்  இருக்கிறது !
அதாவது இதை விட   பெரியவை  இன்னும் 14 இருக்கின்றன !
அதற்கும் அப்பால் – எண்ண முடியாத அளவிற்கு
நட்சத்திரக் கூட்டங்கள்.

இத்தனைக்கு பிறகும் பிரபஞ்ச ரகசியம் என்ன என்று
நமக்குப் புரியவில்லை !

இப்போது சொல்லுங்கள் — பிரபஞ்ச ரகசியத்தைக்

கண்டு பிடித்து விட்டோம்
என்று சொல்லிக் கொள்ள நமக்குத் தகுதி இருக்கிறதா ?

மலைக்க வைக்கும் இந்த பிரபஞ்சத்தில் –
உங்கள் நிலை என்ன – நம் நிலை என்ன ?

நாம் எவ்வளவு பெரியவர்கள் ?
இத்தனையையும்  உருவாக்கிய –

அந்த சக்தி எவ்வளவு பெரியது ??? !!!

பின் குறிப்பு –

இது முற்றிலும் விஞ்ஞானபூர்வமான ஒரு தகவல்.
இந்த இடுகையை காணும் நண்பர்கள் தயவு செய்து,
அவர்கள் இல்லத்தில் உள்ள பெண்கள், சிறுவர்களுக்கும்
(சாதாரணமாக இத்தகைய தகவல்களை படிக்க
வாய்ப்பு இல்லாதவர்களுக்கு )
இதைக் காட்டி விளக்கவும். விண்வெளி பற்றி அவர்கள்
தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to எத்தனை பெரியவர் நீங்கள் ? – இதைப் பார்த்து விட்டு சொல்லுங்கள் பார்ப்போம்… !!

  1. K. Jayadev Das's avatar K. Jayadev Das சொல்கிறார்:

    :))

  2. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    இத்தனையையும் உருவாக்கிய சக்தி எது? நமது கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படாத, அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்ப்பட்ட சக்திதான் பராசக்தி. அதற்கும் மேல் இருப்பது ஆதி பராசக்தி. கருஞ்சட்டை பகுத்தறிவாளர்கள் கண்ணால் கண்டால்தான் நம்புவார்கள். அவர்களது தாத்தாவுக்கு தாத்தாவை கண்ணால் கண்டிருப்பார்களா? அப்படி யாரும் இல்லை என்று வாதம் செய்வார்களா? நமது பாரத சன்யாசிகள் சூரிய மற்றும் சந்திர கிரகணம் உட்பட அனைத்து விபரங்களையும் பஞ்சாங்கம் கணித்து கூறினால் ஏற்று கொள்ளமாட்டார்கள்.சித்தா மற்றும் ஆயுர்வேத விபரங்களையும், யோகா முறைகளையும் கூறினால் நம்ப மாட்டார்கள். ஆனால் அதையே அமெரிக்க விஞ்சானிகள் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்கள் உள்ளது. நம்பிக்கைதான் வாழ்க்கை.கடவுள் உண்டு முதாதையர்கள் சொன்னால் நம்பவேண்டும். அதனால் பல நன்மைகள் நமக்கும்
    நமது சந்ததியினருக்கும் ஏற்ப்படும்.

    • Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

      நண்பர் காவேரி மைந்தனுக்கு ,
      இரண்டு முறையாக தங்களது விமரிசனம் பகுதியின் முதல் பக்கத்தில் ஏதோ டெக்னிகல் எரர் போல் தெரிகிறது முழுமையாக படிக்க முடிவதில்லை. இரண்டாம் பக்கத்திலுள்ள இடுகையை பார்த்துதான் கருத்து கூற
      முடிகிறது.

  3. காரிகன்'s avatar காரிகன் சொல்கிறார்:

    ஒருமுறை என்சைக்ளோபீடியாவில் படித்தது. தெளிவான பதிவு.பாராட்டுக்கள். ஆனால் இதை சிலர் உடனே தங்கள் கடவுள் கருத்துக்களோடு சேர்த்துக்கொண்டு அறிவியலை ஒரே போடாக ஒன்றுமே இல்லை என்று கூச்சலிடும் அபாயம் இருக்கிறது. அறிவியலை அறிவியல் கண்ணோடு அணுகினால் நலமாக இருக்கும்.

  4. sany's avatar sany சொல்கிறார்:

    I explained this for my grandkids.Illustrated very well. samy

  5. tmnkin's avatar tmnkin சொல்கிறார்:

    definetly will share with other, it says how small we are, but thinking like bigger than anything

  6. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    என்னுடைய சிறு குழந்தைகளுக்கு தெரிந்தது எல்லாம் சூரிய குடும்பமும் அதன் கோள்களும் மட்டுமே. உங்கள் பதிவின் மூலம் அவர்களுக்கு ஒரு Astronomy பாடமே நடத்தி விட்டேன்.

    மிக்க நன்றி!

  7. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    இந்த பிரபஞ்சம் பற்றி, இது போன்ற பல்வேறு பூமிகள் பற்றி, பல சூரியன்கள் பற்றி, இந்த மகா பிரபஞ்சத்தின் ஆற்றல்கள் பற்றி எல்லாம் ஸ்ரீ அரவிந்த அன்னை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். (அவரது கேள்வி பதில்கள் தொகுப்பில் பார்க்கலாம்) ஆனால் நாம் தான் எல்லோரையும் விட பெரிய ஆள், புத்திசாலி ஆயிற்றே! கணினித் தொடர்பு கையில் இருப்பதால் மெத்தப் படித்த மேதாவி என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமே, ஸ்ரீ அன்னை சொல்லியிருப்பதை எல்லாம் ஏற்போமா?

    ”பிரபஞ்சமாவது, பூமியாவது வெங்காயம்! போய் புள்ளைக் குட்டிகளைப் படிக்க வைங்கய்யா” என்று வெற்று வசனம் பேசி விட்டு சினிமாவோ சீரியலோ, டாஸ்மாக்கிற்கோ போய் விடுவோம்.

    என்னத்தச் சொல்ல….

    இருந்தாலும் மனம் தளராமல் நல்ல விஷயங்களை, நல்ல செய்திகளை நம்பிக்கையோடு பகிரும் உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். வாழ்த்துக்கள் காவிரி மைந்தன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.