வெட்கமில்லை, மானமில்லை, சூடு இல்லை,
சொரணை இல்லை – ஒன்றுமே இல்லை …
தினமணி செய்தியிலிருந்து –
சென்னை, ஆக., 10 : இலங்கையில் வாடும் தமிழ் மக்களின்
காயங்களுக்கு மருந்திடும் வகையில் நடத்தப்படுவதாக திமுக தலைவர்
கருணாநிதி அறிவித்துள்ள டெசோ மாநாடு 12ம் தேதி சென்னையில்
நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கட்சிக் கொடிகளோ, கட்சித் தலைவர்களின்
புகைப்படமோ(?), கட்சி முழக்கமோ எதையும் எந்த கட்சித்
தொண்டர்களும் கொண்டு வரக் கூடாது என்று கருணாநிதி நேற்று
அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையையேப்
பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு டெசோ மாநாட்டு
அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
——————————————————————————————-
“ஈழம்” என்கிற வார்த்தையை டெசோ மாநாட்டில்
பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு கடிதம்
எழுதி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்விக்கு
கருணாநிதி பதில் –
“என்னிடம் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அவ்விதம்
எதுவும் கூறவில்லை. நீங்கள் தான் (செய்தியாளர்கள்)சொல்கிறீர்கள்”
( வெளியுறவுத்துறையிடமிருந்து தானே கடிதம் வந்தது
என்று பிற்பாடு சமாளிப்பதற்காகவோ ?)
——————————————–
நண்பர்களின் பார்வைக்கு –
மத்திய அரசின் வெளியுறவுத்துறையின் கடிதத்தின்
புகைப்பட நகல் – (வேறு இடத்தில் கிடைக்கப் பெற்றது )





காவிரிமைந்தன் அய்யா,
அவசரப்பட்டு இப்பவே டென்ஷன் ஆகாதீர்கள்.
நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் இந்த ஆள்
இன்னும் என்னவெல்லாம் உளறப் போகிறாரென்று
பார்த்து விட்டு ஒட்டு மொத்தமாக டென்ஷன் ஆகலாம்.
என்னைக்கு தலைவர் உண்மை.யைப் பேசினார்.இன்னைக்கு பேசுவதற்கு.
கொச்சி தேவதாஸ்.
கலைஞர் ஒரு முழுமையான அரசியல் வியாதி
அவரிடம் நான் எப்போதுமே நல்லதை எதிர்பார்ப்பதில்லை
ஆகையால் அதிகம் ஏமாறுவதில்லை
தெளீவூட்ட்ம் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஜேசுராஜ் எனும் முன்னாள் போராளி கூறியுள்ளதாக இணையத்தில் நான் படித்தது கீழே உள்ளது:
“ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக் கிடந்தேன்.
அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர்.
அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக ‘போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம்.
அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு.
ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!”
வெட்கம், மானம், சொரணை …இதையெல்லாம் வச்சுகிட்டு கட்சியை எப்படி நடத்தமுடியும்?
ஈழ தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் கருணாநிதி தமது தொண்டர்களுக்கு மாநாட்டுக்கு வரும்போது தலைவர்கள் படங்கள் கூடாது. .ஈழ ஆதரவு . முழக்கம் கூடாது என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆணைக்கு ஜால்ரா போட்டுள்ளார் . நீதிமன்றம போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்துள்ளது. மாநில அரசு மாநாட்டுக்கு அனுமதி வழங்காது. அல்லது கடுமையான நிபந்தனைகளுடன் அனுமக்கலாம். கருணாநிதி எதை எல்லாம் செய்ய கூடாது என தொண்டர்களுக்கு கூறியுள்ளாரோ அதையெல்லாம்அவரது அனுமதியின் பேரில் தொண்டர்கள் செய்வார்கள். மாநில அரசு தொண்டர்களை வரவிடாமல் தடுத்ததாக கருணாநிதி கூறுவார். மாநாட்டில் தமிழர்களை. ஈழ தமிழர்களை மூளை சலவை செய்யும் விதமாக பேசி ஏமாற்றுவார்கள். மாநில அரசோ சட்ட மீறல்
நடந்துள்ளதாக கைது நடவடிக்கை மேற்கொள்ளுவார்கள். கருணாநிதியோ டெசோ மாநாடு அமோக
வெற்றி என பேட்டியளித்து பத்திரிகையில் கேள்வி பதில் எழுதுவார். மொத்தத்தில் மத்திய அரசுடன்
சேர்ந்து கருணாநிதி தொண்டர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் இளிச்ச வாயர்களாக்குவார்கள்
தமிழர்கள் ஏமாந்து கொண்டேயிருப்பார்கள்.
“”டெசோ” என்ற இத்துப்போன விஷவித்தை விதைத்து,
செத்துப்போன ஈழத்துக்கு மாநாடு கட்டி
ஈழத்தமிழர் பெயரால்
தப்பிப்பிறந்த மகளுக்கும்,
தறுதலை மகன்களுக்கும்,
வாழ்வுரிமை மாநாடும்,
திமுக, வின் மீழெழுச்சிக்கான ஆய்வரங்கமும், நடத்த
வெட்கமில்லையா கருணாநிதி?”
மேலே உள்ளது சவுக்கு இணைய தளத்தில் ஒரு அன்பர் (ஈழ தமிழர் போல் தெரிகிறது) எழுதியிருக்கும் கோபமும் வேதனையும் ஆற்றாமையும் கொப்பளிக்கும் “காலத்தின் குற்றமல்ல கருவின் குற்றம்” கவிதையின் ஒரு சிறு பகுதி.
நண்பர்களே,
பிறந்ததிலிருந்து (அதாவது சுமார் 85 ஆண்டுகள்) பிறரை ஏமாற்றுவதையே கலையாக செய்துவரும் கருணாவை இன்னும் ஒரு சார்பு மக்கள் நம்பி ஆதரிப்பது ஏன்?இது எனக்கு அறவே விளங்கவில்லை.மிகப்பெரிய மர்மமாகவும் உள்ளது.அதற்கான காரணங்களை யாரேனும் அவர் ஆதரவாளர் விளக்கினால் நானும் புரிந்து கொள்வேன்.
நன்றி.