கொக்கோ கோலா, பெப்சிக்கு நியூயார்க்கில் தடை ! உடலுக்கு கெடுதல் -சொல்வது அமெரிக்காவே தான் !

கொக்கோ கோலா, பெப்சிக்கு நியூயார்க்கில் தடை !
உடலுக்கு கெடுதல் -சொல்வது அமெரிக்காவே தான் !

அமெரிக்காவா இப்படிச் சொல்கிறது என்று ஆச்சரியமாக
இருக்கிறதா ? ஆமாம் – நியூயார்க் நகர மேயர் மைக்கேல்
ப்ளூம்பர்க் செப்டம்பர் முதல் அமுலுக்கு கொண்டு வரும்
ஒரு உத்திரவுப்படி நியூயார்க் நகரத்தில் 500 ml க்கு
மேல் கொள்ளக்கூடிய கொக்கோ கோலா, பெப்சி, ஸ்ப்ரைட்
பாட்டில்கள், கேன்கள்,டம்ளர்கள் ஆகியவை தடை
செய்யப்படுகின்றன.

எங்கெங்கே ?

ரெஸ்டாரண்டுகள், பார்கள், மல்டிப்ளெக்ஸ் –
திரையரங்குகளில், விளையாட்டு அரங்கங்களில்,
ட்ரைவ் இன் கார்களில், வேன்களில் !

ஏன் ? என்ன கெடுதல் இவற்றைக் குடிப்பதால்  ?

ஒரு 12 அவுன்ஸ் (360 மில்லி) பாட்டிலில் இருப்பது –

41 கிராம் சர்க்கரை -இது உருவாகுவது 140 கலோரியை.
தவிர கோலாவில் கலந்திருக்கும்
அசிடிக் அமிலத்தில் pH மதிப்பு 2.5.
இது பல்லின் எனாமலை பாதிக்கப்  போதுமானது.
(இதில் சந்தேகம் இருந்தால் 50 மில்லி கோலாவை
ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு ஒரு உடைந்த பல்லையோ –
கிடைக்காவிட்டால் -ஒரு சிறு மார்பிள் துண்டையோ –
போட்டு ஊற வைத்து விட்டு மறுநாள் அது என்ன கதி
ஆகிறது என்று பாருங்கள் என்கிறார் !)

மக்கள் அவ்வளவு சுலபமாக இதை
ஏற்றுக் கொள்வார்களா ?
குளிர்பான தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும்,
திரைப்பட அரங்குகளின் உரிமையாளர்களும் கூட்டு
சேர்ந்து கொண்டு இந்த உத்திரவிற்கு எதிராக கிளர்ந்து
எழுந்துள்ளார்கள் ! தனி மனிதரின் உரிமையை
பாதிக்கும் – அரசியல் சட்டத்திற்கு எதிரான உத்திரவு
இது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

மேயர் ப்ளூம்பர்க் இதை  டெக்னிகலாக எதிர்கொள்கிறார்.
தேவைப்படுவோர் தனித்தனியே 2, 4, 6
பாட்டில்களையோ, டம்ளர்களையோ
வாங்கிக் கொள்வது தடுக்கப்படவில்லை. மேலும்
சூப்பர்மார்க்கெட்களில் குடும்ப பேக்கும் தடை
செய்யப்படவில்லை. நிச்சயமாக  பயன்பாட்டை தடை
செய்யவே இல்லை.
பயன்பாட்டின் அளவைக் குறைப்பதற்காக சில
நடைமுறை கட்டுப்பாடுகள் மட்டும் தான் கொன்டு
வரப்படுகின்றன – என்கிறார்.

இதை அடுத்து மேயர் வைக்கும் பாயிண்ட் தான்
பிரமாதம் !

அருந்துவோரின்  – பற்கள் பாதிக்கப்படுகின்றன !
வயிற்றில் அமிலம் சேருவதால் குடல் பாதிக்கப்படுகிறது !
மேலும், கலோரி கூடுவதால், எரிக்கப்படாத கொழுப்பு
சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கிறது ! ( obessity)

“என் பல், என் தொப்பை -உனக்கென்ன போச்சு” என்று
கேட்கலாம் –  இந்தியாவாக இருந்தால்.

அமெரிக்காவில் குடிமக்கள் அனைவருக்கும் மெடிகல்
இன்சூரன்ஸ் இருப்பதால் அவர்களது மருத்துவச் செலவு
அரசாங்கத்தின் தலையில் விழுகிறது.“தொப்பை”யர்களால்
அநாவசியமாக மருத்துவச் செலவு கூடுவது அமெரிக்க
அரசின் நிதி நிலையையும் பாதிக்கிறது !

எனவே இது தனி மனிதரின் உடல் நலம்,உரிமை சார்ந்த
விஷயம் மட்டும் அல்ல – அமெரிக்க அரசின் பொருளாதார
நிலையையும் பாதிக்கும் விஷயம். எனவே நடவடிக்கை
சட்டபூர்வமானதே என்று சாதிக்கிறார்  நியூயார்க் மேயர் !

இன்னும் சில நடைமுறைகள் பாக்கி இருப்பதால் –
மேயரால் சட்டத்தை அமுலாக்க முடிகிறதா இல்லையா
என்பதை செப்டம்பர் வரை பொறுத்திருந்து தான் பார்க்க
வேண்டும் ! நியூயார்க்கில் நடைமுறைக்கு வந்தால் –
மற்ற நகரங்களிலும் படிப்படியாக வர வாய்ப்பு இருக்கிறது !

———

இங்கே – சென்னையில் நான் எப்போதாவது
மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளுக்குச் செல்லும்போது,
படம் ஆரம்பிக்கும் முன்னர் –
அவசர அவசரமாக பெரிய பெரிய
காகித டம்ளர்களில்(750 ml ?) கொக்கோகோலாவையும்,
குறைந்த பட்சம் ஒரு கிலோ கொள்ளக்கூடிய
காகிதப் பை நிறைய – பாப்கார்னையும்
வாங்கிக் கொண்டு உள்ளே போகும்தொப்பை”யர்களைப்
பார்த்து “பாவம்” என்று பரிதாபப் பட்டதுண்டு.

இப்போது – இந்த செய்தியைப் பார்த்த பிறகு ?

“அய்யோ -பாவம்” !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to கொக்கோ கோலா, பெப்சிக்கு நியூயார்க்கில் தடை ! உடலுக்கு கெடுதல் -சொல்வது அமெரிக்காவே தான் !

  1. கலாஷ்னிக்கோவ்'s avatar கலாஷ்னிக்கோவ் சொல்கிறார்:

    இன்று இல்லாவிட்டாலும் நாளை கண்டிப்பாக மாறும்…

  2. chezhiyan's avatar chezhiyan சொல்கிறார்:

    வணக்கம்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்…..

  3. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    ஐயா, மிகவும் அவசியமான கட்டுரை. மேலும் ஒரு விஷயத்தையும் சேர்த்து கொள்ள விரும்புகிறேன். கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் கொக்கோ கோலா, பெப்சி தமது ரெசிபியை மாற்றி அமைத்தன. காரணம் நியூ கலிபோர்னியா மாநில அரசின் சட்டத்திற்கமைய இந்த குளிர்பானத்தில் உள்ள ‘4-methylimidazole’ எனும் காரமல் கலரை கொடுக்கும் வேதிப்பொருள் இருப்பதால் பாட்டிலில் ‘cancer-warning labels ‘ போடப்பட வேண்டும். அதில் இருந்து தப்புவதற்காக ரெசிபியை மாற்றினார்கள்.
    ஆனால் அந்த மாற்றம் அமெரிக்காவில் மட்டுமே தவிர நம் நாட்டில் அல்ல. நமக்கு தான் ஏற்கனவே பூச்சி கொல்லிகளை கலந்து கொடுகிறார்களே, அதில் வராத கான்சர் காரமல் கலரிலா வந்திர போகுது!

    செய்தி அதாரம்: http://www.metro.co.uk/news/892619-coke-and-pepsi-change-recipe-to-avoid-cancer-warning-label-in-california

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி எழில்.

      நம் மக்களில் நிறைய பேருக்கு இதை எல்லாம்
      படிக்கும் வாய்ப்பு கிடைக்காது.
      அவர்களுக்கு இதுவெல்லாம் சென்று சேர வேண்டும்
      என்று தான் மெனக்கெட்டு தேடித்தேடி
      நான் எழுதுகிறேன். நீங்களும் இதில் துணை நிற்பதில்
      எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. sukucon's avatar sukucon சொல்கிறார்:

    முடிந்த வரை நமது மக்களை பலவீனம் செய்துவிட்டார்கள். இப்போது அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

  5. Dr. Phillips's avatar Dr. Phillips சொல்கிறார்:

    Mr. Kavirimainthan

    You take lot of interest in bringing out
    socially important and useful articles.

    Hats Off to your efforts.

    Dr. Phillips

  6. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    info@cocacola.com
    Message flagged

    Friday, 20 July 2012 12:38 AM

    Dear: e-Mail Winner,

    This is to inform you that you have been selected for a Cash Prize of £1,000,000.00 (British Pounds) held on the 19/07/2012 in London Uk.The selection process was carried out through random selection in our computerized email selection system(ess) from a database of over 250,000 email addresses drawn from which you were selected.THE COCA’COLA COMPANY PROMOTION is approved by the UK Gaming Board.To begin the processing of your prize you are to contact our Claims Agent department for more infomation as regards procedures to claim your prize.

    You are to contact the Claims Consultant:
    Mr. Robert Gooch
    Email: c.plc1@msn.com

    **Full Names
    **Residential Address
    **Occupation
    **Age
    **Phone
    **CountCongratulation!!Mr. Carl ரோப்பிசோ Online Co-coordinator

    கொகொகொலாவை நான் குடிப்பதில்லை ஆனால் என்க்கு அடிக்கடி ஈமெயில் அனுப்பி தொல்லை கொடுக்கிறார்கள். என்ன செய்வதென்று யாராவது கூறுவார்கள?

  7. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    கோகோ கோலா பானத்தைக் கொண்டு வாஷ்பேசின்,
    டாய்லெட் இவற்றைக் கழுவினால், ஹார்பிக் போன்ற
    அவ்வித உபயோகத்திற்கான பிரத்தியோக திரவங்களை
    விட, பளிச்சிட வைக்கிறது. ஆனால் பற்களையும்
    குடலையும் பாதிக்கிறது. தொப்பை விழுகிறது.

    சென்னையில் பிக் பஜார் (மோர் தயிர் போன்றவற்றையும்
    சேர்த்துக் கொள்ளவும்) மாதந்தோறும் முதல் வாரத்தில்
    நடத்தும் வணிக உற்சவத்தில் (ஸ்பெஷல் தள்ளுபடி, காம்போ
    ஆபர் இத்யாதிகள்) உள்ளே போய் வெளிய வருபவர்கள்
    பையைப் பார்த்தால் கண்டிப்பாக கோலாக்கள், மிரண்டாகள்
    இருக்கும். தவறாத இணைப்புகளாக லேஸ், குர்குரே
    போன்றவைகளும்.

    தான் தின்று தொந்தி பெருத்த பெற்றோரைக் காட்டிலும்,
    இவற்றை தன் பிள்ளைகளுக்கு பிரியத்தோடு வாங்கித்
    தரும் பெற்றோரே அதிகம். அதில் அவர்களுக்கு கர்வமும்
    கூட.

    என்ன செய்ய?

  8. சாக்பீஸ்'s avatar சாக்பீஸ் சொல்கிறார்:

    மிக அருமையான, இன்றைய தினத்தில் பலருக்குப் பயனுள்ள பதிவு.

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    குடலைக் கெடுக்கும் பெப்சி, கோலாக்களுக்கு
    பதிலாக, உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி
    ஊக்குவிக்க மக்கள் பழக்கப்படுத்திக் கொள்ள
    வேண்டும்.

    குளிரூட்டப்பட்ட பழ ரசங்களை அருந்தலாம்.
    இவற்றை கூட்டுறவு தொழிற்சாலைகள் மூலம,
    மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கலாம்.
    பெப்சி, கோலாக்களின் விலையில் பாதி விலையில்
    இவற்றை கொடுக்க முடியும்.(டிவி விளம்பர
    செலவு குறையுமே)

    அரசியல் கட்சிகள் இதற்கு முனைய மாட்டார்கள்.
    என் ஜி ஓ க்கள் (தொண்டு நிறுவனங்கள் )
    இத்தகைய முயற்சியில் ஈடுபடலாம். இதன் மூலம்
    பல நல்ல விளைவுகள் ஏற்படும். யாராவது
    துவங்குவார்களா ?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.